சிதம்பரம்:
          சிறுநீர் மற்றும் இதர மனிதக் கழிவுகள் மூலம் வேளாண்மைக்கு தேவையான  சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற்று பயன்படுத்துவது குறித்து  ஆராய்ச்சி மேற்கொள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு  நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
             துணைவேந்தர்  எம். ராமநாதன் வேர் எவர் நீட் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் ஆகியோர்  பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர். இந்த ஆய்வு திட்டத்திற்கு முதல் தவனையாக ரூ. 2 லட்சம்  காசோலையை வேர் எவர் நீட் அமைப்பு வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில்  வேளாண்புல முதல்வர் ஜே. வசந்தகுமார், வேர் எவர் நீட் இந்திய இயக்குநர் எஸ்.  பரமசிவம், பிளஸ் தொண்டு நிறுவனத் தலைவர் அந்தோணிசாமி, முதன்மை  ஆராய்ச்சியாளரும், வேளாண் பொருளாதாரத்துறைத் தலைவருமான கு.ரா.  சுந்தரவரதராஜன், இணை ஆராய்ச்சியாளர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். 
இத்திட்டம்  குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: 
             அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்  பொருளாதாரத்துறையும், இங்கிலாந்தைச் சேர்ந்த வேர் எவர் நீட் தொண்டு  நிறுவனமும் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை  பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன.  இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்கு தேவையான சத்துக்களை  சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது. கடலூரில் உள்ள பிளஸ்  தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.  நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள்  மேற்கொள்ளப்படவுள்ளது என துணைவேந்தர் எம். ராமநாதன் தெரிவித்தார்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக