உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

மரவள்ளி கிழங்கு விற்பனை செய்ய

பெயர் தெரியாத திருப்பூர் நண்பரின் வேண்டுகோளின் படி மரவள்ளிக் கிழங்கு வாங்கும் சில தொழிற்சாலைகளின் முகவரிகள் சில :

தகவல் தேவைப்படும் நண்பர்கள் தங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிட்டால் நன்றாக இருக்கும். 

M/s. JAGUARPAW EXPORTS
26-D/40, Chinna Suppanan Street
K.K.Pudur, coimbatore
Tamilnadu, India 641038.


M/s. Grove Snacks Pvt Ltd
45A,develpoment plot,kalamassery,cochin, cochin
Kerala - 682319

M/s. SITHARA EXPORTS
CHANDIROOR PO,
ALLEPPEY DIST.,
Alappuzha - 688547, Kerala,
Ph: 0478-2872045 F: 0478-2872214 

M/s. Thomas International
NEW NO. 306, 
LINGHI CHETTY STREET, 
Chennai - 600001, Tamil Nadu
Ph: 44-25352812
Fax: 91-44-25352812  

Read more »

அங்காடியாக மாறிய கடலூர் தலைமை அஞ்சல் நிலையம்!

கடலூர்:

          கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் கடந்த சில நாள்களாக அங்காடியாகக் காட்சி அளிக்கிறது.

                 கடலூர் டவுன்ஹால் எதிரில் கடலூர் நகர தலைமை அஞ்சல் நிலையம் அமைந்து உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு வருவோருக்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. அஞ்சல் நிலையத்துக்கு முன் உள்ள நிலப்பகுதி முழுவதும், ஆக்கிரமிக்கப்பட்டு, பழக்கடை, டீக்கடை, சைக்கிள் கடை ஆகியன நிரந்தரமாக் வைக்கப்பட்டு உள்ளன.÷அஞ்சல் நிலையம் முன் போதிய இடம் இருந்தும், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வழிஇல்லை. இதனால் அஞ்சல் நிலையத்துக்குள் நுழையவே முடியாத பரிதாப நிலை ஏற்படுகிறது.

            அஞ்சலக ஊழியர்கள்கூட பிரதான வாயில் வழியாகச் செல்ல முடியாததால், கொல்லைப்புற வாயில் வழியாக உள்ளே செல்கிறார்கள்.÷அஞ்சல் நிலையம் முன் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஆண்டு முழுவதும் சாக்கடை நீர் ததும்பி வழிந்து கொண்டு இருப்பது, அங்கு வருவோர் மூக்கப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழக அரசு தேர்வாணையக் குழு மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அஞ்சல் நிலையத்தில் விநியோகிப்பதால் நிலைமை இன்னும் மோசம் அடைந்து விட்டது. இது குறித்து அஞ்சலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வர வில்லையே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து அதிகாரிகளைக் கேட்டால், 

                அஞ்சல் நிலையத்துக்கு போதிய இடவசதி இல்லை என்ற ஒரே பதிலுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இருக்கும் இடத்தையும் சாலையோரக் கடைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது, இங்கு வருவோருக்குப் பெருத்த இடையூறாக உள்ளது குறித்து அஞ்சல் துறை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவில்லை.

              தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெல்லிக்குப்பம் சாலைக்குத் திரும்பும் இடத்தில் தலைமை அஞ்சல்நிலையம் அமைந்து இருப்பதால், அஞ்சல் நிலையத்துக்கு வருவோருக்குப் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இந்த இடத்தில்தான் நடத்தப்படுகிறது. இதனால் அஞ்சல் நிலையம் வருவதையே பொதுமக்கள் பலர் தவிர்த்துவிட நேரிடுகிறது. எனவே தலைமை அஞ்சல் நிலையத்தை வேறு வசதியான இடத்துக்கு மாற்றுவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

Read more »

3 ஜி இணைப்புகள் ஒரு லட்சத்தை தாண்டியது: பி.டி.மாத்யூ

                தமிழகத்தில் 3ஜி செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என கோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ கூறினார்

இது குறித்துகோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ வெள்ளிக்கிழமை கூறியது:

                 தமிழக மாவட்ட தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்பட 38 இடங்களில் 3ஜி சேவை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 3ஜி இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. இப்போது 3ஜி சிம்கார்டுகள் இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

               கோவை மாவட்டத்தில் 3ஜி சேவைக்கு துணைபுரியும் 180 பிடிஎஸ் செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 60 பிடிஎஸ் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். 3ஜி இணைப்பின் மூலம் விடியோ கால்ஸ், மொபைல் டிவி, அதிகவேக இன்டர்நெட், விடியோ கான்பரன்ஸ் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 3.6 எம்பிபிஎஸ் வேகத்தில் மொபைல் பிராட்பேண்ட் வசதியும் வழங்கப்படுகிறது. நிகழ்பட கண்காணிப்பு சேவையை (விடியோ சர்விலன்ஸ் சேவை) பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் அலுவலகத்தில் நடப்பதை கண்காணிக்க முடியும் என்றார்.

Read more »

இன்று பி.எட். தேர்வு முடிவு வெளியீடு

               தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிடப்படுகிறது.

 இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

                    பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 631 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வு முடிவுகள்www.tnteu.in​​  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவின் தொகுப்பு பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் கல்லூரிகளுக்கு விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Read more »

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி இல்லையா?: அன்புமணி ராமதாஸ்

சிதம்பரம்:

          ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் கருணாநிதியால் | 400 கோடி நிதி ஒதுக்க முடியாதது வருந்தத்தக்கது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக பிரமுகரின் திருமண விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியது:

             இளைஞர்கள் சுகாதாரமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியன மேற்கொண்டு மது, புகையிலை, போதை ஆகிய தீயப்பழக்கங்களை தவிர்த்து வாழ வேண்டும். 20 வயது இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். தமிழகத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிப்பழக்கம் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம் ஊருக்கு ஒருவர்தான் குடித்துக் கொண்டிருந்தார். தற்போது ஊருக்கு ஒருவர்தான் குடிக்காதவர் என்ற நிலை உருவாகியுள்ளது.

                   மதுப்பழக்கம் காரணமாகத்தான் 40 சதவீத விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வு கூறுகிறது. முன்பு அரசு கல்வித்துறையை நடத்தியது. சாராயக்கடையை தனியார் நடத்தி வந்தனர். தற்போது அரசு சாராயக்கடையை நடத்துகிறது. கல்வித்துறையை தனியார் நடத்துகிறது. தமிழக அரசு மருத்துவமனை, மருந்துக் கடைகளை திறப்பதற்கு பதிலாக சாராயக்கடைகளை திறந்து வருகிறது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு வருவதை முதன்முதலில் எதிர்த்தவர் டாக்டர் ராமதாஸ். அதன் பின்னர்தான் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் குரல் கொடுத்துள்ளனர்.

              நான் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என அரசாணையை திருத்தி அமைத்தேன்.  வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை திமுக அரசு அளித்ததாகக் கூறுகிறது. 20 சதவீத இடஒதுக்கீட்டை பாட்டாளி மக்கள் கட்சி போராடி வாங்கித் தந்தது என்பதுதான் உண்மை. ஜாதிவாரியாக கணக்கெடுப்புதான் அனைத்து சமுதாயத்தினரையும் முன்னேற்றமடையச் செய்யும். உச்ச நீதிமன்றம் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் முடிக்குமாறு கூறியுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் நிதி இல்லை எனக் கூறுகிறார். தமிழக அரசுக்கு 69 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதில் சமூகநீதிக்காக முதல்வர் கருணாநிதியால் |400 கோடி ஒதுக்க முடியாதது வேதனையைத் தருகிறது என்றார் அன்புமணி.

Read more »

கடலூரில் பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

கடலூர்:

            கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள்  மாணவர்கள் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள் தலைமையில் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தொடங்கி வைத்தார். மாணவர்கள், 150 காட்சி அரங்குகளை அமைத்து இருந்தனர்.

Read more »

மாநில அளவிலான கால்பந்து போட்டி: என்எல்சி பள்ளி சாம்பியன்

நெய்வேலி:

             ஏற்காட்டில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் என்எல்சி ஆண்கள் மேநிலைப் பள்ளி அணியினர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

           சகோதரர் அந்தோணி படுவா 18-வது நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி அண்மையில் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து 12 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் காலேஜ் மேநிலைப் பள்ளியுடன், என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினர் மோதினர். ஆட்டம் முடியும் வரையில் இரு அணிகளும் கோல் போடாததால், டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

                இதில் 6-5 என்ற கணக்கில் என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினர் வென்று கோப்பையைக் கைப்பற்றினர். கோப்பையை வென்ற அணியினருக்கு சர்வதேச தடகள வீரர் |10 ஆயிரம் வெகுமதி பரிசு வழங்கினார். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரையும், பயிற்சியாளர் ஜான்சனையும், என்எல்சி கல்வித்துறை செயலர் சுகுமார், விளையாட்டுப் பள்ளி தாளாளர் சுந்தர்ராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர் துரைசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

Read more »

New facility for police on extended beat in Cuddalore Municipality



Health Minister M.R.K. Panneerselvam inspecting the mobile toilets.

CUDDALORE: 

           Police personnel who are deployed on an extended beat at the time of communal conflagarations, caste clashes and other unrest often face the issue of not being able to attend to nature's call. With an increasing number of women police put on duty, the gravity of this problem gets accentuated.

            Having realized the seriousness of the problem, Cuddalore District Collector P. Seetharaman has hit upon the idea of providing two mobile toilets for the police department. For the purpose, he has sanctioned Rs 1.50 lakh from his discretionary fund. Each of the mobile toilets contains an overhead water tank, a flush-out and washing facilities and can be easily wheeled to various destinations.

            These two units, procured from Puducherry, have been dedicated to the police department and the Cuddalore municipality has been assigned the responsibility to maintain them. Health Minister M.R.K. Panneerselvam inspected the mobile toilets stationed on the New Town Police Station premises on Thursday and applauded the Collector for his thoughtful action. Deputy Inspector General of Police (Villupuram range) E. Ma. Masanamuthu hailed the District Collector for having provided a facility that was of absolute necessity to the personnel.

             Superintendent of Police Ashwin Kotnis said that provision of such a mobile toilet to the police force was the first of its kind in Tamil Nadu. The provision of such a new facility would relieve the personnel from botheration, the Collector said. It is felt that the facility could be moved to any place where the public gather.

Read more »

Law and order situation well maintained in State, says Minister

CUDDALORE: 

          Since the police department has been given the freedom to act, the law and order situation in Tamil Nadu remains well maintained, said M.R.K. Panneerselvam, Health Minister.

           He was speaking at a function held on the New Town Police Station premises here where he inaugurated the police quarters built at a cost of Rs 4.67 crore on Thursday. The police department had a free hand in recruitment, promotion and transfer and could not be influenced from any quarters. He pointed out that Chief Minister Karunanidhi was quite considerate in providing the required facilities to the police. The Minister appreciated the role played by District Collector P.Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis in handling the situation arising out of the labour dispute in the Neyveli Lignite Corporation.

Concern over road accidents

                 Voicing concern over the increasing number of road accidents, the Minister said that last year 359 persons were killed and this year so far 325 persons died in the district. He called upon the people to cooperate with the police to avert accidents. Mr Seetharaman, Deputy Inspector General of Police E.Ma.Masanamuthu, Mr Ashwin Kotnis, G.Ayyappan, MLA, and T.Thangarasu, Municipal Chairman, also spoke.

Read more »

Jail term for two

CUDDALORE:

              The Fast Track Court judge Sarojini Devi on Thursday sentenced two persons to undergo 11 years imprisonment, besides paying a fine of Rs 6,000 in a murder case. P.Jeevanandham (36) and Yuvaraj (68) were arraigned in the case of murder of taxi operator Thulasi Reddiyar (40) on February 23, 2007.

Read more »

Now artisans preparing for Vinayaka Chathurti in Cuddalore



MANIFOLD DESIGNS:The production of Vinayaka idols is going on at a brisk pace in Cuddalore.
 
CUDDALORE: 

           The art of idol making reaches its acme during the Vinayaka Chathurti celebrations, but the preparations start much earlier, say, three months in advance.

            Since June, the artisans have been busy procuring raw materials and preparing the moulds. Though it is an annual feature, (Vinayaka Chathurti falls on September 11) the artisans would have to keep their ears to the ground for they must invent new models every time to sustain their business and to face competition. Lord Vinayaka provides a vast canvas for the artisans to satisfy their creative urge to churn out new forms and shapes without any sort of repetitions, according to K. Mohan (37) of Manaveli in Vandipalayam, Cuddalore, who has been in the trade for over a decade. The artisans, in fact, vie with one another to bring out eye-catching designs, both in terms of grandeur and aesthetics.

              Those artisans endowed with creative minds would obviously score over others. Mr. Mohan says that though the trade looks outwardly seasonal, it remains the mainstay for the artisans for the entire year. The demand has been surging year after year and it would further accelerate when the season nears. Mr. Mohan says he could discern from the public mood this year that every organisation wants to excel in the display of idols.

The best and the latest

             Monetary aspects do not intervene in placing the orders, because the people always want the best and the latest. Mr Mohan says that though the law enforcing authorities have time and again, imposed restrictions on the size of the idols, it is not scrupulously followed in the rural areas. This is because unlike in urban areas where a claustrophobic atmosphere prevails, rural areas have ample space that could accommodate idols of any magnitude without causing any hindrance to the movement of traffic.

              Mr. Mohan adds that besides the traditional mount Mushaka, he is also experimenting with other mounts such as lion, bull, cow and peacock. These figures, that add dimension to the idols, also instil among people, the need for safeguarding wildlife. There is good market demand, from both individuals and organisations and most of the orders are at the completion stage. The price tag varies from Rs 7,500 to Rs 10,000, depending upon the size and the materials—either paper mache or starch which will easily dissolve in water--used in the making. It is for the procurer to cart away the idols to their places but he would give them valuable guidance on safe transport, Mr Mohan says.

Read more »

Pat for NLC's corporate social responsibility activities


Improving service: Health Minister M.R.K.Panneerselvam inaugurating a dialysis unit at the Cuddalore Government Hospital on Thursday. 
 
CUDDALORE: 

           Health Minister M.R.K. Panneerselvam has congratulated the Neyveli Lignite Corporation on spending crores of rupees for the development of peripheral areas, in tune with its corporate social responsibility.

            He was inaugurating a library and laboratory buildings constructed by the NLC at a cost of Rs. 20 lakh at the Karunguzhi government higher secondary school near here on Wednesday. The NLC had, so far, spent about Rs. 47 lakh on construction of roads, drinking water supply, renovating places of worship and nursery school at Karunguzhi village.

           Collector P. Seetharaman, District Revenue Officer S. Natarajan, and NLC General Manager (land acquisition) N.S. Ramalingam were present. Earlier, Mr. Panneerselvam inaugurated a second dialysis unit procured at a cost of Rs 6.5 lakh at the Cuddalore government headquarters hospital. One more unit would be soon opened and with this, six patients could be treated a day on an average.

Primary health centres

               The Minister said that during this year, 40 Primary Health Centres would be upgraded and five doctors posted in each of these centres. This was being done to render round- the-clock health services. The Minister also inaugurated an indoor badminton court built at a cost of Rs. 19 lakh and a squash court built at cost of Rs. 17.4 lakh at the Anna Stadium here on Wednesday.

Read more »

நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜர்

நெய்வேலி : 

              முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

              நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே 4.7.2007 அன்று நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ். சந்திரன் தமிழக முதல்வரை அவதூறாக விமர்சித்து பேசினார். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், நெய்வேலி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
                   கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நேற்று நெய்வேலி சப் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, வழக்கு முடியும் வரை சம்மன் அனுப் பினால் கோர்ட்டில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க உத் தரவிட்டார். நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுடன் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலார் சொரத்தூர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் சிவசுப்ரமணியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், வக் கீல் ராஜசேகர் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

Read more »

ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ, வகுப்புகள் துவக்க விழா

கடலூர்: 

             கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ., முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. 

                 நிகழ்ச்சிக்கு சி.கே.கல்வி குழுமங்களின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கல் லூரி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிர்வாக உறுப்பினர் அசோக்குமார் வரவேற்றார். கல்லூரி சிறப்பு அலுவலர் ராஜா துறைத் தலைவர்களை அறிமுகம் செய்து, பேசினார். நிகழ்ச்சியில் சி.கே. பள்ளி முதல்வர் தார்ஷியஸ், ஜே.எஸ்.ஜே.வி., கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கணேசன் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், விரைவுரையாளர்கள் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior