கிள்ளை : 
                    கடந்த நான்கு நாட்களாக  திடீர் மழை மற்றும் வானம் மேக மூட்டமாக  உள்ளதால் பரங்கிப்பேட்டை குமாரமங்கலத்தில் மண்பானை செய்யும் தொழிலாளிகள்  கவலையில் உள்ளனர். சிதம்பரம் அருகே குமாரமங்கலம், குயவன்பேட்டை  சுற்றுப்பகுதியில் உள்ளோர் அதிகளவில் மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 
                 பருவம் கடந்து மழை பெய்ததால் கார்த்திகை தீபத்தின் போது அகல் விளக்கு செய்த  தொழிலாளிகள் மிகுந்த பாதிப்படைந்தனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு பானை,  சட்டி, அடுப்பு உள்ளிட்டவைகளை செய்யத் துவங்கியதில் இருந்து வானம்  மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், கடந்த மூன்று தினங்களாக விட்டு விட்டு  பெய்யும் மழையால் அப்பகுதியில் பண்பாண்டத் தொழில் செய்வதில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பாண்டத் தொழிலாளிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக