சிறுபாக்கம் :
சிறுபாக்கம் அருகே இயற்கை உரத்திற்காக ஆடு, மாடு மந்தைகளை விளைநிலத்தில் பட்டி போட பணம் கொடுத்து விவசாயிகள் அனுமதிக்கின்றனர்.
சிறுபாக்கம் அடுத்த மங் களூர், மலையனூர், பனையாந்தூர், ஒரங்கூர் மற்றும் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர், நல்லூர், அரியநாச்சி, கழுதூர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகிறனர்.சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய் துள்ள மணிலா, பருத்தி, நெல், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.அறுவடைக்கு பின் காலியான நிலங்களில் பக்க விளைவுகள் இல் லாத தரமான இயற்கை உரத்தினை இடுவதன் மூலம் விளைபொருட்கள் நல்ல மகசூல் கிடைக்கும். இதற்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு மற்றும் மாடு மந்தைகள் இப்பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இவர்களிடம் நாள் ஒன்றுக்கு ஆட்டு மந்தைக்கு 400 ரூபாயும், மாட்டு மந்தைக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயிக்கின்றனர்.இதனையடுத்து வியாபாரிகள் குடும்பத்துடன் தற்காலிக குடில் அமைத்து விவசாயிகளின் விளைநிலங்களில் ஆடு, மாடு மந்தை பட்டி அமைத்து இயற்கை உரத்திற்கு வழி செய்கின்றனர்.