விருத்தாசலம் : 
             விருத்தாசலத்தில் கழிவு நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை  எடுக்கக்கோரி தாசில்தார் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
                விருத்தாசலம்  7வது வார்டில் டாக்டர் ராமதாஸ் நகர், பாரதி நகர் உள்ளது. இப்பகுதியில் பல  ஆண்டுகளாக மழை நீர், கழிவு நீர் சென்று கொண்டிருந்த பாதையை சில தனி நபர்  கள் தடுத்து விட்டதால், கழிவு நீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால்  அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென தாசில்தார் ஜெயராமன்  வீட்டை முற்றுகையிட்டு கழிவு நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக