கடலூர் முதுநகர்:
        தானே புயலால் சேதமடைந்த கூரை வீடுகள் சீரமைக்க பயன்படும் தேங்காய் நார்  கயிறுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 30ம் தேதி வீசிய புயலில்  மாவட்டத்தில் 3 லட்சம் கூரை வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள்   சீரமைக்கும் பணி தற் பொழுது நடைபெற்று வருகிறது.   இதனால் கூரை வீடு கட்ட  தேவைப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு தேவை அதிகத் துள்ளது. கடலூர்  முதுநகர் பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்காய் நார்  கயிறுகள் விற்பனை சூடு பிடித்துள்ளன. சாதாரண நேரங்களில் நடைபெறும்  விற்பனையை விட  இரு மடங்காகியுள்ளது. இதனால் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற  கயிறு 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக