கிள்ளை : 
        சி.முட்லூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை  வரும் 27ம்தேதி துவங்குகிறது. 
இது குறித்து கல்லூரி முதல்வர் வாசுதேவன்  விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
          சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உள்ள அரசு  கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 27ம் தேதி முதல்  துவங்குகிறது. அதில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல், இயற்பியல்  பிரிவிற்கு 27ம் தேதியும்,    கணிதம், பொது வேதியியல் பிரிவுகளுக்கு 28ம்  தேதியும், தொழில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளுக்கு 29ம்  தேதியும், பி.பி.ஏ., மற்றும் பி.காம்., பிரிவுகளுக்கு 30ம் தேதியும்,  ஆங்கில இலக்கிய பிரிவிற்கு ஜூலை 1ம் தேதியும்,  பொருளியல் மற்றும் தமிழ்  இலக்கியம்  பாடப் பிரிவுகளுக்கு 4ம் தேதி ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில்  மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
 
          தகுதியுள்ள மாணவர்களுக்கு நேர்முகத்  தேர்வுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் அழைப்பு கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளபடி அசல் மற்றும் நகல் சான்றுகள், உரிய கட்டணம் மற்றும்  பெற்றோருடன் காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வரவேண்டும். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக