கடலூர் : 
            கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்ற 14 பேரை போலீசார் கைது  செய்தனர். 
               கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக மண்  அள்ளப்படுகிறது. மேலும் கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது என எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.பி., உத்தரவின்  பேரில் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டனர். அதில் சேத்தியாத்தோப்பு பகுதியில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த  7 மாட்டு வண்டிகளும், ஒரத்தூர் பகுதியில் 3 மாட்டு வண்டிகளும் பிடிபட்டன.  அதேப்போல் குள்ளஞ்சாவடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேரும்,  ஒரத்தூரில் 3, காட்டுமன்னார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், சோழதரம்  பகுதிகளில் தலா ஒருவரும், கடலூர் முதுநகர் பகுதியில்  3 பேர் உட்பட 14 பேரை  போலீசார் கைது செய்தனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக