இளங்கலை அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்ப சினிமா  தயாரிப்பு என்ற படிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிக் எய்ம்ஸ் நிறுவனத்துடன்  அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 இது குறித்து ரிலையன்ஸ் அனிமேஷன் துறையின் தலைமை செயல் அலுவலர் எஸ்.கே.ஆசிஷ்,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் உள்ளிட்டோர்  சென்னையில் செய்தியாளர்களிடம்  கூறியது:  
                ஓவியம் வரையும் திறமையுடன் கற்பனை வளம் அதிகமாக உள்ள மாணவர்களுக்காக இந்த  பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு திரைப்படத் தயாரிப்பில்  அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்பங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்கும். இந்த  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு திரைக்கதைகளை உருவாக்குவது என்பது குறித்து  கற்றுக் கொடுக்கப்படும்.  அனிமேஷன் கதாபாத்திரங்களை வரைந்து உருவாக்குவது, அவற்றுக்குக் குரல் கொடுப்பது,  அவற்றின் பாவனைகள், முகக்குறிப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குதல் குறித்தும்  பயிற்றுவிக்கப்படும். 
              இதில் பாடத்திட்டங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கும். செயல்முறை  பாடத்திட்டங்களைப் பொருத்தவரை, நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ரிலையன்ஸ்  நிறுவனத்தின் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் பயிற்றுவிக்கப்படும்.  தேர்வுகள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு, பட்டம் வழங்கப்படும். இந்தப்  பாடத்திட்டம் அண்ணாமலை தொலைநிலைப் பாடத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று  அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக