உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 02, 2011

கடலூரில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி மகளிர் பேரணி


மதுவுக்கு எதிராக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய மகளிர் அமைப்புகள்.
 

கடலூர்:

              மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி கடலூரில், மகளிர் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  பல்வேறு பொதுநல அமைப்புகள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

             பேரணியை எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி. நிர்மல் தொடங்கிவைத்தார்.  மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து மகளிர் பேரணி புறப்பட்டு, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. கடலூர் விழுப்புரம் மாவட்ட ஆர்.சி. பள்ளிகளில் மேலாளர் சிஸ்டர் அருள்புஷ்பம் தலைமை தாங்கினார். பிளஸ் தொண்டு நிறுவனத் தலைவர் எல்.எஸ்.அந்தோனிசாமி, அண்ணா கிராமம் ஒன்றிய மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவி டி.அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.எஸ்.வேலுமணி வரவேற்றார்.

              எக்ஸ்னோரா நிறுவனத் தலைவர் நிர்மல், எக்ஸ்னோரா தலைவர் சுலோச்சனா ராம சேஷன், இளைஞர் எக்ஸ்னோரா தலைவர் கே.அப்துல்கனி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன், போதகர் ராஜன் கோயில்பிள்ளை, அரிமா சங்கத் தலைவர் என்.சாயிராபானு உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படுகிறது

                 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.  
              மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார். 
                 பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.  "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். 
               இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.  அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.
 
 10 வகுப்புத் தேர்வு முடிவு:  
                 பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

Read more »

நெய்வேலியில் தொழிலாளர் தினம்

நெய்வேலி:

                  கடலூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ள நெய்வேலியில் தொழிலாளர் தினம் சம்பிரதாய நிகழ்ச்சியாக தொழிற்சங்கங்களால் கொண்டாடப்பட்டது.  

                  மத்திய பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். மாவட்டத்திலேயே ஒரே இடத்தில் அதிக அளவில் தொழிலாலளர்கள் பணிபுரியும் இடம் நெய்வேலி. இத் தொழிலாளர்களுக்காக சுமார் 15 தொழிற்சங்கங்கள் நெய்வேலியில் செயல்படுகின்றன.  இங்குள்ள தொழிலாளர்களின் பணி என்பது சாதாரணமானது எனக் கூற இயலாது. 

                 திறந்தவெளி சுரங்களில் பணிபுரியும் இவர்கள் பூமிக்கு கீழே உள்ள பழுப்பு நிலக்கரியை இயந்திரங்களின் உதவியுடன் தோண்டி எடுத்து, அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு அனுப்பி மின்சாரத்தை உருவாக்கி லட்சக்கணக்கான இல்லங்களில் இருளை ஒளியாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சிறப்புவாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தினத்தின் போது கிடைப்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறை மட்டுமே.  என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளியானாலும், ஒப்பந்தத் தொழிலாளியானாலும் அவர்களின் உரிமைகளுக்காக போராட சுமார் 15 தொழிற்சங்கங்கள் உள்ளன. இத் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினத்தின் போது, ஒவ்வொரு தொழிலகப் பகுதிக்கும் சென்று தொழிற்சங்கக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு வருவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். 

                தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்ற கிடைத்த வாய்ப்புத் தான் தொழிலாளர் தினம். நாளொன்றுக்கு 12 முதல் 18 மணிநேரம் வரை கட்டாய வேலையில் தொழிலாளர்கள் வேலைசெய்யவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தபோது, இங்கிலாந்தில் உள்ள சாசன இயக்கம் 18-ம் ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக 10 மணி நேர வேலை என்பதை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியது.  இதையடுத்து 1834-ல் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி தோல்வியுற்றனர். பின்னர் 1856-ல் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கட்டடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்பதை முன்வைத்து போராட்டம் நடத்தி முதல் வெற்றிபெற்றனர்.  

                இதைத்தொடர்ந்து ரஷிய சார் மன்னரின் ஆட்சியின் கீழ் பெரும் துன்பத்திலிருந்த தொழிலாளர்கள் 1895-1899 இடைப்பட்ட காலத்தில் பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின், மே தினத்துக்காக எழுதிய சிறு பிரசுரம் மூலம் ரஷியத் தொழிலாளர்களின் விழிப்படைந்து 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை தீவிரமடையச் செய்ததே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. அமெரிக்காவிலும் தொழிலாளர் இயக்கம் 1896 மே 1-ம் தேதி நடத்திய நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மே தின சிறப்புக்குரியது.  

              இத்தகைய சிறப்புவாய்ந்த தொழிலாளர் தினத்தை சம்பிரதாய நிகழ்ச்சியாக நடத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர் தினம் என்பது என்ன? அது எப்படி உருவாயிற்று? அதன்மூலம் தொழிலாளர்களுக்கு கிடைத்த சிறப்பு என்ன என்பதை நினைவூட்ட வேண்டிய கடமை தொழிற்சங்கத் தலைவர்களுக்கு உண்டு.  இதுமட்டுமல்ல இன்றைய நவீன தொழில்நுட்பம் காரணமாக தொழிலாளியின் பங்களிப்பு என்பது குறைந்து, இயந்திரங்களின் செயல்பாடே அதிகரித்து வருகிறது. இதன்மூலம் மனிதத் திறமை குறைந்துவருகிறது. இது தொடருமேயானால் எதிர்காலத்தில் தொழிலாளி என்பவர் ஒரு காட்சிப் பொருளாக மாறும் நிலை ஏற்படும். தொழிலாளி இல்லையெனில் தொழிற்சங்கத்துக்கு வேலையில்லை. 

                அதன்பின் தொழிலாளர் தினம் காலண்டரில் மட்டுமே நாம் பார்க்க நேரிடும்.  எனவே கடந்த கால நிகழ்வுகளை தொழிலாளிக்கு நினைவுப்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தொழிலாளியின் திறமையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும், அதன்மூலம் தொழிலாளிக்கு கிடைக்கும் நன்மை, பயன் என்ன என்பதையும், விளக்க குறைந்தபட்சம் ஒரு பொதுக்கூட்டத்தையாவது நடத்த முன்வரவேண்டும். அப்போது தான் தொழிலாளர் தினத்தை கொண்டாட வருங்காலத்தில் தொழிற்சங்கம் என்ற ஒன்றும், அதை நிர்வாகிக்க நிர்வாகிகளும் தொடரமுடியும் என்பது நிதர்சனமான உண்மை.

Read more »

49 ஓ வாக்களித்தவர்கள் குறித்து விசாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடலூர்:

               சட்டப் பேரவைத் தேர்தலில் 49 (ஓ) விதியின் கீழ் (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) தங்கள் வாக்கைப் பதிவு செய்த நபர்கள் பற்றி, விசாரணை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

 கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: 

                     2011 சட்டப் பேரவைத் தேர்தலில் 23 ஆயிரம் பேர் 49 (ஓ) பிரிவின் கீழ் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து உள்ளனர். இதனால் அவர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பதிவு உள்ளனர். வாக்குப் பதிவு ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது. ஆனால் தற்போது 49 (ஓ) பிரிவில் வாக்குப் பதிவு செய்தவர்களை போலீசார் விசாரிப்பதாக வரும் தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

              நக்ஸலைட்டுகள், தீவிரவாதிகள், அவர்களின் இயக்கங்களை ஆதரிப்போர், உறுப்பினர்களாக இருப்போர் எனக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும் வாக்களிக்க உரிமை உண்டு.அவர்கள் 49 (ஓ) பிரிவில் வாக்குப் பதிவு செய்து இருந்தால் அவர்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே 49 (ஓ) பிரிவில் வாக்களித்தவர்கள் மீது விசாரணை நடத்திய அதிகாரிகள் மீதும், அத்தகைய ரகசியத்தை வெளியிட்ட தேர்தல் அலுவலர்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனி எழாமல் இருக்கவே, வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே 49 (ஓ) பிரிவுக்கான வசதியை, தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுகொண்டுள்ளார்.

Read more »

விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க.வேட்பாளர் பார்வை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் பார்வையிட்டார். 

             விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையத்தில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் தொடர்ந்து ஓட்டு எண்ணும் மையத்கை கண்காணித்து வருகின்றனர். 

            வேட்பாளர்கள் ஓட்டு எண்ணும் மையத்தை அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர். கலெக்டர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோரும் ஓட்டு எண்ணும் மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் கடந்த 29ம் தேதி வீசிய சூறைக் காற்றில் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் கண்காணிப்பு கோபுரம் சாய்ந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர். இந்நிலையில் தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நல்லபாம்பு

கடலூர்:
            கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்பட்டது. இன்று காலையில் அந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர். 
               
                   அந்த வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது புதருக்குள் புஸ்... என்ற சத்தத்துடன் ஒரு நல்லபாம்பு படமெடுத்தது. 31/2 அடி நீளமுள்ள அந்த பாம்பை கண்டு கை, கால்கள் வெடவெடத்துப்போன ஊழியர்கள் துப்புரவு பணியை நிறுத்தி விட்டு மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தனர். பாம்புகளை உயிருடன் பிடிப்பதில் கில்லாடியான கடலூரை சேர்ந்த வாலிபர் பூனம்சந்துக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

           அவர் பாம்பு பிடிப்பதற்காக கம்பினால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவியுடன் விரைந்து வந்தார். புதருக்குள் இருந்து கொண்டு “வாலாட்டிய” அந்த நல்ல பாம்பை பூனம்சந்த் லாகவமாக பிடித்தார். அவரது கையில் உள்ள கம்பில் இருந்தவாறு படமெடுத்த பாம்பை கண்டவுடன் திரண்டிருந்த நர்சுகள், பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிறகு அந்த நல்லபாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

Read more »

கடலூரில் பாதாள சாக்கடை பணியின்போது மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி


கடலூர்:
 
      கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராட்சத குழாய்கைள பதிக்கும் பணிக்காக நாமக்கல்லில் இருந்து சுமார் 20 தொழிலாளர்கள் கடலூர் வந்துள்ளனர். சனிக்கிழமை  காலை அவர்கள் 10 அடி பள்ளத்தில் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

             அவர்கள் அந்த வேலையில் மும்முரமாக இருந்தபோது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் நாமக்கல்லை சேர்ந்த சேகர் (40) மண்ணுக்குள் புதைந்தார். கழுத்துவரை மண்மூடப்பட்டு உயிருக்கு போராடிய சேகரை மீட்க கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி சேகரை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1/2  மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

பள்ளிகளில் பி.காம்.பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்

            பி.எஸ்.சி., பி.ஏ., பட்டதாரிகளைப் போல் இனி பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றலாம் என அரசு தெரிவித்துள்ளது.

            பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் இனி பி.காம்., பட்டதாரிகளும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திற்கு மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களிடமும் இருந்த கோரிக்கையின்படியும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பி.காம்., பட்டதாரிகளும் இனி ஆசிரியர் பணியாற்றலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான முறையான உத்தரவு விரைவில் வெளியாகும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

Women take out procession highlighting ills of alcohol abuse in Cuddalore


Spirited initiative:The rally being taken out in Cuddalore on Sunday.


CUDDALORE: 

      A large number of women participated in a “rally against alcoholism,” organised under the aegis of Exnora International, non-governmental organisations, R.C. Schools and consumer forums, here on Sunday.

          Participants carried placards decrying alcoholism and throwing light on its ill effects on health, mind and society. They also conveyed the message that the ‘Agni Sthree' (Woman Blaze), a creation of the Exnora International, was bringing about a silent revolution in which alcohol was abhorred and all citizens were made to lead useful life. Founder-president of the Exnora International M.B.Nirmal told The Hindu that it was a matter of concern that Tamil Nadu occupied the second place, next to Kerala, in alcohol consumption.

         For the past three years, his organisation had been relentlessly launching campaigns against alcoholism. It had almost institutionalised the efforts for reforming and rehabilitating addicts. “Women protection shield” too had been formed to render help to victims of alcoholism. There were also other wings such as “Family of Family” and “We for Ourselves” to rehabilitate alcoholics. The ‘Agni Sthree' had scholars, who teach yoga and meditation, to wean the addicts away from liquor.

           Mr Nirmal said that it would soon bring out a “Red Book” carrying the telephone numbers of the President, Superintendents of Police and elected representatives to alleviate the sufferings of the women in distress. Mr. Nirmal said that the Exnora International had adopted Cuddalore as a model district to utilise its indigenous expertise in tackling natural disasters, man-made disasters such as pollution and self-inflicted disaster such as addiction to beverages. It had put in place 25 methods of tsunami alerts. Global positioning system and tsunami alert system would also be installed on fishing boats, he said.

         Owing to unscientific storing practices, huge stocks of fishes got spoiled. To avoid such a situation, it had been proposed to provide a carrier boat equipped with a freezer for a set of every 10 fishing vessels so the catch could be duly preserved. As for dealing with pollution problem, the Exnora International had formed a “Pollution prevention round table” constituted by representatives of the industry and government, and, activists and experts to devise ways and means controlling pollution. Mr. Nirmal lauded the contributions made by Fr L.A.Arul Pushpam, Manager, R.C.Schools (Cuddalore and Villupuram districts), in creating awareness of social maladies and how to rectify them. L.S. Antonysamy of BLESS, an NGO, M. Nizamudeen of Consumer Federation-Tamil Nadu, participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior