உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி வீட்டில் தகவல் சேகரிப்பு


           2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 
                  கணக்கெடுக்கும் பணி கிண்டி ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. ஆளுநர் பர்னாலா தனது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை அளித்து, தகவல் சேகரிப்புப் படிவத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்புப் பணிகள் நடைபெற்றன.முதல்வர் கருணாநிதியின் வீட்டில் தகவல் சேகரிப்புப் பணி நடைபெற்ற போது, தனது வீட்டில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். பின்னர், தமிழ்நாடு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும். இந்த பணிகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்புப் பணியாளர்கள் வரும்போது, தேவையான மற்றும் சரியான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணன்.   முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாநில வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். சுந்தரதேவன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் தகவல்களைப் பதிவு செய்தனர்.

Read more »

புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு


புதுச்சேரி:
 
            புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் சுப்பாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 
                    தற்போது இக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதல் இந்த இடங்கள் 116 ஆக உயர்த்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத  இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி இக் கல்லூரியில் புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கான இடங்களும் 26-லிருந்து 31 ஆக உயருகிறது. புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு எண்ணிக்கை 5-லிருந்து 9 ஆக உயருகிறது. புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு  4-லிருந்து 5 ஆக உயருகிறது. இதன் மூலம் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி, ஆதிதிராவிட மாணவர்களுக்கு 15 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமும் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் பணிகள் முடிந்து உள்கட்டமைப்பு வசதிகள் உருவான பிறகு சேர்க்கைக்கான இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது

Read more »

என்.எல்.சி.யில் இன்று இரவுப் பணி முதல் ஸ்டிரைக்

நெய்வேலி:
 
              புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவுப் பணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 
 
               என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்நிலையில் புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திடவும்,  ஊதியமாற்று ஒப்பந்தக் குழுவை மாற்றிட வலியுறுத்தியும்  தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி புதன்கிழமை நடைபெறும் வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டத்தில் முறைப்படி இதனை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

சமச்சீர் கல்வி திட்ட பாடநூல்கள்: மாணவர்களிடம் வரவேற்பு


கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள். (இடது படம்) சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கியதை முன்னிட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சிதம்பரம்:

               சமச்சீர்  கல்வி பாட நூல்களுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.இந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறந்த நாளான  செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. பாட நூல்கள் வண்ணப் படங்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பயிலும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. 6-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் உரைநடை பகுதியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா., சுவாமி விவேகானந்தர், தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மேரிகியூரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. தமிழ் இலக்கணம் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாட நூலில் டிஸ்கவரி, மிதிவண்டி, மாணவர்-ஆசிரியர் உரையாடல், கிராமிய நடனங்கள், உள்ளிட்டவை படங்களுடன் இடம்பெற்றுள்ளன.கணித நூலில் மாதிரி கணக்குகள், செயல்திட்டம் மற்றும் பயிற்சி கணக்குகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இடம் பெற்றுள்ளன. அறிவியல் நூலில் தாவரங்களின் உலகம், செல்லின் அமைப்பு, உயிரினங்களின் அமைப்பு, உணவுமுறை, சுற்றுச்சூழல், அன்றாட வாழ்வில் வேதியியல், அளவீடுகளும் இயக்கமும், காந்தவியல், ஆற்றலின் வகைகள், ஒளியியல் உள்ளிட்டவை  வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.சமூக அறிவியல் நூலில் டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாறு, பூமியும் சூரியக் குடும்பமும், சமணமும் பௌத்தமும் உள்ளிட்ட பாடங்கள் வண்ணப் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நபராக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தகவல்களை வழங்கினார்.

                2011 பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு 00 மணியைத் தகுதி நாளாகக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு வருவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களை அளிக்க, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் முதல் நபராக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கணக்கெடுக்கும் ஊழியர்களிடம் தகவல்களை அளித்து இப்பணியைத் தொடங்கி வைத்தார்.   

பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறியது:

                 கடலூர் மாவட்டம் 4,121 கணக்கெடுக்கும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 4029 பேர் கணக்கெடுக்கும் பணியாளர்களாகவும், 672 பேர் மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆவணங்களை வைத்துக் கொள்ள, இவர்களுக்கு கிட் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. இரு வகைப் படிவங்களை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு 35 வினாக்கள் உள்ள படிவமும், தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிக்கு 14 வினாக்கள் கொண்ட படிவமும் வைத்து இருப்பர்.

               ஒவ்வொருவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிக்குத் தகவல் சேகரிக்கப்படுகிறது. மக்கள் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். தவறான தகவல்களை அளித்தால் தண்டனைக்கு உரிய குற்றமாகும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் சிறப்பம்சமாகும்.

             தற்போதைய கணக்கெடுக்கும் பணி 15-7-2010ல் முடிவடையும். கணக்கெடுப்பில் தகவல்கள் அளிக்கப்பட்டதும், ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். இதைக் கண்டிப்பாக கேட்டுப் பெறவேண்டும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர்  இதைக் காண்பித்தால்தான் அடையாள அட்டையைப் பெறமுடியும் என்றார் ஆட்சியர்.

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விருத்தாசலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நகர்மன்ற தலைவர் வ.க.முருகன் வீட்டிலிருந்து தொடங்கியது. கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் அலுவலர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன், நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். கணக்கெடுப்பின் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Read more »

என்.எல்.சி. தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று இரவுப் பணி முதல் ஸ்டிரைக்


நெய்வேலி :
 
               புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
 
                 இதையொட்டி பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸôர் ஈடுபடவுள்ளனர். என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்நிலையில் புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திடவும்,  ஊதியமாற்று ஒப்பந்தக் குழுவை மாற்றிட வலியுறுத்தியும்  தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 
 
                 அதன்படி புதன்கிழமை மெயின் பஜாரில் நடைபெறும் வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டத்தில் முறைப்படி இதனை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் மே 31-ல் நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன. இவர்கள் ஜூன் 15-க்குப் பிறகே வேலைநிறுத்தம் செய்யமுடியும் என்ற நிலையில், தொழிற்சங்கக் கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டு கடிதம் அளித்துள்ளனர். 
 
இக்கடிதம் குறித்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கூறுகையில், "
 
                     "இக் கடிதத்தை நாங்கள் புறக்கணித்துள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எந்தத் தேதியிலிருந்து ஸ்டிரைக் செய்யப்போகிறார்கள் என்பதே தெரியாத பட்சத்தில் அவர்களுக்கு எப்படி ஆதரவு அளிக்கமுடியும்? எனவே நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, புதன்கிழமை இரவுப் பணி முதல் ஸ்டிரைக் நடைபெறும்'' என்றார்.

Read more »

புதுச்சேரி வானொலியில் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் உரை

சிதம்பரம்:
 
                புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் புதுச்சேரி வானொலியில் புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் உரையாற்றுகிறார்.இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை: கால அவகாசம் நீட்டிப்பு


கடலூர்:
 
                கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க கால அவகாசம் 5-6-2010 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 
மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு: 
 
                  கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கடலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 221 நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
 
                  தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான காலஅவகாசம் 5-6-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது. எனவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பறைசாற்றும் வகையில், அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப்பலகை வைத்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பராமரிப்பில்லா கட்டடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை

நெய்வேலி:

                 நெய்வேலி வட்டம் 14-ல் செயல்படும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை போதிய இடவசதியில்லாத பராமரிப்பில்லாத கட்டடத்தில் இயங்கி வருகிறது. 

                    ஜவகர் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  கட்டணம் செலுத்த வசதியாக கல்லூரியின் பரிந்துரையின் பேரில், கல்லூரி வளாகத்தின் கிழக்குப் புறத்தில் 600 சதுர அடி பரப்பளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கூடுதல் கவுண்டர் 13 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.பின்னர் 2006-ம் ஆண்டு முதல் தனிக்கிளையாக செயல்படத் தொடங்கியது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் வாடிக்கையாளர்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதி செய்யப்படவில்லை.600 சதுர அடி பரப்பளவு உள்ள இவ் வங்கியில் ஒரேசமயத்தில் 10 வாடிக்கையாளர்கள் கூட வங்கியினுள் நிற்க முடியாத அளவுக்கு இடநெருக்கடி உள்ளது. இவ் வங்கி கிளையில் தற்போது மேலாளர், உதவி மேலாளர், காசாளர், 2 முதுநிலை ஊழியர்கள்,  உதவியாளர் என 6 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கென தனித்தனி மேஜை நாற்காலி, கோப்புகள் வைப்பதற்கான அலமாரி உள்ளிட்டவையும் போதுமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் வங்கி ஊழியர்கள் நடமாடக்கூட இடம் இல்லை. 

                     எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் வங்கியினுள் அமர்ந்து உணவருந்தக் கூட இடமில்லாமல் ஒருவர் உணவு சாப்பிட்டு முடித்தபின்னர் அவர் அவ்விடத்தை காலிசெய்த பின்னரே மற்றவர் அமர்ந்து சாப்பிட முடியும் என்ற நிலை உள்ளது.மேலும் வங்கி கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை உள்ளே வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. வங்கி கட்டடத்தை சீரமைப்பதோடு கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது இடவசதி மிக்க புதிய கட்டடத்துக்கு வங்கி கிளையை மாற்ற வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கை.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டுவசதித் திட்டம்; வீடுகள் கணக்கெடுப்பு நிறைவு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. இதில் விவரங்களை அளிக்காமல் விடுபட்டவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு: 

                கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 2,10,814 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. 668 ஊராட்சிகளில் 1,90,262 கூரை வீடுகள் அலுவலர்களால் மேலாய்வு செய்யப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் படிவங்கள் சரிபார்க்கப்பட்டதும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு நடைபெற்றபோது, தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்களின் வீடுகள், பூட்டப்பட்டு இருந்ததாகக் கணக்கெடுப்புப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும்.

                  இத்தகைய நபர்கள் தங்கள் வீடுகள் பற்றிய விவரங்களை, ஆவணங்களை படிவத்தில் பதிவு செய்துகொள்ள, சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்க, 30-6-2010 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

ரூ. 24 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டும் 6 மாதமாக தொடங்கவில்லை: விவசாயிகள் புகார்

கடலூர்:

               ரூ.24.20 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் கடலூர் மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                  திட்டக்குடி வட்டம் தொழுதூரில் இருந்து விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வரை பழுதான பழைய தார்ச் சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க ரூ.24.20 கோடியில், நெடுஞ்சாலைத் துறையில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. பெண்ணாடம் சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தும் இச்சாலை, மிகமோசமாகப் பழுதடைந்துள்ளது. விரைவில் பணி தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:

                   திட்டக்குடி அருகே கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பள்ளி தொடங்கிய முதல் நாளே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

                   திட்டக்குடியை அடுத்த சிறுநெசலூரில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் 120 மாணவர்கள் படிக்கிறார்கள்.÷2 ஆண்டுகளுக்கு முன் சிறுநெசலூர் வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைத்தபோது, சிறுநெசலூர் கிராமம் சாலைக்கு கிழக்குப் பகுதியிலும், நடுநிலைப் பள்ளி சாலைக்கு மேற்குப் பகுதியிலுமாக அமைந்து விட்டது.  பள்ளியையும் கிராமத்தையும் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதையும் அமைக்கப்படவில்லை.

                           இதனால் மாணவர்கள் வெகுதூரம் நடந்து சென்று, போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியை தாற்காலிகமாக சிறுநெசலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கு கிராமப் பகுதியில் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிக்கு புதிய  கட்டடம் கட்டாததைக் கண்டித்து சிறுநெசலூர் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை, தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். 120 மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெற்றோரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

கருவேப்பிலங்குறிச்சியில் கிராம மக்கள் சாலை மறியல்

விருத்தாசலம்:
 
               மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விருத்தாசலம் அருகே  கருவேப்பிலங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
                   விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (29). இவரது மனைவி கலைச்செல்வியை பிரசவத்திற்காக கருவேப்பிலங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறிது நேரத்தில் கலைச்செல்விக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தை இறப்புக்கு காரணம் என்று கூறி, சத்தியவாடியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன் அவர்களிடம் பேச்சுநடத்தி கலைந்துபோகச் செய்தனர். இதனால் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

வாடகைக்கு விடப்பட்ட 17 கார்கள் மோசடி

கடலூர்:

                 பிரபல செல்ஃபோன் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட கார்கள் மோசடி செய்யப்பட்டு உள்ளன. வாடகையும் வரவில்லை. கார்களையும் காணவில்லை.

             பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் 17 பேரும் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீûஸ சந்தித்து புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாறைச் சேர்ந்தவர் ரவி (50). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். வந்தவாசி அரசு போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் கடலூர் வந்து, பிரபல செல்ஃபோன் நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கார் வேண்டும். ஓட்டுநர் தேவையில்லை. மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதை நம்பி நாகராஜன், ஜனார்த்தனன், ரங்கன் உள்ளிட்ட 17 பேர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு, கார்களை (10 சுமோ, 2 அம்பாசிடர், 5 இண்டிகா) அளித்தனர்.

                கார் வழங்கிய இரு மாதங்களுக்கு சிலருக்கு வாடகை வழங்கப்பட்டது. பின்னர் வழங்கவில்லை. ஓட்டுநர் ரவியைச் சந்தித்து கேட்டதற்கு, விரைவில் வழங்குவதாகத் தெரிவித்தாராம். பின்னர் விசாரித்ததில் கார்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை. வாடகையும் வரவில்லை. ஏமாற்றப்பட்ட 17 பேரும் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். வாடகைக்குக் கார்களை வாங்கிச் சென்ற ஓட்டுநர் ரவி அவற்றை மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அடமானம் வைத்துக் கடன்பெற்று இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் ஓட்டுநர் ரவி நெருக்குதல் காரணமாக திங்கள்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Read more »

தேசிய மக்கள் கணக்கெடுப்பு பணியின்போது தவறான தகவல் கொடுத்தால் தண்டனை: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் : 

                 தேசிய மக்கள் விவர பதிவேடு கணக்கெடுப்பாளர்களிடம் தவறான தகவல் கூறுபவர்கள் தண்டனைக்குரியவர்கள் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

                தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். பின்னர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி தொடங்கப்படும். 

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில் 

                  "கடலூர் மாவட்டத்தில் 6.45 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. கணக்கெடுக்கும் பணியில் 4,029 பணியாளர்களும், சூப்பர்வைசர்களும் ஈடுபட்டுள்ளனர். கணக் கெடுப்பின்போது 35 வினாக்கள் குறித்து விவரங்கள் கேட்கப்படும். பொதுமக்கள் கணக்கெடுப் பாளர்களிடம் சரியான விவரங் கள் கூறி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர் கள் படிவம், அதற்கான தோல்பை உள்ளதா என தெரிந்து கொண்டு விவரங்களை கூறவும். தவறான தகவல் கொடுப்பவர்கள் தண்டனைக்குரியவர்கள்' என கூறினார்.

சிதம்பரம்: 

                   சிதம்பரத்தில் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் வீட்டில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் கணக்கெடுப்பணி துவங்கியது. தலைமை கணக் கெடுப்பாளர் ஷேக் மைதீன் மேற்பார்வையில் 90 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 15 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது தற்போது தேசிய பதிவேட்டிற் காக கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்பட்டது. குடும்ப தலைவர், உறுப்பினர்கள், உறவு முறை, வயது, தொழில், வருமானம், கல்வித்தகுதி, நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி மற்றும் கம்யூட்டர், இண்டர்நெட் உபயோகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

விருத்தாசலம்: 

                 சேர்மன் முருகன் வீட்டில் கணக் கெடுக்கும் பணி துவங்கியது. ஆர்.டி.ஓ., முருகேசன், கமிஷனர் திருவண்ணாமலை, தாசில் தார் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன், நகராட்சி மேலாளர் மரியதாஸ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாளர் கல்யாணசுந்தரம், இளவரசு, கணக்கெடுப்பாளர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்: 

                 சேர்மன் கெய்க்வாட்பாபு தலைமை தாங்கினார். ஆணையாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித் தார். மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஊழியர்களிடம் அதற்கான படிவங்களை எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் வழங்கி துவக்கி வைத்தார். மேலாளர் சிவசங்கரன், பழனிவேல், அங்கமுத்து, கவுன்சிலர்கள் விஜயகுமார், வீரமணி, தமிழ்மாறன் இன்ஜினியர் புவனேஸ்வரி, செந்தாமரைக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி: 

                சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கி கணக்கெடுப்பு புத்தகம் வழங்கினார். மேலாளர் ஜெயலட்சுமி வரவேற்றார்.கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர் கள் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் கமிஷனர் உமாமகேஸ்வரி விரிவாக பேசினார்.

ராமநத்தம்: 

             திட்டக்குடி தாலுகாவில் 150 குடியிருப்பு பகுதிகள் அல்லது 600 பேர் வசிக்கும் பகுதி (வட்டம்) என பிரிக்கப்பட்டுள்ளது. 395 வட்டங்களில் கணக்கெடுக்க 62 மேற்பார்வையாளர்களையும், 390 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

பிச்சாவரம் சுற்றுலா மையம் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு! சுற்றுலா வளர்ச்சி கழகமே நடத்த வலியுறுத்தல்

சிதம்பரம் : 

                சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வன சுற்றுலா மைய ஓட்டல், விடுதிகள், பார்களை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

                 சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது பிச்சாவரம் வன சுற்றுலா மையம். 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலக்காட்டில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை எனும் மாங்குரோவ் தாவரங்கள், 18 வகையான மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ள இச்சுற்றுலா மையம் உலக அளவில் சிறப்பு பெற்று, கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இங்குள்ள 4 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கால் வாய்கள் ஒரே மாதிரியான அமைப்புடன் இருப்பது சிறப்பு.

                   இம்மையத்திற்கு வர சிதம்பரத்தில் இருந்து பஸ் வசதி, தமிழ்நாடு சுற்றுலா மையம் சார்பில் ஓட்டல், சதுப்பு நிலக்காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் காட்டேஜ், சிறுவர்கள் விளையாட பூங்கா ஆகியன உள்ளது. கடலூர் கலெக்டராக இருந்த ககன்தீப்சிங்பேடி பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு மீண்டும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வரத்தை அதிகரிக்கும் பொருட்டு பல் வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

                  கிள்ளை பேரூராட்சி சார்பில் நகர்ப்புற சீரமைப்பு திட்டத்தில் கிள்ளை சேர்மன் ரவிச்சந்திரன் முயற்சியால் 50 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உயர்கோபுரம், டெலஸ் கோப், சிறுவர் பூங்கா, புதிய படகுகள் வாங்கப் பட்டுள்ளன. பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தற்போதைய நிலையில் வளர்ச்சிக் கேற்ப பயணிகளின் வருகையும, வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்ததன் மூலம் 32 லட்சம் ரூபாயும், 2008ல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பயணிகளினால் 60 லட்சமும், கடந்தாண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரம் பயணிகளினால் 95 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள் ளது. கோடை காலமான தற்போது மே மாதம் மட்டும் 18 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

               சுற்றுலா மையத்தின் வருமானம் ஆண்டுக் காண்டு உயர்ந்து வரும் நிலையில் சுற்றுலா மைய விடுதி, ஓட்டல்கள், பார் ஆகியவற்றை தனியாரிடம் ஆண்டுக்கு 10 லட் சத்து 80 ஆயிரத்திற்கு 15 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டித்தரும் பிச்சாவரம் சுற்றுலா மைய விடுதி, ஓட்டல்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிதம்பரம் சுற்றுலா விடுதி மற்றும் ஓட்டல் மூடப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகமே தொடர்ந்து நடத்தினால் மேலும் வருமானம் அதிகரிக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என தமிழக முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை செயலருக்கு கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மனு அனுப்பியுள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் திருட்டை தடுக்க ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் : 

                 சிதம்பரத்தில் போலீஸ் சார்பில் அடகு கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து தொடரும் கொள்ளை சம் பவங்களால் கடலூர் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதையொட்டி சிதம்பரத்தில் அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு சிதம் பரம் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். 

கூட்டத்தில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமை தாங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், 

                 "திருட்டு சம்பவங்களை தடுக்க கடைகளை தரமான பூட்டு உபயோகிக்க வேண்டும், சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக லாக்கரில் வைக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் உங் களை நம்பிதான் நகைகளை அடமானம் வைக் கின்றனர். அவற்றை பாதுகாப்பதும் உங்கள் கடமை' என பேசினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அறிவானந்தம், சப் இன்ஸ் பெக்டர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல், எள் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி : 

                பண்ருட்டி பகுதியில் நெல் அறுவடை சீசன் என்பதால் மார்க்கெட் கமிட்டியில் கடந்த வாரத்தை விட நெல், எள் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் கடந்த வாரம் ஏ.டி.டி.,36 ரகம் தினமும் 500 மூட்டைகள் அளவிலும், 50 மூட்டை அளவிலும் விற்பனைக்கு வந்தது. நேற்று முன்தினம் ஏ.டி.டி., 36 ரகம் 1,200 மூட்டைகளும், எள் 100 மூட்டைகளும் வரத்து வந்தது. நேற்று 500 மூட்டைகளும், எள் 50 மூட்டைகளும், உளுந்து 40 மூட்டைகளும், ராகி 20 மூட்டைகளும், மணிலா 20 மூட்டைகளும், திணை, கம்பு ஆகியவை விற்பனைக்கு வந்தது.75 கிலோ எடைகொண்ட நெல் மூட்டை 726 ரூபாயும், 80 கிலோ எள் மூட்டை 3,209 ரூபாயும், பருத்தி 100 கிலோ 3,050 ரூபாயும், 100 கிலோ உளுந்து 5,949 ரூபாயும், கம்பு 1,431 ரூபாயும், ராகி 1,183 ரூபாயும், தினை 1,679 ரூபாயும் விற்பனையானது. நெல் அறுவடை சீசன் என்பதால் இன்னும் 20 நாட்கள் நெல் வரத்து அதிகரித்து காணப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

மின் இணைப்பு வழங்காததால் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் போலீஸ் குடியிருப்பு

கடலூர் : 

                   கடலூரில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் பூட்டியே கிடக்கிறது. கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரியும் இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், 45 போலீஸ்காரர்களுக்கான வீடுகள், கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் கட்டப் பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் சார்பில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பிற்கு மின் இணைப்பு கொடுக்காமல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அலை கழித்து வருகின்றனர்.இதனால் இந்த குடியிருப்பு கட்டுமான பணியை கான்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர் வீடுகளை போலீஸ் துறையில் ஒப்படைக்க முடியாமல் அல்லாடி வருகிறார். மேலும், பள்ளி திறப்பதற்கு முன்பாக குடியிருப்பில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய் யப்படும் என காத்திருந்த தேவனாம்பட்டினம் போலீசாரும் தற்போது என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றனர்.அரசு கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்கவே கான்ட்ராக்டரை மூன்று மாதங்களுக்கு மேலாக அலைகழித்து வரும் மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டால் எப்படி நடத்துவார்கள் என்பதை நினைத்து பார்க்கவே வேதனையாக உள்ளது.

Read more »

ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம்


சிறுபாக்கம் : 

                       மங்களூர் ஒன்றிய வேளாண்மை ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம், வேளாண் வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மைக்குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை அலுவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளின் பயன்பாடு, மானியம், திட்ட விளக்க பயிற்சிகள், விவசாயிகள் சுற்றுலா சென்று கண்டு உயர்வு திட்டம், வயல்தின விழா நடத்துதல், வேளாண் துறை மூலம் பயிர்களுக்கு அளிக்கப்படும் மானிய உதவி திட்டங்கள், அபிவிருத்தி திட்டப்பணிகள், தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பயன் கள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மைக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், ராமதாஸ், ராஜி, தாமோதரன், மருதமுத்து, பொன்முடி, வேளாண் அலுவலர் டென்சிங், கால் நடை மருத்துவ அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலைநகரில் ரூ.2.5 லட்சத்தில் சாலை பணி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கலைஞர் தெருவில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக் கப்படுகிறது. அண்ணாமலைநகர் பேரூராட்சி 2010-2011ம் ஆண்டு பொது நிதியில் ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் தெருவில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி 2.20 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணிகளை சேர்மன் கீதா கலியமூர்த்தி, செயல் அலுவலர் ரங்கநாதன் பார்வையிட்டனர்.

Read more »

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலபணியால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி : 

                   பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பால கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட்டில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இறையூர், பொன்னேரி, அம்பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. தற்போது மேம் பாலம் கட்டுவதற்காக பில்லர் அமைக்கும் பணி ராட்சத இயந்திரங்கள் மூலம் நடந்து வருகிறது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இருபுறமும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக் கப்பட்டுள்ள இரும்பு பொருட்கள், மணல் மேடுகள், ராட்சத இயந்திரங்களால் வாகனங்கள் எதிரெதிர் திசை நோக்கி விரைவாக செல்ல முடியவில்லை.

                      மேம்பால கட்டுமான பணி துவங்கும் முன் இறையூர் கைகாட்டி, கொத்தட்டை சாலை வழியாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று விருத்தாசலம் நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு வழியும், கட்டுமான பணி நடைபெறும் பகுதி வழியாக ஒரு வழி என இருவழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இதுவரை மாற்று வழி ஏற்படுத்தாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு நேர விரயத்தால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior