கடலூர் : 
             கடலூரில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி வரும் 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை:
இது குறித்து மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை:
           கடலூர் மாவட்ட அளவிலான ஆண், பெண் இருபாலருக்கான ஹேண்ட்பால் போட்டி  வரும்  22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள  அனைத்து அணிகளும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. பங்கேற்கும் அணிகள்  வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் பதிவு செய்து கொள்ள  வேண்டும். 
                    மாலையில் மாநில ஹேண்ட்பால் கழகச் செயலாளர் சரவணன் மற்றும்  மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு வழங்குகின்றனர். போட்டிக்கான  ஏற்பாடுகளை புரவலர் துரை பிரேம்குமார், தலைவர் சாமிகண்ணு, பொருளாளர்  பூவராகமூர்த்தி, பயிற்றுனர்கள் கார்த்திகேயன் மற்றும் பாபு, வெங்கடேசன்,  செல்வராஜ், கார்த்திக், சங்கர், தினகர், செங்குட்டுவன் ஆகியோர் செய்து  வருகின்றனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக