உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 08, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 10 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் ரசாயனக் கழிவு நீரகற்று நிலையம்

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளின் கியூசெக்ஸ் எனும், பொதுக் கழிவு நீரகற்று நிலையம்.
கடலூர்:

             கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கான பொதுக் கழிவு நீரகற்று நிலையம் (கியூசெக்ஸ்), கடந்த 10 ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிக் கொண்டு இருக்கிறது.  

             கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 32 தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயிண்ட் மூலப்பொருள்கள், பி.வி.சி. மூலப் பொருள்கள், சாயங்கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பவை.  இந்த ஆலைகள் நாளொன்றுக்கு, 2 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, பயன்படுத்துகின்றன. சிப்காட் ரசாயன ஆலைகளால் தொழிற்பேட்டையை அடுத்துள்ள கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவுக்கு மாசுபடுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். 

               ஆலைக் கழிவுகள் வங்கக் கடலிலும், உப்பனாற்றிலும் கலப்பதால், மீன் வளம் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த ஆலைகளின் சுத்திகரிக்கப்பட்ட திரவக்கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க, கியூசெக்ஸ் நிறுவனம், 2000-ம் ஆண்டு ரூ. 5 கோடி மூலதனத்தில் மேற்கண்ட ஆலைகளாலேயே உருவாக்கப்பட்டது.  இது நாளொன்றுக்கு 1.20 கோடி லிட்டர் ரசாயனக் கழிவுகளைச் சேகரித்து, கடலில் கலக்கும் திறன் கொண்டது. 

             இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து, இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.  காரணம் இந்த நிறுவனம் கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய தர அளவுகளின்படி இல்லை என்பதுதான்.  சுத்திகரிக்காத கழிவுகளை கியூசெக்ஸ் நிறுவனம் கடலில் கலப்பதாக, கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், ஆதாரங்களுடன் 2004-ம் ஆண்டு புகார் தெரிவித்தது. இச்செய்தி தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் வெளிவந்தது. இச்செய்திகளை சென்னை உயர்நீதிமன்றம் தன்னேற்பு மனுவாக எடுத்துக் கொண்டு, விசாரணை மேற்கொண்டது.  

             2010 அக்டோபரில் கியூசெக்ஸ் பொதுகழிவு நீரகற்று நிலையத்தை மூடுமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ÷சுமார் ஒரு மாதம் மூடலுக்குப்பின் கியூசெக்ஸ் திறக்கப்பட்டது. கியூசெக்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மனு அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.   ரசாயன ஆலைகளின் திரவுக் கழிவுகளை, தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி) 6 மாதம் ஆய்வு செய்து, அண்மையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது. அறிக்கை விவரங்களை அறிந்தபின், உயர் நீதிமன்றம், இறுதி ஆணையை பிறப்பிக்க உள்ளது.

து குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன் கூறுகையில்

             கியூசெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து சுத்திகரிக்காத ரசாயனக் கழிவுகளை கடலில் கலப்பது சட்ட விரோதமானது.  இயக்க அனுமதி பெறாத ஒரு ஆலையை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்வதாகக் கூறுவதே சட்ட விரோதம். ரசாயனத் தொழிற்சாலைகள் செய்யும் தவறுகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உடந்தையாக இருக்கிறது. ஆலைகள் சுத்திகரிக்காத கழிவுகளை தனக்கு அனுப்புவதாக, கியூசெக்ஸ் நிறுவனமே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  

             அதன்மீதும் வாரியம் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் திருப்பூர் ஆலைக் கழிவுகளை, கியூசெக்ஸ் நிறுவனம் மூலம், கடலில் கலக்க இருப்பதாக அறிகிறோம். இத்திட்டம் ஏற்கப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது என்றார்.  

இதுபற்றி கியூசெக்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி இந்திரகுமார் கூறுகையில், 

             "21 ஆலைகள் இதில் முன்பு உறுப்பினர்களாக இருந்தன. தற்போது 13 ஆலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் அனுப்பும் கழிவுகளை, கடலில் வெளியேற்றுவதே கியூசெக்ஸ் வேலை. ஆலைகள் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அனுப்பினால், எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. இது தொடர்பாக ஆலைகளுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.  அது குறித்து சம்மந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாசுக் கட்டுப்பாடு வாரியம்தான். கடந்த 8 மாதங்களாக கியூசெக்ஸ் நிறுவனம் நன்றாகச் செயல்படுகிறது. 

              எனவே கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் அனுமதி ( உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின், வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.  திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க அனுமதி கேட்டனர். அந்த அளவுக்கு கியூசெக்ஸ் நிறுவனத்தில் வசதி இல்லை என்று கூறிவிட்டோம்' என்றார். 







Read more »

நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித்திருமஞ்சன தரிசன விழாவில் நடனப்பந்தலில் நடனமாடி வரும் நடராஜப்பெருமானை வழிபடும் திரளான மக்கள்.
சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.  ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.

               நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  புதன்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடை  பெற்றது. பின்னர் வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடம்குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. 

              சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.  பின்னர் சித்சபை பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலர் சபா.கல்யாணசபாபதி தீட்சிதர், துணைச்செயலர் தி.தெய்வசிகாமணி தீட்சிதர், அறநிலையத் துறை செயல்அலுவலர் க.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பகலவன் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டி.எஸ்.பி. டிகே.நடராஜன் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 47 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  

அன்னதானம்: 

            கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் கே.நடராஜபிரபு தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பகலவன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் மீனாட்சி, ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் சிவராமன், வி.சங்கர், கே.கணேசன், எஸ்.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

              தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் எம்.இந்துமதி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 





Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு இளநிலை பட்டப் படிப்புக்கு இணையானது: தமிழக அரசு உத்தரவு

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு, கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் இளநிலை பட்டப்படிக்கு இணையானது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

                இந்தப் பட்டப் படிப்பைக் கொண்டு அரசுப் பணிகளில் சேரும் போது, புதிய குழப்பம் உருவாகும் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஒரு புதிய படிப்பைத் தொடங்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை. கலை மற்றும் அறிவியல் படிப்புகளை திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் கற்பிக்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,), தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்பதல் பெற வேண்டும். தொழில் சார்ந்த படிப்புகள் எனில் யு.ஜி.சி., தொலைதூர கல்விக் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியவற்றின் ஒப்புதல் அவசியம்.  ஒரு குறிப்பிட்ட கல்லூரி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகமானது, தான் கற்றுக் கொடுக்கும் படிப்பை, நடப்பில் உள்ள மற்றொரு படிப்புக்கு இணையாகக் கருதி உத்தரவிட வேண்டுமானால் அரசுக்கு அதுகுறித்து விண்ணப்பிக்க வேண்டும். 

             இந்த விண்ணப்பத்தை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆராய்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பும்.  

இணை கல்விக் குழு: 

              ஒரு படிப்பை மற்றொரு படிப்புக்கு இணையானதா என்பதை ஆய்வு செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணை கல்விக் குழு என்றொரு குழு உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  

ஐந்தாண்டு படிப்பு:

              இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்டு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பை, இளநிலைப் படிப்புக்கு இணையாகக் கருதக் கோரி அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணை கல்விக் குழு, பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை இளநிலைப் படிப்புக்கு இணையாக அறிவித்துள்ளது.  இதையேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, 

எம்.ஏ., (ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், மக்கள் தொகை மற்றும் மேம்பாடு, தத்துவவியல், கலாசாரம் மற்றும் சுற்றுலா), நூலக அறிவியலில் பட்ட மேற்படிப்பு,

எம்.காம்., 

எம்.எஸ்ஸி (கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், மூலிகை அறிவியல், விலங்கியல், உயிரி தகவலியல், நுண் உயிரியல், கடல்சார் அறிவியல்-தொழில்நுட்பம், 

எம்.ஏ., தமிழ் போன்ற படிப்புகள் பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளிக்கும் இளநிலைப் படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும். 

              இந்தப் படிப்புகளைப் படித்துத் தேர்ச்சி அடையும் பட்டதாரிகள், அரசுப் பணிக்குத் தேர்வாகும் போது இளநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதப்படுவர்.  குழப்பம்: அரசின் உத்தரவில், பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒருங்கிணைந்த படிப்பு எந்த வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்படவில்லை. தொலைதூர கல்வி மூலமாகவா அல்லது பல்கலைக்கழகத்தின் மூலமாகவா என்பது விளக்கப்படவில்லை. 

                மேலும், அனைத்துப் படிப்புகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா எனவும் தெரிவிக்கப்படவில்லை.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இணை கல்விக் குழுவில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. 

             மூன்று நபர்கள் மட்டும் குழுவில் இருப்பதால் நடைமுறை சாத்தியமான முடிவுகளை அவர்கள் எடுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள், யு.ஜி.சி.யில் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினரையும் குழுவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  





Read more »

சிதம்பரம் நகராட்சியில் ரூ. 10 லட்சத்தில் துப்புரவு வாகனங்கள்

சிதம்பரம்:

               சிதம்பரம் நகராட்சியில் துப்புரவு பணிக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள குப்பைகள் எடுத்துச் செல்லும் வகையில் ரிக்ஷா வடிவில் புதிய வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

              சிதம்பரம் நகரில் குப்பை அள்ளுவதற்கு போதிய வாகனங்கள் இல்லாததால் குப்பைகள் பிளாஸ்டிக் பாயில் கொட்டி இழுத்துச்செல்லும் நிலை இருந்தது. துப்புரவுப் பணிக்கு சைக்கிள் ரிக்ஷா வடிவில் வாகனங்கள் வழங்க வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொதுநிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் சைக்கிள் ரிக்ஷா 33 துப்புரவு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு ஒரு துப்புரவு வண்டிகள் வழங்கப்படும் என நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தெரிவித்தார்.





Read more »

பண்ருட்டி சக்தி ஐடிஐ யில் வேலைவாய்ப்பு முகாம்

  பண்ருட்டி:
  
         பண்ருட்டி சக்தி ஐடிஐ-யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஐடிஐ வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.ப

            ண்ருட்டி காந்தி சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே சக்தி ஐடிஐ இயங்கி வருகிறது. இந்த ஐடிஐ நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி, இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று கொடுத்து வருகிறது. 2010-2011 ம் ஆண்டு பயிற்சி பெற்று ஜூன் 2011-ல் தேர்வு எழுதிய வெல்டர் பிரிவு அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 1-ம் தேதி ஐடிஐ வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

                புதுச்சேரியை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தின. இதில் பங்கேற்ற சக்தி ஐடிஐ மாணவர்கள் 38 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு ஜூலை 6-ம் தேதி முதல் பணியமர்த்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியல் தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் அ.ப.சிவராமன், தாளாளர் ஆர்.சந்திரசேகர், இயக்குநர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ஜி.ரவிச்சந்திரன், முதல்வர் மற்றும் பயிற்றுனர்கள் கலந்துக்கொண்டனர்.




Read more »

பொறியியல் படிப்பு கலந்தாய்வு: கல்லூரிகளின் காலி இடங்களை அறிய

2011-2011 பொறியியல் படிப்பு கலந்தாய்வு: கல்லூரிகளின் காலி இடங்களை அறிய கீழ்காணும் இணைப்பை பார்க்கவும்



http://www.annauniv.edu/tnea2011/

Read more »

NLC seeks coal assets in Indonesia, South Africa

          India’s Neyveli Lignite Corporation Limited (NLC) is seeking to acquire coal assets in Indonesia and South Africa through joint ventures (JVs) with local companies.

        The acquisitions would be used to source feedstock for the company’s expansion and greenfield thermal power projects in India. The coal blocks to be acquired in Indonesia and South Africa through JVs would be linked as raw material sources for NLC’s ongoing thermal power projects, like the thermal power station II expansion of two 250 MW units and the Tuticorin thermal power project, comprising two 500 MW units located in the southern Indian town of Tuticorin.

         NLC had taken a strategic decision to reduce lignite mining operations because of problems of land acquisition and mining of hard rock surfaces in the country and instead leverage its mining capabilities to develop mines overseas and expand thermal power generating capacities within India, linked to its overseas assets, company officials said. NLC might even consider two separate JV partners for Indonesia and South Africa.

         However, a final decision will be taken only after geological confirmation of the coal reserves and commercial proposals to be submitted by proposed JV partners, the officials said. NLC would be willing to transport the coal extracted from overseas blocks in Indonesia and South Africa in its entirety to domestic thermal power plants or share the extracted coal with its proposed JV partner, depending on the agreement that may be concluded between the companies and the mineable reserves of the blocks acquired.

        Meanwhile, NLC has proposed setting up a 1 000 MW coal-based power plant in Ib Valley in the eastern India state of Orissa in collaboration with Mahanadi Coalfields (MCL), a wholly owned subsidiary of Coal India, the world’s largest coal miner. The project would entail an investment of $1-billion. NLC and MCL have a separate JV to develop a coal reserve in Talabira, Orissa that will produce 20-million tons of coal a year, part of which would be linked to feed the Ib Valley power project.
           NLC, which operates predominantly in southern India, has three lignite reserves that produces 10.5-million tons, three-million tons and 10.5-million tons of lignite respectively. The company also operates three lignite-based power plants in southern India with generating capacities of 600 MW, 1 470 MW and 420 MW respectively.

Read more »

India Open to Sell 3.56% of Neyveli Lignite Corporation

         India's Coal Minister said the ministry is willing to sell off an additional 3.56% equity stake in state-run Neyveli Lignite Corp. on Thursday. "We had written to the finance ministry seeking direction on further disinvestment in Neyveli Lignite Corp.," said Sriprakash Jaiswal. "We have yet to hear from them." The government currently holds a 93.56% stake in the company. 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior