உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

சாலை​களை வீட்டு மனை​க​ளாக விற்க உயர்​ நீ​தி​மன்​றம் தடை

கட​லூர்,​ நவ. 29:​


கட​லூ​ரில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட மனைப் பிரி​வில் உள்ள சாலை​களை,​ வீட்டு மனை​க​ளா​கப் பிரித்து விற்​பனை செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கா​லத் தடை விதித்து உள்​ளது. ​க​ட​லூர் அருகே நத்​தப்​பட்டு ஊராட்​சிக்கு உள்​பட்ட பெண்ணை கார்​டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்​டு​க​ளுக்கு முன் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 200க்கும் மேற்​பட்ட வீட்​டு​ம​னை​கள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளன.இந்த நிலை​யில் 2003, 2004, 2008-ம் ஆண்​டு​க​ளில் இந்த மனைப் பிரி​வில் பொதுப் பயன்​பாட்​டுக்​கான சாலை​க​ளாக அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட இடங்​கள்,​ 4 நபர்​க​ளுக்கு வீட்​டு​ம​னை​க​ளாக விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ள​தாம். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பெண்ணை கார்​டன் நலச் சங்​கத் தலை​வர் ஜி.சம்​பந்​தம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ காவல்​துறை ஆகி​ய​வற்​றில் பல​முறை மனு கொடுத்​தும் நட​வ​டிக்கை எடுக்​க​வில்​லை​யாம். ​எ​னவே சம்​பந்​தம் இது​கு​றித்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். சாலை ​களை வீட்டு மனை​க​ளாக விற்​ப​தற்​கும்,​ அவற்​றில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​வ​தற்​கும் தடை​வி​திக்க மனு​வில் கோரி இருந்​தார். வழக்கை நீதி​பதி பி.ஜோதி​மணி அண்​மை​யில் விசா​ரித்து இடைக்​கா​லத் தடை விதித்​தார். மேலும் இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர்,​ நகர மற்​றும் ஊரக திட்ட உதவி இயக்​கு​நர்,​ கோட்​டாட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர்,​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்,​ நத்​தப்​பட்டு ஊராட்சி மன்​றத் தலை​வர்,​ ஜோதி நகர் மின்​வா​ரிய உத​விப் பொறி​யா​ளர் ஆகி​யோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​ப​வும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​

Read more »

தமிழ், கல்வி, வேளாண்​மைக்கு முன்​னு​ரிமை

சிதம்ப​ரம்,​ நவ,​ 29:​


தமிழ்​மொழி,​ கல்வி,​ வேளாண்மை ஆகிய மூன்று துறை​க​ளுக்கு தின​மணி நாளி​த​ழில் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என ஆசி​ரி​யர் கே.வைத்​திய​நா​தன் தெரிவித்தார். பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்​ப​ரம், ஹோட்டல் சார​தா​ராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாச​கர் சந்​திப்பு நிகழ்ச்சியில் அவர் ​ பேசி​யது:​

வா​ச​கர்​கள் ஆசி​ரி​யரை சந்​திப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஆசி​ரி​யர் வாச​கர்​களை சந்​திப்​ப​தில் பெரு​மை​யா​கக் கரு​து​கி​றேன். எழுத்து என்​பது சமு​தா​யத்​தில் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தக்​கூ​டி​ய​தா​க​வும்,​நாளைய சமு​தா​யத்​திற்கு பய​னு​டை​ய​தா​க​வும் இருக்​க​வேண்​டும். அப்​படி இல்​லை​யெ​னில் அர்த்​தம் இருக்​காது. பொழு​தைத்​தான் வீண​டிக்​கும். எ​னவே,​ எழு​து​கின்ற எழுத்​தின் உயிர்ப்​பும்,​ சிந்​த​னையை தட்டி எழுப்​பு​கின்ற கருத்​துக​ளும் இருக்​க​வேண்​டும். அர​சுக்​கும் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும் எதி​ரான கருத்​துகளை பதி​வு​செய்​வது எங்​க​ளது நோக்​க​மல்ல. பத்​தி​ரிகை என்​பது தவ​று​களைச் சுட்​டிக்​காட்​டு​கின்ற கண்​ணாடி. அப்​போ​து​தான் சமு​தா​யத்​திற்கு பயன் ஏற்​ப​டும். தவறை திருத்​தக் கூடிய பொறுப்​பில் உள்ள ​ ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வா​கத்​திற்​கும் பல லட்​சம் சம்​ப​ளம் வழங்​கப்​ப​டு​கி​றது. அந்த நிர்​வா​கத்​தி​னர் தவறை திருத்​த​வேண்​டும். அதன் மூலம் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வாக இயந்தி​ரத்​திற்​கும் நற்​பெ​யர் கிடைக்​கும் என கரு​து​வ​தால்,​ சமு​தா​யத்​திற்கு பயன்​ப​டும் கரு​வி​யாக தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய ஆட்​சி​யா​ளர்​கள் மாறி​னா​லும்,​ தின​மணி கண்​ணா​டி​யா​கத் தான் இருக்​கும். ச​மு​தா​ யத்​தில் நடை​பெ​றும் தவ​று​கள் களை​யப்​ப​ட​வேண்​டும் என்ற நல்ல எண்​ணத்​து​டன் தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய சமு​தா​யத் தலை​மு​றை​யி​னர் நன்​மைக் கருதி அவர்​க​ளுக்கு சிந்​த​னைத் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தும் பணியை தின​மணி செய்​கி​றது.÷வி​வ​சா​யம் குறைந்​து​வ​ரு​வது அச்​சத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.தன்​னி​றைவு தான் ஒரு நாட்​டின் பாது​காப்பு என்​பது முன்​னோர்​கள் கண்​ட​றிந்த விஷ​யம்.விவ​சா​யம் திட்​ட​மிட்டு அழிக்​கப்​பட்​டு​வ​ரு​வ​தாக கரு​து​கி​றேன். இதற்கு முன்​னேற்​பாடு தான் தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டம். இதைப்​பற்றி சிந்​திக்​க​வேண்​டிய கடமை உள்​ளது.÷உயர் ​கல்வி பயில மாண​வர்​களை தயார்​ப​டுத்த ​வேண்​டும் என்​ப​தற்​காகத்தான் தின​ம​ணி​யில் கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​ப​டு​கி​றது.​ ​ முது​பெ​ரும் தலை​வர் ஜே.சி. கும​ரப்​பாவை மத்​திய,​ மாநில அர​சு​கள் மற்​றும் காங்​கி​ரஸ் கட்சி உள்​ளிட்ட அனை​வ​ரும் மறந்​து​விட்ட நிலை​யில் அவ​ரது பொன்​விழா நினைவு நாளை தின​மணி சார்​பில் கொண்​டா​ட​வுள்​ளோம் என்​றார் ஆசி​ரி​யர் வைத்​திய​நா​தன். முன்​னாள் அமைச்​சர் வி.வி.சாமி​நா​தன்,​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஓய்​வு​பெற்ற தமிழ்த்​துறைப் பேரா​சி​ரி​யர்​கள் ஆனந்​த​ந​ட​ராஜ தீட்​சி​தர்,​ முன்​னாள் அர​சி​யல் அறி​வி​யல் துறைத் தலை​வர் ஏ.சண்​மு​கம்,​ தமிழ்​தே​சிய பொது​வு​டை​மைக் கட்சி ஒருங்​கி​ணைப்​பா​ளர் கி.வெங்​கட்​ரா​மன்,​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மேலாண் துறைத் தலை​வர் எம்.பஞ்​ச​நா​தன்,​ வர்த்​தக சங்​கத் தலை​வர் எம்.ஆதி​மூ​லம்,​ஆசி​ரி​யர் வாசு,​ ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி மனோ​க​ரன்,​ரோட்​டரி சங்க சமு​தாய இயக்​கு​நர் மணி​வண்​ணன்,​விவ​சாய சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்,​ வாச​கர்​கள் பாலாஜி கணேஷ்,​ காளி​தாஸ்,​ சித்​தரஞ்​சன்,​ராதா​கி​ரு​ஷ்ணன்,​வழக்​க​றி​ஞர் கே.பால​சுப்​ர​ம​ணி​யன்,​தேவ​ரா​ஜன் உள்​ளிட்​டோர் ​ பங்​கேற்​ற​னர்.

Read more »

மேடைக் கலைப் போட்டி:​ கட​லூர் மாணவி தேர்வு

கட லூர்,​ நவ. 29:​

ஜவ​கர் சிறு​வர் மன்​றம் சார்​பில் நடத்​தப்​பட்ட தென் மண்​டல போட்​டி​க​ளில்,​ மேடைக் கலைப் போட்​டி​யில் கட​லூர் மாணவி சஜீ​வன் ஆர்யா தேர்ந்து எடுக்​கப்​பட்​டார். ​ இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

க ​ட​லூ​ரில் உள்ள மாவட்ட இசைப் பள்​ளி​யில் ஜவ​கர் சிறு​வர் மன்​றம் இயங்கி வரு​கி​றது. இதில் 150 குழந்​தை​கள் பல்​வேறு கலைப் பயிற்​சி​க​ளில் ஈடு​பட்டு உள்​ள​னர். மன்​றம் வாயி​லாக 9 முதல் 16 வயது வரை​யி​லான மாண​வர்​க​ளுக்கு மாவட்ட அள​வில் போட்​டி​கள் நடத்தி தேர்வு பெற்​ற​வர்​கள் தென்​மண்​டல அள​வி​லான போட்​டிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர். க​ட​லூர் மாவட்​டத்​தில் இருந்து சென்ற 4 பேரில் மாணவி சஜீ​வன் ஆர்யா ​(செயின்ட் மேரீஸ் மேல்​நி​லைப் பள்ளி,​ கட​லூர்)​ மேடைக் கலை போட்​டி​யில் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளார். அவர் புது​தில்​லி​யில் நவம்​பர் 30 முதல் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்​பார்,​ இதில் வெற்றி பெறு​வோ​ருக்கு குடி​ய​ர​சுத் தலை​வ​ரால் "இளம்​திரு விருது' வழங்​கப்​ப​டும். சஜீ​வன் ஆர்​யா​வுக்கு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பாராட்​டுத் தெரி​வித்​தார் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

200 பேருக்கு இல​வச அக்​கு​பஞ்​சர்,​ ஆயுர்​வேத சிகிச்சை

கட ​லூர், ​நவ. 29:​

கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த இல​வச அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத சிகிச்சை முகா​மில் 200 பேருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ​ க​ட​லூர் அரிமா சங்​கம்,​ கவுன்​சில் ஆப் இந்​தி​யன் அக்​கு​பஞ்​ச​ரிஸ்ட்,​ கட​லூர் சுசான்லி அக்​குப்​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வ​மனை மற்​றும் டாபர் ஆயுர்​வே​திக் இந்​தியா நிறு​வ​னம் இணைந்து இந்த மருத்​துவ முகா​முக்கு ஏற்​பாடு செய்து இருந்​தன. நக​ராட்சி மேல்​நி​லைப் பள்ளி வளா​கத்​தில் இந்த முகாம் நடந்​தது. ​÷வ​லி​கள் மற்​றும் பெண்​க​ளுக்​கான மாத​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பிரத்​தி​யோ​க​மாக இந்த முகாம் நடத்​தப்​ப​ட​டது. ​ இதில் சுசான்லி மருத்​து​வ​மனை டாக்​டர்​கள் ஏ.ரவி,​ உஷா​ரவி ஆகி​யோர் தலை​மை​யில் அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வர்​கள் ​ டி.சுந்​தர்​ரா​ஜன்,​ என்.ராதா​கி​ருஷ்​ணன்,​ ஆர்.பானுப்​பி​ரியா,​ வி.பவ​தா​ரிணி,​ ஆர்.சக்​க​ர​வர்த்தி உள்​ளிட்ட மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​த​னர். இதில் 200 பேர் பயன் அடைந்​த​னர். ​மா​த​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பல பெண்​கள் சிகிச்சை பெற்​ற​தாக டாக்​டர் ஏ.ரவி தெரி​வித்​தார். ம​ருத்​துவ முகாம் தொடக்க விழா​வுக்கு,​ அரிமா சங்​கத் தலை​வர் ஏ.ஆர்.வேல​வன் தலைமை வகித்​தார். அக்​கு​பஞ்​சர் மருத்​து​வம் குறித்து டாக்​டர் உஷா​ரவி உரை நிகழ்த்​தி​னார். டாபர் நிறு​வன விற்​பனை அபி​வி​ருத்தி அலு​வ​லர் பாலாஜி,​ அரிமா சங்க நிர்​வா​கி​கள் ஆர்.பூபா​லன்,​ எஸ்.இஸ்​ரேல்,​ கே.திரு​மலை உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

அரசு மதுக்​கடை பணி​யா​ளர்​கள் ஊர்​வ​லம்,​ ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ நவ. 29:​

தமிழ்​நாடு அரசு டாஸ்​மாக் பணி​யா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​ அ​ரசு மதுக்​க​டைப் பணி​யா​ளர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும். கல்​வித் தகு​திக்கு ஏற்ப மாற்​றுப் பணி வழங்க வேண்​டும். கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். மது விற்​ப​னை​யில் 1 சதம் ஊக்​கத் தொகை வழங்க வேண்​டும். நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி அனைத்​துப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் நிலு​வைத் தொகை வழங்க வேண்​டும். வார விடு​முறை மற்​றும் அரசு விடு​முறை வழங்க வேண்​டும். 8 மணி நேர வேலைத்​திட்​டத்தை அமுல்​ப​டுத்த வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. ஊர்​வ​லம் திருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில் இருந்து புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​தது. ஊர்​வ​லத்தை அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் கோ.சீனு​வா​சன் தொடங்கி வைத்​தார். ​ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.கார்த்​தி​கே​யன் தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் கே.சர​வ​ணன் முன்​னிலை வகித்​தார். மாவட்​டத் தலை​வர் கோவிந்​த​ரா​ஜன் வர​வேற்​றார். அரசு தொழில் நுட்​பப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் சுந்​த​ர​ராஜா,​ அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டப் பொரு​ளா​ளர் ராஜா​மணி ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர். அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டத் தலை​வர் பி.நல்​ல​தம்பி நிறைவு உரை நிகழ்த்​தி​னார்.

Read more »

கடலூர் சீர்​தி​ருத்​த பள்​ளி​யிலிருந்து 4 சிறு​வர்​கள் தப்​பி​ ஓட்டம்

கட ​லூர்,​ நவ. 29:​

கட​லூர் அரசு சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்​ளி​யில் இருந்து இளம் குற்​ற​வா​ளி​க​ளான 4 சிறு​வர்​கள்,​ ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​ க​ட​லூர் கடற்​க​ரைச் சாலை​யில் அரசு கூர்​நோக்கு இல்​லம் என்ற சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது. இதில் இளம் குற்​ற​வா​ளி​கள் அடைக்​கப்​பட்டு உள்​ள​னர். இவர்​க​ளில் 4 பேர் ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​விக் ​கி​ர​வாண்​டி​யைச் சேர்ந்த ராஜா ​(16), வட​லூர் கருங்​கு​ழி​யைச் சேர்ந்த ரமேஷ் ​(15), கட​லூர் முது​ந​க​ரைச் சேர்ந்த விக்​னேஷ் ​(15), நாரா​ய​ணன் ​(15) ஆகிய அந்த 4 பேரும் பல்​வேறு குற்​றச் செயல்​க​ளில் ஈடு​பட்​ட​தற்​காக கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்க்​கப்​பட்டு இருந்​த​னர். ​ ஞா​யிற்​றுக்​கி​ழமை காலை அவர்​கள் 4 பேரும் கூர்​நோக்கு இல்​லத்​தின் பின்​பக்​கச் சுவர் வழி​யாக ஏறிக்​கு​தித்து தப்பி விட்​ட​னர். இது​கு​றித்து கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறு​வர்​க​ளைத் தேடி வரு​கி​றார்​கள்.

Read more »

தேமு​திக சார்​பில் பக்​ரீத் பண்​டிகை

​சிதம்​ப​ரம்,​ நவ. 29:​

சிதம்​ப​ரம் நகர தேசிய முற்​போக்கு திரா​விட கழ​கம் சார்​பில் பக்​ரீத் பண்​டி​கையை முன்​னிட்டு உணவு மற்​றும் இனிப்பு வழங்​கும் நிகழ்ச்சி சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ந​க​ரச் செய​லா​ளர் சி.க.விஜ​ய​கு​மார் தலைமை வகித்​தார். நகர அவைத் தலை​வர் டி.கே.பி.ராமர் முன்​னிலை வகித்​தார். மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.உமா​நாத்,​ மாநில பட்​ட​தாரி அணி துணைச் செய​லா​ளர் பேரா​சி​ரி​யர் பூ.ராஜ​மன்​னன்,​ மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்.பாலு,​ மாவட்ட அவைத் தலை​வர் ஆர்.ஞானப்​பி​ர​கா​சம் ஆகி​யோர் பங்​கேற்று ஏழை இஸ்​லா​மிய மக்​க​ளுக்கு உணவு மற்​றும் இனிப்பு வழங்​கி​னார்​கள். நகர பொரு​ளா​ளர் ப.கணே​சன் நன்றி கூறி​னார்.​

Read more »

பண்ருட்டியில் விதை மணிலா உற்பத்தி மும்முரம்

பண்ருட்டி, நவ.29:

மணிலா விதைப்பு பருவம் தொடங்கியுள்ளதால், பண்ருட்டி பகுதியில் உள்ள மணிலா உடைப்பு ஆலைகளில் விதை மணிலா உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களில் நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக எண்ணெய் வித்துக்களில் மணிலா அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது.

கார்த்திகை, மார்கழி மாதத்தில் மணிலா விதைப்பு செய்யப்படும். இருப்பினும் மழையால் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால் அனேக விவசாயிகள் கார்த்திகை தீபம் முடிவடைந்ததும் மணிலா விதைப்பை தீவிரப்படுத்துவர். பண்ருட்டி வட்டத்தில் பண்ருட்டி, மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மணிலா உடைப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவர்கள் திருவண்ணாமலை, ஆந்திரம், குஜராத், கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்து மணிலாவை இறக்குமதி செய்கின்றனர். பெரும்பாலும் ஆந்திரம், குஜராத் ஆகிய பகுதிகளில் மணிலா குறைந்த விலையில் கிடைப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யும் மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைந்து பயிர்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர்.

இது குறித்து மணிலா வியாபாரி ஒருவர் கூறியது: மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைத்து பயிர்களை தனியாக எடுப்போம். இதில் விதை, உணவு, எண்ணெய்க்காக என தரம் பிரித்து எடுத்து விடுவோம். விதை மணிலாவை விவசாயிகள் நேரிடையாக ஆலைக்கே வந்து வாங்கி செல்வர், மேலும் வெளியூரில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்போம். இரண்டாம் நிலையில் உள்ள மணிலாவை கேக் கம்பெனி, பட்டாணிக் கடைகளுக்கு விற்பனை செய்வோம். மூன்றாம் நிலையில் உள்ள மணிலா எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தப்படும். தற்போது விதை மணிலா விற்பனை மந்தமாக உள்ளது. கார்த்திகை தீபம் முடிந்தவுடன் தான் சந்தை நிலவரத்தை கூறமுடியும். தினந்தோறும் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் வேலை ஆட்களும் வேலை செய்யாத நிலையில் முழு கூலியும் கொடுக்க வேண்டியுள்ளது என வேதனையுடன் கூறினார்.

Read more »

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

கடலூர், நவ. 29:

பள்ளிகளில் சேராமல் தனியாக படிக்கும் மாணவர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (1-12-2009) தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டல துணை இயக்குநர் தே.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு 1-12-2009 தொடங்கி 5-12-2009 வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழபெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுககான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளன. நுழைவுச் சீட்டுகள் கிடைக்காதவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் 2009 - விவசாயம், கைத்தறி நெசவு, மற்றும் அச்சுக்கலைப் பிரிவு முதலிய தேர்வுகள் 4-12-2009 முதல் 12-12-2009 வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்து உள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மைத்துக்குச் சென்று 30-11-2009 முதல் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை

கடலூர், நவ. 28:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பாகப் பயிலும் மாணவ மாணவியருக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித் தரத்தில் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் தமிழகத்தில் பிளஸ்-2 பிரிவில் 26-வது இடத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. பிரிவில் 27-வது இடத்திலும் இருந்தது. கடலூர் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் மோசமான மதிப்பெண்கள் எடுத்ததற்கும் காரணங்கள் ஆராயப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும், பள்ளி வாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்பட்டது. அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் ஆலோசனைகள் பெறப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும் இதேபோல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் அதிக மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றாவது வெற்றிபெறும் வகையில் அனைத்துப் பாடங்களுக்கும் கையேடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தக் கையேட்டில் உள்ள பாடங்களை ஒழுங்காகப் படித்தாலே போதும், 40 மதிப்பெண் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. ÷அடுத்த கட்டமாக சிறப்பாகப் ப.யிலும் மாணவர்களை, மேலும் அதிக மதிப்பெண்களை பெறச் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்கள் மட்டும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 68 பேர். வேதியியல் பாடத்தில் 200 மதிபெண் பெற்றவர்கள் 11 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 33 பேர். உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 3. ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 29 பேர். கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 109 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 340 பேர். 199 மதிப்பெண் பெற்றவர்கள் ஏன் 200 மதிப்பெண் பெறமுடியாமல் போயிற்று? என்ற அடிப்படையில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்று இருக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கு கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராஜேந்திரன் பொறுப்பு ஏற்று நடத்தினார். சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு, மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Read more »

ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

பண்ருட்டி, நவ.28:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது உள்ளவர்கள் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு ஏதும் செய்வதில்லை என தெரிய வருகிறது. அனேக ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து வருடக் கணக்காகிறது.÷சத்துணவுக் கூடத்தையும் ஆய்வு செய்யவில்லை. பண்ருட்டி ஒன்றியத்தில் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வதால் பிரசனையாக உள்ளது. தமிழகத்திலே சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்ட இடம் காடாம்புலியூர் சமத்துவபுரம் ஒன்று தான். வசதி படைத்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. சமத்துவபுரம் பயனாளிகள் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்பவுள்ளேன். அதிகாரிகள் என்னுடன் தொகுதியை பற்றி ஆலோசனை செய்வதுவுமில்லை, ஒருங்கிணைந்து செயல்படுவதுவும் இல்லை. அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைந்து சென்று சேர வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அளித்த சுற்று வட்டார மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியை ரூ.3 கோடியாக பெற்று தந்துள்ளேன்.÷கிராமத்தில் இருந்து அதிகாரிகளை நாடி வரும் மக்கள் பிரதிநிதிகளை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்கள் உங்களை மனம் புண்படும்படியோ, மன உலைச்சல் அடையும் படி நடந்துக் கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்க நானும் முன்னிருப்பேன் என தி.வேல்முருகன் பேசினார். கூட்டத்தில் ஒன்றியப் பெருந்தலைவர் எழிலரசிரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், ரீட்டா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிப்பு

கடலூர், நவ.28:

கடலூரில் சனிக்கிழமை மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடலூரில் இருந்து கண்டக்காடு செல்லும் வழியில் உப்பளவாடி அருகே உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த எண்ணெய் கீழே கொட்டத் தொடங்கியது. கடலூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெருமாள் நகர், என்.ஜி.ஓ.நகர், அழகப்பா நகர், ஓம்சக்தி நகர், நேருநகர், குண்டுஉப்பளவாடி சின்ராஜ் நகர் உள்ளிட்ட 10 நகர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டிரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்ககும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

Read more »

லிட்டில் ஸ்டார்ஸ் விழா

சிதம்பரம், நவ.28:


சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் மற்றும் பிரைம் ரோஸ் ஷோ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அண்ணாமலைப் பல்கலை. உடற்கல்வித்துறை இயக்குநர் எஸ்.மங்கையர்கரசி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் துணைச் செயலர் எஸ்.கஸ்தூரி, சீனியர் முதல்வர் எஸ்.மீனாட்சி, முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மாநில அளவிலான போட்டிக்கு சிதம்பரம் மாணவர்கள் தேர்வு

சிதம்பரம், நவ.28:

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் எஸ்.துளசிராமன், எஸ்.விஷ்ணு, எஸ்.சுந்தர், ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜெ.ஜஸ்டின்ராஜா, எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜெ.ஜெகதலாபிரதாப், சண்முகசுந்தரம் ஆகியோர் அண்மையில் கடலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சீனுவாசன், ஆர்.வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

கிராமிய ஆயுள் காப்பீடு பயனளிப்பு விழா

சிதம்பரம், நவ.28:

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் நிதியளிப்பு விழா கீழமூங்கிலடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கே.மாயாவதி குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே.குமரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலகத் தலைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மணி காப்பீட்டுத் திட்டம் வைத்திருந்த இறந்த கலாராணியின் கணவர் கணபதியிடம் ஆயுள் காப்பீட்டு நிதியை வழங்கினார். கே.ஜனகன் நன்றி கூறினார்.

Read more »

இன்று ஆயுர்வேத சிகிச்சை முகாம்

கடலூர், நவ. 28:

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலூர் அரிமா சங்கம், கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்ரிஸ்ட், கடலூர் சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை முகாம் நடைபெறும். அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவ தம்பதிகள் டாக்டர்கள் ஏ.ரவி, உஷா ரவி மற்றும் 16 மருத்துவர்கள் முகாமில் சிகிச்சை அளிகக இருக்கிறார்கள். மூட்டுவலி, கழுத்துவலி, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு வலிகள், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read more »

நவீன அறி​வி​யல் விவ​சா​யம்:​ எம்.பி. வலி​யு​றுத்​தல்

கடலூர்,​ நவ.28:​

இந்தியாவின் இப்போதைய தேவை நவீன அறிவியல் விவசாயம் என்று கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார். ​

மிழ்நாடு மற்றும் புதுவை நுகர்வோர் குழுக்ளின் கூட்மைப்பு ​(ஃபெட்காட்)​ சார்பில் 6-வது மாநில நுகர்வோர் மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடந்தது. ​ ÷ருநிலை மாற்மும் உணவுப் பாதுகாப்பும் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் கே.எஸ்.அழகிரி பேசியது:​ ​

÷னிதர்ளிடையே விழிப்புணர்வை ஏற்டுத்துவது மெத்த சிரமம். ​ எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து வருகிறது. வயல்கள் பிளாஸ்டிக் குப்பைளாக மாறிவிட்டன. விவசாயம் பாதிக்கப்டுகிறது. ​

÷பூமியில் எங்கு தோண்டினாலும் பிளாஸ்டிக் குப்பைதான் கிடைக்கும். மழைநீர் நிலத்டியில் செல்ல வாய்ப்பு இல்லை. இது குறித்து நுகர்வோர் அமைப்புகள்தான் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும். ​

÷ளிமண்ணில் இருந்து போலி உளுந்து தயாரிக்கும் ஆலைக் கூட உளளது. தவறு செய்யாமல் லாபம் சம்பாதிக்க முடியாது எனற எண்ணம் வியாபாரிகள் மனதில் பதிந்து விட்டது.

÷தற்கு எதிராக நுகர்வோர் அமைப்புகள் செயல்பட வேண்டும். எதிர்ப்பு வரத்தான் செய்யும். வம்புக்காரன் என்று பேச்சு வரும். சீனாவில் ஒரு ஏக்ரில் 150 முதல் 200 மூட்டை ​(60 கிலோ)​ வரை உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். ​

÷மது நாட்டில் உணவு தானிங்கள் பலழிளில் விரயம் ஆகிறது. உணவு உற்பத்தியைப் பெருக்காமல் உணவுப் பாதுகாப்பை ஏழை மக்ளுக்குப் பெற்றுத் தர முடியாது. ​

மது நாட்டில் ​ 60 சதவீதம் மக்கள் விவசாயிகள் வடமாநிலங்ளில் பல கிராமங்ளில் வசிக்க வீடுகள் இல்லை. மின்சாரம் இல்லை. அவர்ளுக்காகக் கொண்டு வரப்பட்துதான் கிராமப்புற வேலை உறுதித் திட்டம்.

விசாயம் அறிவியல் மயமாக வேண்டும். நுகர்வோர் இயக்கங்கள் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும் என்றார் அழகிரி.

மாநாட்டில் உணவுத் துறை செயலர் கே.சண்முகம் பேசுகையில்,​ போலி நுகர்வோர் அமைப்புளைக் கட்டுப்டுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்ளின் செயல்ளைக் கண்காணிக்க,​ இனம் கண்டுகொள்ள அரசு யோசித்து வருகிறது. ​உற்பத்தி பெருகாவிட்டால் உணவுப் பாதுகாப்பு இல்லை. துவரம்ருப்பு நமது தேவை 3.4 மில்லியன் டன். ஆனால் உற்புத்தி 2.3 மில்லியன் டன்தான். நாம் வெளிநாட்டில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய முற்பட்டால் விலை உயர்ந்து விடுகிறது. ​ருழையை உரிய நேரத்தில் பெய்தில்லை. எனவே நமது விவசாயத்தில் ஆராய்ச்சி மிகவும் தேவை. மாற்றம் தேவை. உற்பத்தி பெருவேண்டும். உணவு வீணாக்கப்டுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். ​

மாநாட்டில் உணவுத் துறை இயக்குநர் .ராஜாராம்,​ கடலூர் மாவட்ட ஆட்சியர்பெ.சீதாராமன்,​ கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன்,​ ஃபெட்காட் நிறுனத் தலைவர் தேசிகன்,​ நிறுவன பொதுச் செயலாளர் ஹென்றி திபேன்,​ பெருந்லைவர் ஜி.ராஜாராம்,​ பொதுச் செயலர் புதுராஜா,​ முன்னாள் பொதுச் செயலர் நிஜாமுதின் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior