உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

            உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

                 இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் இறந்த போதுதான் மனித உயிர்கள் மதிப்பிட முடியாதது என்று உலக நாடுகள் உணர்ந்தன.

உலக மனித உரிமைகள் தினம்: 

                  அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் 1945-ம் ஆண்டு மனித உரிமைகள் மீறல் பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் 3 ஆண்டுகள் கழித்து 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில்... 

                  மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அல்லது இந்திய நீதிமன்றங்களின் மூலம் அமலாக்கக் கூடிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய உரிமைகளை குறிக்கும்.இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அமலுக்கு வந்தது. அப்போது தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையம் என்றும் அந்தந்த மாநிலங்கள் அளவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

              அதன்படி 12.10.1993-ல் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை செயல்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 17.04.1997 முதல் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எங்கு உள்ளது?: 

சென்னையில்
"திருவரங்கம்' எண் 143, 
பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை) 
சென்னை 600 028 

                 என்ற சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நீதியரசர் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி செயல்பட்டு வருகிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.ஆர். செல்வக்குமார், கே. மாரியப்பன், எஸ். பரமசிவன் ஆகியோர் செயல்படுகின்றனர்.

யார் மீதான புகார் விசாரிக்கப்படும்? 

                 அரசுப் பணிகளின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறுதல் மேலும் அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் மட்டுமே ஆணையத்தால் விசாரணை செய்ய முடியும். தனி நபர்களால், தனி நபர் மீது மீறப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணைக்கு எடுக்காது. மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலம் அளிக்க வேண்டும். 

               புகார்கள் ஏதும் வராத நிலையில் மனித உரிமை மீறல் குறித்து வெளிவரும் பத்திரிகை செய்திகளை ஆணையமே புகாராக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.புகார்களுக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகார்தாரர்களுக்கு அறிவிப்புகள், அழைப்பாணைகள், விசாரணை உத்தரவுகளுக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. 

மறுக்கப்படும் புகார்கள் எவை? 

            ஆணையத்தின் சட்டம், நடைமுறை விதிப்படி, பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள். தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள், மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்குப்பின் பெறப்படும் புகார்கள், பெயர், கையொப்பம், முகவரி இல்லாமல் அனுப்பப்படும் புகார்கள். உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள், ஒப்பந்தங்கள், தொழிலாளர்கள்-பணியாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள புகார்கள் ஆகியவை ஆணையத்தால் மறுக்கப்படும்.

விசாரணையில் காவலர்கள்: 

                ஆணையம் சார்பில் பெறப்படும் புகார்களை புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்து ஆணையம் அறிக்கை பெறுகிறது. இந்தப் புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.), 2 டி.எஸ்.பி.க்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை அதிகாரிகளாக செயல்படுகின்றனர். தேவைப்படும் சில புகார்களை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பார்கள். 

                 இவ்வாறு விசாரிக்கப்படும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்துக்கு தெரியவரும் போது, மேல் நடவடிக்கை தேவை இல்லை என ஆணையம் கருதினால் புகார் முடித்து வைக்கப்படும். விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கிட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர, நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

இது வரை... 

                     தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டுக்கு பிறகு 2010 மார்ச் வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 97 ஆயிரத்து 615 மனுக்கள் ஆணையத்தால் முடிக்கப்பெற்றுள்ளன.

Read more »

கடல் நீரோட்டத்தில் திடீர் மாற்றம்: கடலூரில் படகுகள், வலைகள் சேதம்


கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு தாழங்குடா அருகே ஒதுங்கிக் கிடக்கும் மீன்பிடிப் படகு.
 
கடலூர்:
 
              :கடலூர் கடலில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட புதிய நீரோட்டத்தால் படகுகள், வலைகள் அடித்துச் செல்லப்பட்டு, சேதம் அடைந்தன.
 
             கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடல் நீரோட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. கடற்கரையில் வெகுதூரம் வரை பொங்கி எழுந்த கடல் அலைகளுடன், நீரோட்டம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வேகமாக நகர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதில் கடற்கரையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த, 20 விசைப் படகுகள் மற்றும் வலைகள் 5 கி.மீ. தொலைவில் உள்ள தாழங்குடா வரை இழுத்துச் செல்லப்பட்டது.
 
         படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 2 படகுகள் அவற்றின் என்ஜின்கள் மற்றும் வலைகள் பலவும் சேதம் அடைந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறுகையில், 
 
                     வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் சின்னம் காரணமாக நீரோட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படுகிறது. இதனால் படகுகளும் சேதம் அடைய நிறைய வாய்ப்பு உள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, வியாழக்கிழமை மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு அதிக மீன் கிடைத்தது. வியாழக்கிழமை பாதிக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்று இருந்தன என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மழை


பலத்த கொந்தளிப்புடன் அலைகள் அதிக உயரம் எழுந்து ஆர்ப்பரிக்கும் கடலூர் தேவனாம்பட்டினம் கடல்.
 
கடலூர்:
 
               கடலூரில் வெள்ளிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 15 நாள்களுக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. கடந்த திங்கள்கிழமை வரை மழை நீடித்தது. 
 
                செவ்வாய்க்கிழமை முதல் மழை ஓய்ந்து சூரியன் முகத்தை பார்க்க முடிந்தது.இதனால் மூழ்கிக் கிடந்த நெல் பயிர்கள் வெளியே தலைகாட்டத் தொடங்கின. வயல்களில் தேங்கி இருக்கும் நீரை வடிய வைக்கும் முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
              கடந்த 3 நாள்களாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் வேளையில், வெள்ளிக்கிழமை, வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மீண்டும் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. காலையில் லேசான மழை பெய்தது. மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு தெரிந்தது.
 
                 இத்தகைய வானிலை காரணமாக, வெள்ளிக்கிழமை வங்கக் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேல் எழும்பி ஆர்ப்பரித்தன. எனினும் படகுகள் அனைத்தும் மீன் பிடிக்கச் சென்று இருந்தன ."தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்படுவது, ஈரப்பதம் நீடிப்பது பயிர்களுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

பரவனாற்று கரை சீரமைப்பு: என்.எல்.சி. நடவடிக்கை


என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் பரவனாற்று கரை பலப்படுத்தும் பணி.
 
நெய்வேலி:
 
             மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பரவனாற்று கரையை என்எல்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீர்செய்து, சென்னை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
              அண்மையில் பெய்த மழையால், நெய்வேலிக்கு அருகிலுள்ள பரவனாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், வடலூரை அடுத்த மருவாய் அருகே கரையை முற்றிலும் உடைத்துக் கொண்டு, சென்னை- கும்பகோணம் சாலையை அரித்துக்கொண்டு சென்றது. இதனால் இச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.அண்மையில் வடலூர் வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், சாலை துண்டிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டுச் சென்றார். 
 
               இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன், என்எல்சி நிர்வாகத்தின் துணையுடன் அப்பகுதியை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு, என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகனுடன் பேசினார். இதைத்தொடர்ந்து என்எல்சி 2-ம் சுரங்க அதிகாரிகள் மேற்பார்வையில், பரவனாற்று கரை பலப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடந்த இப் பணி, ஒரே நாளில் முடிக்கப்பட்டு, கரைப் பலப்படுத்தப்பட்டதுடன், சாலையில் வெள்ள அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.

Read more »

கடலூர் முதுநகரில் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு




கடலூர் : 

               கடலூர் முதுநகரில் மழை நிவாரணமாக 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுத்ததால் ஆத்திரமடைந்து அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. முதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளுமாறு கடந்த 4ம் தேதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் டோக்கன் கொடுத்தனர்.

                இதை வாங்கிய மக்கள், இருசப்ப செட்டித் தெருவில் உள்ள 2ம் எண் ரேஷன் கடைக்குச் சென்று டோக்கனை கொடுத்து அரிசி கேட்டனர். ரேஷன் கடைக்காரர், 10 கிலோ ரேஷன் அரிசியை கொடுத்து விட்டு, ரேஷன் கார்டில் இன்னும் 10 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும் எனக் கூறினார் .ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 20 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிலோவிற்கான 10 ரூபாயை ஆளுங்கட்சியினர் ரேஷன் கடையில் கொடுத்திருப்பது தெரிந்தது.

              மழை நிவாரணமாக வெறும் 10 ரூபாயை மக்களிடம் நேரடியாக கொடுக்க முடியாது என்பதால், ஆளுங்கட்சியினர் தந்திரமாக ரேஷன் கடையில் கொடுத்திருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், மழை நிவாரணம் வெறும் 10 ரூபாய் மட்டும் தானா எனக் கேட்டு தாங்கள் வாங்கிய ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

                அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் அரிசியை, ஆளுங்கட்சியினர் சிலர் மழை நிவாரணமாக வழங்குவதை அறிந்த கலெக்டர், ரேஷன் அரிசியை கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மொத்தமாகவோ, டோக்கன் முறையிலோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு முறைகேடு நடந்தால் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், கடலூர் முதுநகரில் ரேஷன் அரிசியை நிவாரணமாக வழங்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்ய உத்தரவிட்டார்.

                 இந்நிலையில், அரசு மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை அடையாளம் தெரியாத சிலர் அவமதித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 8ம் தேதி இரவு கடலூர் வட்டார குடிமைப் பொருள் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம், கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி அவமதித்த அடையாளம் தெரியாத ஆண் மற்றும் சில பெண்களை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் : 

            ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
 
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் உள்ள பொது வினியோகத் திட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிலர் பொது வினியோகத் திட்ட அரிசியை தவறுதலாக சிலருக்கு டோக்கன் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்வதாக செய்திகள் வந்துள்ளன.
 
              இது தொடர்பாக எந்த விதமான ஆணையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. பொதுவினியோகத் திட்ட அரிசியை அனுமதிக்கப்பட்ட முறைகளினால் அன்றி வேறு வகைகளில் பயன்படுத்துவோர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.மேலும் ஏழைகளுக்காக வினியோகம் செய்யப்படும் அரிசியை ரோட்டில் கொட்டி அலட்சியப்படுத்தியதும் ஏற்புடையதன்று. எனவே கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்ட அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யக்கூடாது.  இனி வரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் 112 வயதிலும் உழைக்கும் "இளைஞர்"



சிதம்பரம் : 

               யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

                கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார்.


                      ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறு மனே வாயால் கயிறு திரித்து  உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும்,  யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது "இளைஞரை' நினைத்தால் பெருமைப்படாமல் இருக்கமுடியாது.

Read more »

கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சி

கடலூர்:

               கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சியை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர். விதவிதமான கலர்களில் பட்டாம் பூச்சி பறப்பதைக் கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.  

               ஆனால், வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், கலரும் வித்தியாசமாக இருந்தால் கேட்கவே வேண்டாம். கடலூர் சிப்காட் பகுதியில் நேற்று மாலை அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்த சிறுவர்கள், ஆவற்றை பிடித்து விளையாடினர். பிடிபட்ட பட்டாம்பூச்சி வழக்கத்திற்கு மாறாக 16 செ.மீ., அகலம் கொண்டதாகவும் இரண்டு அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக நான்கு இறக்கைகளுடன் பின்புறம் சிறிய அளவில் வால் போன்ற வடிவத்தில் காணப்பட்டது. 

              பட்டாம்பூச்சி என்றாலே கலர்புல்லாக இருக்கும். ஆனால், இந்த பட்டாம்பூச்சி சிப்காட் பகுதியில் கிடைத்ததாலோ என்னவோ வெளிறிய நிறத்தில் காணப்பட்டது. இந்த "மெகா' சைஸ் பட்டாம்பூச்சியை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.

Read more »

சட்டமேலவை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணிக்கு கால அவகாசம் நீடிப்பு

கடலூர்

              தமிழக சட்டமேலவை தேர்தலுக்காக விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மத்தியம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது.

                  வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 7-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான காலஅவகாசத்தை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

                      எனவே தமிழ்நாடு சட்டமேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சுயஅத்தாட்சி செய்து கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளின் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாகவோ, நேரிலோ நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளிடம் வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.
 
 

Read more »

NLC plugs breach

CUDDALORE: 

          The Neyveli Lignite Corporation management recently averted traffic disruption on Chennai-Kumbakonam road by plugging a breach in the banks of the Paravanar.

           A statement from the NLC said that floods following heavy rain breached the banks of the Paravanar at Maruvai, near Neyveli. Soon after the people brought it to the attention of the district administration, Collector P. Seetharaman, along with NLC director (mines) B. Surender Mohan, inspected the area.

           On the direction of the Collector, the NLC management deployed dozens of heavy machinery, including bulldozers and tipper-lorries, to plug the breach. After 20 hours of continuous effort, the NLC officials brought the situation under control, ensuring smooth flow of traffic on Chennai-Kumbakonam road, the statement said.

Read more »

Premises sought for Sahitya Akademi

CUDDALORE: 

           The Cuddalore Readers' Forum has appealed to the State government to allot a suitable place for housing the Sahitya Akademi office on a permanent basis in Chennai. Forum organiser Balki, in a representation addressed to Chief Minister M. Karunanidhi, said that the Sahitya Akademi, hitherto functioning from a private property at Teynampettai in Chennai, had been asked to vacate the premises. As such, the Akademi could not mobilise resources to own a building. Therefore, the forum requested the Chief Minister to make necessary arrangements in this regard.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior