கடலூர் : 
                 மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை  கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி கைப்பற்றியது. 
                  27வது மாநில அளவிலான யோகா  ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2010 திருப் பூரில் நடந்தது. தமிழகத்தில் 30  மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற் பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்  பங்கேற்றனர். யோகாசனப் பேட்டி பொதுப்பிரிவு அத்லெடிக் யோகா, ஆர்ட்டிஸ்டிக்  யோகா, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, ரிதமிக் யோகா இரட்டையர் பிரிவு  ஆகிய பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி  மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வென்று மொத்தம் 16 தங்கப் பதக்கங்களும்,  6  வெள்ளியும், 3 வெண்கலமும் பெற்று சாதனை படைத்தனர். இப்போட்டியின்  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி அணி  கைப்பற்றியது. 
               எட்டு வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஜீவிகா,  சத்யபிரியாவும், ஆண்கள் பிரிவில் லோகேஷ், ஸ்ரீராமும், 12 வயதிற்குட்பட்டோர்  ஆண்கள் பிரிவில் அரவிந்த், கலையன்பன், ஆனந்த கீர்த்தனன், சுதர்சன்,  நந்தகுமார் ஆகியோர் பெண்கள் பிரிவில் அஜீதா, தீபலட்சுமி, சரண்யா, சுபஸ்ரீ  ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஹரீஷ் ராஜா மற்றும் ஜீவாவும்  வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி முதல்வர்  ராஜயோககுமார் பாராட்டினார்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக