உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 14, 2011

தனியார் பள்ளிகளுக்கு புது கல்விக் கட்டணம் அறிவிப்பு

              மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் திருத்திய நிர்ணய விவரங்களை கட்டண நிர்ணயக் குழுவின் சிறப்பு அலுவலர் அ.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை வெளியிட்டார். 

              அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் இந்தக் கட்டண விவரங்கள் திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டண விவரங்கள் செவ்வாய்க்கிழமை காலைக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் ஏற்கெனவே அறிவித்த கட்டணத்தைவிட சராசரியாக 5சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தக் கட்டண நிர்ணய விவரங்கள் புதன் அல்லது வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

               தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.  இதை எதிர்த்து சுமார் 6,400 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன. நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு இந்த மனுக்களை நவம்பர் 15 முதல் மே 4-ம் தேதிவரை விசாரித்தது.  இந்த விசாரணைக்குப் பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, இப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  
இது தொடர்பாக, கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள செய்தி:  

                மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன.  மேல்முறையீடு செய்த ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் பெறப்பட்ட வினாப்பட்டியல், மேல்முறையீட்டின் போதும், நேர்முகக் கேட்பின் போதும் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப் பெற்று, தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 

                பள்ளி அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-பணியாளர் ஊதியம், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் இவையனைத்தும் மறுகட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணிகளாகக் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கட்டண நிர்ணயம் வரும் 2012-13 கல்வியாண்டு வரை பொருந்தும். அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

              "மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை எதிர்பார்க்கிறோம். கட்டண உயர்வு அதற்குக் குறைவாக இருந்தால் மேல்முறையீடு செய்வோம்' என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்.விஜயன் தெரிவித்தார்.  

இணையதளத்தில் வெளியீடு: 

             திருத்திய கட்டண நிர்ணய விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகளில் கட்டண நிர்ணயக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதன் அல்லது வியாழக்கிழமை இந்தக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்று தெரிகிறது.




Read more »

பண்ருட்டியில் ரூ.32 லட்சம் மதிப்பில் மலட்டாறு பாலம் கட்டும் பணி துவங்கியது

பண்ருட்டி :

           பண்ருட்டி அடுத்த ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையிலான மலட்டாறு பாலம் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டும் பணி துவங்கியது. 

               பண்ருட்டி அடுத்த ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையில் உள்ள மலட்டாறு பாலத்தில் மண் மூட்டைகளால் ஆன தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மாற்று வழிப்பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மலட்டாறு ஜீவநதி எழுச்சிக்கூடல் விவசாயிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முயற்சியின் பேரில் ஒறையூர் - ரெட்டிக்குப்பம் இடையிலான பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

               8 மீட்டர் அகலத்தில் 20 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ள பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்களாக தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் காலதாமதமானது. இதனையடுத்து பாலத்தில் மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக ரெட்டிக்குப்பம் மலட்டாறு பகுதியில் பாலம் கட்டுவதற்கு "பொக்லைன்' இயந்திரம் மூலம் மணல் பகுதிகள் தூர்வாரும் பணிகள் நடந்தது.





Read more »

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இணைய தளம் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

கடலூர் : 

          பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பதிவை இணைய தளம் மூலமாக பள்ளியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: 

                 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணைய தளம் மூலம் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் பாரதமணி, பத்ரூ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழிதேவி, வேலைவாய்ப்பு அலுவலர் பங்கேற்றனர். இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவை வரும் 20ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். 

               தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், வீட்டு முகவரி (ரேஷன் கார்டில் உள்ளபடி) மொபைல் எண், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பதிவிற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை. தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

பரங்கிப்பேட்டையில் ரஜினி உடல் நலம் பெற வேண்டி பாபாஜி கோவிலில் கூட்டு பிரார்த்தனை

சிதம்பரம்:

          சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி என்வழி.காம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் தமிழகத்தில் பல பகுதியிலிருந்து வந்து ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

                என்வழி.காம் என்ற அமைப்பின் ஆசிரியர் வினோ கூட்டு பிரார்த்தனையை தொடங்கி வைத்தார். இதல் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகள், அன்னதானம் நடைபெற்றது. பிரார்த்தனையில் கடலூர் பெரியசாமி, விழுப்புரம் இப்ராகிம், சுகந்திரவீரன், புதுக்கோட்டை குணசேகரன், திருவாரூர் தாயுமாணவன், திருச்சி அபினேஷ், சிதம்பரம் ரமேஷ்குமார், செந்தில்குமார், சபாபதி தீட்சதர், பாட்ஷா, சிவகுமார், ஜோதிநாதன், பரங்கிப்பேட்டை சிவபிரகாரம், சேத்தியாதோப்பு செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

             மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணையதளத்தை சேர்ந்த சங்கர், கலிபா, சந்தோஷ், கணேஷ், ரமேஷ்குமார், முத்துராமன், சரவணன், ஜான், ஆனந்த், ஸ்ரீதீபக், ஆஷிஷ் நடராஜ், ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்: விஜயகாந்த் நடவடிக்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை

      கடலூர் தெற்கு மாவட்டம் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் பூ.ராஜமன்னன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் எஸ். ஸ்டாலின்,  ஆகியோர் அவரவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more »

Large quantum of water wasted from overhead tank in Cuddalore



Large quantity of water gushing out from the overhead tank in the pumping station in Cuddalore on Monday.

CUDDALORE: 

          The mega-size overhead tank with a total capacity of 1.5 lakh litres, located at the pumping station near the Collector's camp office here, suddenly decanted large volume of water on Monday morning.

            A stretch of the Nethaji Road, Nellikuppam road and the entry point to the camp office remained flooded for some time. Those employed in the pumping station claimed that since cleaning operation was going on in the overhead tank entire water was drained from it. It defied logic and raised the question as to why should the cleaning operation be undertaken in a filled up overhead tank.

          When contacted, Municipal Commissioner M.Elangovan said that it was a routine that after the overhead tank got filled the respective valves would be opened to supply water to particular areas. However, on Monday morning a valve got struck thereby causing disruption in the supply. All attempts made to fix it failed and therefore the only corrective measure available was to replace the faulty valve with a new one. Therefore, when the old valve was removed water stored in the overhead tank gushed out. With a new valve in place now no such problem would recur, Mr Elangovan said.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior