கடலூர்:
கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் அண்மையில் நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறை தலைவர் எம்.ரேணுகா வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.ரமாராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத் திருச்சி மண்டல பேராசிரியர் விஜயபாலாஜி கணிதத்தின் பயன்பாடு குறித்து பேசினார். இதில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கட்டுரை வாசிப்பு போட்டி, கணித மேதை ராமாநுஜம் தொடர்பான ஆண்டை மையப்படுத்தும் நிகழ்வுகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.