கடலூர்:
             கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய  கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தோர் இறந்தால், அவர்களின்  குடும்பத்தினர், இறுதிச் சடங்கு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்  என்று, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  
இது  குறித்து  மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
           ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இறந்தால்,  அன்னாரின் இறுதிச் சடங்கிற்காக, இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2,500  உதவித் தொகை வழங்கப்படும். இதற்காகக் கடலூர் மாவட்டத்துக்கு 2011-2012 ம்  ஆண்டுக்கு, அரசு ரூ. 8.44 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.   எனவே தகுதியான  நபர்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்  தலைவரிடம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக