உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 20, 2011

நடராஜர் கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 6 லட்சம் காணிக்கை


சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
 
சிதம்பரம்:

         சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூலை 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை 14-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. 

             இதில் மொத்தம் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரத்து 462 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.  உயர்நீதிமன்ற ஆணைப்படி நடராஜர் கோயிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தி நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன.  இப்போது செவ்வாய்க்கிழமை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர். ஜகந்நாதன், செயல் அலுவலர் க. சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் 14-வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. 

              இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறிநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  9 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரத்து 462 ரூபாய் கிடைத்தது. 

மேலும் உண்டியலில் 

11 கிராம் தங்கம், 
108 கிராம் வெள்ளி, 
மலேசிய ரிங்கட் - 482,
சிங்கப்பூர் டாலர் 60, 
அமெரிக்க டாலர் 4, 
தென் ஆப்பிரிக்க ரிங்கட் - 10 ஆகியவை இருந்தன.  

             உண்டியல் வைக்கப்பட்டு 2 வருடம் 5 மாதத்தில் இதுவரை 14 முறை உண்டியல் எண்ணப்பட்டுள்ளது என்றும் இதில் மொத்தம் ரூ. 58 லட்சத்து 10 ஆயிரத்து 852 ரூபாய் கிடைத்துள்ளது எனவும் செயல் அலுவலர் க. சிவக்குமார் தெரிவித்தார். 

 ஒரே கட்டாக ரூ. 50 ஆயிரம்: 

                 நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்ட போது கொடிமரத்தின் அருகில் இருந்த உண்டியலில் ஒரு பக்தர் ரூ. 50 ஆயிரம் தொகையை ரூ. 500 நோட்டுகள் கொண்ட ஒரே கட்டாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.














Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம்


கடலூர்:

          கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பைக் கண்டித்து, தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

            இத்தொழிற்சாலையில் பென்ஸிலின்- ஜி என்ற மருந்து தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை ஸ்பிக் மட்டுமே. இத்தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 160 பேரும், மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் ஓராண்டுக்கும் மேலாக உற்பத்தி நடைபெறவில்லை. குறைந்த தொழிலாளர்களுடன் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 100 பேருக்கு, ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

              மேலும் தொழிற்சாலையின் பிரதான கேட் மூடப்பட்டு உள்ளது. ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்தும், கேட் மூடப்பட்டதைக் கண்டித்தும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை, தொழிற்சாலை முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்துடன் தாசில்தார் அசோகன், துணைத் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் தங்கராஜ், தொழிலாளர் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்."

            ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும், தொழிற்சாலை கேட்டை திறக்க வேண்டும், இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை இதுவாக இருப்பதால், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம் வீடியோ காட்சி
















Read more »

கடலூர் மாவட்டத்தில் விதை நெல் பதப்படுத்தும் நிலையம்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் விதை நெல் பதப்படுத்தும் "மெகா' நிலையம் அமைக்க வேண்டும் என்று, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.விஜயகுமார், செயலர் கே.சொக்கலிங்கம் ஆகியோர் அண்மையில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

             விவசாயிகளின் மொத்த விதைத் தேவையில் 17 சதவீதம், அரசு வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை.ஆனால் கடலூர் மாவட்டத்தில் சிறிய அளவில் உள்ள வண்டுராயன் பட்டு, மிராளூர் அரசு விதைப் பண்ணை மற்றும் பதப்படுத்தும் நிலையங்களால், கடலூர் மாவட்ட விவசாயிகளின் விதை நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.தேசிய விதைக் கழகம் மூலமாகவும், துடியலூர் தனியார் விதைப் பண்ணையில் இருந்தும், கடலூர் மாவட்ட வேளாண்துறை வாங்கி விநியோகிக்கும் விதைகள், தரமாக இல்லை.

             தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தபோது கள்ளக்குறிச்சி, இருவேல்பட்டு ஆகிய ஊர்களில் இருந்த மிகப்பெரிய விதைநெல் பதப்படுத்தும் நிலையங்கள், மாவட்டப் பிரிவினையின்போது, விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்ந்துவிட்டன.எனவே கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் விதைப் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். விதைப் பதப்படுத்தும் நிலையங்களுக்கு விதை நெல் வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்துச் செலவு வழங்க வேண்டும். 

               விவசாயிகளுக்குóக கட்டுபடியாகும் வகையில், விலையை உயர்த்தி வழங்க வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1,200 மானியம் மற்றும் இடுபொருள்கள் வழங்க வேண்டும்.எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு தனியாக இயக்குநரகம் அமைத்து, உற்பத்தியைப் பெருக்கவும், மத்திய அரசின் மானியங்களைப் பெறவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயறு வகைகள உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தரமான விதைகள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். பொதுப் பணித் துறையின் காவிரி பாசனப் பிரிவில் காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.






Read more »

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு ( மே 2011 ) முடிவுகள் வெளியீடு

          அழகப்பா பல்கலை தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

            மே மாதம்- 2011ல் நடந்த ( பி.லிட்., பி.சி.ஏ., அதில் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., அதில் நேரடி இரண்டாமாண்டு), சுய உதவி குழு மேலாண்மை, பி.ஜி.டி.ஐ.எம்.ஏ., எம்.பி.ஏ ( பன்னாண்டு வணிகம்), எம்.எஸ்.சி (தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகளை, மாணவர்கள்



           முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தில் பெறலாம். மறுமதிப்பீட்டு கட்டணம் ரூ. 400 டி.டி., எடுத்து பல்கலை தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு, தேர்வாணையர் வெ.மாணிக்கவாசகம் தெரிவித்தார்.





Read more »

மத்திய அரசின் சிறந்த இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :

        மத்திய அரசின் சிறந்த இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து நேரு யுவக்கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி விடுத்துள்ள அறிக்கை:

            மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவக்கேந்திரா மூலம் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவரவித்து வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர், மாநில விருதுக்கு பரிசீலிக்கப்படுவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று 35 வயதிற்குட்பட்ட, சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் 

                 கடலூர், புதுப்பாளையம், ராமதாஸ் தெருவில் இயங்கி வரும் நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.



Read more »

குரூப் 2 தேர்வுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது

           ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வருகிற 30 ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது. தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்து, தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

              25 ந் தேதிக்குள் ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பம் அனுப்பியதற்கான அஞ்சல் ரசீது, விண்ணப்ப எண் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் தங்களின் அடையாள சான்று ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்ட வருவாய் அதிகாரியை (டி.ஆர்.ஓ.) அணுகலாம். சென்னை மையத்தைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.







Read more »

பெண்ணாடம் நந்தப்பாடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை: சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் திறந்து வைத்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/a9a9c4dc-104d-4b5a-acc8-a6e591b08d2f_S_secvpf.gif


 
திட்டக்குடி:
 
         பெண்ணாடத்தை அடுத்துள்ள நந்தப்பாடியில் கிராம மக்கள் நீண்ட தூரம நடந்து சென்று வெண் கரும்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டி இருந்தது. இப்பகுதி மக்கள் நந்தப் பாடியில் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என முறையிட்டு வந்தனர். முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று நந்தப்பாடியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க உத்தரவிட்டார். அதன்படி புதிய பகுதி நேரரேஷன் கடை திறக்கப்பட்டது.

அமைச்சர் செல்வி ராமஜெயம் கடையை திறந்து வைத்து பேசியது:-

               தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராம புறமக்களின் வசதியில் அக்கறை கொண்டுள்ளார். 200- 250 குடும்ப அட்டைகள் உள்ள கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் திறக்க உத்தரவிட்டுவருகிறார். இதில் பணிபுரியும் பணியாளர்கள் தினமும் கடையை திறந்து அத்தியாவசிய பொருட்களை தங்கு தடை இன்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

               அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணிபுரிய வேண்டும் பொது மக்களும் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஜெயலலிதா சொல்வதை யெல்லாம் செய்து வருகிறார். மக்கள் நலன் கருதி சொல்லாததையும் செய்பவர்தான் ஜெயலலிதா. தரமான பொருட்கள் கிடைப்பதுதான் முக்கியம். இவ்வாறு அமைச்சர் செல்விராமஜெயம் பேசினார்.

                  தொடர்ந்து அந்த கிராமத்தில் குடிள்ள 16 குடும்பங்களுக்கு இலவச அரிசி திட்டத்தின் கீழ் தலா 20கிலோ அரிசியையும் வழங்கினார். அப்போது பொது மக்கள் அவரிடம் தற்போது எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளி களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணை நிறுத்தப்பட்டுவதாகவும், அதை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.

                அமைச்சர் அவர்களிடம் இந்த பிரச்சனைகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். விழாவில் நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலா ளர் ராஜேந்திரன், தொகுதி இணை செயலாளர் சுந்தர முர்த்தி, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் காரைசெழியன், பேரவை செயலாளர் வாசுதேவன், மாணவர் அணி செயலாளர் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

Read more »

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

நெல்லிக்குப்பம்:
 
          திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில்  உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேசன், கண்காணிப்பாளர் மாசிலாமணி, மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் உண்டியலை பிரித்து கொட்டினார்கள்.

           இந்த உண்டியலில் இருந்த பவுன், வெள்ளி, ரூபாய்நோட்டு, சில்லரை காசுகள், வெளிநட்டு கரன்சி என தனியாக பிரித்து எடுத்தனர். தங்கம் 95 கிராமும், வெள்ளி 43 கிராமும் காணிக்கை செலுத்தி இருந்தனர். ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 956, பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைத்தது. மேலும் வெளிநாட்டினர் இங்கிலாந்து கரன்சி நோட்டு 2-ம், மலேசியா கரன்சி 2-ம், சிங்கப்பூர் கரன்சி 1-ம் காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள். இந்த உண்டியல் எண்ணும் பணியில் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்தது அதாவது 3 மணிநேரம் இப்பணி நடைபெற்றது
 
 
 
 
 
 
 

Read more »

New Website Launched for to know Bus Routes in Chennai

           Last week, Chennai joined a list of over 440 cities across the world that have a public transport layer on top of Google Maps. Launched without any significant help from the city's public transport operators, the service, despite far from being perfect, offers a glimpse into the possibilities of a reliable public transit route planning system.

          Currently, basic requirements such as route information, arrival/departure timings and route maps are not available. The city's public transport system is remarkably passenger-unfriendly, say experts. Even existing investments on GPS-enabled buses and Passenger Information System (PIS) display boards in bus stops remain largely unutilised.

           Of the 2,000-odd bus stops covered by Metropolitan Transport Corporation (MTC) bus services, only 60 have a display board which scrolls bus arrival information. The display boards hardly provide any useful information as only 550 of the 3,400 MTC buses are fitted with a GPS device. Passengers prefer to board the first available bus, instead of waiting for a GPS-enabled bus, whose arrival time is displayed on the digital board.

          “No single bus route has 100 per cent GPS coverage. MTC decided to distribute such devices across depots and routes, and the display boards are now irrelevant,” says Daniel Robinson of Chennai City Connect, an NGO working on issues concerning traffic and transportation. Part of a team which is working on digitally mapping all MTC bus routes in the city, Mr.Robinson says that the fact that Google could offer a public transit layer largely using public domain data shows what the city's residents have been denied all this while.

         Investments in fleet management and schedule management software, which would enable the Corporation to analyse real-time data instead of the six month gap which exists right now, makes strong business sense, he says. “For example, in some of the analysis that we did, between 11.30 a.m. and 2.30 p.m., the number of buses operating on peak frequency routes is the same as the morning rush hour. If routes are scientifically planned, these buses could easily be deployed on alternate routes.”

         An additional benefit is that the data can be used to offer passenger information services and ensure greater transparency, Mr.Robinson adds. Arun Ganesh, a student at the  National Institute of Design, who developed www.busroutes.in, says that the MTC must start with releasing whatever information it has in a usable format. 

          “Everyone should know when a bus will leave the depot, what will be the journey time and how many bus stops are present along a particular route. Only then can passengers judge how reliable the city's bus service is.” Taking the example of bus shelters to highlight the level of disregard for passengers, he says the space has been entirely taken up for advertisements. “The bus route numbers are put somewhere at the top in small font. Better information displays, aided with maps and locality-specific information, could easily be installed in each bus shelter.”

           S.K. Lohia, Director (Urban Transport), Ministry of Urban Development, says that opening up transit data makes sense as “the reliability of public transport services must be quantifiable”. MTC managing director S.Boopathy said that route and time information is “not a secret” and the Corporation is considering how to publish the information online. “We are working on an SMS-based passenger information system through which route details and arrival/departure timings can be obtained. Besides, funding has been sought to install GPS units in all the 3,000 buses and the proposal is likely to be announced soon.”




Read more »

The Chennai City to get 180 mld of water from Veeranam lake

           The city will get additional 180 million litres per day (MLD) of water from Veeranam Lake in Cuddalore district after the water was released into the city water distribution system on Monday night.

           Metro Water sources said KP Munusamy, minister for Municipal Administration and Rural Development on Monday evening, released the water into the city distribution system. Also present were Metro Water managing director Dr K Gopal, Social Welfare Minister Selvi Ramajayam and Minister for Special Programme Implementation M C Sampath. “About 180 mld water will reach Porur Water Distribution System (WDS) by Tuesday evening after it gets treated at Vadakathur water treatment plant. From there it will be distributed to all water distribution system in the city,” Metro Water sources said.Veeranam Lake, which has an ayacut area of 48,000 acres, received water from the Mettur Dam after it was opened on June 6. 

         After the Grand Anaicut and Lower Anaicut was filled, the water was released into Vadavar Canal linking Veeranam Lake on June 29.“Yesterday, the water level at the lake was 43 feet and water storage reached 507 million cubic feet as soon as the pumping operation started,” said Metro Water sources. Veeranam Lake will be supplying water to the city distribution system till February and the city will have sufficient water till monsoon, the source said. As per Metro Water figures released on Tuesday, the water level in Poondi, Cholavaram, Redhills and Chemarambakam stood at 5,650 million cubic feet which is approximately 51 per cent of the storage level.






Read more »

Cuddalore recorded the lowest child sex ratio in rural areas.

 http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/census1.jpg.crop_display.jpg


      

   While the literacy rate and sex ratio in Chennai, Coimbatore and Kanyakumari are favourable, Cuddalore, Ariyalur and Villupuram continue to be backward districts in these parameters and in urbanisation.

         In the case of urban literates, Chennai and Coimbatore recorded the highest numbers, 3.85 million and 2.12 million, said Mr S. Gopala Krishnan, director of census operations at a press conference here on Tuesday. The highest number of rural literates was recorded in Villupuram (1.83 million).

        Similarly, the child sex ratio in the state has marginally increased from 942 in 2001 to 946 in 20011. In rural areas, it has increased from 933 to 937 and in urban areas, from 955 to 957. The Nilgiris (979) recorded the highest growth while Cuddalore (878) recorded the lowest child sex ratio in rural areas.

         Meanwhile Ariyalur recorded the lowest child sex ratio in urban areas. While the trend of male literacy rate surpassing the female literacy rate is still prevalent, female literacy is now growing and the gap between the male and female literary rates in the state has come down to 12.95 points.

          The gap is 16.56 points in rural areas and 9.16 in urban areas with Kanyakumari ranking first both in rural and urban literacy rates. Pudukottai and Sivagangai had the highest male literacy rate in the state and Dharmapuri and Salem recorded the lowest figures for female literary rates, said Mr Krishnan and added that more details were awaited.

          Referring to the neighbouring districts of Tiruvallur and Kancheeepuram, Corporation commissioner Mr D. Karthikeyan said that the density in these districts had increased due to urbanisation. Talking about the ongoing census operations he said that the process of collecting biometric details from the public like fingerprints and cornea reading was underway in Trichy and Villupuram and similar operations would begin across the state shortly.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior