சிதம்பரம்:
சிதம்பரத்தில் சொற்பொழிவாளர் மங்கையர்கரசிக்கு ஆன்மீக ஜோதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆன்மீக சொற் பொழிவு நடைபெற்றது. சபா.கல்யாணசபாபதி தீட்சிதர் தலைமை தாங்கினார். முன்னதாக டாக்டர.பத்மினி கபாலிமூர்த்தி அறிமுக உரையாற்றினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் ஞானக்குமார் வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் மாணவி தேச மங்கையர்கரசிக்கு ஆன்மீக ஜோதி பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.சியும், காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளருமான லட்சுமிகாந்தன் இந்த பட்டத்தை வழங்கினார். முன்னதாக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக விவசாயப் பண்ணைக்கு கால்நடை வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை பதிவாளர் ரத்தினசபாபதியிடம் தேசமங்கையர்கரசி வழங்கினார்.