உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபர் கைது

சிதம்பரம் :

                 சிதம்பரத்தில் தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் வண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வி (50). பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அம்பேத்கார் தெருவை சேர்ந்த தங்கமகன் (27), செல்வியின் பூக்கடை முன்பு நின்றுகொண்டு ஆபாசமாக திட்டினார். அதனை தட்டிக்கேட்ட செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் (25) இருவரையும் கத்தியால் கிழித்தார். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து தங்கமகனை கைது செய்தனர்.

Read more »

வலிப்பு நோயால் இறந்தவர் யார்?

கடலூர் :

                  கடலூரில் வலிப்பு நோயால் இறந்த அடையாளம் தெரியாதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

               கடலூர் அண்ணாபாலத்தில் கடந்த 2ம் தேதி ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந் தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அம்மை போட்ட முகமும், வெள்ளை அரைக்கை சட் டையும், நீல நிற கட்டம் போட்ட கைலியும் கட்டியிருந்தார். வலது கால் முட்டியின் கீழ் காய வடு உள்ளது. இறந்தவரின் உடல் கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

                   ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் கடைவீதியில் ராஜேந்திரன் (42) என்பவரது வீடும், கடையும் உள்ளது. நேற்று காலை ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த சாமான்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் இருந்த புதிதாக துவங்க இருந்து ஆப்செட் பிரஸ் மிஷின் மற்றும் டீக்கடையில் இருந்த சாமான்கள் உள்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

அரவைக்கு கரும்பு கிடைக்காமல் அதிகாரிகள் திணறல்! கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பரிதாப நிலை

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பை தேடி அலையும், அதிகாரிகளுக்கும், விலையை விரும்பும் விவசாயிகளுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது.

                    கடந்த 1989ம் ஆண்டு திறக்கப் பட்ட சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. சில ஆண்டுகள் முன்பு வரை அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில தவறுகள் நடந்த போதும் கரும்பு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் ஆலையின் அரவை திறனான 2.5 லட்சம் டன்னையும் தாண்டி ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை கரும்பு அரவை நடந்தது.

                   கடந்த மூன்று ஆண்டுகளிலும் சோழத்தரம், பேரூர், ஆலைப்பகுதி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ் ணம், புவனகிரி, சிதம்பரம், காட் டுமன்னார்கோவில் ஆகிய எட்டு கரும்பு கோட்டங்களில் பணி புரிந்த அதிகாரிகளின் சுயநல போக்கு மற்றும் அரசியல் காரணங்களினாலும் ஒவ்வொரு கரும்பு கோட்டத்திலும் ஒரு வகையில் கரும்புத்துறை முற்றிலுமாக சீரழிந்தது. இதன் எதிரொலியாய் எழுந்த புகாரில் தவறுகளை கண்டு கொள்ள மறுத்த தலைமை கரும்பு அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

                      இதனிடையே கடந்த ஆண்டு ஆலை அரவைக்கு தேவையான அளவுக்கு கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பதிவு செய்ய மறுத்தனர். பெரும்பாலான விவசாயிகள் மாற்றுப் பயிருக்கே மாறிவிட்டனர். இச்சூழலில் சேத்தியாத் தோப்பு சர்க்கரை ஆலைக்கு எங் கள் பகுதி கரும்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று 2000ம் ஆண்டில் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கடும் கெடுபிடிகளை விதித்ததால் அப்பகுதி விவசாயிகள் தனியார் ஆலைக்கு தங்கள் கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.

                             இந்த ஆலை விவகார எல்லையில் கரும்பு குறைந்து போனதால் தங்களை தற்காத்து கொள்ள ஆண்டிமடம் பகுதியில் கரும்பு கோட்ட அலுவலகம் அமைத்து விவகார எல்லையை விஸ்தீரனம் செய்து கொண்டது எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை.இதனை நீதிமன்ற உத்தரவின் படி உறுதி செய்து கொண்ட போதிலும் கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு எம்.ஆர்.கே. ஆலைக்கு கரும்பு அனுப்ப ஆண்டிமடம் பகுதி விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.

                           கடந்த ஒரு வாரமாக ஆண்டிமடம், நாகம்பந்தல், விழுதுபடையான், கிளிமங்கலம், ஒலையூர் ஆகிய ஊர்களில் சேத்தியாத் தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஒட்டுமொத்த கரும்பு அதிகாரிகள், கரும்பு உதவியாளர்கள் பகுதி பகுதியாக முகாமிட்டு கரும்பை பதிவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் ஆலைக்கு அனுப்பி வையுங்கள் என்று மன்றாடியும் அதற்கு அப்பகுதி விவசாயிகள் செவிசாய்க்கவில்லை.

                       தங்களது திறமையின்மையை மறைக்க கரும்புத்துறையின் தலைமை அதிகாரி (பொறுப்பு) ராஜதுரை தனது நிர்வாக பகுதியில் குறைந்த அளவு பயிரிடப்பட்டுள்ள கரும்பு அதிகாரி ரவிகிருஷ்ணன், ஜோதிமணி உள்ளிட்ட அனைத்து கரும்பு அலுவலர்களும் ஓலையூர், கிளிமங்கலம், விழுதுபடையான், ஆத்துக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு விவசாய சங்கத்தின் தலைவர் களை அழைத்து சென்று எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளிடம் கரும்பை பெற பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகளோ தனியார் ஆலையில் கூடுதல் விலை தருகிறார்கள் என்று காரணம் கூறி கரும்பை அனுப்ப மறுக்கின்றனர். அதிகாரிகளோ எப்படியாவது எம்.ஆர்.கே. ஆலையின் குறைந்த பட்ச அரவை திறன் அளவுக்காவது கரும்பை கொண்டு விட வேண்டும் என கரும்பை தேடி அலைகின்றனர். வெற்றி விவசாயிகளுக்கா... அதிகாரிகளுக்கா.. என்பது இந்த அரவை பருவம் முடிந்தால் தான் தெரியும்.

Read more »

என்.எல்.சி.,க்கு நிலம், வீடு கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலை கோரி மனு

கடலூர் :

                என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலை வழங்க கோரி பிற்படுத்தப்பட்டோர் பேரவையினர் எம்.பி., அழகிரியிடம் மனு கொடுத்தனர்.

             இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாவட்ட செயலாளர் வீரவன்னிய வேங்கன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

               மாவட்டத்தில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும். என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு "அப்ரன்டீஸ்' பயிற்சி கொடுத்து பணி நியமனம் செய்ய வேண்டும். என்.எல்.சி., யில் பணி புரிந்து இறந்த தொழிலாளரின் வாரிசுகளுக்கு பணி வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும். என். எல்.சி., மருத்துவமனையில் சீர்கேடுகளை சரி செய்து மருத்துவக் கல்லூரி கொண்டு வரவேண்டும்.

Read more »

மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

திட்டக்குடி :

                  விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி செல்லும் லாரிகளிலிருந்து சிதறும் மணல் குவியலால் விபத்து அபாயம் ஏற்பட் டுள்ளது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த வதிஷ் டபுரம், நெய்வாசல், இறையூர் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மணல் குவாரிகளில் டயர் வண்டிகள் மட்டுமே மணல் ஏற்ற அனுமதிக்கப் படுகின்றன. பெண்ணாடம் அடுத்த சிலுப்பனூர் மணல் குவாரியில் லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்கின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் மணலை மூடாமல் செல்வதால் சாலை முழுவதும் மணல் சிதறுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் விழுந்து, விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தடுத்திட மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதனை முறையாக கட்டிச் செல்லவும், சாலைகளில் குவிந்துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

அணைக்கரை பாலத்தை விரைந்து கட்ட கோரிக்கை

சிதம்பரம் :

                  அணைக்கரை கொள்ளிடம் பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வேண் டும் என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளது.

                  அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயற் குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ராஜா வரவேற்றர். வடக்கு மாவட்ட தலைவர் செங்கல்ராவ்,என்.எல்.சி., அம்பேத்கர் தொழிற்சங்க தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தனர்.

                       மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ், மாநில துணை பொது செயலாளர் நவநீதம், புதுச்சேரி மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ரத்தினராமன் பேசினர்.கூட்டத்தில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும், அணைக் கரை கொள்ளிடம் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை (6ம் தேதி) சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

                        கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக ராஜன், செயலாளராக ஸ்டாலின்ராஜா, நிதி செயலாளர் மனோகரன், துணைத் தலைவர் ரத்தினராமன், இணை செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர் சந்தோஷ்குமார், மகளிரணி தலைவியாக கவிதா, செயலாளராக சாவித்ரி உள்ளிட்டோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். பாஸ் கரன் நன்றி கூறினார்.

Read more »

குண்டும், குழியுமான சி.மானம்பாடி சாலை

கிள்ளை :

                சிதம்பரம் அடுத்த சி.மானம்பாடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிதம்பரம் அடுத்த மேலச்சாவடியில் இருந்து சி.மானம்பாடிவழியாக பொன் னந்திட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சிதம்பரத்தில் இருந்து சி.மானம்பாடி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்று வட்டார கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். மேலும், இந்த சாலையை அவசர காலங்களில் பரங் கிப்பேட்டை, பொன்னந்திட்டு மற்றும் முடசலோடை பகுதிக்கு செல்ல குறுக்கு வழியாகவும் பயன்படுத்தி வந்தனர்.

                  தற்போது இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து நஞ்சைமகத்து வாழ்க்கையுடன் திரும்பிச் செல்கின்றன. இதனால் காரைக்காட்டுச்சாவடி, சி.மானம்பாடி மற்றும் நெடுஞ்சி கிராம மக்கள் பொன்னந்திட்டு அல்லது நஞ்சைமகத்துவாழ்க்கை வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. மேலும் பொன்னந்திட்டு, பரங்கிப் பேட்டைக்கு செல்ல சாலை வசதி சரியில்லாததால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதுப்பித்து தார் சாலை அமைப்பதுடன், தெருவிளக்கும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

இரு நாடுகளின் கப்பல்கள் கடலூர் வருகை

கடலூர் :

               கெம்ப்ளாஸ்ட் கம்பெனிக்கு கத்தார் மற்றும் மலேசியாவிலிருந்து காஸ் ஏற்றிய இரண்டு கப்பல் கள் கடலூர் துறைமுகம் வந்துள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பி.வி.சி., பைப் தயாரிக்கும் கெம்ப்ளாஸ்ட் கம்பெனிக்கு தேவையான மூலப்பொருளான "வினயல் குளோரைடு மோனோமார்' 6,000 டன் காஸ் ஏற்றிய கத்தார் நாட் டைச் சேர்ந்த "மார்காஸ் சேலன்சர்ஸ்' என்ற கப்பல் நேற்று முன்தினம் மாலை கடலூர் துறைமுகம் வந் தது. இதனைத் தொடர்ந்து 7,020 டன் காஸ் ஏற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த "வின்கேண்டன்' என்ற மேலும் ஒரு கப்பல் நேற்று அதிகாலை கடலூர் துறைமுகம் வந்துள்ளது.

Read more »

மனு நீதி நாள்

கடலூர் :

         காட்டுமன்னார்கோவில் தாலுகா, குமராட்சி ஒன்றியம் நளன்புத்தூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். முகாமில் 193 மனுக்கள் பெறப்பட்டு 22 பேருக்கு முதியோர் நல உதவிகள் வழங்கப்பட்டது. 16 பேருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட் டது. நான்கு பேருக்கு வேளாண் இடுபொருட்களும், கண்ணொளி காப் போம் திட்டத்தின் கீழ் இரு மாணவர்கள் உட்பட 4 பேருக்கு மூக்கு கண் ணாடி வழங்கப்பட்டன. முகாமையொட்டி மருத்துவ முகாம் நடந்தது. நளன்புத்தூர் ஊராட்சி தலைவர் பாவாடை கலியம்மாள் நன்றி கூறினார்.

Read more »

தேசிய விதவை திட்டத்திற்கு 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் :

                 தேசிய விதவை திட்டத்தில் வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                   இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய உடல் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள 40 முதல் 64 வரை வயதுடைய விதவைகளும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 64 வரை வயதுடைய 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உடல் ஊனமுள்ளவர்களும் உரிய விண்ணப்பத்தினை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் வரும் 9ம் தேதிக் குள் நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

Read more »

ஊராட்சிகளில் நூலக அறிவுத்திறன் போட்டி

கடலூர் :

                      மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல் படுத்தப்படும் ஊராட்சிகளில் நூலக அறிவுத் திறன் போட்டிகள் நடத்தப் பட்டன.

கீழ்நத்தம்: 
                       மூன்று பிரிவாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் பாலு, ஊராட்சி துணைத்தலைவர் ராணி, பற்றாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்.மெய்யத்தூர்: ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வாசுகி, ஆசிரியர்கள் ரத்தினகுமாரி, ஞானமூர்த்தி, பிரபாகரன், பூங்குழலி நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். ஊராட்சி துணைத் தலைவர் ராஜவள்ளி, உறுப்பினர்கள் லோகநாதன், கதிரவன், தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நத்தம்: ஊராட்சி தலைவர் சுந்தரி தலைமை தாங்கினார்.

                               துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ஓவியம், பேச்சு, ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஜோசப் ஸ்டான்லி, சிவசுப்ரமணி, மேற்பார்வையாளர் சத்தியநாராயணன், அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்லவராயநத்தம்: ஊராட்சி தலைவர் அம்புஜம் தலைமை தாங்கினார். ஐயப்பன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், மாயவன், கமலக்கண்ணன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.அரசூர்: ஊராட்சி தலைவர் ராணி தலைமை தாங்கினார். நூலகர் உலகநாதன் முன்னிலை வகித் தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா போட்டியை நடத் தினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டன.

Read more »

கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

சிதம்பரம் :

          சிதம்பரம் வடக்கு வீதி ஆதிபராசக்தி மன்றம் சார் பில் ஏழை பெண் ணுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
     
               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முருகப்பன் தலைமை தாங்கினார். வேளாண்புல முதல்வர் நாராயணசாமி பங்கேற்று ஏழை மாணவி கவிதா என்ற பெண்ணுக்கு 5 ஆயிரம் கல்வி உதவி தொகையும், துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, சட்டை ஆகியவற்றை வழங்கினார். விரிவுரையாளர்கள் ஞானகுமார், மன்ற தலைவர் லஷ்மணன், உமா, ஜெயந்தி, ஈஸ்வரிராஜன், அஞ்சம் மாள் பங்கேற்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி தொகுதியில் தொழிற்சாலை : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

பரங்கிப்பேட்டை :

               சுயஉதவி குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட குறிஞ்சிப்பாடி தொகுதியில் தொழிற் சாலை அமைக்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

                 புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங் கினார். ஊராட்சி தலைவர் சங்கர் முன்னிலை வகித் தார். கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், இப்பகுதி மக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து திட் டங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது.

               இங்கு 25 சுய உதவி குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 25 லட்சம் ரூபாய் தற்போது கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவி குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த குறிஞ்சிப்பாடி தொகுதியில் விரைவில் தொழிற்சாலை அமைக் கப்படும். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி தந்துள்ளார். அதனால் முதல்வருக்கு அனைத்து தரப்பினரும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றார்.விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி, பரங்கிப்பேட்டை சேர்மன் முத்துப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்ட கலெக்டரிடம் மனு

கடலூர் :
                      திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டித் தரக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித் துள்ளனர்.

              இதுகுறித்து திருமானிக்குழி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                      கடலூர் ஒன்றியம் திருமானிக்குழி கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றில் 35 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மழை, வெள்ளத்தின் போது பாலம் உடைந்தது. பாலம் சரி செய்யப்படாத நிலை உள்ளது.

                       இந்த பாலத்தின் வழியாக திருமானிக் குழி, தி.புதுப்பாளையம், குச்சிப் பாளை யம், ஓட்டேரி, வண்டிக்குப்பம், காட்டுப் பாளையம், சாத்தங்குப் பம், எஸ்.புதூர், வெள்ளக்கரை, ராமாபுரம், கீரப் பாளை யம், கொடுக்கன் பாளையம், அரசடிக் குப்பம், புதுக்குப்பம், ஒதியடிக்குப்பம், கங்கணாங்குப்பம், வடக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், குறவன் பாளையம், மாதாகோவில், குமளங்குளம் உள்ளிட்ட அனைத்து கிராமத்தினரும் பாதிப்பிற் குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கரும்பு டிராக்டர் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என அனைவரும் அந்த வழியை பயன்படுத்துவதால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளோம். எனவே ஆற்றை கடக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சாலை பாதுகாப்பு வாரவிழா மாணவர்களுக்கு விளக்கம்

பண்ருட்டி :

                பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு விளக்கவுரை நடந்தது.

               நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வடிவேல், பர்குணன், சுசிலா முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார். இதில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மாணவ,மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இதில் என்.எஸ்.எஸ்.அலுவலர் மோகன்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். என்.சி.சி., அலுவலர் பாலசந்தர் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் சாலை பாதுகாப்பு வார விழா

விருத்தாசலம் :

               விருத்தாசலம் விருத் தாம்பிகை ஐ.டி.ஐ., யில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஐ.டி.ஐ., துணை முதல்வர் ஞானபிரகாசம் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜசேகர் வரவேற்றார். டி.எஸ்.பி., ராஜசேகரன் சாலை பாதுகாப்பு குறித்தும், நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாணவர்களிடம் விளக்கி பேசினார்.நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மைய நிறுவனர் தம்பி மற்றும் ஐ.டி.ஐ., ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங் கப்பட்டது.

Read more »

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

கடலூர் :

              மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

புவனகிரி:

               காமாட்சியம்மன் கோவில் தெரு ரேஷன் கடையில் இலவச, வேட்டி சேலை வழங்கும் பணியை பேரூராட்சி சேர்மன் அஞ்சலைதேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் காமராஜ், மண்டல துணை தாசில்தார் சுப்ரமணியன், கவுன்சிலர் புஷ்பரேகா பங்கேற்றனர். சி.என்.பாளையம்: ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், வி.ஏ.ஓ.,ஜோதிமணி,மக்கள் நலப்பணியாளர் வேல்முருகன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பொறுப்பேற்பு

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அலுவலக மேலாளராக நாராயணசாமி பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 2ல் அலுவலக மேலாளராக பணியாற்றினார்.

Read more »

கண்தானம்

சிதம்பரம் :

                           சிதம்பரத்தில் இறந்த பெண்ணின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
சிதம்பரம் எல்லையம்மன் கோவில் மடவிளாகத் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி சிங்காரி (55) இறந் தார். அவரது கண் களை தானம் செய்ய அவரது மகன் பெருமாள் முன் வந்தார். அதையடுத்து சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகர், முருகப்பன் முன் னின்று ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி டாக்டர் பாரதி உதவியுடன் இறந்தவரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

கஸ்டம்ஸ் சாலை ஆக்கிரமிப்பை மறைக்க பெண்ணையாற்றில் சாலை அமைப்பு

நெல்லிக்குப்பம் :

              வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலை ஆக்ரமிப்புகளை வைத்துள்ளவர்கள் அதை எடுப்பதற்கு பதில் ஆற்றிலேயே சாலை அமைத்துள்ளனர்.

                 கண்டரக்கோட்டையில் இருந்து கடலூர் வரை பெண்ணையாற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலை இருந் தது. இச்சாலை பயன்படுத்தப்படாததால் அருகில் உள்ள நில உரிமையாளர்கள் ஆக்ரமித்து நிலமாக மாற் றினர். ககன்தீப்சிங் பேடி கலெக்டராக இருந்த போது மேல்பட்டாம் பாக்கத்தில் இருந்து முள்ளிகிராம் பட்டு வரை மணல் சாலையை ஏற்படுத்தினார். அதன்பிறகு யாரும் கண்டு கொள்ளாததால் மீண்டும் ஆக்ரமிப்பு செய்தனர்.இந்த சாலை அமைந்தால் நெல் லிக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் முயற்சி மேற்கொண்டார். அதன்பேரில் அதிகாரிகள் பார்வையிட்டு ஒரு சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கிடையே அரசியல் குறுக்கீடு வரவே, ஆக்ரமிப்பு அகற் றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. எம்.எல்.ஏ., வின் கஸ்டம்ஸ் சாலை கனவு நனவாகவில்லை. புதுச்சேரி அரசு சார்பில் அப்பகுதி ஆற்றில் பாலம் கட்ட உள்ளதால் கஸ் டம்ஸ் சாலை அவசியமானது.
              
                  ஆக்ரமிப்புகளை அகற்றிய இடங்களை சேர்ந்தவர்கள் மற்ற பகுதியில் இப் பணி நடக்காததால் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஸ்டம்ஸ் சாலையை மீண்டும் ஆக்ரமித்துள்ளனர். அதற்கு பதிலாக ஆற்றின் உள்ளேயே இயந்திரம் மூலம் மணலை கூட்டி செம்மண் அடித்து சில ஆயிரம் செலவில் சாலை அமைத்துள்ளனர்.கரையை பலவீனப்படுத்தி ஆற்றிலேயே சாலை அமைத்துள்ளதை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். ஒரு இடத்தில் கரையை முற்றிலும் எடுத்ததால் வெள்ளம் நீர் ஊரினுள் புகும் அபாயமும் உள்ளது.பல லட்சம் மதிப்புள்ள அரசின் இடத்தை தனி நபர்கள் அபகரித்து கொள்ள ஆற்றிலேயே சட்டத்துக்கு புறம்பாக சாலை அமைத்துள்ளனர். இதனை அகற்ற கஸ்டம்ஸ் சாலையை முழுமையாக அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Read more »

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

சிறுபாக்கம் :

            மங்களூர் நேரு தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. பள்ளி நிர்வாகி ஜெய் சங்கர் தலைமை தாங்கினார். வெங்கடேசன், மணிகண்டன் முன் னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் குழந்தைகள் பராமரிப்பு, கல்வி நலன், ஒழுக்கம், சுற்றுப் புர சுகாதாரம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் மீரா, மணிமொழி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

Read more »

சாலை பாதுகாப்பு வார விழா கண் பரிசோதனை முகாம்

கடலூர் : 

                  சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, பண் ருட்டி ஜெம்ஸ் லயன் சங் கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவினி தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

Read more »

இடியும் நிலையில் வேளாண் வங்கி கட்டடம் : புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் அருகே பழுதடைந்து காணப்படும் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டிட கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

                    மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இக்கட்டட வளாகத்தில் ரேஷன் கடையும் இயங்கி வருகின்றது. இங்கு பனையாந்தூர், சித் தேரி, நரையூர், எஸ்.புதூர் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாய கடன்கள், நகை கடன், பயிர்க்கடன் உள் ளிட்ட பல அரசு நலத் திட்டங் களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

              தற்போது கட்டடம் மிகவும் பழுதடைந்து சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் மழைநீர் முற்றிலுமாக உட்புறம் இறங்கி குளம் போல் தேங்கி நிற்பதால் பதிவேடுகள், அலுவலக கோப்புகள், ரேஷன் பொருட்கள் மழைநீரில் நனைந்து சிதையும் நிலை ஏற்படுகின்றது. எனவே கிராம மக்களின் நலன் கருதியும் வங்கியின் கோப்புகளை பராமரிக்கவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டித்தர கூட்டுறவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விதை உற்பத்தி பயிற்சி

கடலூர் :

                கடலூர் வெள்ளப் பாக்கம் ஊராட்சி ஒன் றிய துவக்க பள்ளியில் வேளாண் துறை சார்பில் விதை கிராம திட்டத்தின் கீழ் விதை உற்பத்திக்கான சிறப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு வெள்ளப் பாக்கம் ஊராட்சி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாபு பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இளவரசன் விதை கிராம திட்டம் மற்றும் நெல் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் ராம்மேத்தி திட்டங்களை விளக்கினார். பிரபாகரன் நன்றி கூறினார்.

Read more »

பணி ஓய்வின் போது கவுரவம் : கடலூர் மாவட்ட போலீசார் எதிர்பார்ப்பு

 பண்ருட்டி :
             
                    அரசின் பிற துறைகளில் பணி ஓய்வு பெறுபவர்களை துறை அலுவலர்களால் கவுரவிப்பது போன்று போலீஸ் துறையிலும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட போலீசார் எதிர்பார்க்கின்றனர்.அரசு துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெறுபவர் களை அந்த அலுவலக சக ஊழியர்களால் பிரிவு உபச் சார விழா நடத்தி, உயர் அதிகாரிகளை கொண்டு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இந்த சம்பரதாயம் போலீஸ் துறையிலும் வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வந்தது.

                  ஆனால் இந்த நடைமுறை கடலூர் மாவட்டத்தில் சில ஆண் டாக பின்பற்றப்படவில்லை. அதுவும் ஓய்வு பெறும் போலீசார், அந்த ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை எனில் பிரிவு உபசார விழா நடத்தப்படுவில்லை. இன்றைய காலக் கட்டத்தில் போலீசார் பல இன்னல்களுக்கு இடையே பணி புரிய வேண்டியுள்ளது. அதுவும் மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் வாங்காமல் பணிபுரிந்து ஒய்வு பெறுவது கடினமாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், பணி ஓய்வு பெறும் போதுகூட கவுரவிக்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.இதனைத் தவிர்த்திட மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணி ஓய்வு பெறும் போலீசாரை அந்த மாதத்தில் ஒரு நாளில் ஓரிடத்தில் அழைத்து கவுரவிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

தெற்கு மண்டல ஆண்கள் டென்னிஸ் போட்டி : அண்ணாமலை பல்கலையில் துவங்கியது

சிதம்பரம் :

                 தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஐந்து நாட்கள் நடக்கும் ஆண்கள் டென்னிஸ் போட்டி சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.  தெற்கு மண்டல பல்கலைக் கழகங்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் போட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கியது.  கல்வி புலமுதல்வர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார்.

                 பதிவாளர் ரத்தினசபாபதி, சாரதாராம் உரிமையாளர் சுவேதகுமார் போட்டியை துவக்கி வைத்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 40 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

                         நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ஆந்திர பல்கலை அணி, ஆச்சாரியா நாகார்ஜூனா பல்கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், டாக்டர் என்.டி.ஆர்., பல்கலை அணி, பாரதிதாசன் பல்கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், பி.எஸ்., அப்துல் ரகுமான் பல்கலை அணி, மனோன்மணியம் சுந்தரனார் பல் கலை அணியை (3-0) என்ற கணக்கிலும், அண்ணா பல்கலை அணி, ஜே.என்.டி., அணியை (3-0) என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.திருவள்ளுவர் பல்கலை, புதுச்சேரி பல்கலை, ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பல்கலை, பாரதியார் பல்கலை, கேரள பல்கலை, மதுரை காமராஜ் பல் கலை ஆகிய அணிகள் தங்களுடன் மோத வேண்டிய அணிகள் பங்கேற்காததால் நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.

Read more »

நிதி பற்றாக்குறையால் தள்ளாடுது கடலூர் நகராட்சி நிர்வாகம்

கடலூர் :
                       கடலூர் நகராட்சி நிதி பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கு சம் பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சிகள் உள்ளன. அவற்றில் கடலூர் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாதந்தோறும் ஊழியர்களுக்கு சம்பளம், வளர்ச்சிப் பணிகள் செய்ய போதிய வருவாய் கிடைப்பதில்லை. அரசு மக்களுக்காக இலவசங்கள் வழங்கி வருவதால் அதற்காக பெருமளவு தொகை தேவைப்படுகிறது.

                அதனால் நகராட்சிகளுக்கு வழங்கக்கூடிய பொது நிதியும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் அண்மையில் அரசு அறிவித்த சம்பள உயர்வின் காரணமாக அனைத்து ஊழியர்களுக்கும் பெரிய அளவுக்கு நிதி தேவைப்பட்டது. அத்துடன் மாதந்தோறும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே குறைந்தபட்சம் 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் நகராட்சியால் எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் தள்ளாட்டம் கண்டுள்ளது.இதன் உச்சக்கட்டமாக நவம்பர் மாத சம்பளம் டிசம்பர் 2வது வாரத்தில் வழங் கப்பட்டது. டிசம்பர் மாதம் சம்பளம் எப்போது கிடைக்கும் என தெரியாமல் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் முதல்வர் அறிவித்த போனஸ் மட்டுமாவது கிடைக்குமா என நகராட்சி ஊழியர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்ட (கிழக்கு) அ.தி.மு.க.,வில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தல் நாளை துவக்கம்

கடலூர் : 
                 கடலூர் மாவட்ட (கிழக்கு) அ.தி.மு.க.,வில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தல் நாளை துவங்குகிறது.

இது குறித்து மாவட்ட செயலாளர்(கிழக்கு) எம்.சி.சம்பத் விடுத்துள்ள அறிக்கை:

                     அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெ., உத்தரவிற்கிணங்க கடலூர் மாவட்டத்தில்(கிழக்கு) நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. 4, 5 கட்டங்களுக் கான ஒன்றிய, நகர, பேரூர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக் கான தேர்தல் நாளை (6ம் தேதி) துவங்கி 8ம் தேதி வரையிலும், 10 மற்றும் 11ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

                     கடலூர், நெல்லிக்குப் பம் நகரங்கள், கடலூர் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியங்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்ரீவிக் னேஷ் மகாலிலும், பண்ருட்டி நகரம், அண் ணாகிராமம் ஒன்றியம், தொரப்பாடி, மேல் பட் டாம்பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டை ஜெயபாலன் மகாலிலும், பண்ருட்டி ஒன்றியம் மற் றும் நெய்வேலி நகரியத் திற்கு நெய்வேலி இந்திரா நகர் ஸ்ரீராம் திருமண மண்டபத்திலும், விருத்தாசலம் நகரம், விருத்தாசலம் ஒன்றியம், நல்லூர் வடக்கு ஒன்றியம், மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதிகளுக்கு விருத்தாசலம் ஆலடி ரோட்டில் உள்ள தெய்வம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் அடையார் ஆனந்தபவனில் இன்று காலை 11 ணிக்கு நடக்கிறது. மாவட்ட தேர்தல் பொறுப் பாளர் வளர்மதி தலைமை தாங்குகிறார். மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் புரசை செல்வம் முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

Read more »

போபாலில் தேசிய பைக்கா கால்பந்து போட்டி : தமிழகம் சார்பில் புதுக்கோட்டை அணி தேர்வு

கடலூர் :

                      மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான போட்டி தேர்வில் கால் பந்து மற்றும் மேசைப் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் 2009-2010ம் ஆண்டிற்கான 2வது தேசிய அளவிலான குரூப் 2 விளையாட்டு போட்டிகள் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மத்தியபிரதேசம் போபாலில் நடக்கிறது.

                          இதில் கால்பந்து, மேசைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகள் இடம் பெறுகின்றன.இதில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான தேர்வு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. அதில் கால் பந்து போட்டியில் 27 ஆண் கள் அணிகளும், பெண்கள் பிரிவில் 22 அணிகளும், மேசைப்பந்து போட்டியில் தலா 22 அணிகள் பங்கேற்றன.நேற்று நடந்த இறுதி போட்டியில் கால்பந்தில் ஆண்கள் பிரிவில் புதுக் கோட்டையும், பெண்கள் பிரிவில் சேலமும், மேசைப்பந்தில் ஆண்கள் பிரிவில் சேலமும், பெண் கள் பிரிவில் மதுரை அணிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு அகில இந்திய கால் பந்து சங்க அமைப்பாளர் ரேணுகாலட்சுமி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் செயலாளர் ஞானப்பிரகாசம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior