உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 21, 2012

கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

கடலூர்:

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. இளைஞரணி மாநிலத் தலைவருமான அன்புமணி வலியுறுத்தினார்.

           கடலூரைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான நிவாரணம் வழங்க வேண்டும். புதுவை மாநிலத்தைப் போல், கடலூர் மாவட்ட மக்களுக்கும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி, பா.ம.க. சார்பில் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியது: 

          "தானே' புயல் பாதிப்புகளை முதல்வர் மீண்டும்  பார்வையிட்டு, முழுமையான ஆய்வு நடத்தி, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.÷புயல் பாதித்த கடலூர் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். கடலூரைக் குடிசையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். பேரிடர் மாவட்டமாக கடலூரை அறிவிக்க வேண்டும்.÷புதுவை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 10 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

             ஆனால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 2,500 வழங்கப்படுவது நியாயமல்ல. புயல் நிவாரணத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்குத்தான் செல்கிறது.÷சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தை ஒப்பிடும்போது இவ்வாண்டு டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக ரூ. 3 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதே இதற்குச் சான்று. எனவே கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும். முந்திரித் தோப்புகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய தோப்பு உருவாகும் வரை, 10 ஆண்டுகளுக்கு அரசு மாத ஊதியம் வழங்க வேண்டும். புயல் தாக்கிய பகுதிகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

         வீடுகள் சேதம் அடைந்து விட்டன. பள்ளிகளுக்குச் செல்ல முடிவில்லை. பள்ளிகள் சேதம் அடைந்து விட்டன. மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளான தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைபாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில் 22-ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

         லட்சக்கணக்கான மரங்கள் நடும் பணியை, 29-ம் தேதி தொடங்க இருக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மனநல மற்றும் விவசாய ஆலோசனை வழங்கும் வகையில், குறிஞ்சிப்பாடியில் கருத்தரங்கு நடத்தப்படும் என்றார் அன்புமணி.

        ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர்கள் ப.சண்முகம், கு.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் வரவேற்றார். மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் இரா.கோவிந்தசாமி, மாநில இளைஞரணிச் செயலர் அறிவுச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.















Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலில் சேதமான ஆவணங்கள் புதுப்பித்துத் தர நடவடிக்கை

கடலூர்:

         "தானே" புயலில் காணாமல் போன மற்றும் சேதமடைந்த ஆவணங்களை பெற்றுத் தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் முன் வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ருத்ராபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

             கடந்த 30ம் தேதி வீசிய "தானே' புயல் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த கோரப் புயலில் வீடுகளில் வைத்திருந்த வீட்டுப் பத்திரங்கள், எல்.ஐ.சி., உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலைந்து போயுள்ளன.

               பலரது ஆவணங்கள் புயல் மற்றும் மழையில் நனைத்து சேதமடைந்தம், அழிந்தும் போயுள்ளன. இவர்களுக்கு மீண்டும் உரிய ஆவணங்களை பெற்றுத் தந்திடும் பொருட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் புயலில் ஆவணங்களை இழந்தவர்கள் பற்றிய தகவல் திரட்டி வருகிறது. எனவே, புயலில் ஆவணங்களை இழந்தோர் வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 10 முதல் பகல் 1 மணி வரையில் 04141-231183, 04142-284510 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். இந்த தகவலின் பேரில், சம்மந்தப்பட்டவருக்கு ஆவணங்களை பெற்றிட உரிய சட்ட உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








Read more »

விருத்தாசலத்தில் பெண்ணைக் கொன்று 5 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளை


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/980dc185-ea54-48ed-b2cd-d05db8de2a40_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
 
            விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது 53). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் சிகரெட் கம்பெனியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா (47). இவர் மொத்தமாக புடவைகளை வாங்கி வீட்டிலேயே விற்பனை செய்து வந்தார்.
 
            இந்த நிலையில் வெள்ளிக் கிழமை  காலை வழக்கம்போல் தமிழ்ச்செல்வன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பணி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்ட இருந்ததால் விமலா வீட்டை பூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றிருக்கலாம் என கருதி விமலாவுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

            ஆனால் வெகுநேரமாகியும் விமலா வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். அப்போது படுக்கை அறையில் விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து தமிழ்ச் செல்வன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு விமலா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டனர்.

            மேலும் விமலா கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 1/2  லட்சமாகும்.   யாரோ மர்ம மனிதர்கள் புடவை வாங்குவது போல் நடித்து விமலாவின் கழுத்தை அறுத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்த தமிழ்ச் செல்வன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் சீராளன், சப்- இன்ஸ்பெக்டர் திருமேணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

             மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் புருனோ மற்றும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு   அனுப்பிவைத்தனர்.  விமலாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.   வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப்பேற்பு

கிள்ளை:

             பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப் பேற்றார். இவர் குற்றாலம் சுற்றுலா மையத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேலாளராக பொறுபேற்றார். 



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior