உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கரையேறுமா கடலூர் துறைமுகம்?


பராமரிப்பு இல்லாமல் சிதைந்து காணப்படும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில்நிலையப் பாதை.
 
கடலூர்: 
 
             200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் இழந்து கிடக்கிறது. 
 
           இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது கடலூர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுமுன் கடலூரில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தங்கள்  வாணிபத்தைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
 
             பரங்கிப்பேட்டை அருகே இருந்த உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் முலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மணிலா, சர்க்கரை, இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் ஆகியவை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெங்காயம், வெல்லம், சர்க்கரை, வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 
 
             யூரியா, கோதுமை போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ரசாயன மூலப்பொருள்கள், யூரியா உரம் ஆகியவை இறக்குமதி செய்யப் படுகின்றன.1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது துறைமுக அலுவலகம். கடலூர், நாகைத் துறைமுகங்களுக்கு ஒரே அதிகாரி செயல்படுகிறார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முகத்துவாரத்தில் படியும் மணலை வாருவதற்கு நிரந்தரமாக செயல்பட்டு வந்த மணல்வாரி இயந்திரம் (டிரட்ஜர்) தற்போது நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது.
 
            சுனாமி மறுவாழ்வுப் பணிகளில், முகத்துவாரத்தில் இருந்து மீன்படிப் படகுகள் நிறுத்தப்படும் உப்பனாறு வரை, சிறிதளவு மணல் அகற்றப்பட்டது. ரூ.15 கோடியில் துறைமுகம் பகுதியில் அலைதாங்கி கற்கள் கொட்டப்பட்டன.  எனினும் முகத்துவாரம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்கிறார்கள் மீனவர்கள். ரயில் நிலையத்தில் இருந்து துறைமுகம் செல்லும் ரயில்பாதை கூட அகலப்பாதையாக மாற்றப்படாமல் சிதைந்து கிடக்கிறது.கடலூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் 0.5 கடல் மைல் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகின்றன. துறைமுகச் செயல்பாடுகளுக்கு வசதியாக இந்தத் துறைமுகத்துக்கு சுமார் 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் நாகை, கொளச்சல் துறைமுகங்களுக்கு போதிய நிலங்கள் இல்லை என்றும் துறைமுக அதிகாரிகள் கூறுகிறார்கள். 
 
            சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், சென்னை துறைமுகத்தில் இறக்கக் கூடிய சரக்குகளை கடலூரில் இறக்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் கொண்டு போக முடியும்.இத்தனை வசதிகள் இருந்தும் கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாமலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமலும் செயலிழந்து கிடக்கிறது. கடலூரில் துறைமுகத்தை யொட்டிய பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகள் கட்டுதல், சிறிய வர்த்தகக் கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளால் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடக்கிறது. மீன்பிடித் தொழிலுக்கு வசதியாகக்கூட கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் கடலூர் மக்களின் ஆதங்கம்.
 
             தென் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான அரசியல் இயக்கங்களும், அதிக எண்ணிக்கையில் அரசியல்வாதிகளும் நிறைந்த மாவட்டமாக கடலூர் திகழ்ந்த போதிலும், பொது நலத்தை எண்ணிப்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமை கிடைக்காததால், துறைமுகம் உள்ளிட்ட சிறந்த திட்டங்களுக்கு முறையாகக் குரல் கொடுக்க நாதியற்றுக் கிடக்கிறது கடலூர்.
 
இதுகுறித்து கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசன் கூறியது

             ""கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கடல்சார் வாரியத்திடம் உள்ளது. தமிழக கிழக்குக் கடற்கரையோரம் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் துறைமுகம் நல்ல வசதி கொண்டது. வசதி குறைந்த நாகை துறைமுகத்தில் ஓரளவு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனால், இயற்கையாக அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தில் அதுவும் இல்லை. அவ்வப்போது வந்து போகும் கப்பல்களால் தற்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.4 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்த அரசு திட்டுமிட்டு உள்ளது'' என்றார்.

Read more »

பண்ருட்டியில் பூச்சித் தாக்குதல் வீழ்ச்சியை சந்திக்கும் தோட்டப்பயிர் விவசாயிகள்


மாவு பூச்சி பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடியின் தண்டு. (வலது படம்) காய்ப்புழுவால் சொத்தையாகியுள்ள கத்திரி காய்கள்.
பண்ருட்டி:
 
              பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப் பயிர்கள் பூச்சித் தாக்குதல் காரணமாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 
            பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரப் பகுதியில் மண் மற்றும் நீர் வளம் நிறைந்து காணப்படுவதால் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் இப்பகுதியில் நெல், கரும்பு ஆகியவற்றுடன் தோட்டப் பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பண்ருட்டி அருகே திராசு, இராசப்பாளையம், கட்டமுத்துப்பாளையம், பணப்பாக்கம், சூரக்குப்பம், தட்டாம்பாளையம் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கிராமப் பகுதியில் தோட்டப் பயிர்களான மரவள்ளி, வாழை மற்றும் கத்திரி, பாகல், புடலை, முருங்கை, கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, கொத்தவரை உள்ளிட்டவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன.
 
           தற்போது மரவள்ளி பயிரில் மாவுப் பூச்சி, சப்பாத்தி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலையில் உள்ள சாறுகள் உறுஞ்சப்பட்டு இலைகள் உதிர்ந்து காணப்படுகின்றன.கத்திரிச் செடியில் அசும்பு, புழுத் தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் செடிகள் குஷ்டம் பிடித்தது போல் உள்ளது. மேலும் செடியில் உள்ள காய்களை புழுக்கள் தாக்கி சொத்தை விழுந்து அழுகச் செய்கின்றன. இதே போல் முருங்கை மரங்களும் பூச்சி தாக்குதல் காரணமாக இலைகள் உதிர்ந்து வருவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து திராசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.ராஜசேகர் கூறியது.
 
           எனது நிலத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளேன். மரவள்ளியில் பூச்சித் தாக்குதல் இருக்காது. ஆனால் தற்போது மாவுப்பூச்சி, சப்பாத்தி நோவு தாக்கியுள்ளது. இதனால் இலையில் உள்ள சாறு உறுஞ்சப்பட்டு உதிர்ந்து வருகிறது. இதனால் கிழங்கு பெருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் முருங்கையில் பூச்சித் தாக்குதல் காரணமாக இலைகள் உதிர்ந்து  மகசூல்  பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
த்திரி விவசாயி சக்கரபாணி கூறியது: 
 
           பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு செடியே வீணாகி உள்ளது. பலமுறை மருந்து அடித்தும் அசும்பு பூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. காய்ப்புழு தாக்குதல் அதிகம் இருப்பதால் பிஞ்சுகள் பாதிக்கப்பட்டு அழுகி வருகிறது. செலவு செய்த பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே உள்ளேன் என்றார். விதை, உரம், பூச்சி மருந்து விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, மின்வெட்டு, வறட்சி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு இடையே தோட்டப் பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த பூச்சித் தாக்குதல் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.  
 
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரேமா கூறியது:
 
            மரவள்ளியில் மாவு பூச்சித் தாக்குதல் உள்ளது. இது குறித்து விவசாயிகளுக்கு மருந்து மற்றும் தெளிக்கும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். மழை பெய்தால் மாவு பூச்சி தானாக அழிந்துவிடும். இல்லை என்றால் இரு நாள்கள் பொறுத்து மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.கத்திரி மற்றும் முருங்கையில் பூச்சுத் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மழையின்மை மற்றும் வெயிலின் காரணமாக பூச்சித் தாக்குதல் ஏற்படும். தாக்குதலுக்கு உண்டான தோட்டத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமா கூறினார்.

Read more »

பண்ருட்டியில் சிலைகளை மறைத்து விளம்பர பேனர்கள்; கண்டும் காணாத நகர நிர்வாகம்


பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அண்ணா சிலையை மறைத்து சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள். (கோப்பு படம்).
பண்ருட்டி:
 
         பண்ருட்டியில் காமராஜர் அண்ணா சிலைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 
 
            பண்ருட்டி நகர நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.பண்ருட்டி பஸ் நிலையம் முகப்பில் உள்ள காமராஜரின் சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பு இல்லாததால் மண்டபத்தை முதியவர்கள் ஓய்வு எடுக்கவும், சிறார்கள் ஏறி விளையாடவும் செய்கின்றனர்.இதைச் சுற்றியுள்ள கம்பி வேலிகளில் நாளிழ்கள் மற்றும் பருவ இதழ்களின் போஸ்டர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது.
 
             இதேபோல் நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை மண்டபத்தை வியாபாரிகள் பொருள்களை வைக்கவும், ஓய்வு எடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்விரு தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடம். இதனால் சிலர் மருத்துவ முகாம், பள்ளி மற்றும் கல்லூரி விளம்பரம், மரண அறிவிப்பு, வாழ்த்து, செய்தித்தாள், வார இதழ்கள் போஸ்டர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு மற்றும் விளம்பரத் தட்டிகள், பேனர்களை வைக்கும் இடமாக மாற்றி உள்ளனர்.பெரும்பாலான விளம்பரத் தட்டிகள், பேனர்கள் அனுமதி பெறப்படாமல் வைக்கப்படுகிறது. 
 
             இவ்வாறு வைக்கப்படும் விளம்பரத் தட்டிகள் தலைவர்களின் சிலைகளை மறைக்கின்றன.மேற்கண்ட இடத்தில் விளம்பரத் தட்டிகளை வைக்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள நகர நிர்வாகமே நகராட்சி தொடர்பான விளம்பரங்களை, தலைவர்களின் சிலைக்கு முன்னால்தான் வைக்கிறது.மேலும் சிலைக்கு முன்னர் உள்ள இடத்தில் அழகுக்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று, முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
 
               சுகாதாரச் சீர்கேடு, விபத்துகளை ஏற்படுத்தும் இத்தகைய விளம்பரங்கள் வைப்பதை நகர நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை.காமராஜர், அண்ணா ஆகியோரை சொந்தம் கொண்டாடும் கட்சியினர்கூட தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் தேர்தல் நேரம் மற்றும் தேர்தல் வெற்றி போன்ற நேரத்தில் மட்டும் ஒரு மாலை வாங்கி சூட்டி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுடன் சரி மேற்கொண்டு எதையும் கண்டுக்கொள்வதில்லை. சிலையை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடை செய்ய நகர நிர்வாகமும், காவல்துறையும் முன் வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Read more »

வாகன நிறுத்துமிடமாக மாறிய கடலூர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்


வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில்.
கடலூர்,:
 
          டலூர் ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில், தற்போது வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறியிருக்கிறது.
 
               கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலகமாகத் திகழ்ந்தது. மின் விசிறிகள் பிற்காலத்தில் பொருத்தப்பட்ட போதிலும், அலுவலகத்தில் எந்த அறையிலும் மின்விசிறி இல்லாமலே கோடைக் காலத்தில் நல்ல காற்றோட்டத்துடன் திகழும் வகையில், சிறந்த கட்டடக்கலை அமைப்புடன் கட்டப்பட்டு இருப்பது வியப்பை அளிக்கிறது.இந்த ஆட்சியர் அலுவலகத்தில், பணிபுரிவது பெருமைக்கு உரியது என்று, பல மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த, ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் பிரதான வாயிலில், சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவில் அழகுற முகப்பு மண்டபம் கட்டப்பட்டது.
 
             அழகுக்கு அழகு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த முகப்பு மண்டபம், தற்போது இக்கட்டடத்தில் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவோரால், இருசக்கர வாகன நிறுத்தும் இடமாக, அண்மைக் காலமாக மாற்றப்பட்டு இருப்பது, பொதுமக்களை பெரிதும் வேதனையில் ஆழ்த்தி வருகிறது. அதுமட்டுமன்றி பிரதான வாயில் வழியாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்வதும் சிரமமாக உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இக்கட்டடத்தின் பின்பகுதியில், ஊழியர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆட்சியர் அலுவலக நுழை வாயில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி இருப்பது ஆட்சியர் அலுவலகத்துக்கு, பெருமை சேர்ப்பதாக இல்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ. மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் பட்டியல்

சிதம்பரம் :

             அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11-ம் ஆண்டு பி.இ. மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு பதிவுத் தபாலில் தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் படிப்பில் சேர வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் விவரம்:

பொறியியல் படிப்புபொதுப் பிரிவு:

           மொத்தம் - 2191110157 1120049 1120056 1120063 1120088 1120122 1120160 1120291 1120296 1120448 1120874 1120878 1122002 1122004 1122007 1122010 1122014 1122015 1122016 1122019 1122020 1122023 1122025 1122028 1122030 1122032 1122034 1122037 1122042 1122043 1122045 1122047 1130001 1130010 1130016 1130020 1130025 1130030 1130034 1130037 1130038 1130039 1130048 1130052 1130068 1130079 1130086 1130110 1130119 1130122 1130198 1130205 1130214 1130216 1130235 1130253 1130271 1130275 1130319 1130332 1130518 1130625 1130733 1130827 1130830 1130859 1130921 1131304 1131305 1131306 1131307 1131314 1131315 1131316 1131317 1131318 1131320 1131321 1131322 1131330 1131333 1131335 1131338 1131338 1131341 1131344 1131347 1140001 1140004 1140012 1140014 1140020 1140021 1140022 1140026 1140027 1140028 1140036 1140043 1140049 1140059 1140117 1140123 1140131 1140137 1140146 1140148 1140154 1140164 1140166 1140175 1140186 1140199 1140205 1140208 1140230 1140232 1140234 1140251 1140260 1140309 1140312 1140323 1140325 1140343 1140344 1140371 1140390 1140412 1140415 1140441 1140448 1140473 1140482 1140486 1140498 1140564 1140587 1140702 1140713 1140837 1140841 1140895 1141150 1141151 1141153 1141156 1141158 1141161 1141163 1141165 1141166 1141167 1141168 1141169 1141171 1141174 1141176 1141178 1141180 1141185 1141186 1141187 1141189 1141191 1141192 1141194 1141195 1141197 1141199 1141201 1141204 1141206 1150001 1150002 1150007 1150013 1150019 1150020 1150045 1150049 1150051 1150080 1150277 1150278 1150279 1150282 1150283 1150285 1150288 1150292 1150294 1150296 1150298 1150300 1150304 1150306 1150308 1150310 1150313 1150317 1150319 1150320 1150321 1150323 1150324 1150326 1150328 1150331 1150333 1150335 1150337 1150338 1220007 1240038 1240040 1340033 1440028 1450005 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு:

             மொத்தம் - 1871140009 1140010 1140011 1140016 1140023 1140025 1140039 1140044 1140046 1140057 1140062 1140063 1140066 1140068 1140070 1140073 1140080 1140085 1140088 1140089 1140095 1140109 1140111 1140112 1140113 1140118 1140122 1140125 1140128 1140129 1140134 1140139 1140141 1140142 1140143 1140144 1140152 1140153 1140155 1140157 1140172 1140174 1140176 1140177 1140187 1140195 1140196 1140202 1140207 1140209 1140215 1140216 1140221 1140223 1140226 1140237 1140239 1140244 1140247 1140252 1140259 1140261 1140263 1140264 1140268 1140272 1140275 1140284 1140285 1140287 1140289 1140290 1140292 1140293 1140295 1140297 1140300 1140303 1140306 1140308 1140314 1140315 1140318 1140319 1140320 1140322 1140324 1140328 1140334 1140335 1140336 1140341 1140347 1140348 1140353 1140359 1140361 1140363 1140366 1140368 1140369 1140372 1140375 1140376 1140377 1140381 1140387 1140388 1140391 1140394 1140397 1140399 1140402 1140404 1140406 1140409 1140410 1140417 1140428 1140432 1140435 1140436 1140442 1140445 1140446 1140450 1140455 1140458 1140463 1140465 1140466 1140468 1140475 1140476 1140477 1140479 1140487 1140490 1140493 1140501 1140502 1140505 1140506 1140507 1140511 1140514 1140515 1140521 1140533 1140534 1140535 1140536 1140539 1140542 1140543 1140547 1140553 1140554 1140558 1140562 1140563 1140566 1140567 1140568 1140577 1140579 1140582 1140584 1140593 1140596 1140601 1140606 1140613 1240005 1240010 1240012 1240028 1240031 1240032 1240033 1440001 1440010 1440011 1440031 1440032 1440033 1540006 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு:

            மொத்தம் - 1411130002 1130003 1130006 1130012 1130013 1130014 1130015 1130021 1130022 1130027 1130028 1130041 1130043 1130045 1130055 1130057 1130059 1130066 1130067 1130069 1130072 1130075 1130076 1130082 1130085 1130088 1130092 1130094 1130096 1130097 1130098 1130100 1130105 1130107 1130108 1130111 1130112 1130124 1130126 1130132 1130135 1130137 1130138 1130142 1130146 1130153 1130158 1130160 1130161 1130167 1130176 1130180 1130186 1130191 1130192 1130195 1130201 1130202 1130208 1130209 1130217 1130221 1130222 1130223 1130228 1130229 1130230 1130234 1130241 1130244 1130248 1130249 1130256 1130264 1130270 1130272 1130287 1130293 1130294 1130315 1130326 1130335 1130340 1130343 1130344 1130347 1130351 1130352 1130353 1130355 1130356 1130360 1130363 1130364 1130371 1130372 1130375 1130376 1130391 1130394 1130397 1130412 1130436 1130438 1130440 1130441 1130455 1130461 1130472 1130473 1130484 1130487 1130488 1130489 1130492 1130494 1130499 1130502 1130512 1130514 1130519 1130521 1130533 1130534 1130550 1130555 1130564 1130578 1130586 1130590 1130591 1130592 1130600 1130605 1130610 1130622 1130632 1130706 1130736 1130756 1130903 

தாழ்த்தப்பட்டோர் பிரிவு: 

           மொத்தம் - 1061120005 1120014 1120016 1120036 1120041 1120052 1120055 1120057 1120067 1120068 1120070 1120072 1120080 1120081 1120082 1120092 1120097 1120125 1120129 1120133 1120152 1120154 1120168 1120170 1120173 1120174 1120187 1120188 1120193 1120194 1120217 1120223 1120241 1120243 1120259 1120265 1120266 1120267 1120299 1120321 1120324 1120327 1120328 1120331 1120335 1120349 1120351 1120352 1120360 1120364 1120365 1120366 1120371 1120425 1120427 1120430 1120433 1120483 1120484 1120500 1120503 1120510 1120515 1120519 1120520 1120525 1120526 1120535 1120536 1120537 1120540 1120551 1120554 1120556 1120557 1120561 1120566 1120570 1120572 1120580 1120587 1120592 1120593 1120596 1120601 1120626 1120630 1120652 1120673 1120674 1120683 1120687 1120699 1120704 1120706 1120708 1120715 1120730 1120748 1120758 1120932 1120964 1121120 1121583 1420002 1420018

முஸ்லிம் பிரிவு:

           மொத்தம் - 251141224 1141225 1141234 1141235 1141238 1141239 1141243 1141245 1141246 1141248 1141249 1141250 1141252 1141255 1141262 1141274 1141286 1141297 1141302 1141315 1141325 1141333 1141339 1141342 1141352 

அருந்ததியினர் பிரிவு: 

          மொத்தம் - 211122070 1122072 1122074 1122077 1122079 1122081 1122083 1122086 1122090 1122094 1122101 1122103 1122107 1122110 1122115 1122119 1122122 1122125 1122130 1122132 1122135 

பழங்குடியினர் பிரிவு: 

            மொத்தம் - 71110001 1110002 1110003 1110008 1110150 1110152 1110154 

பி.எஸ்சி. வேளாண்மை படிப்பு:

பொதுப் பிரிவு மொத்தம் - 

          301121622 1121694 1121755 1121868 1121956 1130376 1130558 1131052 1131072 1131146 1140609 1140941 1140953 1140972 1140973 1141027 1141054 1141063 1141087 1141097 1141098 1141109 1141113 1310004 1310006 1320013 1320018 1320019 1320020 1440024 

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு: 

           மொத்தம் - 151140410 1140414 1140423 1140530 1140531 1140532 1140555 1141355 1340015 1340017 1340021 1340030 1440026 1440029 1540004 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு: 

           மொத்தம் - 191130040 1130378 1130379 1130380 1130381 1130422 1130424 1130466 1130536 1130541 1130544 1130546 1130611 1130642 1130646 1131081 1330002 1330006 1430007 

தாழ்த்தப்பட்டோர் பிரிவு: 

                  மொத்தம் - 141120366 1120385 1120386 1120402 1120451 1120454 1120463 1120612 1120629 1120757 1121709 1121885 1121949 1420014 

முஸ்லிம் பிரிவு: 

           மொத்தம் - 31141359 1141362 1141372 

அருந்ததியினர் பிரிவு: 

           மொத்தம் - 31122138 1122141 1122145 

பழங்குடியினர் பிரிவு:               

மொத்தம் - 11310003

Read more »

மேட்டூர் அணை திறப்பதில் தாமதம்: 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி கேள்விக்குறி

கடலூர்:
            மேட்டூர் அணை திறப்பதில் தாமதமாகியுள்ளதால், தமிழகத்தின் நெல் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்யும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16 லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி, தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
             பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறந்த பின்னர்தான், இந்த 16 லட்சம் ஏக்கரிலும் வேளாண் பணிகளே தொடங்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நெல் ரகங்கள் என்றால் 6 மாதப் பயிர்கள்தான். அப்போது பயிரிடப்பட்டு வந்த  குதிரைவாலி, கொத்தமல்லி, கட்டச்சம்பா, அம்பாசமுத்திரம், வெள்ளந்தாங்கி, கோவைச்சம்பா போன்ற நீண்டகால சம்பா நெல் ரகங்கள் இன்று காணாமல் போய்விட்டன.
            அவற்றின் விதைநெல் இன்று எங்கும் தேடினாலும் கிடைக்காத பொருளாகி விட்டது.  அவற்றுக்கு மாற்றாக இன்று, டெல்டா பாசனப் பகுதிகளில் பொன்மணி, பிபிடி, சி.ஆர்.1009, வெள்ளைப் பொன்னி, ஏடிடி 38,39, 43, 45 ரகங்கள், கோ 43, கோ 50 போன்ற 120 முதல் 140 நாள்களுக்குள் அறுவடைக்குத் தயாராகும் குறுகியகால நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்யப்படுகின்றன. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற நிறைய பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன். 
               இந்த ரக அரிசியை வேறுவழியின்றிச் சாப்பிடுவோருக்கு, அவற்றில் இருந்து கிடைக்கும் சத்தும் குறைவுதான் என்றும் அவர் கூறுகிறார். நீண்டகால ரக சம்பா அரிசியை சமைத்தால் சாதம் நீண்ட நேரம் கெட்டுப் போகாது. தண்ணீர் ஊற்றி வைத்தால் தற்போதைய சம்பா அரிசிகளைப் போல் நாற்றம் அடிக்காமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.நீண்டகால ரக சம்பா நெல்லில், மாடுகள் விரும்பிச் சாப்பிடும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். குறுகிய காலத்தில், அதிகமான ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசியைச் சாப்பிடுவதால்தான் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன என்றார்.

            மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கொள்ளிடம் கீழணைக்கு (கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு) தண்ணீர் வந்து சேர 20 நாள்கள் ஆகும்.அதன்பிறகு சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கினால், அக்டோபர் 20-ம் தேதிதான் நடவுப் பணிகள் முடிவடையும். பயிர்கள் பிப்ரவரி 20-ம் தேதிக்கு மேல்தான் அறுவடைக்குத் தயாராகும். ஆனால் மேட்டூர் அணையோ ஜனவரி 28-ம் தேதி மூடப்பட்டு விடும் என்கிறார்கள் விவசாயிகள். காவிரி நதிநீர்ப் பிரச்னை தமிழக சம்பா நெல் விவசாயத்தையும், அதன்முலம் கிடைக்கும் அரிசியைச் சாப்பிடும் தமிழக மக்களின் உடல் நலத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

Read more »

கடலூரில் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

கடலூர் : 

           நகை, பணம் திருடுவதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் மிலிட்டரி "சரக்கை' குடித்ததால், போதை தலைக்கேறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் கடலூரில் நடந்தது. 

 இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரம் வருமாறு: 

             கடலூர் அடுத்த உச்சிமேடு கிராமத்தின் அருகே தியாகு நகரில் வசித்தவர் ரத்தினம்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி தனலட்சுமி. மகன் ரமேஷ் (42); சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது வீடு கூரை மற்றும் ஓடுகளால் இணைத்து கட்டப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி இரவு  வீட்டைப் பூட்டி விட்டு தாய் தனலட்சுமியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். நோட்டம் பார்த்த பாபு, செல்வகுமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சைக்கிளில் திருடச் சென்றனர். கூரையை பிரித்து உள்ளே இறங்கி வீட்டுக்குள் இருந்த தாம்பாலத் தட்டு, மோதிரம், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டனர்.

                அப்போது, மிலிட்டரி சரக்கு மூன்று பாட்டில் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடனே அங்கேயே பாட்டில்களைத் திறந்து பாபு முழு பாட்டில், கூட்டாளி செல்வகுமார் பாதி பாட்டில் என சரக்கை குடித்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு சைக்கிளையும் திருடிக் கொண்டு ஆளுக்கொரு சைக்கிளில் திருடிய பொருட்களை வைத்து கட்டிக் கொண்டு அவசர அவசரமாக புறப்பட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக போதை தலைக்கேற கடலூர் பீச் ரோடு வரை மட்டுமே அவர்களால் வர முடிந்தது. முழு பாட்டில் சரக்கையும் குடித்த பாபு சைக்கிளை போட்டு விட்டு சாலையோரத்திலேயே "மட்டை'யாகி விட, பாதி பாட்டில் சரக்கை குடித்து ஓரளவிற்கு நிதானமாக இருந்த செல்வகுமார் திருடிய பொருட்களுடன் சைக்கிளில் தப்பிச் சென்றார். மறுநாள் காலையில் ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டில் திருடு போனதைக் கண்டு அதிர்ந்தார். உடன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து உடனடியாக டெல்டா படை போலீசார் விரைந்து சென்று லோக்கல் திருடர்களை தேடினர். அப்போது பீச்ரோட்டில் போதை தலைக்கேறி மயக்கத்தில் படுத்திருந்த பாபுவையும் அவர் திருடி வந்த சைக்கிளையும் கைப்பற்றினர்.

Read more »

விஏஓ தேர்வில் வயது வரம்பு சலுகை ரத்து: பட்டதாரிகள் அதிர்ச்சி

நெய்வேலி:
 
          விஏஓ தேர்வுக்கான வயதுவரம்பு சலுகையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்திருப்பதால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
            டிஎன்பிஎஸ்சி கடந்த 21-ம் தேதி, 1576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் விஏஓ தேர்வுக்கு வயது வரம்பு சலுகையை பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு அடியோடு திடீரென்று ரத்து செய்து அறிவிப்பு வெளியாகிள்ளது.
 
                 டிஎன்பிஎஸ்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர், எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் அனைத்து சாதிகளையும் சேர்ந்த விதவைகள், உள்ளிட்டோர் பட்டதாரிகளாக இருப்பின் அவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என்ற சலுகை வழங்கப்ட்டிருந்தது.
 
           கடந்த 2007-ம் ஆண்டு நடபெற்ற விஏஓ தேர்விலும் இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய போட்டித் தேர்வில் இச்சலுகை பறிக்கப்பட்டுள்ளதால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்று அரசு வேலை 40 வயதிலிருந்து 50 வரைதான் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் போட்டித் தேர்வெழுதி 57 வயது வரை பதவி உயர்வு பெறுகின்றனர். அத்தகைய வாய்ப்பும் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. 
 
              இந்த அறிவிப்பு வரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கும் பொருந்துமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும் எப்போதும் போல் வயதுவரம்புச் சலுகை வழங்கவேண்டுமென்று தமிழ்நாடு திறந்தநிலை பட்டதாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

Read more »

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சைக்கிள் பயணம்

கடலூர்:

         மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, தொழிலாளி விஜயகுமார் (36) சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தார்.

             கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அங்குள்ள மளிகைக் கடையில் பொருள்களைக் கையாளும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். தி.மு.க. தொண்டரான அவர், பிறவியிலேயே வலதுகால் ஊனமுற்றவர். எனினும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். அவர் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

             எனவே முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு சைக்கிள் பயணம் தொடங்கி இருக்கிறார். கடந்த 23-ம் தேதி தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய விஜயகுமார், எப்போது சென்னை சென்றடைவார் என்று கூறமுடியவில்லை.எனினும் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திப்பேன் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியது:

           மாற்றுத் திறனாளிகள் திட்டத்தால் ஊனமுற்ற பலர் நல்ல பயன் அடைந்து இருக்கிறார்கள். அதற்காக நான் சைக்கிளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். பகலில் மட்டும் சைக்கிளில் பயணிக்கிறேன். இரவில் ஆங்காங்கே உள்ள திமுக அலுவலகங்களிலும் திமுக தொண்டர்கள் தயவிலும் தங்கிக் கொள்வேன். எனக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்றார். திமுக தொண்டர்கள் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்: 100 பேர்க்கு அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை

சிதம்பரம்:
 
          சிதம்பரம் கோயில் நகர அரிமா சங்கம், மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரிவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்து கனவு சிறகுகள் மையம் சார்பில் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

           முகாமில் இந்து கனவு சிறகுகள் மையத் தலைவர் டாக்டர் எத்திராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 350 பேர், கண் பரிசோதனை செய்து கொண்டனர்.100 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் அரிமா கே.சேதுமாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே.கோவிந்தராஜ், செயலர் ஆர்.தீபக், பொருளர் டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விருத்தாசலம்: 

             விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.விருத்தாசலம் அரிமா சங்கம், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை கூட்டு மாவட்டத் தலைவர் ரத்தினசபாபதி தொடங்கி வைத்தார். விருத்தாசலம் லயன்ஸ் சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை ஏற்றார். மாவட்டத் தலைவர் அகர்சந்த் முன்னிலை வகித்தார், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் சிறப்புரை வழங்கினார். மண்டல தலைவர் ஞானமூர்த்தி, வட்டாரத் தலைவர் சோஹன்லால் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி: 

            நெய்வேலியை அடுத்த இருப்பு கிராமத்தில் மனிதநேய வளர்ச்சி மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.புதுச்சேரி கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமை, மனித நேய வளர்ச்சி மையத்தின் செயலர் ஜீவா முருகேசன் தொடக்கிவைத்தார். மாநிலத் துணைச் செயலர் அசோகன் தலைமை வகித்தார். புதுச்சேரி கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் செலினாஜோஷி, சிவகாயத்ரி மற்றும் ஜான்சன் ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

Read more »

மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்பு

சிதம்பரம்:
         மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது:

            "டெல்டா பாசனப் பகுதியில் குறுவைச் சாகுபடி பருவமாக விளங்கி வருகிறது. கடந்த காலங்களில் மேட்டூர் அணைகளில் தண்ணீர் தாமதமாக திறக்கப்படுகிறது.1999-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியும், 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2001-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியும், 2002-ம் ஆண்டு மிகவும் காலதாமதமாக அக். 22-ம் தேதியும், 2003-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 29-ம் தேதியும், 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியும், 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதியும், 2006-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

             ஆனால் தமிழக அரசு கர்நாடக அரசிடமிருந்து பெற வேண்டிய ஜூன் மாதம் அளவு நீரான 10 டிஎம்சியும், ஜூலை மாதத்துக்கான 34 டிஎம்சி நீரையும் பெற்று தருவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கவலையாக உள்ளது. மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பின்னர், 76 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை 38 முறை மட்டுமே ஜூன் மாதங்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி விட்ட நிலையில் காலம்தாழ்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, மழைநீருடன் சேர்ந்து வெள்ளச் சேதத்தையும் விவசாயிகள் சந்திக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது' என கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் நகராட்சியில் நடமாடும் இரு கழிவறைகள்

கடலூர்:
 
             கடலூர் நகராட்சி தலா ரூ.70 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் இரு கழிப்பறைகளை வாங்கி இருக்கிறது. 
 
          மாவட்ட ஆட்சியர் வழங்கிய சிறப்பு நிதியில் இவை வாங்கப்பட்டு உள்ளன. இந்த நடமாடும் கழிப்பறைகளை வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு, துணைத தலைவர் தாமரைச்செல்வன், ஆணையர் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். 
 
பின்னர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு பேசுகையில், 
 
          இந்த நடமாடும் கழிப்பறைகள், காவல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். போலீஸ் காவலர்கள் பல நேரங்களில் பல்வேறு பணிகளுக்காக வெளியிடங்களில் முகாமிட்டு இருக்கும்போது, அவர்கள் பயன்படுத்தும் வகையில் இவை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டில் ரூ.209 கோடி உதவி

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2009-10-ம் ஆண்டில் மட்டும், ரூ.209.29 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.

          மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், கடலூரில் சனிக்கிழமை நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் அவினாசி எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவனம் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:

             முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த 50-க்கும் மேற்பட்டோர் வேலைக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியம் ஆண்களுக்கு ரூ.4,500-ம் பெண்களுக்கு ரூ.3,250 வழங்கப்படும். உணவுக்காக ஆண்களிடம் ரூ.800-ம் பெண்களிடம் ரூ.600-ம் பிடித்தம் செய்யப்படும். தங்கும் இடம் இலவசம். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் வாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி ஆணை வழங்குவார்.

          கடந்த ஓராண்டில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பிரிவு, தனி வழி அமைத்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 362 பேருக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தில் 1541 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஓராண்டில் 3,985 பேருக்கு ரூ.12.06 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் மற்றும் ரூ.1.74 கோடி நிதி உதவி, தனிநபர் பொருளாதார நிதி உதவியாக ரூ.1.86 கோடி வழங்கப்பட்டது. 29,215 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 9,812 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தேசிய அறக்கட்டளை மூலம் 434 நபர்களுக்கு ரூ.10.45 கோடி மதிப்பில் மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 

             மேலும் பல உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் கடந்த  ஓராண்டில் ரூ. 209.29 கோடிக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ÷நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், எஸ்.இ.எம். கார்மெண்ட் நிறுவன மேலாளர் யோகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் ஜப்தி நடவடிக்கை ஆகஸ்ட் 5 வரை கெடு விதிப்பு

விருத்தாசலம்:

            விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் நிலுவைத் தொகை செலுத்தாததால், வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை செராமிக் தொழில் பேட்டையில் ஜப்தி செய்ய சென்றனர்.

            விருத்தாசலம் ஆலடி சாலையில் செராமிக் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் தற்போது பீங்கான் தயாரிப்புப் பணியை செய்துவருகின்றனர். இதற்கான மூலப் பொருள்களை அரசு செராமிக் நிறுவனத்திடம் வாங்கி தொழில் செய்கின்றனர்.இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு மூலப் பொருள்களின் விலையையும், சுடு கட்டணத்தையும் அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வை எதிர்த்து பீங்கான் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் கடந்த 1999-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

             பீங்கான் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் விலை உயர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நாள் முதல், தீர்ப்பு வெளியான ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், பீங்கான் மூலப்பொருள் விலையை கட்டவில்லை. இந்நிலையில் நிலுவைத் தொகையை செராமிக் நிர்வாகம் பலமுறை வசூல் செய்ய முயன்றும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து செராமிக் நிறுவனத்தினர் வருவாய்த் துறையினரிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் பீங்கான் உற்பத்தியாளர்களை அழைத்து செராமிக் நிறுவனத்துக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டத் தவறினால் பொருள்கள் ஜப்தி செய்யப்படும் என தெரிவித்தனர். 

              இதற்கு பீங்கான் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு காலக்கெடு கேட்டதால், அரசு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் வரை காலக்கெடு வழங்கினர். ஆனால் இதுவரையிலும் பீங்கான் உற்பத்தியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.எனவே சனிக்கிழமை (ஜூலை 24) வட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் செராமிக் தொழிற்பேட்டைக்கு பொருள்களை ஜப்தி செய்ய சென்றனர். 

              அப்போது பீங்கான் உற்பத்தியாளர்கள், "எங்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கினால் நாங்கள் நிலுவைத் தொகையை கட்டிவிடுவோம்' எனக் கூறினர். இதற்கு வட்டாட்சியர் ஜெயராமன் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்து, ஜப்தி நடவடிக்கையை தாற்காலிகமாக கைவிட்டார்.இந்த ஜப்தி முயற்சியால் செராமிக் தொழிற்பேட்டையில் பரபரப்பான நிலை காணப்பட்டது. ஆய்வாளர் சீராளன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Read more »

பண்ருட்டி பஜார் தபால் அலுவலகத்தை மூட உத்தரவு

பண்ருட்டி:

           பண்ருட்டி பஜாரில் இயங்கி வந்த கிளை தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

            வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் வ.உ.சி. தெருவில் உள்ள நாராயணா வணிக வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை தபால் நிலையம் இயங்கி வருகிறது. சிறந்த முறையில் இயங்கி வரும் இந்த தபால் அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த உத்தரவை கடலூர் அஞ்சல் துறை மேற்பார்வையாளர் வழங்கியுள்ளதாக தெரிகிறது. ஆணையின்படி பஜார் தபால் நிலையத்தை மூடி கணக்குகளை பண்ருட்டி தலைமை தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி பஜார் தபால் நிலைய அதிகாரி கலியமூர்த்தியிடம், அஞ்சல் துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் கூறினார். இத்தகவலை அறிந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள்:

சுரேஷ் (நகை கடை உரிமையாளர் சங்க தலைவர்): 

           சிறப்பாக இயங்கி வரும் கிளை தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி மூடுகின்றனர். இது குறித்து அஞ்சல் துறை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கேட்டதற்கு எனக்கும் இதற்கும் சம்மதம் இல்லை என கூறிவிட்டார்.

 ச.ராஜேந்திரன் (அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சம்மேüன செயல் செயலர்): 

             வியாபார நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் உள்ள இந்த கிளை தபால் நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. நவீனமயமாக்கல் என்ற பெயரில் துணை தபால் நிலையத்தை மூட அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பண்ருட்டி பஜார் தபால் நிலையத்தை மூடுவது முதல் படி. வேண்டுமென்றால் மேலும் 500 கணக்குகளை இந்த தபால் நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். இது குறித்து அனைத்து வியாபார சங்கங்களுடன் திங்கள்கிழமை கலந்து பேசி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என ச.ராஜேந்திரன் கூறினார்.

             தங்க நகை வியாபாரிகள் சங்க பொது செயலர் பி.எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட அனைத்து வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட மோட்டார் வாகனத் தலைவர் இ.ஸ்ரீதர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறுவர் எழுச்சி பாசறை ஒன்றியச் செயலர் ஏ.பிரகாஷ் ஆகியோரும் பஜார் தபால் நிலையம் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read more »

கடலூ ரில் தலித் மாணவியின் பொறியியல் படிப்புக்கு உதவும் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு

கடலூர்:

                   கடலூர் தலித் மாணவியைத் தத்து எடுத்துள்ள கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, அவரின் பொறியியல் படிப்புக்கும் நிதிஉதவி அளித்து உள்ளது.

            கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த தலித் மாணவி கிருபாவதி. அவரது பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள். கிருபாவதி தெருவிளக்கில் பாடங்களைப் படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 500-க்கு 472 மதிப்பெண் பெற்று இருந்தார்.  எனவே கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, மாணவி கிருபாவதிக்கு உதவிசெய்ய முன் வந்து, தத்து எடுத்துக் கொண்டது. எனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அவருக்கு கல்வி உதவித் தொகையாக இதுவரை ரூ. 25 ஆயிரம் செலவு செய்து உள்ளது.கிருபாவதி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்ததால், அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைத் தவற விட்டார். 

            எனவே பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட அவர், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் ஐ.டி. படிப்பைத் தேர்ந்து எடுத்து உள்ளார்.கிருபாவதிக்கு கடலூர் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு, பொறியியல் கல்லூரி படிப்புக்கானச் செலவையும் ஏற்க முன்வந்து உள்ளது. கூட்டமைப்பின் முயற்சியால் கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அவருக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 1.92 லட்சம் கல்விக் கடன் வழங்கி உள்ளது. முதலாம் ஆண்டுக்கான கட்டணம் ரூ. 48 ஆயிரத்தை வழங்கி விட்டது.எனினும் 4 ஆண்டுகளுக்கு விடுதி மற்றும் உணவுக் கட்டணத்துக்காகத் தேவைப்படும் ரூ. 50 ஆயிரத்தைக் கூட்டமைப்பு வழங்க முன்வந்து உள்ளது.

             இந்த உதவித் தொகையை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடந்தது. நிதிஉதவியை கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மாணவி கிருபாவதியிடம் வழங்கினார். இணைப் பொதுச் செயலர் பி.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் புருசோத்தமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:

              வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் காலாண்டு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

           புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஜூன் 2-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினர் ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே ஜூலை 5-ம் தேதி ஏற்பட்ட ஊதியமாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக காலவரையற்ற போராட்டம் ஜூலை 5-ம் தேதி இரவு முடிவுக்கு வந்ததையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

          இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் 2-வது காலண்டிற்கான ஊக்க ஊதியம் வழங்கப்படும். அதன்படி சனிக்கிழமை ஊக்க ஊதியம் வழங்குவதற்கான ஆணையை நிர்வாகம் பிறப்பித்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அந்த ஆணையில், ""அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் ஜூன் 2 மற்றும் 30-ம் தேதி நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலாண்டு ஊக்க ஊதியம் பெற தகுதியற்றவர்கள்'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் சுமார் 4 ஆயிரம் பேர் ஊக்க ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் ஜூலை மாதமும் போராட்டத்தை தொடர்ந்ததால் 3-வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். இதையடுத்து தொழிற்சங்கங்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

             அதன்படி ஜூலை 26, 27 தேதிகளில் விதிப்படி வேலை என்ற போராட்டமும், 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை என்எல்சி தலைமை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தவுள்ளனர்.

Read more »

50 differently abled selected at recruitment drive

andidates to work in garment factory in Avinashi
— Photo: C. Venkatachalapathy

Providing jobs: Collector P. Seetharaman addressing differently abled persons in Cuddalore on Saturday. 
 
CUDDALORE: 

            Over 50 differently abled persons were selected in a special recruitment drive conducted by the district administration and an Avinashi-based garment company here on Saturday, according to P. Seetharaman, Collector.

        After inaugurating the “job mela” on the Collectorate complex here, Mr. Seetharaman said more than 400 differently abled persons from various parts of the district participated in the event. The eligible candidates would soon get the job orders from Health Minister M.R.K. Panneerselvam.

         They would be employed in S.E.M. Garments, Avinashi. Women would get a monthly salary of Rs. 3,250 and men, Rs. 4,500. The candidates would be provided free accommodation and a monthly deduction of Rs. 600 for women and Rs. 800 for men would be made for food expenses. Depending upon their aptitude and ability, they would also get increments. The Collector also released a handbook listing out the schemes launched by the State government for the differently abled.

            As for as Cuddalore district was concerned, a total assistance of Rs. 209.29 crore was given away to differently abled persons during 2009-2010, he said.

Separate department

            The Collector further said that Chief Minister M. Karunanidhi had taken special interest in improving the quality of life of the differently abled and he had set up a separate department for achieving the objective. These measures had provided much needed rehabilitation avenues to the differently abled. The Collector noted that national identity cards were issued to 29,215 differently abled persons in the district. On the weekly grievance day sessions held on Mondays, special attention was being paid to differently abled persons. A separate pathway with a ramp had been set up for their convenience at the venue and their petitions were disposed of within a week.

           During the last financial year (2009-10), appliances worth over Rs. 12 lakh and financial assistance to the tune of Rs. 1.75 crore were given away to them through the Differently-Abled Persons' Welfare Department. Under the ‘Vazhnthu Kattuvom Thittam,' Rs 1.86 crore was disbursed as personal economic assistance to 1,960 people. In the past four months, no official functions were conducted without handing over aid to differently abled persons, the Collector said.

            Those who participated on the occasion included Welfare Officer Srinivasan, garment company manager Yogamurthy and Public Relations Officer P. Muthiah.

Read more »

Eight-year-old girl dies

CUDDALORE: 

             An eight-year-old girl, Tamilarasi, died when the sand pit in the Malattar river in which she was playing with some other girls caved in on Saturday. Three other girls were rescued by the neighbours.

Read more »

Mahilselvan is new Director (Power) of NLC

CUDDALORE: 

         The Centre has appointed J. Mahilselvan, Director (Power), Neyveli Lignite Corporation, subsequent to the superannuation of V. Seetharaman. He assumed office on Saturday. Before getting elevated, Mr. Mahilselvan was serving as Chief General Manager (Power Station Engineering Department), NLC.

Read more »

2011ல் மீண்டும் தி.மு.க., அரசு: நெய்வேலியில்அமைச்சர் பூங்கோதை பேச்சு

நெய்வேலி:

          தமிழ்நாடு நாடார் பேரவையின் கடலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு நெய்வேலியில் நடந்தது.

             மாவட்ட செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். குசலவசாமி, குமாரசாமி, பழமலை, தியாகு மணிவண்ணன், ராஜமாரிப்பன், பால் சாமி, கருப்பையா முன்னிலை வகித்தனர். குருசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் தனபாலன், பொதுச் செயலாளர் கரிக் கோல்ராஜ், பொருளாளர் செல்லப் பன் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை பேசுகையில் 

             "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர் களது முன்னேற்றத்திற் காக முதல்வர் கருணாநிதி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நாடார் இன மக்களின் முன்னேற்றத்திற்கு காமராஜருக்கு இணையாக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். பனை தொழில் மக்களுக்கு நன்மை பயக்கும் சிறந்த ஏற்றுமதி தொழிலாக அமைய முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்படும், 2011ல் மீண்டும் தி.மு.க., அரசு அமையும் என்பது நிச்சயம்' என பேசினார்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்

             ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு தொடர்ந்து நாடார் பேரவை பாடுபட வேண்டும்.ஒரே நேரத்தில் 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து கல்விக்காக பாடுபட்டவர் காமராஜர். சுயமரியாதை உணர்வு அதிகம் உள்ளவர்கள் நாடார் இன மக்கள். கல்வி, வணிகம் என பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ள நாம் அரசியலில் சோடை போக மாட்டோம்' என பேசினார்.

Read more »

கடலூரில் ரவுடி கும்பல் சுற்றி வளைப்பு:போலீசாருக்கு எஸ்.பி., ரிவார்டு

கடலூர்:

         கடலூரில் ரவுடியை கொலை செய்ய வெடிகுண்டுகளுடன் திரிந்து கைது செய்யப்பட்ட நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., தெரிவித்தார்.

இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

             மணல் மேடு சங்கர் மற்றும் மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் வீரமணி ஆகியார் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி வெள்ள குணா, மணல்மேடு சங்கருக்கு ஆதரவாக வீரமணி கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக வீரமணி கோஷ்டியைச் சேர்ந்த ஏழு பேர், நாளை (27ம் தேதி) கடலூர் கோர்ட்டுக்கு விசாரணைக்காக வரும் வெள்ள குணாவை கொலை செய்ய வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த போது தேவ் என்கின்ற தேவராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்படும். இந்த கோஷ்டியைச் சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகிறோம். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள்.

ரிவார்டு: 

              கடலூர் மாவட்டத்தில் சிறப்புப் படை சப் இன்ஸ்பெக்டர்கள் அமீர்ஜான், அம்பேத்கார் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது நால்வரை கைது செய்து நடக்க இருந்த அசம்பாவிதத்தை தடுத்த அமீர்ஜான் உள்ளிட்ட சிறப்புப் படையினருக்கு வடக்கு மண்டல ஐ.ஜி., உத்தரவின் பேரில் 5,100 ரூபாய் ரிவார்டு வழங்கப்படுகிறது.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி


நெல்லிக்குப்பம்:

           நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமை தாங்கி 90 கர்ப்பிணிகளுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் 5 லட் சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, எழுத்தர் பாபு, மேலாளர் சிவசங்கரன், ஒப்பந்ததாரர்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: அரசின் நடவடிக்கையால் பலன் கிட்டியது

சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு விலை உயர்வு மற்றும் எம்.ஆர். கே., சர்க்கரை ஆலை ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             சேத்தியாத்தோப்பு பகுதியில் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உருவாக்கப்பட்ட சர்க்கரை ஆலை வரப்பிரசாதமாக அமைந்தது. 1989ம் ஆண்டு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டதிலிருந்து இப்பகுதி விவசாயிகள் உணவுத் தேவைக்கு நெற் பயிரையும், பணத்தேவைக்கு கரும்பையும் பயிரிட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட தயங்கினர். 

              இந்நிலையில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்புத் துறையில் நடந்த முறைகேடுகளால் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கு வேம்பாகியது.இதன் காரணமாக கடந்த 2009-2010ம் ஆண்டு குறைந்த பட்ச அறவைத் திறனுக்கு தேவையான 4.5 லட்சம் டன் கரும்பு கூட கிடைக்காததால் 2 லட் சத்து 635 டன் மட்டுமே கரும்பு அறவை செய்யப் பட்டது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஆலையை மீட்கும் வகையில் தமிழக அரசும் சர்க் கரை துறை ஆணையமும் இணைந்து, ஆலைக்கு புதிய ஆட்சியராக ஆசியா மரியத்தை கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது.

             அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் 2010-2011 கரும்பு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலை தந்த போதிலும் பருவ மழை மாற்றம், இயற்கை சீற்றம், மின் தட்டுப்பாடு, கூலித் தொழிலாளர்கள் பற் றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் விவசாயிகளை அச்சுறுத்தியது.நிலமையை உணர்ந்து எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட் சியர் ஆசியா மரியம் ஆலை நிர்வாகத்தில் இருந்த முறைகேடுகளை களைய நடவடிக்கை மேற் கொண்டார்.

                அதன் காரணமாக கரும்பு உதவியாளர் கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வரத் துவங்கினர். கரும்பு வெட்டு உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார்.மேலும், அனைத்து கரும்பு கோட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அப்பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். அந்த குறைகளை களையவும் நடவடிக்கை மேற்கொண்டார். ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை ஆலையின் நிர்வாகத்தின் மீது விவசாயிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

                    மேலும், தமிழக அரசு சமீபத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியிருப்பதும் விவசாயிகளிடையே கரும்பு பயிரிட ஆர்வத்தை தூண் டியுள்ளது. 2009-2010ம் ஆண்டு கரும்பு பதிவு மிக குறைவாக இருந்த நிலையில் உடனடி பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தும் கூட 10 ஆயிரத்து 590 ஏக்கர் கரும்பு பயிர் மட்டுமே பதிவு செய்து அறவை செய்யப் பட்டது. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளால் இப்பகுதி விவசாயிகள் தற்போது ஆர்வத்துடன் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.

             இதன் காரணமாக நடப்பு (2010-2011ம்) ஆண் டின் அறவை பருவத்திற்கு கடந்த ஜூன் மாதம் வரையில் 10 ஆயிரத்து 436 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி வரையில் கரும்பு பதிவிற்கான காலக்கெடு உள்ளதாலும், உடனடி பதிவு திட்டத்தின் மூலம் மேலும் ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பதிவாகும் என ஆலை நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்சியரின் நடவடிக்கையால் புதிய ரக கரும்பு பயிர்கள் நடவு செய்துள்ளதால் அதிக மகசூல் வாய்ப்பு இருக்கும் என்பதால் ஆலை அறவைக்கு தேவைக்கு கூடுதலாகவே கரும்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more »

வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை : பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம்:

          வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து வந்தனர்.ஆனால் பருவநிலை மாற்றத்தாலும், நோய் தாக்குதல், பணியாளர்கள் தட்டுப்பாடு, கொள் முதல் நிலையங்களுக்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாத நிலை ஆகியவற்றால் காய் கறிகளை பயிரிடுவதில் தயக்கம் காட்டி வந்தனர். 

                  கடந்த இரண்டு ஆண்டுகளாக விளை நிலங்களில் உள்ள தரை கிணற்றில் கிடைக்கும் குறைவான நீரைக் கொண்டும் அதிக வேலைப்பளு, நோய் தாக்குதல்கள் இல்லாததாலும் கோழிக் கொண்டை, சம்பங்கி, டில்லி கனகாம்பரம், மல்லிகை, மரிக்கொழுந்து, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விளைவிக்கின்றனர்.கிடைக்கும் பூக்களை அருகிலுள்ள விருத்தாசலம், சேலம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளிலுள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி கணிசமான வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிகளவு பூக்களை பயிரிவதில் ஆர் வம் காட்டுகின்றனர்.

Read more »

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க இன்று கடைசி நாள்

கடலூர்:

         வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாச நீட்டிப்பு இன்று முடிவடைகிறது.

            தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட சுருக்குமுறை திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் கடந்த 16ம் தேதிவரை பெறப்பட்டது.தேர்தல் ஆணையத்தால் நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் படிவம் 6ம், பெயரை நீக்க படிவம் 7ம், திருத்தம் செய் வதற்கு படிவம் 8யை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி களப் பணியாளர்கள் மற்றும் தாசில்தார் அல்லது நகராட்சி அலுவலகங்களில் கொடுக்கலாம்.

Read more »

விருத்தாசலம் அருகே 185 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள்

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அருகே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 6, 7 ,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

            விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மன்னம்பாடி கிராமம். இங்கு 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சுற்றியுள்ள சிறுமங்கலம், கோவிலூர், தொரவளூர் ஆகிய கிராமங்களில் உயர்நிலை பள்ளியும், பெரம்பலூர், விளாங்காட்டூர், சாத்தியம், டி.புடையூர் ஆகிய கிராமங்களில் நடுநிலை பள்ளிகளும் உள்ளது. இருந்தும் மன்னம்பாடி பள்ளி மட்டும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடக்க பள்ளியாகவே இருந்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருவத்தூர், எரப்பாவூர், நகர், வேப்பூர் ஆகிய பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட போது மன்னம்பாடி தொடக்க பள்ளியும் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

           தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டார். மொத்தம் அனைத்து வகுப்புகளையும் சேர்த்து 185 பேரும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை மட்டும் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.தொடக்கப் பள்ளியாக இருந்தபோது பணியில் இருந்த இரண்டு ஆசிரியர்களே தற்போதும் நீடித்து வருகின்றனர். இதனால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. 

               அவர்களும் கடமைக்கு பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.ஆசிரியர்கள் நியமிக்காதது மட்டுமில்லாமல் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவும் வழங்குவதில்லை. மன்னம்பாடி பள்ளியுடன் தரம் உயர்த்தப்பட்ட மற்ற பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மன்னம்பாடி பள்ளியில் மட்டும் தேவையான கட்டட வசதிகள் இருந்தும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக் காதது புரியாத புதிராக உள்ளது.

Read more »

கிடப்பில் போடப்பட்ட அழிசிக்குடி சாலை:குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி

புவனகிரி:

          புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு - அழிசிக்குடி சாலை போடும் பணி துவங்கப்படாததால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண் டிய நிலையில் மக்களின் அவதி தொடர்கிறது. 

            புவனகிரி அடுத்த அழிசிக்குடி, நாலாந்தெத்து கிராம மக்கள் இரண்டு கி.மீ., தூரம் உள்ள வண்டுராயன்பட்டிற்கு வந்து பஸ் பிடித்து நகர பகுதிக்கு வர வேண்டும். இந்நிலையில் வண்டுராயன்பட்டில் இருந்து அழிசிக்குடி செல்லும் சாலை கடந்த ஓராண்டிற்கும் மேலாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதிக்கு இயக்கப்பட்ட இரண்டு மினி பஸ்களும் நிறுத்தப் பட்டது. அப்பகுதி பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

            இது குறித்து அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 53 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தில் அழிசிக்குடிக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்ட நிதி மூலம் பணி தொடங்கப்பட்டது. அப்போது துவங்கிய இந்த சாலை போடும் பணி குறிப்பிட்ட காலத்திற்குள் போடப்படாததால் மீண்டும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

                இந்நிலையில் அப்பகுதி கம்யூ., கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால் சாலை பணி துவங்காததால் மக்களின் அவதி தொடர்கிறது.

Read more »

ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்:கடலூரில் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 4 பேர் கைது

கடலூர்:

            கடலூர் கோர்ட்டுக்கு வரும் குற்றவாளியை கொலை செய்யத் திரிந்த நான்கு பேரை கடலூர் சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து துப் பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

             கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் கொலைக் குற்றவாளியை வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்யப்போவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிறப்புப் படை சப்- இன்ஸ்பெக்டர் அமீர் ஜான், ஏட்டுகள் நடராஜன், ரவி உள்ளிட்ட போலீசார் கடலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

                  அவர்கள், புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் வாசு என்கிற பழனிராஜ் (32), காஞ்சிபுரம் கணேசன் மகன் தேவ் என்கிற தேவராஜ் (24), கல்பாக்கம் முருகேசன் மகன் விஜி என்கிற விஜயக்குமார் (22) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கொழப்பலூரைச் சேர்ந்த சந்தானம் மகன் தாமு என்கிற தாமோதரன் (24) என தெரிய வந்தது.அவர்களை சோதனை செய்ததில் ஒரு நாட்டு கை துப்பாக்கி, நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் மூன்று வீச்சரிவாள்கள் இருந்தன. அவற்றை போலீ சார் கைப்பற்றினர்.

                 பின்னர் பிடிபட்ட நால்வரிடமும் தனித்தனியே முறையாக விசாரணை செய்ததில் தேவராஜ் மீது காஞ்சிபுரத்தில் மஞ்சு, குமரவேல் சகோதரர்களை கொலை செய்தது உள்ளிட்ட 4 கொலை மற்றும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்கு. தாமோதரன் மீது விஷ்ணு காஞ்சியில் இரட்டை கொலை, வழிப்பறி வழக்கு. விஜி மீது வழிப்பறி, கொள்ளை, திருட்டு கல்பாக்கத்தில் பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கு.

                  வாசு மீது புதுச்சேரி முத்தியால்போட்டை, வானூர், திருப்பாதிரிப்புலியூர், ஒரத் தூர் ஆகிய ஊர்களில் தண்டல் வட்டிக்கு விடும் நபர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிந்தது. மேலும், ரெட்டிச்சாவடி அருகே சுந்தரம் என்பவரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கின் விசாரணைக்காக நாளை 27 மற்றும் 28ம் தேதிகளில் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் வெள்ள குணாவை கடலூரிலேயே வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது.

                இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து நால்வரையும் கைது செய்தனர்.சிறை நட்பால் தொடரும் கொலை :தமிழகத்தில் கொலை கொள்ளையில் ஈடுபடும் ரவுடிகள், சிறையில் ஏற்படும் நட்பை வைத்து வெளியே வந்ததும் மேலும் பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். 

                 இதில் தற்போது நாகை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பாக மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் கண்ணையனின் பேரன் சுமன் தலைமையிலான ரவுடிகளுக்கும், புதுச்சேரி வெள்ள குணா தலைமையிலான ரவுடிகளுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதும் அதன் உச்சகட்டமாக தொடர் கொலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். தற்போது பிடிபட்ட நால்வரும் சுமன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior