உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

4 மாணவிகள் பலி எதிரொலி; தனியார் கம்பெனி மீது கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு; கடலூரில் பதட்டம்

 
4 மாணவிகள் பலி எதிரொலி;

 

 தனியார் கம்பெனி மீது 

 

 கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு;

 

 கடலூரில் பதட்டம்

கடலூர்:

            கடலூரில் நேற்று நடந்த வேன் விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். இதனால் 2 கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு தனியார் கம்பெனி நிர்வாகம் இதுவரை ஆறுதல் கூறவில்லை.

              ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை ஏராளமானோர் ஒன்று திரண்டு தனியார் கம்பெனிக்கு சென்றனர். தனியார் கம்பெனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பொது மக்கள் ரோட்டோரம் கிடந்த கற்களை எடுத்து கம்பெனி மீது சரமாரியாக வீசினர். இதில் கம்பெனியின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் கம்பெனியின் மேற்கூரையை பெயர்த்து எடுத்தனர். அதோடு அங்கு நின்ற வேன் மீது கல் வீசி தாக்கி உடைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

              தகவல் அறிந்ததும் கடலூர் ஆர்.டி.ஓ. முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read more »

ஐ.ஏ.எஸ். தேர்வில் மாற்றம்: கிராமப்புற மாணவர்களைப் பாதிக்குமா?

             சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை முதல்நிலைத் தேர்வு பொது அறிவு, விருப்பப் பாடம் என்று இரண்டு தாள்களை உள்ளடக்கி இருந்தது. ஆனால் இனிமேல் விருப்பப்பாடத்துக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் (சிசேட்) என்ற தாளைச் சேர்த்துள்ளது.

           இத்தாள் முழுக்க முழுக்க தேர்வில் பங்கேற்போரின் ஆங்கில, கணிதப் புலமை,  புரிதல் தன்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் அமையும்.  இத்தேர்வு மாற்றம் குறித்து அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இதை மையமாக வைத்து எதிர்மறையான கருத்துகள் உலவிக் கொண்டிருக்கின்றன. இதற்குமேல் ஆங்கில, கணிதப் புலமை இல்லாதவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியை நினைத்துப் பார்க்க முடியாது. குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு இந்நிலை நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

             இது உண்மைதானா, தேர்வு மாற்றம் உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் நடத்தி வருபவர்கள் பகிர்ந்து கொண்டது.

சைதை துரைசாமி (தலைவர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்.  இலவச பயிற்சி மையம்):

             உயரிய பொறுப்புகளில் அமருபவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் அவசியம். இந்தத் திறன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுபவர்கள் அனைவருக்கும் இருந்து விடுவதில்லை. இந்த நிலையில் சிசேட் என்ற தேர்வின் மூலமே ஒருவரின் முடிவெடுக்கும் திறனை தேர்வாணையம் சோதித்துவிடும் நிலை உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கது. சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் சில விருப்பப்பாடங்களை எடுத்துப் படிப்பவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும், சில விருப்பப்பாடங்களைப் பயில்வோர் குறைவான மதிப்பெண்களைப் பெறுவதும் வழக்கமாக இருந்து வந்தது. 

             இந்தப் பாகுபாட்டுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களின் திறனையும ஒரே தளத்தில் சோதிக்கும் நிலை உருவாகியுள்ளது.கலைப்படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்வி பயின்றுவரும் மாணவர்களுக்கும் சிசேட் தேர்வை எதிர்கொள்வது ஆரம்பத்தில் சிரமம்தான்.  இதை மறுப்பதற்கில்லை. ஆனால் உரிய வகையில் பயிற்சி பெற்றுவிட்டால் அவர்களின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இத்தேர்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. தன்னம்பிக்கை, கடினமான உழைப்பு, விடாமுயற்சி இம்மூன்றும் இருந்தால் எத்தகைய தடையையும் தகர்த்தெறிய முடியும். இம் மூன்றும் பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு உண்டு என்பதை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.

சங்கர் (தலைவர், தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்):

             மாணவர் சமுதாயத்தில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஆப்டிடியூட் தேர்வைப் பின்புலமாகக் கொண்டுள்ளனர்.அதிலும், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களால் மட்டுமே  இரண்டாம் தாளான சிசேட் தாளை அணுகுவதில் தேர்ச்சி பெறக்கூடிய நிலை உள்ளது. இந்த இரண்டாம்தாள் முழுக்க முழுக்க கணிதம், ஆங்கில அறிவைச் சோதிப்பதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் ஆங்கில, கணிதப்புலமை இருந்தால் மட்டுமே முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற முடியும். இந்த ஆப்டிடியூட் பாடம் எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் பயிற்சிக்காகத் தனியார் பயிற்சி நிறுவனங்களையே நாட வேண்டிய கட்டாய நிலைக்கும் மாணவர்கள் ஆளாகின்றனர்.

            பயிற்சி நிறுவனங்களும் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை தருகின்றன. இதனால் சிசேட் தாளானது, உயர் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் அணுகுவதற்கு உகந்த வகையில் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இத்தேர்வு மாற்றத்தால் பிற்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் மிகப் பெரிய பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்புகள் மங்கிவிடும் என்பதும் உண்மையே.

சுடரொளி (தலைமை நிர்வாகி, தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்):

               சிசேட் என்ற புதிய பாடத் திட்டம் மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, கிலியை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். இதுகுறித்த பயம் தேவையற்றது என்பதே எனது கருத்து.இதற்கு முன்னர் விருப்பப் பாடத் தேர்வில் ஆழமான அறிவும், மனப்பாடம் செய்யும் திறனும் மாணவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் கிராமப்புற மாணவர்கள் இதர சிறப்பான கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுடன் போட்டியிடுதலில் சிரமம் ஏற்பட்டது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிசேட் பாடத்திட்டத்தில் மாணவர்களின் புரிந்து கொள்ளும் தன்மை மட்டுமே சோதிக்கப்படுகிறது. எந்த அளவுக்கு அவர்கள் அப்பாடத்தில் பயிற்சி பெறுகிறார்களோ அந்த அளவுக்கு வெற்றி அவர்கள் வசமாகும்.மேலும் இப்பாடத்தைப் பயில்வதால் மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பெரும் தடையாக இனிமேல் இருக்கப்போவதில்லை. 

               அவர்களின் ஆங்கில அறிவு வளர்வதால், நேர்முகத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ள இயலும். அதுமட்டுமல்லாமல், சிசேட்டுக்கு தயாராவதன் மூலம் கேட், மேட், வங்கித் தேர்வு போன்ற இதர போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்ள ஏதுவாகிறது. இப்பாடத்துக்குத் தயாராவதால் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுக்கு நிகராக தங்களை வெளிப்படுத்தும் அளவுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள இயலும். ஆக, இப்பாடம் எந்தப் பாகுபாடுமின்றி மாணவர்களை ஒரே தட்டில் சமமாய்ப் போற்றும் தன்மையைக் கொண்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

Read more »

சிதம்பரத்தில் இன்று ஆருத்ரா தரிசனம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நடராஜப்பெருமானின் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர் 
சிதம்பரம்:
 
            சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குமேல் நடைபெற  உள்ளது. பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் நடராஜர்  கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  

            ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர்களை  இழுத்தனர். நடராஜர் கோயிலில் கடந்த 13-ம் தேதி  கொடியேற்றத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம்  தொடங்கியது. 9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  தேர்த் திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள்  மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் கீழவீதி தேரடி நிலையிலிருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மாலை  5 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைந்தனர்.

             தேர்களுக்கு முன்பு தில்லை திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு  நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள், திரளான பெண்கள்  வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப் பணியை  மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தில்லைத்  திருமுறைக்கழகத் தலைவர் புலவர் ச.சுந்தரேசம் பிள்ளை  செய்திருந்தார்.திருப்பனந்தாள் காசி மடத்தின் சார்பில் திருப்பல்லாண்டு ஓதுதல் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை காசி மடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் தொடங்கி வைத்தார்.

            முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே  மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் ஏகாம்பரம்  தலைமையில் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான  நடராஜருக்கும், அம்பாளுக்கும் பட்டுசாத்தி சிறப்பு தீபாராதனை  செய்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும்  தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு  இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. 

             புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டப  முகப்பில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு  மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர்  ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும்,  சித்சபையில் பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து  பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் ஆயிரங்கால்  மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாம  சுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப் பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபை பிரவேசம் செய்கின்றனர்.

                விழா ஏற்பாடுகளை ஆலய பொது தீட்சிதர்களின் செயலாளர்  ரா.சி.வைத்திலிங்க தீட்சிதர், துணைச் செயலாளர் எஸ்.யு.ஐயப்ப  தீட்சிதர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர்  க.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  சிதம்பரம் டிஎஸ்பி  ச.சிவனேசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ச.கார்த்திகேயன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை  இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் செய்திருந்தார். குடிநீர் மற்றும்  சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியா  பேகம், ஆணையர் (பொறுப்பு) பெ.மாரியப்பன் ஆகியோர் செய்தனர்.

Read more »

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன

சிதம்பரம்:
 
           டலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.195.89 கோடி செலவில் 26,119 வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
              காட்டுமன்னார்கோவிலில் முட்டம் உள்ளிட்ட 36 கிராமங்களில் உள்ள 5358 பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திட்ட இயக்குநர் (பொது) ரா.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இந் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலைஞர் வீடுகட்டும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 5358 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், 539 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பினையும் வழங்கிப் பேசினார்.  
 
அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 
 
            காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,815 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 8382 பேர் தகுதியுடையவர்கள், நிபந்தனையுடன் தகுதியுடையவர்கள் 3433 பேர் தேர்ந்தெடுகப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.12.95 கோடி செலவில் 1726 வீடுகள் இந்த ஆண்டு கட்டப்படுகின்றன என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
                 ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், பேரூராட்சி மன்றத் தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ரேவதி நன்றி கூறினார்.

Read more »

வெள்ளம் வடியாத கடலூர் நகர்கள்!

கடலூர்:
 
           மழை ஓய்ந்து 10 நாள்கள் ஆகியும் கடலூர்  நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ளம் வடியவில்லை.  கடலூர் நகரில் ஒரு மாதமாகப் பெய்த கன மழையாலும், நகரின் வழியாகப் பாய்ந்து செல்லும் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் 150க்கும் மேற்பட்ட நகர்களில், 5 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கி மக்களை பெரிதும் அல்லல்படுத்தி விட்டது.  
 
            இதனால் இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில நகர்களில் வசிக்கும் மக்கள், தாற்காலிகமாக வீடுகளைக் காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். பலர் இன்னும் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. வில்வராயநத்தம் ஆனந்தன் நகர், கோண்டூர் ராம்நகர், திருப்பாப்புலியூர் காமாட்சி நகர், ராஜம் நகர், சித்ரா நகர், வண்டிப்பாளையம் கண்ணகி நகர், ஆல்பேட்டை தேவநாதன் நகர்,  குண்டுசாலை குமரப்பன் நகர், டெலிபோன் காலனி, திடீர்குப்பம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்களில், தேங்கிய மழைநீர் இன்னமும் வடியவில்லை. 
 
             பல நகர்களில் இன்னமும் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.   ஏராளமான நகர்களில் கொஞ்சம் இருக்கும் தார்ச் சாலைகளும், இப்போதுதான் வெளியே தலைகாட்டத் தொடங்கி உள்ளன. வீடுகளைச் சுற்றியும், காலியாக இருக்கும் வீட்டு மனைகளிலும் இன்னமும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நகர்களில், மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றினோம் என்று சொல்லிக் கொண்டுள்ளது.  
 
                கடலூரில் வடிகால் வசதிகளை ஒழுங்காக நிறைவேற்றாததே இத்தனை இன்னல்களுக்கும் காரணம் என்கிறார்கள் ஆண்டுக்கு 10 கோடிக்கு மேல் வீட்டுவரி செலுத்தும் நகரப் பொதுமக்கள்.  கடலூரில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், மழைநீர் தேங்கி பொதுமக்களை அல்லல்படுத்தும் நிலை மாற, ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒன்றை உருவாக்கி, மாநில அரசின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிறார், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.

Read more »

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்

கடலூர்:

             போக்குவரத்துக்குச் சிறிதும் லாயக்கற்ற நிலையில், கடலூர் நகரச் சாலைகள் பழுதடைந்து கிடப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்லும், மாணவ மாணவியர், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

            பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சிதைந்து கிடந்த சாலைகளால், கடலூர் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் வட கிழக்குப் பருவமழையும் சேர்ந்து, கடலூர் மக்களை பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது. கடலூர் நகரச் சாலைகள் அனைத்தும் பல்லாங்குழிகளாக மட்டுமன்றி, சிறிய குளம் குட்டைகளாகவும் மாறிவிட்டன. 

              அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சேறும் சகதியுமாகப் பல சாலைகள், சேதமடைந்த தார்ச் சாலைகளில் எங்கே பள்ளம், எங்கே மேடு என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில், ஏதோ ஒரு அனுமானத்தில்தான் சாலைகளில் செல்ல வேண்டிய பரிதாபநிலை கடலூர் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.  இரு சக்கர வாகனங்களில் செல்லும் மாணவ மாணவியர், பொதுமக்கள் இந்த பல்லாங்குழிகளில் தடுமாறிக் கொண்டு செல்லும் நிலையில், கார்களும், பஸ்களும், லாரிகளும் பின்னால் வந்து, காதுகிழிய காற்றொலிப்பானை ஒலிப்பது, நீ எப்படியும் தொலைந்து போ, எனக்கு வழி விடு, என்பதுபோல் இருக்கிறது, 4 சக்கர வாகன ஓட்டிகளின் இத்தகைய கொடுஞ்செயல்.

                    இதன் காரணமாக கடலூரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ மாணவியர், பொதுமக்கள் பலர் சாலைகளில் உள்ள சாக்கடை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டும், பள்ளங்களில் விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்ளும் நிலையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நெரிசல் மிருந்த நெல்லிக்குப்பம் சாலை (அரசு மருத்துவமனைச் சாலை) ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, 30 ஆண்டுகளுக்கு மேலாக உறுதியுடன் இருந்தது. 

               அதற்கு மேல் போடப்பட்ட தார்ச் சாலையோ, எத்தனை முறை புதுப்பித்தாலும் சில மாதங்களிலேயே சிதைந்து சின்னா பின்னமாகி விடுகிறது. அத்துடன் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட இச் சாலை இன்று எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. நெரிசல் மிகுந்த இச்சாலையில், அரசு மருத்துவமனைக்கு தினமும் வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபம். 

           இச்சாலையில் வாகனங்களை கட்டுப்படுத்தி, நோயாளிகள் கடந்து செல்ல உதவுவோமே என்ற எண்ணம், காவல் துறைக்கும் சற்றும் இல்லாமல் போனது, மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சர்களும் ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் வரும்போது மட்டும், தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போலீசார், மற்ற நாள்களில், மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில், எங்கே போய்விடுகிறார்கள் என்பதுதான் சாதாரண மக்களின் வருத்தம் தோய்ந்த கேள்வி. சாலைகள் சீர்கேட்டால், அன்றாடம் டேங்கர் லாரிகள், டிராக்டர்கள், பஸ்கள் அங்காங்கே சாலைகளில் விழுந்து கிடக்கும் பரிதாப நிலை, அதனால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவோம், பாதாளச் சாக்கடைப் பணிகளை முடித்து விடுவோம் என்று அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எல்லாம், கனமழையில் கரைந்து போய்விட்டன.

               இதன் விளைவு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில், ஆங்காங்கே விழுந்து, படுகாயம் காயம் அடைவோரின் ரத்தமும் கலந்து ஓடத் தொடங்கி இருக்கிறது கடலூர் நகரில். குளிரூட்டப்பட்ட அரசு வாகனங்களில்  பவனி வரும் ஆட்சியாளர்களுக்கு, மக்கள் மீது எப்போது கருணை பிறக்கும்.

Read more »

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்" விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலூர்:

          சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்' விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் பதக்கம் பெற்ற தலா மூன்று ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆறு வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு "ஸ்டாட்' விருது மற்றும் 3,000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்குகிறது. இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரைக்கான "ஸ்டாட்' விருது வரும் ஜனவரி 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.

               இதில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், மேஜை பந்து, ரோயிங், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், டிரைலத்தான், பளு தூக்குதல், வாலிபால், இறகு பந்து, ஜிம்னாஸ்டிக், கபடி, வாள் சண்டை, டேக்வண்டா, செபக் டக்ரா, ஸ்கேட்டிங், பீச் வாலிபால், கிரிக்கெட், சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி, ஜூடோ, சதுரங்கம், கேரம், வளை பந்து, கோ கோ, வலு தூக்குதல், சிலம்பம், எறிபந்து ஆகிய போட்டிகள் விருதிற்கு பரிசீலிக்கப்படும்.

               கடலூர் மாவட்டத்தில் படிக்கும், மாவட்டத்திற்காக விளையாடிய வேலை இல்லாத வீரர்கள் மற்றும் படிக்காத வீரர்கள், வீராங்கனைகள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஒருவர் ஒரு ஆண்டிற்கு ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒருமுறை விருது பெற்றவர்கள் மூன்று ஆண்டிற்கு பின்னர் தான் விண்ணப்பிக்க வேண்டும்.பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் வரிசைபடுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு "ஸ்டாட்' விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவரிடம் பெற்று, வரும் 31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

Read more »

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா, நடராஜா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

              கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தினசரி நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5.30மணிக்கு மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. காலை 9மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா, நடராஜா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

                           விநாயகர், முருகர் தேர்கள் முன்னதாக செல்ல தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேர்கள் நகர வீதிகளில் பவனி வந்தது. மதியம் 12மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் தேர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே நிறுத்தப்பட்டது.பருவதராஜகுல சமூகத்தினரின் வழக்கப்படி மேலதாளம் முழங்க நடராஜருக்கு சீர் வரிசையுடன் பட்டு சாத்தி மரியாதை செய்தனர். 

                  தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டு தேர் நிலையை வந்தடைந்தது. இரவு தேரில் இருந்து நடராஜரும், சிவகாமி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு லட்சார்ச்சனை பூஜை நடந்தது.தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். தேருக்கு முன் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் தேவார திருமுறைகள் பாடினர். டி.எஸ்.பி., சிவநேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றுஆருத்ரா தரிசனம்இன்று (22ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் திருவாபரண அலங்கார காட்சி நடக்கிறது.பஞ்சமூர்த்தி புறப்பாட்டை தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 2மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

Read more »

கலைஞரின் பச்சிளங்குழந்தை உயிர் காக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் ; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

                கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழக அரசின் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கும் விழா முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி , காட்டுமன்னார்கோவில் லலிதா மகால் ஆகிய இடங்களில் நடந்தது.

               விழாவுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) வெங்கடாசலம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராமராஜூ, ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் சின்னப்பா, பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 36 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கினார்.  மேலும் காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி, மேல கடம்பூர் ஊராட்சியை சேர்ந்த 539 பேருக்கு இலவச கியாஸ் அடுப்புகள் வழங்கி பேசினார். 
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:-

                 தமிழகத்தில் 29 லட்சம் குடிசைகள் உள்ளது.முதல்- அமைச்சர் இந்த வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.அதன்படி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார்.இந்த வீடு வழங்கும் திட்டத்திற்கு முதலில் ரூ.60 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் கூடுதலாக நிதி வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. , கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற முதல்- அமைச்சர் ரூ.75 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார்.

               கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 26 ஆயிரத்து 119 வீடுகள் கட்டுவதற்கு பணி நடந்து வருகிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா வல்லம்படுகையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதேபோல் தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதியும், அந்த திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் ஒப்படைத்தார்.

                   இதனால் நமது மாவட்டத்திற்கு பெருமை உண்டு.கலைஞர் ஆட்சியில் பசி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு குடிசை வீடுகள் என்றால் என்ன என்றே தெரியாத நிலை உருவாகும். விரைவில் கலைஞரின் பச்சிளங்குழந்தை உயிர் காக்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். வருகிற 5 மாதங்களில் தேர்தல் வருகிறது.ஆகவே கலைஞர் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Read more »

வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்; விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு

நெய்வேலி:

             நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் தொழிலாளர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

            நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் அன்பழகன், தெற்கு நகர செயலாளர் பாண்டியன், மேற்கு நகர செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமாறன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, நகர துணை செயலாளர்கள் சுரேஷ், பாட்ஷாபன்னீர், முருகன், ரமேஷ், பூசைமணி, புரட்சிபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன.

*வருகிற 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் தமிழர் இறையாண்மை மாநில மாநாட்டில் சுமார் 1000-க்கும் அதிகமான வாகனங்களில் பங்கெடுப்பது.

*இலங்கை குடியிருப்பு பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை அளிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது.

*கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முடிவில் ராசா நன்றி கூறினார்.

Read more »

Facelift for police outpost at Cuddalore Silver Beach



The outpost at beach now sports a new look.

CUDDALORE: 

         The police outpost at the Silver Beach here has got a facelift, with greenery and well laid-out pathways in its environs.

      Two cannons, made of brick and mortar, flank the entrance. The hexagonal structure has been given a fresh coat of paint and a golden colour government emblem placed prominently in the centre. At present, the building houses the police control room, which has been temporarily shifted from the office of the Superintendent of Police. A spiral staircase leads to the first floor, which can be used as a guest house, and an open terrace.

         Superintendent of Police Ashwin Kotnis told The Hindu that the outpost would function round the clock. It was necessary to curb drinking and anti-social activities on the beach after dusk. The old outpost at the beach was damaged in the 2004 tsunami. The new structure had come up at the same spot, with financial assistance from the Rajasthan government. However, the building was sporting a dull look for want of proper maintenance. As the Silver Beach was emerging as a place of tourist attraction, the building was now refurbished.

                  Asked whether any marine police station would be set up there, Mr. Kotnis said it would continue to remain a police outpost, manned by police personnel.

Read more »

Private vehicles on school/college duty must register with RTO

CUDDALORE: 

       Collector P. Seetharaman has imposed certain conditions on vehicles carrying students.

       A decision was taken at a meeting of officials and police officers held here on Tuesday. It has been decided that owners of all min-buses, vans, cars and autorickshaws being used on school/college duty should register with the regional transport office the names of drivers and details about the vehicles. They should prominently display the certificate, carrying a photograph of the driver and attested by the respective police officers and the RTO, inside the vehicle. The educational institutions are instructed to maintain a register on the drivers and their assistants accompanying them in the vehicles.

              The RTO and the Deputy Superintendents of Police should conduct surprise checks to verify whether the vehicles follow traffic rules.

Read more »

Residents turn their ire against oil firm

CUDDALORE: 

        Residents of Thiruchopuram and Nanjalingampettai on Tuesday turned their ire against a private oil company by holding it responsible for the death of four girl students in the road accident that occurred at Semmanguppam near here on Monday.

           About 200 residents squatted on Cuddalore-Chidambaram road at Semmanguppam, blocking the traffic for about an hour in the morning. They urged the oil company to give due compensation to the families of the deceased and injured students. They also impounded three vehicles carrying employees of the company and refused to let go until the company apologised to the villagers for the accident and come out with due compensation package.

          Meanwhile, a section of them went to Periakuppam (where the oil company is located) to voice their protest. When the security personnel did not allow them inside, they pelted stones and damaged glass panes. They also broke the windscreen of an ambulance parked on the company premises. A spokesperson of the residents said that it was due to the recklessness of the driver of the vehicle contracted by the company that the accident took place, killing the four and injuring 31 others.

           The spokesperson alleged that even though the company knew fully well that it was one of the vehicles engaged by the company that caused the accident, the company did not take any efforts to arrange for ambulances to take the injured to the hospital. It was the local people and the passers-by who took the injured in a private bus to the hospital. The company management remained indifferent to the tragedy and never expressed condolence to the bereaved families nor did it send any of its representatives to the government hospital to enquire about the condition of the injured, the spokesperson added.

           Meanwhile, Revenue Divisional Officer Murugesan and Deputy Superintendent of Police Pandian reached the spot and held talks with the protestors to assuage their feelings. The company sources said that none of the vehicles owned by the company was involved in the accident. It was the vehicle hired by a sub-contractor of the company that met with the accident while transporting the employees of the former to the company premises.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior