உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 27, 2011

கடலூர் மாவட்டத்தில் சமச்சீர் புத்தகம் கோரி மாணவர்கள் மறியல்

விருத்தாசலத்தில் சமச்சீர் பாடப்புத்தகம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள். (வலது படம்) மறியலில் ஈடுபட்ட அரசு பெண்கள் மேல்நிலை  பள்ளி மாணவர்கள்.
விருத்தாசலம்:

             கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சமச்சீர்ப் புத்தகம் வழங்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
 இந்திய மாணவர் சங்கம்: 
            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து, பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் அசோகன் தலைமை ஏற்றார். 
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்: 
                 அமைப்பின் சார்பில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் சமச்சீர் கல்விப் புத்தகம் தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கினர். பின்னர், உணவு இடைவேளையின்போது வெளியில் வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் செந்தாமரைக்கந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மங்கலம்பேட்டை: 
               மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் செய்தனர். இதனால் 20 நிமிடத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: 
            பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சார்பில், நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வழக்கறிஞர்கள் அம்பேத்கார், சந்திரசேகரன், ரெங்கநாதன், பட்டி. முருகன், மணிகண்டராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கடைசிவரை வராத பெண் காவலர்கள்: 
            விருத்தாசலத்தில் கடந்த சில நாள்களாகவே சமச்சீர் கல்வி தொடர்பாக பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்பாக உளவுத் துறை போலீஸார் காவலர்களுக்கு தகவல் கொடுத்திருப்பர். இந்நிலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு இடைவேளையின்போது 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மறியல் செய்தனர் .தகவலறிந்த காவல் ஆய்வாளர் சீராளன், சில போலீஸார் மற்றும் பயிற்சி காவலர்கள் வந்தனர். ஆனால் கடைசி வரை பெண் போலீஸார் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை. மாணவிகள் வகுப்புக்குச் சென்ற பின் ஒரே ஒரு பெண் காவலர் வந்தார்.
கடலூர்
               கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க, கடலூர் நகரச் செயலர் ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அரசன் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் இளங்கோ, கல்லூரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புரட்சிநாதன், அழகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
             இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னர் முக்கிய நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதியை சந்திக்கு மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வினோத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Read more »

பண்ருட்டி அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட்

கடலூர்:

         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வருகிற 30-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தப்பட உள்ளது. 
 
              இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் விடை பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை, கிருஷ்ணங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.5 லட்சத்துக்கு ரகசியமாக விற்க்கப்படுவதாக தகவல் பரவியது.  முன் பணமாக ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு கேள்வித்தாளில் அடங்கிய 200 கேள்விகளில் 190-க்கு பதில் தரப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் பரவியது. இந்த விடைத்தாளை பெற கடலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
 
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன்  கூறியது:
          டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் விடை அவுட் ஆனது குறித்து எந்த புகாரும் வரவில்லை. எனினும் கலெக்டர் அமுதவல்லி உத்தரவின் பேரில் இன்று விசாரணை நடத்தி வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/22705146-0d20-4e5b-a87e-ec7cad2efcbc_S_secvpf.gif
 
 
சிதம்பரம்:

            காட்டுமன்னார் கோவிலில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று  அதிகாலை 4.55 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு வந்தது.

               பேருந்தை  காட்டுமன்னார் கோவில் அருகே அருண்மொழி தேவனூரை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (45) ஓட்டி வந்தார். குச்சியூரை சேர்ந்த சந்திரசேகரன் (35) கண்டக்டராக இருந்து வந்தார். பஸ்சில் 51 பயணிகள் பயணம் செய்தனர்.   நேற்று காலை 5.50 மணியளவில் பஸ் சிதம்பரம் அருகே சிவாலயம் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர்- கண்டக்டர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் புலியூர் காட்டுசாகையில் பா.ம.க - தே.மு.தி.கவினர் மோதல்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/92c9f6d1-b114-42ed-8426-055f70799da5_S_secvpf.gif
 
கடலூர்:

             குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் அருள்ஜோதி (வயது 38). தே.மு.தி.க. மாவட்ட தொண்டரணி தலைவராக உள்ளார். 
 
             இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரான திருமால்வளவனுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அருள்ஜோதியின் தந்தை ரங்கநாதன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு கும்பல் தகராறு செய்து ரங்கநாதனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தடுக்க முயன்ற தே.மு.தி.க.வை சேர்ந்த குமார், முருகன் ஆகியோரையும் அவர்கள் கத்தியால் குத்தினார்கள்.

             இதில் காயமடைந்த ரங்கநாதன், குமார், முருகன் ஆகியோர் கடலூர் அர2 மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தொகுதி எம்.எல். ஏ. சிவக்கொழுந்து நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது கடலூர் நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் வைத்திய நாதன், கடலூர் நகர துணை செயலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 
 
 

 

Read more »

திட்டக்குடி போத்திரமங்கலத்தில் வார்டுகள் சரியாக பிரிக்க வலியுறுத்தி முற்றுகையிடும் போராட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4c1d83de-d365-43c5-81b9-98d82b08fbc2_S_secvpf.gif
 
திட்டக்குடி:

          திட்டக்குடியை அடுத்துள்ள போத்திரமங்கலம் கிராம மக்கள் போத்திர மங்கலத்தில் வார்டுகள் முறையாக பிரிக்கப்படவில்லை. போத்திர மங்கலம் கொட்டாரம் பகுதிகளை தனித்தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து மங்களுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

              இதைதொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் சையத்ஜாபர் போத்திர மங்கலம் கிராம மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசினார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்க கொளஞ்சிநாதன், முத்த ழகன், ஒன்றிய கவுன்சிலர் திருமாறன், வார்டு உறுப்பினர் அருந்தவம் ராஜா, ராமு அ.தி.மு.க, முல்லைநாதன் காங். ரவி தே.மு.தி.க, சீனிவாசன் காங் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

             மேலும் இந்த பேச்சு வார்த்தையில் மங்களுர் ஒன்றிய ஆணையர் செல்வநாயகி, துணை ஆணையர் விஜயா, போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேமா, குமார் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரசாரமான விவாதம் சுமார் 3 மணி நேரம் நடந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க உறுதி அளித்ததை ஏற்று கிராம மக்கள் அறிவித்திருந்த முற்றுகை போரட்டத்தை கைவிட்டனர்.
 
               
 
 

Read more »

Tamil Nadu Government to establish petrochemicals region between Cuddalore and Nagapattinam

       Tamil Nadu Government proposed to create a region specially for petrochemicals in the State, to attract investments in chemicals and petrochemicals sector, a senior government official said yesterday. 

          "This is a very major infrastructure initiative of State government to attract investments in chemicals and petrochemicals. We are planning to establish it between Cuddalore and Nagapattinam", Industries Secretary Dr N Sundaradevan said. Inaugurating a seminar on "Business Opportunities for Cooperation between Tamil Nadu and Japan in Infrastructure sector, he invited Japanese firms to invest in the (Petroleum, Chemicals and Petrochemicals Investment) region. 

            In 2006-07, he said there were 65 Japanese companies in the State,but in the last five years, it has gone up by four-fold. "Chennai has the largest number of Japanese companies accounting for almost 30 per cent of total Japanese companies operating in India. It has also become home for about 800 Japanese expats", he said.more PTI VIJ BN







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior