கடலூர்:
            கடலூரில் இருந்து 12 கி.மீ. தென் மேற்காக அமைந்து இருப்பது  ஒüஷதகிரி என்னும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் மலைப்  பகுதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மலைப்பகுதி ஒஷ்தகிரிதான்.  
              மா, பலா, முந்திரி, தேக்கு மரங்களால் சூழப்பட்டு பார்க்கும் போது, பச்சை  பசேலென்று அழகு கொஞ்சும் பச்சை மலையாகக் காட்சி அளிப்பது ஒüஷதகிரி. இந்த அழகுமிகு  ஒஷ்தகிரியில்தான் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில்,  விலங்கல்பட்டு முருகன் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்து  உள்ளன.  மேற்குப் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்து இருக்கும் பகுதி கேப்பர் மலை  என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மத்திய சிறைச்சாலை மட்டுமே  அமைந்து இருந்த கேப்பர் மலைப் பகுதி, இன்று 40 கிராமங்களைக் கொண்டதாக மாறி, வாழைத்  தோட்டங்கள், மலர்த் தோட்டங்கள், கரும்பு வயல்கள் என மாறி, வேளாண்மையின் செழிப்பைக்  காண முடிகிறது.  
            ஒய்தகிரியைக் கிழித்துக் கொண்டு கெடிலம் ஆறு ஓடுகிறது. கிழக்குப் பகுதியில்  மிகப் பெரிய கொண்டங்கி ஏரி உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் நல்ல  சுவை நிறைந்தது. எனவே கடலூர் நகருக்குத் தேவையான குடிநீர், ஒய்தகிரியில்  அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.  ஆனால் இந்த அழகு கொஞ்சும் மலைப் பகுதி, அரசுத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு,  இயற்கை எழிலும் சுற்றுச்சூழலும் வெகுவாகச் சிதைக்கப்பட்டு வருவதுதான் வேதனை  அளிக்கும் விஷயம்.  
               கடலூர் மத்திய சிறை அருகே பெண்கள் சிறை 10 ஏக்கரில் அண்மையில்  உருவாக்கப்பட்டது. சிறைக் காவலர்களுக்காக ஏற்கெனவே ஓடுகள் வேயப்பட்ட 50 வீடுகள்  இருந்தன. அவைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் புதிய இடங்களைத் தேர்வு செய்து,  ஏராளமான மரங்களை வெட்டி வீழ்த்தி, அடுக்குமாடி வீடுகள் பல அண்மையில் கட்டப்பட்டன.  மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துடன் துணை மின் நிலையம்  உருவாக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வட்டார போக்குவரத்து  அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் துறைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு,  இந்த மலைப் பகுதியில், தற்போது சுமார் 40 நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.  
               இதற்காக எவ்விதத் தடையுமின்றி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆயிரம் ஆயிரமானவை.  இதற்கு வனத்துறை அனுமதி கோரப்பட்டதா என்று தெரியவில்லை.  இந்த மலைப் பகுதியில் இருந்து, பெருமளவில் சரளைக் கற்கள் தோண்டி  எடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, புதுவை மாநிலத்துக்கும் தினமும்  நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போகப்படுகின்றன.  இந்நிலையில் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசு மருத்துவக்  கல்லுரிக்கான இடமும் இங்குதான் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டு  விட்டது. இதற்காக மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.  
              மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அங்கு கொண்டு செல்லவும் திட்டம் இருக்கிறதாம்.  அரசுத் துறைகளின் படையெடுப்பாலும், அவர்களின் தயவால் நுழைந்து இருக்கும் ரியல்  எஸ்டேட் அதிபர்களால் பேராசையாலும் அங்கு விரைவில் ஒரு டவுன்ஷிப் உருவாகும் சாத்தியக்  கூறுகள் நிறைய உள்ளன.   இதற்காக இன்னும் எத்தனை ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று எண்ணிப்  பார்க்கும்போது, ஒüஷதகரி மலைப் பகுதி முழுவதும் விரைவில் மரங்கள் அற்ற மொட்டை  மலையாகி விடும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த  மலைப் பகுதி முழுவதும், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வருவதால், கேட்பாரின்றி மரங்களை  வெட்டிக் குவிப்பதும், அலுவலகங்களையும், குடியிருப்புகளையம் தாராளமாகக் கொண்டுவந்து  குவித்து வருவதும், நிச்சயம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.  
               அங்கு மேற்கொண்டு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்காத வகையில்,  குறைந்தபட்சம், அரசு மருத்துவக் கல்லூரியையாவது, கடலூரை அடுத்த நத்தப்பட்டு  அருகேயுள்ள, அரசுக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்துக்கு மாற்றலாம் என்கிறார் நகர  குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்.  
              அங்கு மருத்துவக் கல்லூரி அமைந்தால் ஒüஷதகிரியில் கட்டுமானங்கள் பெருமளவில்  அதிகரிக்கும். கடலூர் பகுதியில் இருந்து நோயாளிகள் சென்று வருவதும் மிகவும் சிரமமாக  இருக்கும். நத்தப்பட்டு பகுதியில் மருத்தவக் கல்லூரி அமைந்தால், கடலூர் புறவழிச்  சாலை, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அகியவற்றின் அருகாமையில் இருப்பதால்,  போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் வசதியாக இருக்கும். அத்துடன் அழகிய ஒüஷதகிரி  மலை, ஒரு டவுன்ஷிப்பாக மாற்றப்பட்டு, மொட்டை மலையாவதையும் தடுக்க முடியும் என்றார்  அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக