உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

பி.இ. கலந்தாய்வு: வெளியூர் மாணவர்களுக்கு 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை

             பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர்களுக்கு இரு மார்க்கங்களிலும் 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

              சென்னையில் நடைபெறும் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர், அவருடன் வரும் ஒரு நபர் என இருவருக்கு இரு மார்க்கங்களிலும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக பி.இ. கலந்தாய்வுக்கு முன்பாக அரசாணையும் வெளியிடப்படும். ஆனால், பி.இ. கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் பஸ் கட்டணச் சலுகை பற்றி உயர்கல்வித் துறை எந்த விதமான அறிவிப்போ, அது தொடர்பான அரசாணையோ எதுவும் வெளியிடவில்லை.  

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறியது: 

                பஸ் கட்டணச் சலுகை கடந்த 2007-08-ம் ஆண்டில் இருந்து வழங்கப்படுவதால் அது தொடர்பாக ஆண்டுதோறும் தனியாக அரசாணை வெளியிட வேண்டியதில்லை என்று கூறப்பட்டது. அதனால், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழக்கம்போல் இரு  மார்க்கங்களிலும் பஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட வேண்டும் என்று  போக்குவரத்துக் கழகங்களின் அலுவலகங்களுக்கு நேரடியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

                 பஸ் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு, கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை நகல் எடுத்து, அதை பஸ் பயணத்தின் போது போக்குவரத்து அலுவலரிடம் காண்பிக்க வேண்டும். அவர் அதைப் பெற்று, 50 சதவீத கட்டணச் சலுகை  வழங்கப்பட்டது என்று சான்றளித்து, உரிய பயணச் சீட்டுகளை மாணவர், அவருடன் வரும் நபர் என இருவருக்கு வழங்குவார்.  இதே நடைமுறையை கலந்தாய்வு முடிந்து செல்லும்போதும் பின்பற்ற வேண்டும்' என்றார்.

Read more »

பாகற்காய் விவசாயம்: முன்னுக்கு வந்த கிராமம்


அறுவடை செய்யப்பட்ட பாகற்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக சாக்குப் பைகளில் அடைக்கும் விவசாயிகள்.
 
உளுந்தூர்பேட்டை:

          விருத்தாசலம் வட்டம் மணக்கொல்லை கிராமம் பாகற்காய் விவசாயத்தால் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குகிறது.

            இந்த கிராமத்தில் ஆரம்ப காலத்தில் தண்ணீர் இன்மையால் விவசாயம் பின் தங்கிய நிலையில் இருந்து வந்தது. அதனால் கோடைக்காலத்தில் 3 மாத முந்திரி விவசாயத்துக்குப் பிறகு இப்பகுதி மக்கள் பிழைப்புக்காக அருகிலுள்ள நெய்வேலி அனல்மின் நிலைய சுரங்கப் பணிக்கு கூலி வேலைக்கு சென்று வந்தனர். இக்கிராமத்தில் ஒரு சிலர் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர் கண்டுபிடித்ததால் இப்பகுதியில் விவசாயம் செழிப்படையத் தொடங்கியது. முதலில் தோட்டப் பயிரான பாகற்காயை பயிர் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினர். பின்னர் நாளடையில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தற்பொழுது வீட்டுக்கு ஒரு ஏக்கர் அல்லது அதற்குமேல் பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகற்காய் விவசாயம் அவ்வூர் மக்களை மேன்மையடைய செய்துள்ளது. 

             பாகற்காய் பயிரிடும் முறை: நிலத்தை முதலில் நன்கு உழுது, பின்னர் தொழு உரம் (மக்கிய குப்பை) நிலத்தில் தெளித்து, நிலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு 2 அடி அகலம் ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் குழிக்கு அடியுரம் இட்டு குழிக்கு 5 முதல் 7 விதை ஊன்றி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் 7 நாள்களுக்கு நீர் தெளித்து வரவேண்டும். பின்னர் பாத்தி கட்டி நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தில் குச்சிகளை நட்டு கம்பிகளால் பந்தல் அமைத்துகொள்ள வேண்டும். பாகற்கொடி பந்தலில் படரத் தொடங்கியுடன் 40 நாள்களில் காய்க்கத் தொடங்கிவிடும். அதிலிருந்து வாரத்துக்கு இருமுறை காய்களை பறிக்கவேண்டும். 

             இந்த விவசாயத்துக்கு மருந்து அதிகம் தேவைப்படும். 6 மாத காலம் கொண்ட இப்பயிரால் ஏக்கருக்கு 10 டன் முதல் 15 டன் வரை பாகற்காய் கிடைக்கிறது. ஒரு டன் பாகற்காய் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விவசாயத்தில் செலவு போக ஏக்கருக்கு ரூ.1.50 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. இவ்விவசாயத்தை இருளக்குறிச்சி, மோகாம்பரிக்குப்பம், இராமநாதபுரம், ஆலடி, மேற்கிருப்பு, முடப்புள்ளி, உளுந்தூர்பேட்டை வட்டம் வானம்பட்டு, மட்டிகை, கல்லமேடு, தொப்பையான்குளம், ஒடப்பன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் தற்பொழுது விவசாயம் செய்து வருகின்றனர்.

            இக்கிராமத்தில் பயிரிடப்படும் பாகற்காய்களை சென்னை கோயம்பேடு, கும்பகோணம், பண்ருட்டி, புதுச்சேரி, திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் நேரிடையாக வந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர்.

பயன்கள்: 

               பாகற்காயில் மருத்துவ குணங்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளிக்கு உகந்ததாகவும், குடற்புழுக்களை கட்டுப்படுத்தவும், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு உகந்ததாகவும் உள்ளது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாகற்காயை பயன்படுத்தக்கூடாது.

Read more »

பி.இ., எம்.பி.பி.எஸ்.: முதல் தலைமுறை மாணவர்களுக்கு பலன் கிடைப்பதில் சிக்கல்

              பி.இ., எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக் கட்டண ரத்து சலுகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

              அரசின் சலுகையைப்  பெறுவதற்கு, வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் "முதல் தலைமுறை மாணவர்' என்ற சான்றிதழில் மாணவருடைய பெற்றோர் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை மட்டும் குறிப்பிட்டு இருந்தால் போதாது; மாணவருடைய தந்தை, தாய், அவர்களின் பெற்றோர் பற்றிய விவரங்களும்  (அப்பா வழி அப்பா, அம்மா, மற்றும் அம்மா வழி அப்பா, அம்மா) குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வட்டாட்சியர் அலுவலகங்கள் வழங்கிய சான்றிதழ்களில் மாணவரது தந்தை, தாய் ஆகியோரின் பெற்றோர் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.  இந்தச் சான்றிதழை பி.இ. மாணவர் சேர்க்கையை நடத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்க மறுக்கிறது. அதனால் வட்டாட்சியர் அலுவலகங்கள் அளிக்கும் சான்றிதழ் செல்லுபடியாகாத நிலை ஏற்பட்டு, சான்றிதழைத் திருத்தம் செய்ய வேண்டி மீண்டும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் படையெடுக்கும் நிலை உண்டாகியுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

              அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரும் சான்றிதழ்களில் மாணவரது பெற்றோரின் தந்தை, தாய் பற்றிய விவரங்கள் இல்லாமல்தான் வருகின்றன. கல்விக் கட்டணச் சலுகையைப்  பெறுவதற்கு இது போதாது. எனவே, அத்தகைய விவரங்களை உள்ளடக்கிய சான்றிதழை மாணவர்கள்  அளிக்க வேண்டும். பி.இ. கலந்தாய்வுக்கு வரும்போது அந்த சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்' என்றார். முதல் தலைமுறை பற்றிய அரசாணையில் சான்றிதழ்களில் இடம் பெற வேண்டிய அனைத்து விவரங்கள் பற்றியும் முன் கூட்டியே வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், மாணவரின் தந்தை, தாய் ஆகியோரின் பெற்றோர் பற்றிய விவரங்களை சான்றிதழ்களில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டன வட்டாட்சியர் அலுவலகங்கள்.

                 வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவரது குடும்ப ரேஷன் அட்டையை வைத்து  சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், அதில் அம்மா வழி தாத்தா, பாட்டி பற்றிய விவரங்கள் இல்லாததால் சான்றிதழில் அதைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் கூறுகின்றன. அரசின் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கு ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என்ற காரணத்தால் மாணவர்கள் தங்கள் சான்றிதழைத் திருத்தித் தரச் சொல்லி வட்டாட்சியர் அலுவலகங்களுக்குப் படையெடுக்கின்றனர்.அவர்களிடம், அதிகாரிகள், பெற்றோரது பெற்றோர் பற்றிய விவரங்களை வைத்திருப்பவர்கள், அதைக் கொடுங்கள்; பெற்றோரது பெற்றோர் இல்லாதவர்கள் அவர்கள் இல்லையென்று கூறி நோட்டரி பப்ளிக்கிடம் இருந்து பிரமாண பத்திரம் பெற்றுக் கொண்டுவந்து கொடுங்கள் என்று கூறுகின்றனர்.மாணவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று அவ்வாறு பத்திரத்தைப் பெறுவதில் சிரமம் உள்ளது.முதல் தலைமுறை மாணவர் என்றால் ஒரு மாணவரின் பெற்றோர் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் ஆகியோரைத்தான் குறிக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.அப்படியிருக்கும்போது, மாணவரது பெற்றோரின் தந்தை, தாய் பற்றிய விவரங்களைக் கேட்பது என்பது அரசின் நல்ல திட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 

                   இந்த ஆண்டு பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு கல்விக் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்ததால் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கும், 6,440 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

Read more »

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் அறிவிப்பு


               தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் தமிழர்கள் வாழும் பிற நாடுகளில் செம்மொழி மாநாடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடைபெற வேண்டும் என்ற கருத்து தமிழறிஞர்கள், ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 
 
கோவையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  
 
                  செம்மொழி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் மனு கொடுத்தார்களா என்பது எனக்குத் தெரியாது, கொடுத்ததாகப் பத்திரிகைகளில்தான் செய்தி வந்தது. அதை மீறித்தான், அலட்சியப்படுத்திவிட்டு தமிழர்கûளை மதிக்கும் வகையில் இம் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்றுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
                இம் மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்ட அம் மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும், அக் கட்சியைச் சேர்ந்த எம்பி து.ராஜா, சட்டப்பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலாக தமிழை மேலும் படிப்படியாக வளர்த்து உயர்ந்த கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் இம் மாநாட்டின் சாதனையாகக் கருதுகிறேன்.  மொரீசியஸ் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மொழி, இன அடையாளங்களைத் தெரிந்து கொள்வதற்கு வேண்டுகோள் விடுத்தால் அங்கு தமிழ்ப் பணியாற்ற அரசு தயாராக இருக்கிறது.  தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கருத்து லட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை நானாகக் கூறவில்லை, தமிழகத்தில் உள்ள இத்தகைய கருத்துடைய பல பத்திரிகைகள், இதழ் ஆசிரியர்கள், புலவர்கள் தெரிவித்த கருத்தின் எதிரொலியாகத்தான் இந்தத் தீர்மானத்தை மாநாட்டில் அறிவித்துள்ளோம். எனவே, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அவர்களின் முன்னேற்றத்தில் பற்று கொண்டோர் இந்த அறிவிப்பை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.  செம்மொழி மாநாடு என்ற பெயரால் கைதிகளை விடுவிப்பதாக அரசு அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் யாரை நம்பி அறிக்கை வெளியிட்டார் என்பது தெரியவில்லை.  கைதிகளை விடுவிப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அந்த அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது அவருடை பிறந்தநாளையொட்டி 1992-ல் 230 கைதிகளும், 1993 ஆண்டு 132 கைதிகளும், 1994 ஆம் ஆண்டு 163 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். செம்மொழி மாநாட்டைவிட ஜெயலலிதாவின் பிறந்தநாள் புனிதமாக இருக்கலாம்.  . எனக்குள்ள வேதனையெல்லாம் பத்திரிகையாளர்கள் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும்போது இந்தத் தகவல்களை அவருக்கு நினைவூட்டினால் தவறுகள் மீண்டும் மீண்டும் வராது.தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படும்.  நடப்பு ஆண்டில் பொறியியல் கல்வியில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிலும் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி. 
 
பஸ் கட்டணம் உயராது:
 
                   பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லையென்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை முதல்வர் கூறியது:தமிழக அரசு சார்பாக மத்தியில் உள்ளவர்களுக்குத் தெரிவித்த கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்காமல், பெட்ரோல் டீசலுக்கு அவர்கள் உத்தேசித்ததைக் காட்டிலும் ஓரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.150 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார் முதல்வர். 
 
ஓய்வு பெறுவதாக நான் கூறவில்லை:
 
               செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாகக் கூறினீர்களே, அந்தத் திட்டம் இப்போது இருக்கிறதா என முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வரின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் எழுந்து முதல்வர்  அருகே வந்தார்.அப்போது பதில் அளித்த முதல்வர், ஓய்வு பெறுவதாக நான் கூறவில்லை என்றார். அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதாகக் கூறினீர்களே என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா என்றதற்கு, நீங்களே ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்று கூறி செய்தியாளர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார்.

Read more »

திட்டக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்


 
            கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா வெலிங்டன் ஏரிக்கரை பாதிப்பை சரி செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், அந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் திட்டக்குடி பஸ் நிலையம் எதிரே அதிமுக சார்பில் (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more »

பெட்ரோல் விலை உயர்வு:​ கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

               பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்,​​ சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.​ ​ ​25-ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்,​​ டீசல்,​​ மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன.​ இதற்குக் கண்டனம் தெரிவித்தும்,​​ விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,​​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ ​ ​

             ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுப்புராயன் தலைமை வகித்தார்.​ மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆளவந்தார்,​​ ஆட்டோ சங்கச் செயலாளர் பாபு,​​ நகரக்குழு உறுப்பினர்கள் தனசிங்,​​ மனோரஞ்சிதம்,​​ குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ ​ ​இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.​ ​மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம்,​​ மாவட்ட துணைச் செயலாளர் எம்.சேகர்,​​ நகரச் செயலாளர் வி.குளோபு மற்றும் நிர்வாகிகள் நாகராஜன்,​​ விஸ்வநாதன்,​​ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்...

                சிதம்பரம் தெற்குரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ எஸ்.ராஜா தலைமை வகித்தார்.​ நகரச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.​ நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம்,​​ ராமகிருஷ்ணன்,​​ ஞானமணி,​​ அமுதா,​​ சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

44 பேர் கைது:

               விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,​​ பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன்,​​ வட்டக்குழு செயலர் கந்தசாமி,​​ வழக்கறிஞர் சந்திரசேகரன்,​​ சங்கரய்யா உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ் தொழிலாளர் சங்கம்கண்டனம்:

             பெட்ரோல், ​​ டீசல் விலை உயர்வுக்கு கடலூர் மாவட்டத் தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த விலை உயர்வு சராசரி மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது.​ ஆட்டோ,​​ டாக்ஸி,​​ சரக்கு வாகனங்களின் கட்டணம் கடுமையாக உயரும்.​ அதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்கள் மீது பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்.டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டியும்,​​ பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தாததாலும்,​​ தனியார் பஸ் உரிமையாளர்கள்,​​ தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுக்கிறார்கள்.​ எனவே விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பண்டரிநாதன் கோரியுள்ளார்.​ ​பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று,​​ இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Read more »

வருவாய் இன்றி தவிக்கும் டெல்டா சிறு விவசாயிகள்: அரசு கண் திறக்குமா?

கடலூர்:
            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் வருவாய்க்கு வழி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
             
              இம் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதியான 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களில், ஜூன் மாதம் குறுவை நெல் சாகுபடி தொடங்குகிறது.  கர்நாடகத்துடன் காவிரி நீர்த் தாவா தொடங்கியது முதல், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி என்பது கானல் நீராகிவிட்டது. டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியையே பெரும்பாலும் மறந்து விட்டனர். ஆங்காங்கே ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை அறுவடை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுபெறும்.  அதைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவமழை பொய்க்காமல், மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு நீர் இருந்தால், அத்துடன் வடகிழக்குப் பருவமழையும் உரிய காலத்தில் தொடங்கி விட்டால், 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி வெற்றிகரமாக நடைபெறுகிறது. அத்துடன் ஊடு பயிராக உளுந்து பயிரிட்டு அதுவும் விளைந்து விட்டால், டெல்டா விவசாயிகளின் மகிழ்ச்சிக்குத் தடையே இல்லை.  பருவநிலை சரியாக இருந்தால், சம்பா அறுவடை பிப்ரவரி முதல் வாரத்திலும், உளுந்து அறுவடை மார்ச் மாதக் கடைசியிலும் முடிவடைந்து விடும். ஏப்ரல் முதல்  செப்டம்பர் மாதம் வரை, வளமான 1.5 லட்சம் ஏக்கர் டெல்டா நிலங்கள், வாழ்விழந்து தரிசு நிலங்களாகக் காட்சி அளிக்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் டெல்டா நிலங்களை நம்பி, சுமார் 1 லட்சம் விவசாயிகள் உள்ளனர். 
              
                  இவர்களில் 80 ஆயிரம் பேர் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்கள். 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தும் அவை 6 மாதங்கள் தரிசாகி விடுவதால். அந்த விவசாயிகளின் வாழ்க்கையையும் தரிசாகி விடுகிறது.  80 ஆயிரம் சிறு விவசாயிகளில் சுமார் 40 ஆயிரம் பேர், கட்டுமான வேலை உள்ளிட்ட மாற்று வேலைகளை நாடி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மற்றவர்கள் உள்ளூரில் மாற்று வேலைகளைத் தேடிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திலும் வேலை கிடைக்காது.  1.5 லட்சம் ஏக்கர் சொந்த நிலங்களைக் கொண்ட ஒரு லட்சம் விவசாயிகள், 6 மாதங்கள் வேலை ஏதுமின்றி, வருவாய்க்கு வழியின்றித் தவிக்கிறார்கள். எனவே கோடைக் காலத்தில் பலன் தரும், மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம் தேவை என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள். தமிழக வேளாண் துறையும், வேளாண் பல்கலைக் கழகங்களும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். 
 இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவரும் காவிரியின் கடைமடை விவசாயியுமான பி.ரவீந்திரன் கூறியது: 
               கடலூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் சுமார் 80 ஆயிரம் பேர் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை வேலையேதும் இன்றி சும்மா இருக்கிறார்கள். வருவாய்க்கு வழியில்லை. பலர் மாற்று வேலைகளைத் தேடி இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.  இத்தகைய நிலைகளை ஆராய, 2 ஆண்டுகளுக்கு முன் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கன்னையன் தலைமையிலான குழு சிதம்பரத்துக்கு வருகை தந்தது.  அக்குழுவிடம் டெல்டா விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்தோம். அக்குழு என்ன பரிந்துரைத்து என்றும், இதுபற்றி மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்று தெரியவில்லை. 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடப்பதை மாற்றி அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரிக்க வேண்டும் என்றார்.

Read more »

தரைப்பாலங்களில் தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள்

விருத்தாசலம்:
             விருத்தாசலத்திலிருந்து கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள தரைப்பாலங்களில் தடுப்புகள் உடைந்து கிடப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
            விருத்தாசலத்திலிருந்து திருச்சி மற்றும் ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு இடைப்பட்ட பகுதியில், மழைக்காலங்களில் கார்மாங்குடி காட்டுப் பகுதியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக தரைப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 45 கன்மாய் முதல் 2 கன்மாய் கொண்ட 7 தரைப்பாலங்கள் உள்ளன. இந்தத் தரைப்பாலங்களில் பெரும்பாலானவற்றில் தடுப்புகள் உடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை கட்டப்படவில்லை. விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலை வழியாகத்தான் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள சிமென்ட் ஆலை மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன. 
              
                மேலும் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் வருகின்ற போது தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தடுப்புகள் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தரைப்பாலங்களில் எஞ்சி உள்ள தடுப்புகளும் விரிசல் ஏற்பட்டும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. பாலத்தோடு கான்கிரீட் இணைப்பு இல்லாமல் கட்டப்பட்டதே தடுப்புகள் அடிக்கடி உடையும் நிலைக்கு காரணம். எனவே இனி தடுப்புகள் அமைக்கும் போது தரையில் இருந்து தூண்கள் அமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும். அல்லது பாலத்தின் மேல் கட்டுகின்றபோது பாலத்துக்கும், தடுப்புக்கட்டைக்கும் கான்கிரீட் அமைத்து தடுப்புகள் அமைத்தால், அடிக்கடி உடைந்து விழாமல் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சிக்கு இடைப்பட்ட தரைப்பாலங்களில் உடைந்த தடுப்புகளை உடனடியாக அமைத்து, அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Read more »

அடிப்படை வசதிகள் இல்லாத பெரியார் நினைவு சமத்துவபுரம்


சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர்.
பண்ருட்டி:

            பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என அப் பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் ஊராட்சியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் ரு.158 லட்சம் செலவில், 100 வீடுகள், விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளிட்டவைகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெறாத நிலையில் திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டதால் அவசரக் கோலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.9.2009-ல் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்று 9 மாதங்களே ஆன நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள்  பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.

              சமத்துவபுரத்தில் உள்ள வீதிகளின் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் வெட்டப்பட்டுள்ளதே தவிர கால்வாய் கட்டப்படவில்லை. இதில் மண் சரிந்தும், செடிகள் முளைந்தும் உள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரூ5.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பு இன்றி அதில் உள்ள மின் விளக்குகள் கழன்று தொங்கிக் கொண்டுள்ளது. முந்திரிக் காடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த குடியிருப்பு வீதிகளில் ஓரிரு விளக்குகளைத் தவிர மீதமுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் தெரு விளக்கும், குடியிருப்புகளைச் சுற்றிலும் சுற்றுச் சுவரும் அமைத்துக் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த மக்கள் கூறினர்.

இது குறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண்குமாரிடம் கேட்டதற்கு, 

             ""வீதிகள் ஓரம் வெட்டப்பட்டுள்ள பள்ளம் மழை நீர் வழிந்தோட தான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் கால்வாய் கட்டும் திட்டமில்லை. தெரு விளக்கு, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். தமிழக முதல்வரின் கனவு திட்டமான சமத்துவபுரத்தில் இப்படி சில குறைகள் இருப்பது ஆட்சியாளருக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் கவலை தருவதாகும் என அப்பகுதி மக்கள் கவலையுடன் கூறினர்.

Read more »

ரூ.1 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,160மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.1.13 கோடியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

               ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க,​​ மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.​ இந்தக் காலம் மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால்,​​ கடலில் மீன் வளம் குறையாமல் இருக்க,​​ தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ கடந்த 9 ஆண்டுகளாக இந்தத் தடை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் கடலோர மீனவர் குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில்,​​ தமிழக அரசின் மீன் வளத்துறை நிவாரணத் தொகை வழங்கி வருகிறது.​ கடந்த ஆண்டு தலா ரூ.500 வீதம் 13,625 குடும்பங்களுக்கு ரூ.68,12,500 வழங்கப்பட்டது.​ இந்த ஆண்டு நிவாரணத் தொகை ரூ.800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.​ அதன்படி 14,160 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.1,13,28,000 வழங்கப்படுகிறது.​ ​ ​

                திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார்.​ நிவாரணத் தொகை வழங்கும் பணி மீன்வளத் துறை மூலம் தொடர்ந்து நடைபெறும்.​ ​இந்த நிகழ்ச்சியில்,​​ விபத்தில் இறந்த இரு மீனவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலமாக தலா ரூ.1,02,500 வீதம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Read more »

மணல் அள்ளும் கட்டணத்தை குறைக்க ​வேண்டும்: மாட்டுவண்டி தொழிலாளர் கோரிக்கை

கடலூர்:

           மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ளும் கட்டணம் ரூ.47 என்று இருப்பதை ரூ.20 ஆகக் குறைக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.​ ​

அண்மையில் நடந்த இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ ​

                  ​விபத்துக்கள் நேரிட்டால் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு நலவாரிய விபத்துக் காப்பீடு திட்டத்தில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.​ மாட்டுத் தீவன விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ ​காவல் துறையை வைத்து மாட்டு வண்டித் தொழிலை ஒடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.​ இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14 அன்று சி.ஐ.டி.யூ.​ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.​ ​இக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் வி.திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் டி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:
 
              கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
               மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கலால் இரண்டு ஆண்டாக நிறுத்தம்

கடலூர்: 

                பள்ளிக் கல்வி இடை நிற்பதைத் தவிர்த்திட மத்திய அரசு வழங்கி வரும் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கல் காரணமாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டாண்டாக வழங்கப்படவில்லை.

               பள்ளிக் கல்வியில் மாணவர்கள் இடை நின்றலை தடுத்திட மத்திய அரசு தேசிய வருவாய் மற்றும் கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . இதன்படி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது.அதேப்போன்று பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு ஆதி திராவிட மாணவிகளுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இரு வகை உதவித் தொகை பெறும் மாணவ, மாணவிகள் எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்.

                 மத்திய அரசு வழங்கும் இந்த உதவித் தொகை மாநில கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட கல்வித் துறை வாயிலாக அந்தந்த பள்ளிகள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது.இந்த நடைமுறையில் முறைகேடு நடப்பதாகவும், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மாணவர் களை முழுமையாக சென்றடையவில்லை என எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மத்திய அரசு, கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்தது.அதற்காக கடந்த 2008-09ம் கல்வி ஆண்டில் உதவித் தொகைக்கு தேர்வு செய் யப் பட்ட மாணவர்களின் பெயரில் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு துவங்கவும், வங்கிக் கணக்கு எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்பினால், நேரடியாக வங்கியில் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

               அதன்படி தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவிகளும் வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்கினர். இதன் விவரங்கள் மத்திய அரசுக்கு, மாநில கல்வித்துறை வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து மாநில கல்வித் துறை சார்பில் மத்திய அரசை தொடர்பு கொண்டபோது, மாணவர்கள் கணக்கு துவங்கியுள்ள வங்கிகளின் "ஐ.எப். எஸ்.சி' (ரிசர்வ் வங்கி வழங் கும்) குறியீட்டு எண் குறிப் பிட்டால் மட்டுமே, இங்கிருந்து நேரடியாக வங்கிகளுக்கு பணம் செலுத்த முடியும் என கூறினர்.அதன்படி மாணவர்கள் சேமிப்பு கணக்கு துவங்கிய வங்கிகளுக்குச் சென்று "ஐ.எப்.எஸ்.சி' குறியீட்டு எண்ணை கேட்டதற்கு கிராமப் பகுதிகளில் உள்ள பெரும் பாலான வங்கிகள் இந்த குறியீட்டு எண் பெறவில்லை என்பதும், "கோர் பேங்கிங்' (கம்ப் யூட்டர் மையமாக்கப்பட்ட) வசதி உள்ள வங்கிகளுக்கு மட்டுமே "ஐ.எப்.எஸ்.சி.' குறியீட்டு எண்ணை ரிசர்வ் வங்கி வழங்குவது தெரிய வந்தது.

              மத்திய அரசின் இந்த சிறப்பு கல்வி உதவித் தொகை பெற தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்களில் பெரும் பகுதியினர் கிராமத்தைச் சார்ந் தவர்களே. இவர்கள் பெரும் பாலும் தங்கள் கிராமத்திலோ அல்லது பள்ளிக்கு அருகாமையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் கணக்கு துவங்கியுள்ளனர். இந்த வங்கிகளுக்கு "ஐ.எப். எஸ்.சி' குறியீட்டு எண் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டாக மாணவர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் 2009-10 கல்வி ஆண்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திறனறித் தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாததால், இவர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

                         பள்ளி இடை நின்றலை தவிர்த்திட, கல்வி உதவித் தொகையை ஏழை மாணவர்களுக்கு காலத்தோடு வழங்க மத்திய அரசு தற்போது உள்ள நடைமுறை சிக்கலை மாற்ற முன் வரவேண்டும்.

Read more »

பெரியார் கல்லூரியில் கவுன்சிலிங் நடப்பதாக மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

கடலூர்: 

              கவுன்சிலிங் நடப்பதாக கிடைத்த தவறான தகவலால் கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

               கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ஆம் கல்வியாண்டிற் கான கவுன்சிலிங் முதல் கட்டமாக 17, 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21, 22ம் தேதியும் நடந்தது. இதில் பி.எஸ். சி., பி.காம், பி.ஏ., உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தமுள்ள 881 இடங் களுக்கு 4,329 பேர் விண்ணப்பித்தனர். அதில் 684 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங் மூலம் சேர்க்கப் பட்டனர்.இந்நிலையில் பெரியார் கல்லூரில் நேற்று மீண்டும் கவுன்சிலிங் நடப்பதாக கூறி 300க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். இந்நிலையில் கல்லூரியில் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லை என போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களும் கல்லூரி முன் திரண்டனர்.

              இதனையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் இன்று (நேற்று) மாணவர்கள் சேர்க்கை இல்லை. எனது தலைமையில், பேராசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப் பட்டு மாணவர்கள் சேர்க்கைக் கான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முதல்வர் ரங்கநாதன் கூறுகையில், "

                  இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது. இரண் டாம் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்படாத மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி பின்னர் கூறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தவறாக புரிந்து கொண்ட மாணவர்கள் இன்று (நேற்று) கலந்தாய்வு நடக்கும் என கல்லூரிக்கு பெற்றோருடன் வந்திருந்தனர். மேலும் இதுவரை எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. மேலும் பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 200 இடங் கள் காலியாக உள்ளன. கலந் தாய்வு கூட்டத்திற்குப் பின் பி.சி., மாணவர்கள் வரவில்லை எனில் அவர்களுக்கு பதில் எம்.பி.சி., - எஸ்.சி., உள்ளிட்ட மாணவர்களுக்கு சேர்க்கை இடம் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்படும்' என்றார்.

Read more »

மக்களிடம் ஆதரவு திரட்டுங்கள்: அ.தி.மு.க.,வினருக்கு ஆதிராஜாராம் கட்டளை

கடலூர்: 

             விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அ.தி.மு.க., வினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலாளர் ஆதிராஜாராம் பேசினார்.

             கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. இளைஞரணி மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத், தலைவர் அருணாசலம், தொகுதி செயலாளர் சுப்ரமணியன், மீனவரணி தங்கமணி, விவசாய அணி காசிநாதன், முருகமணி, நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் ஆதி ராஜாராம் பேசியதாவது: 

                  இளைஞரணியின் புத்துணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்சியின் செயலாளர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வார்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். பத்திரிகைகள், "டிவி' க்கள் மற்றும் சினிமாத் துறை அனைத்தையும் கருணாநிதி கைப்பற்றியுள்ளார். அதனால் ஊடகங்கள் நமது செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகையால் நமது கட்சியின் செயல்பாடுகளையும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை மக்களுக்கு விளக் கிட தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும்.

               இளைஞரணிக்கு தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் கட்சியின் முன்னோடிகளின் ஆலோசனைகளை பெற்று கட்சியை பலப் படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் 300 இடங்களில் கட்சிக் கொடியேற்ற வேண்டும்.சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்குள் நாம் கட்சியை பலப்படுத்தி வரும் 2011 பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை தமிழக முதல்வராக அரியணை ஏற்ற வேண்டும்.மத்தியில் ஆளும் காங்., ஆட்சியில் ஓராண்டில் எட்டாவது முறையாக பெட்ரோல், டீசல், காஸ் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளதை மக்களுக்கு விளக்கி இப்போது முதல் இளைஞரணியினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். இவ்வாறு ஆதிராஜாராம் பேசினார். பின்னர் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி வாரியாக வார்டு நிர் வாகிகளுக்கு போட்டியிட விரும் புவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

Read more »

சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவாக பிரிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: 

            சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக பிரிக்க கரும்பு விவசாயிகள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எம். ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நல சங்க தலைவர் சிட்டிபாபு முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: 

             சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள 70க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங் களது அலுவலகங்களான விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்ல குறைந்தது இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 50 கி.மீ., பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் கால விரயம், பொருள் விரயம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் கிராமப்புற மக்கள் தாலுகா தலைநகரை அடையத்தக்க வகையில் உரிய பஸ் வசதி இல்லாத பல்வேறு கிராமங்கள் உள்ளன. எனவே காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மூன்று தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பை ஒட்டியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களையும் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி ஆகியவைகளை உள்ளடக்கி சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவாக பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பபட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் 1,800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கிள்ளை,: 

              தெற்கு பிச்சாவரத்தில் பழுதடைந்த உப்பனாற்று வடிகால் ஷட்டர் சீர் செய்யப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் 1,800 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

                 சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டி கடை மடை நீரை தேக்கி டி.எஸ். பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை வருவாய் கிராமங்களை உள்ளடக்கி நடராஜபுரம், கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, இளந்திரிமேடு, பெரிய காரைமேடு, சின்ன காரைமேடு உள்ளிட்ட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,800 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.கான்சாகிப் வாய்க்காலில் இருந்து மாரியப்பா நகர், முத்தையா பிள்ளை வடிகால் வாய்க்கால் மற்றும் திருவக்குளம் வடிகால் வாய்க்கால் வழியாக செல்லும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் தேக்கி அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

                 கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மேட்டுப் பகுதியினர் "தை' பட்டத்திலும், பள்ளப் பகுதியில் உள்ளவர்கள் "நவரை' பட்டத்திலும், விவசாயிகளுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியில் விவசாய நிலங்கள் உவர்ப்பு தன்மையாக மாறியது. தற்போது நிலத்தடியில் 10 அடி ஆழத் தில் நீரோட்டம் இருப்பதாலும், கூடுதல் ஆழத்தில் பூமியைத் தோண்டினால் உவர்ப்பு நீர் கிடைப்பதால் போர்வெல் அமைத்தோ, அல்லது கிணற்று பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யவோ முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கு மேட்டூரில் இருந்து கான்சாகிப் வாய்க்கால் வழியாக வரும் உபரி நீரை தெற்கு பிச்சாவரம் உப்பனாற்று வடிகால் ஏரியில் "ஷட்டர்' மூலம் தேக்கி வைக்கப்படுகிறது.

                 அவ்வாறு தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் உபரி நீரையும், மழைக் காலங்களில் தேங்கும் நீரை வெளியேற்ற கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் டி.எஸ். பேட்டை சாலையில் தெற்கு பிச்சாவரத்தில் உள்ள உப்பனாற்றில் 12 ஷட்டர்கள் கொண்ட"பாலம்' கட்டப்பட்டது. இதன் மூலம் மழைக் காலங்களில் தேங்கும் நீர் வடிகாலில் திறந்து விடப் படும். ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.கடந்த சில ஆண்டுகளாக "ஷட்டர்' பழுதடைந்து, பராமரிப்பில்லாமல் சேதமடைந்துள்ளது. "ஷட்டர் வீல்' செல்லும் பாதை மிகவும் குறுகலாகவும், நடை பாதையில் கால் வைத்தால் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும் கொட்டுகிறது. ஷெட்டரை சுற்றியுள்ள பக்கவாட்டில் உள்ள பாலமும் சேதமடைந்து, தடுப்பு கட்டைகளும் உடைந்து தொங்கிறது. ஒவ்வொரு ஷட்டருக்கும் இடையே அதிகளவில் இடைவெளி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

               ஷட்டர் பழுதானதால் விவசாயத்திற்கு தேக்கி வைக்கப் பட்டுள்ள தண்ணீர் கசிந்து உப்பனாற்று வடிகாலில் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமலும், மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமலும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏரியும் தூர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவரை அகற்றி விட்டு, பாலத்தையும், ஷட்டரையும் சரிசெய்யா விட்டால் விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அத்துடன் இப் பாலத்தின் வழியில் தெற்கு பிச்சாவரம் உள் ளிட்ட கிராமங்களுக்கு நடராஜபுரத்தில் இருந்து குடிநீர் செல்லும் பைப் லைனும் துண்டிக்கப்படும் அபாய நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை புதுப்பிப்பதுடன், பழுதடைந் துள்ள ஷட்டரையும் சரி செய்து. லஸ்கர் (நீர்காவலர்) பணியிடத்தை நிரப்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம்

சிறுபாக்கம்: 

                மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது.

               மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குநர் செல்வராஜன் பேசினார். முனைவர் ராமு, அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார். முதல் கட்ட கூட்டத்தில் திட்டத் தினை செயல்படுத்தும் அதிகாரிகள், கல்வியாளர்கள், வேளாண் மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும், இரண்டாம் நிலை கூட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் தலைவர்கள், அதன் உறுப்பினர்களும், மூன்றாம் நிலை கூட்டத்தில் ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் பக்கிரி வாய்க்கால் பாலம் : ரூ.6 லட்சத்தில் கட்டுமான பணி துவக்கம்

கிள்ளை: 

              சிதம்பரம் அருகே ஆறு லட்சம் ரூபாய் செலவில் பக்கிரி வாய்க்கால் பாலம் கட்டும் பணி துவங்கியது.

            சிதம்பரம் அருகே நஞ்சைமகத்து வாழ்க்கை சாலையில் வடக்குச்சாவடி கான்சாகிப் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்காலான பக்கிரி வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தை எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். சிதம்பரத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வந்தது. ஆங்கிலயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலம் உடைந்து உள்வாங்கியது. இதனால் சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

                  இந்நிலையில் நஞ்சைமகத்து வாழ்க்கை ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். தற்போது ஆறு லட்சம் ரூபாய் செலவில் கல்வெர்ட் பாலமாக கட்டும் பணி துவங்கியது. பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. காலை, மாலை என சுழற்சி முறையில் நடைபெற உள்ள இரு பிரிவிலும் சேர்த்து 140 மாணவர்களுக்கு இளங்கலை ஆங்கிலம் பாடத்திற்கான கவுன்சிலிங் நடந்தது.இதில் 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கவுன்சிலிங்கில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், அகதிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என 20 மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமையில் சேர்க்கை குழு உறுப்பினர்கள் கலாவதி, ஜெயந்தி, மனோன் மணி, துறைத் தலைவர் ராஜப்பன், பேராசிரியர்கள் கதிர்வேல், கவாஸ்கர், வளர்மதி, பசுபதி, மணிவேல் ஆகியோர் பங்கேற் றனர். இன்று 29ம் தேதி கம்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு கவுன்சிலிங் நடக்கிறது.

Read more »

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று மருத்துவ முகாம்

கடலூர்: 

              மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் திருச்சோபுரத்தில் இன்று பொது மருத்துவ முகாம் நடக்கிறது.

               நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் வளாகத்தில் நடக்கும் முகாமில் இருதயம், பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். முகாமில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெறும் நோயாளிகள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல், உழவர் அட்டை நகல், புகைப்படம் ஒட்டப்பட்டு அதன் மீது கையெழுத்தும், சீல் பதியப்பெற்ற, இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் வரவேண்டும்.

Read more »

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி: 

            பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 94 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்தது.

               பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு "திருப்பணி, தேர் பணி ஏன் துவக்கவில்லை, ஊர் பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் ரகசியமாக ஏன் உண்டியல் திறந்தீர்கள்' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் "இன்னும் 15 நாட்களில் கோவில் கும்பாபிஷேக தேதி குறிக்க ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். தேர் வேலை நாளை முதல் துவங்கும்' என்றார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். திறக்கப்பட்ட உண்டியலில் 94 ஆயிரத்து 195 ரூபாய் வருவாய் இருந்தது.

Read more »

கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன்மையம் திறப்பு விழா

கடலூர்: 

            கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன் மையம் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.

             வாலிபர் சங்க நகரக்குழு ரமேஷ் தலைமை தாங் கினார். சந்திரகுமார், சரவணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஆனந்த் வரவேற்றார். மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன் இலவச டியூஷன் சென்டரை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை வழங்கி பேசினார்.விழாவில் மா.கம்யூ., நகர செயலாளர் சுப்ராயன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், நகர செயலாளர் அமர்நாதன் பங்கேற்றனர்.

Read more »

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர்: 

           கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.

                 கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக்கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. 

               அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது. மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.

Read more »

மணல் குவாரியை மூடக்கோரி மறியல் செய்ய முயற்சி

விருத்தாசலம்: 

           நகர் கிராமத்தில் நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.

               நல்லூர் அடுத்த நகர் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கிளை ஆறான மயூரா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இதனால் 1,500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கபடுவதாகவும், மணல் அள்ளும் பகுதியில் வெள் ளம் தேங்கி ஊருக்குள் நுழையும் அபாயம் இருப்பதாகவும் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்போதைய கலெக்டர் ராஜேந்திரரத்னு மணல் குவாரியை மூட உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் மணல் குவாரி துவங்கியது. இதனை மூடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று கண்டப்பங்குறிச்சி சாலையில் மறியல் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் ஜோதிவேல், மாவட்டத் தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் மறியல் செய்ய வந்தனர். அவர்களிடம் தாசில்தார் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வரும் 30ம் தேதி சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதனையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Read more »

போலீஸ் ஸ்டேஷன் முன்தீ குளிக்க முயன்றவர் கைது

குறிஞ்சிப்பாடி: 

             போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

             வடலூரை அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குணசேகரன் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கும் இவரது தாய் மாமனான சட்டநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் சட்டநாதனை, குணசேகரன் தாக்கி விட்டார் .இதுகுறித்து சட்டநாதன் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் நேற்று முன்தினம் குணசேகரனை அழைத்து விசாரணை செய்து அனுப்பினர். இரவு 7 மணிக்கு ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த குணசேகரன் தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்தி விட்டதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் அருகில் சாலையோர சிப்ஸ் கடையில் இருந்த மண் ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனைக் கண்டு திடுக்கிட்ட போலீசார் ஓடி வந்து குணசேகரனை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

Read more »

Rs. 1.13-crore compensation for fishermen families


Cuddalore Collector P. Seetharaman giving away compensation to fishermen in Cuddalore on Monday. 

CUDDALORE: 

            The State government has sanctioned over Rs. 1.13 crore as compensation to fishermen for the fishing holiday period, Collector P. Seetharaman has said.

            Disbursing assistance to a batch of fishermen here on Monday, he said that as per the Tamil Nadu Fishing Regulation Act 1983, ban on fishing was being imposed every year from April 15 to May 29. As it happened to be the breeding season, motorised boats and trawlers were not allowed to go for fishing during the period. This was in practice for the past nine years, he said.

            However, considering the fact that fishermen would be affected owing to the fishing holiday, the government had made it a point to adequately compensate them. The assistance was given to the families on the basis of ration cards. For the previous season, the government paid a total aid of Rs. 68,12,500 to 13,625 fishermen families at the rate of Rs. 500 each in the district. For the current season, the monetary assistance was enhanced to Rs. 800, and a total of 14,160 families would be benefited. 

            Mr. Seetharaman said that benefit would reach all the families soon.He also gave away a cheque for Rs. 1,02,500 each to two fishermen families who lost their breadwinners in accidents.

Read more »

Vedic exponent hailed on birth centenary

CUDDALORE:

          The birth centenary of Balarama Sastri was celebrated under the auspices of the Sri Sankara Bhakta Jana Sabha here on Sunday.

           Balarama Sastri is well versed in the Sama Veda, which has earned him the coveted title “Sama Veda Samrat.” Born at Paranur in Thirukkoilur block in the then South Arcot district in 1911, he has devoted almost eight decades in the service of Sama Veda, through public discourses and imparting its nuances and glory among the youths. In 1931, he was initiated into the Vedas under the tutelage of Visvesvara Kanapadigal at Thiruvidaimarudur. Later, he shifted to Cuddalore where he played a pivotal role in setting up a Veda patasala. His scholarly disposition has attracted many aspirants who adulate him for having made the study of Vedas a pleasant and rewarding experience.

            For him, Krishna Premi Swamy of Paranur is the guru. Speaking at the felicitation function, Krishna Premi Swamy noted that after intense penance Hiranyan got a boon through which he almost attained the status of immortality. But his haughty nature was challenged by his offspring Prahaladan, whose invocation made Lord Vishnu to manifest in the form of Narasimha to put an end to the former's life.

The Swamy further said: 

              “Those who indulge in acts of adharma will have their life cut short, whereas those who follow the dharmic path will have a long and peaceful life as in the case of Balarama Sastri. Taking proper care of the exponents would be as good as preserving the Vedas,” he said. District Sessions Court Judge D. Ramabadran, quoting the Isha Upanishad, said that those who were performing their karmic duty without swerving from the path of dharma would live for a hundred years as was evidenced from the life of Balarama Sastri. K.Krishnamurthy of Krishna Hospital said it was a medical miracle that Balarama Sastri who was admitted to his hospital in a coma stage sometime back turned around on the visit of Krishna Premi Swamy to his ward. S. Arunachalam, a senior advocate, K.Gopi, coordinator, and others spoke.

Read more »

Compensation to fire victim's kin

CUDDALORE: 

            A compensation of Rs. 1 lakh was given to Razia, whose husband Malik Basha died recently in a fire accident in Malaysia. Collector R. Palanisamy gave away the compensation at a grievance day session here on Monday.

           He disbursed financial assistance of Rs. 25,000 each to two meritorious students belonging to economically weaker sections from Panamalaipettai and Thirukkoilur for pursuing higher studies. The amount was sanctioned from the Chief Minister's Relief Fund, he said. Mr. Palanisamy also extended financial assistance to two widows. He said that because of the jama bandhi session that lasted about a month, the grievance day session was held after a gap of four weeks. He received over 400 applications on the occasion and urged the officials to take action within three weeks.

Read more »

Counselling for teacher transfers

CUDDALORE: 

             Counselling sessions for the transfer and promotion of teachers, headmasters and hostel wardens employed in the schools run by the Adi Dravidar and Scheduled Tribe Welfare Department will be held in Cuddalore on Tuesday and Wednesday.

A statement from the department noted that the sessions would be held in a transparent manner as follows: 

             June 29—from 3 p.m. to 4 p.m.—for the headmasters of middle schools who seek promotion / transfer; and from 4 p.m. to 5 p.m. – for the headmasters of primary schools, and, June 30—from 10 a.m. to 11.30 a.m. – teachers of middle school, from 11.30 a.m. to 1.30 p.m. – graduate teachers and hostel wardens, and, from 2 p.m. to 5 p.m. – middle school teachers and hostel wardens.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior