உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

ஆர்ப்பாட்டம்

கடலூர் :

               கடலூரில் குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற் கும் மழை நீரை  வெளியேற்றவும், பாதாள சாக் கடை திட்ட பணியால் சின்னபின்னமாகி போன சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் வரவேற்றார். பொதுச் செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் மாயவேல், வரதன், சந்திரசேகரன், ராஜசேகரன், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

பண்ருட்டி :

             லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி இன்ஸ் பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது பஸ் நிலையம் அருகே லாட்டரி விற்ற ராஜேந்திரன்(45), மகேஷ்(24) ஆகியோரை கைது செய்தார்.

Read more »

இறந்து கிடந்த பெண் யார்?

சேத்தியாத்தோப்பு :

             சேத்தியாத்தோப்பு அருகே அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்து பூதங்குடி நடுவாய்க்கால் கரையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். பச்சை நிற சேலையும், பச்சை நிற ஜாக்கட்டும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஓ., பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் சப் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

காற்றில் மரம் விழுந்ததால் இறையூரில் மின்சாரம் 'கட்'

திட்டக்குடி :

                  திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றில் மரம் ஒன்று மின் கம்பத் தில் விழுந்ததில் இறையூர் கிராமத்தில் 14 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப் பட்டது.திட்டக்குடி  பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதில் இறையூர் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே-திட்டக்குடி-விருத்தாசலம் சாலையோரம் இருந்த அத்தி மரம் அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்தது. மரத்திற்கு அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி, முத்துவேல் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்தன.

                  மேலும் சாலையோரம் சென்ற மின்கம்பம் முறிந்து சுமார் 300 மீட்டருக்கு மின்கம்பிகள் அறுந்தன.தகவலறிந்த பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி பொறியாளர் பன்னீர் உத்தரவின்படி, இரவு முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, நேற்று காலை முதல் மின்ஊழியர்கள் மரக்கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1 மணிக்கு மேல் இறையூர் மெயின்ரோடு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. காற்றில் மரம் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்த சம்பவத்தால் இறையூர் மெயின்ரோட் டில் சுமார் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Read more »

வயலில் மேய்ந்த 25 மாடுகளை கசாப்பு கடைக்கு விற்ற மூவருக்கு வலை

உளுந்தூர்பேட்டை :

                      விருத்தாசலம்  அருகே வயலில் மேய்ந்த மாடுகளை கசாப்பு கடைக்கு  அனுப்பிய கொடூரம் அரங்கேறியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இளை யபெருமாள், ராமச்சந்திரன், துரைசாமி. இவர்களின் மாடுகள் அடிக்கடி காணாமல் போனதால் பல கசாப்பு கடைகளுக்கு சென்று பார்த்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை  அடுத்த எம்.எஸ்.தக்கா அப்துல்லா, சதாம்கானுக்கு சொந்தமான கசாப்பு கடை கொட்டகையில் தங்கள் மாடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இளையபெருமாள் உளுந் தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

                 போலீசார் நடத்திய விசாரணையில் மணக் கொல்லையிலுள்ள சுரேஷ், நடராஜ், ரமேஷ் ஆகியோரின் நிலத்தில் மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரத்தில் கசாப்புக்கடைக்கு அடிக் கடி மாடுகளை ஏற்றி அனுப்பியது தெரிந்தது.  கசாப்பு கடையில் இருந்த 6 மாடுகளை மீட்டு போலீசார் ஸ்டேஷனில் கட்டி வைத்தனர். 25 மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பிய சுரேஷ், நடராஜ், ரமேஷை தேடிவருகின்றனர்.

Read more »

சம்பா நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

கடலூர் :

                    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக வயல்களில் விளைந்துள்ள சம்பா நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு காவரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் தாமதமாக திறந்துவிடப்பட்டதால் சம்பா நடவும் தாமதமாக துவங்கியது. ஆனால் கடலூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகள், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம் பகுதிகளில் ஆழ்குழாய் போர் மூலம் தண்ணீர் இறைத்து முன்கூட்டியே நடவு பணிகளை துவக்கினர்.

                 தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் தமிழகத்தில் தாமதமாக துவங்கிய பருவமழையாலும், வார்டு புயல் காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.இதனால் விளைந்திருந்த  நெற்கதிர் கனமழையில் சாய்ந்துள்ளன. வயல்களில் தண்ணீர் வடியாமல் தொடர்ந்து தேங்கி வருவதால் கதிர்கள் சாய்ந்து மழைநீரில் நனைந்து பாழாகி வருகின்றன.

Read more »

மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்



குறிஞ்சிப்பாடி :

                  மின் சிக்கனத்தை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும்  விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி கோட்ட மின்சார வாரியம் சார்பில் வடலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து மின் சிக்கன விழிப்புணர்வு ஊர் வலம் நடந்தது. பின்னர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி கோட்ட செயற் பொறியாளர் ஜெய ராமன் தலைமை தாங் கினார். உதவி செயற் பொறியாளர் தேன்மொழி முன்னிலை வகித்தார். வடலூர் உதவி செயற் பொறியாளர் லீனா வர வேற்றார். குள்ளஞ்சாவடி உதவி செயற்பொறியாளர் வீணா, தோப்புக் கொல்லை உதவி பொறி யாளர் மருதமணி மின்சிக் கனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். செல்வராஜ் வாழ்த்தி பேசினார்.உதவி பொறியாளர் ராசராசன் நன்றி கூறினார்.

Read more »

நுகர்வோர் மன்ற மாதாந்திர விழா

விருத்தாசலம் :

               விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரியில் குடிமக்கள் நுகர் வோர் மன்ற மாதாந்திர விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் மனோகரன் வரவேற்றார். தாசில்தார் பூபதி சிறப்புரையாற்றினார். நுகர்வோர்குழு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் செந்தமிழ் செல் வன், ஒருங்கிணைப் பாளர் துரைராசு, பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சஜன் மோட்டார்சில் புதிய கார் விற்பனை

புவனகிரி :

                      புவனகிரி அருகே கீரப் பாளையம் சஜன் மோட் டார்சில் மாவட்ட அளவில் டாடா நிறுவனத்தின் புதிய ரக சுமோ கிராண்டே எம்.கே.2  கார் விற்பனை துவக்க விழா நடந்தது. டபே ரீச் மற்றும் சஜன்  மோட்டார்ஸ் இணைந்து வழங்கிய சுமோ கிராண்டே ஜி.எக்ஸ். எம்.கே.2  காரின் முதல் விற்பனையை சஜன் மோ ட்டார்ஸ் உரிமையாளர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். அதனை கவுன்சிலர் முகமது ஜியாவுதீன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் சஜன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் அமிர்தலிங்கம், நுகர்வோர் தொடர்பு அதிகாரி ராஜலட்சுமி, சேவை ஆலோசகர் சிங்கராஜா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மானிய நிதி திறன் பயிற்சி முகாம்

சிறுபாக்கம் :

                 நல்லூர் ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதி திறன் வளர்த் தல் பயிற்சி முகாம் நடந்தது.சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சேகர், ரவிசங்கர்நாத் முன்னிலை வகித்தனர். துணை ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நல நிதியினை பயன்படுத்துதல், திறன் வளர்த்தல், செலவிடுதல் குறித்து ஆணையர்கள் பயிற்சியளித்தனர்.

Read more »

ஏற்றுமதி தேவையுள்ள மிளகாய் வற்றல் பயிரிட்டு லாபம் அடைய வேளாண் அதிகாரிகள் யோசனை

கடலூர் :

                    இந்தியாவின் மிளகாய் வற்றலின் ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால் மிளகாய் பயிர் செய்து லாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

   இது குறித்து வேளாண் இணை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                 வடகிழக்குப் பருவமழையை எதிர் நோக்கி மிளகாய் விவசாயிகள் விதைப்பு செய்யலாமா, ஜனவரி-பிப்ரவரி 2010ல் நல்ல விலை கிடைக்குமா என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத்தகவல் மையமானது, மிளகாய் உற்பத்தி செய்யும் மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், பரமக்குடி மற்றும் சென்னை மிளகாய் வியாபாரப் பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டது.


உலகில் மிளகாய் வற்றல் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதன்மை நாடாக விளங்குகிறது.உலக மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் இந்தியா 36 சதவீதம் பங்கு வகிக்கிறது.தொடர்ந்து சீனா, பங்களாதேஷ் பெரு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன. மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரப்பிரதேசம் முதல் மாநிலமாகும். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 13, 9, 7 மற்றும் 2 சதவீதம் பங்குகள் வகிக்கின் றன.

                 தமிழ்நாட்டில் மிளகாய் வற்றல் 2007-08ல் 67 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.83 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிளகாய் வற்றலின் ஏற்றுமதித் தேவை அதிகரித்து வருகிறது. எனவே மிளகாய் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முறையான பயிர் மேலாண்மையை கடைபிடித்து மிளகாய் வற்றல் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Read more »

இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :

                ஸ்ரீமுஷ்ணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூறினார். ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 65 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இயங் கும் இப்பள்ளி குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.இந்நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா, ஸ்ரீமுஷ் ணம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று முன்தினம் ஆய்வு செய்து, ஆசிரியர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். இதன் பின்னர் அவர் நிருபரிடம் கூறுகையில், பள்ளியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற கல்வித்துறை தயாராக உள்ளது. மேலும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட இப்பகுதி முக்கியப் பிரமுகர்கள் இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக புதிய பள்ளிக் கட்டடம்  கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

சிதம்பரம் வக்கீலுக்கு அம்பேத்கர் விருது

சிதம்பரம் :

              சிதம்பரம் வக்கீல் ஜானகிராமனின் சமுதாய பணியை பாராட்டி டில் லியில் அம் பேத்கர் விருது வழங் கப் பட்டது.சிதம்பரத்தை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவரின் சமுதாய பணியை பாராட்டி டில்லி நேஷ்னல் தலித் கமிட்டி சார்பில் அம்பேத்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு டில்லியில் விருது வழங்கப்பட்டது.

Read more »

.மண்ணெண்ணெய் முகவர்களுடன் வாணிபக் கழக அதிகாரி கலந்துரையாடல்

கடலூர் :

                    மாவட்டத்தில் உள்ள 18 மண்ணெண்ணெய் முகவர்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழக  துணை ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.இதில் சிதம்பரம், கடலூர், பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதன் மூலம் 18 லட்சம் லிட்டர் மாதம் தோறும் வினியோகம் செய்யப்படுகிறது.

                        சென்னையில் உள்ள அரசு ஆயில் கார்ப்ரேஷன் மூலம் வழங்கப்படும் மண் ணெண்ணெய் முறையாகவும், குறிப் பிட்ட காலத்தில், அளவு குறையாமல் கொண்டுவரவும், வினியோகத்தை முறைப்படுத்தவும்  டீலர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் மாவட்டத்தில் உள்ள 18  முகவர்களுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  துணை ஆணையர்  முரளிதரன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி, வினியோகத்தை முறைப் படுத்த ஆலோசனை வழங்கினார்.இதில் டீலர்களுக்கு மண்ணெண் ணெய் வந்து இறங்கியதும், சென்னை அலுவலகத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும், பொதுமக்களை பாதிக்காத வகையில் மண்ணெண்ணெய் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வட்ட வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more »

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்புசிறுநீரகவியல் : துறை தலைவர்தகவல்

நெய்வேலி :

                    நோய்கள் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தினால், மனித உயிர்கள் காப்பாற் றப்படும் என என்.எல்.சி., இயக்குனர் கந்தசாமி பேசினார்.இந்திய பொறியாளர் கழகத்தின் நெய்வேலி மையம் சார்பில் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., திட் டம் மற்றும் செயலாக்க துறை இயக்குனர் கந்தசாமி பேசியதாவது :

                 என்.எல்.சி., பணியா ளர்களில் சிலர் நோய் குறித்த விழிப்புணர்வு இல் லாமல் நோய் தீவிரமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதில் சிலர் துரதிஷ்டவசமாக இறக்கின்றனர். மக்களிடையே நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார்.


நிகழ்ச்சியில் செங்கல் பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக் டர் எட்வின் பெர் னான்டோ பேசியதாவது :

                       நமது நாட்டில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற பிறரிடமிருந்து பரவாத நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிக அள வில் உள்ளனர். வரும் 2015ம் ஆண்டில் நமது நாட் டில் மட்டும் நீரிழிவு நோயாளிகளின் எண் ணிக்கை 7 கோடியை தாண் டும் என எதிர்பார்க்கப்படுகிறது.வளரும் நாடுகளுக்கு சிறுநீரக நோய் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து மருத்துவரிடம் செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மக்களுக்கும், அரசுக்கும் நல்லது.சோடியம் அதிகம் உள்ள உப்பு, பாலாடைக் கட்டி, ஊறுகாய், வத்தல், வடகம் ஆகிய உணவுகளையும், பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், ஆரஞ்ச், இளநீர், சாக்லெட்டுகள் மற்றும் டின்களில் அடைக்கப் பட்டு வரும் பொருட் களை தவிர்த்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது என்று பேசினார். இந்திய பொறியாளர் கழகத்தின் நெய் வேலி மைய செயலாளர் சக்ரவர்த்தி, ராமச்சந்திரன், கென்னடி கலந்து கொண்டனர்.

Read more »

ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பால் டாஸ்மாக்கில் வியாபாரம் 'டல்'

கடலூர் :

                       சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் "டல்' அடித்து வருகிறது.மாவட்டத்தில் 229 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி 1.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங் களாக டாஸ்மாக் விற் பனை "டல்' அடித்து வருகிறது. தற்போது ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியுள்ளதால், மாவட்டத் தில் ஏராளமானோர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர்.இதன் காரணமாகவே டாஸ்மாக் கடைகளில் தற்போது தினசரி வருமானம் 66 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. தமிழக அரசு பல்வேறு புதிய மதுபான வகைகளை கொள் முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வந்த போதிலும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை. இதனால் கடைகளில் சரக்குகள் தேங்கி கிடப்பதால் கொள்முதல் செய்த சரக்குகளை முதுநகர் குடோனில் இறக்கி வைக்க முடியாமல் லாரியிலேயே நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன.

Read more »

பள்ளிகளில் செயல் வழிக்கற்றல் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :

                         ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளிகளில்  செயல் வழிக்கற்றல் செயல் பாடு கள் குறித்து பள்ளிகளில்  மத்திய, மாநில அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.இதில் மத்திய மனித வள  மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் கவுதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வம், கடலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் ஸ்ரீமுஷ் ணத்தை அடுத்த ஸ்ரீராமன் காலனி, கீழ்புளியங்குடி, நாச்சியார்பேட்டை காலனி  துவக்கப் பள்ளி கள் மற்றும் சாத்தாவட்டத் தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி களில்  அனைத்து பாடங் களிலும் செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்கள் திறன் அட் டைகளை பயன்படுத் துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.இதில் மாவட்ட தகவல் அலுவலர் வைத்தியநாதன், காட்டுமன்னார்கோவில் வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ், காட்டுமன்னார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பச்சையப்பன், சரஸ்வதி, லட் சுமி, ஆசிரியபயிற்றுநர் பரமசிவம் உடனிருந்தனர்.

Read more »

ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                    ஒரு நபர் குழு அறிக் கையை வெளியிடக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் பொற் செழியன தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் காசிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், அய்யாசாமி, வட்ட இணை செயலாளர் தர்மலிங்கம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

                  திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அண்ணாதுரை, மோகன் ராஜ், சாலைப்பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் கலைவாணன், சந்திரா, வட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன் வட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வருவாய் துறை வட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு பயிற்சி

புவனகிரி :

                   புவனகிரியில் கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புவனகிரி கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளியின் சார் பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப் பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து புவனகிரி சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 2010ஆம் ஆண்டிற்கு பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியை கியாகாண்டோ கராத்தே சங்க மாநில தலைவர் பிரான்சிஸ் சேவியர் துவக்கி வைத்தார். பயிற்சியாளர் ரங்கநாதன் பயிற்சி அளித்தார்.

Read more »

கோ.சத்திரத்தில் உழவர் மன்றம் துவக்க விழா

குறிஞ்சிப்பாடி :

                    குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத் தில் உழவர்மன்றம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் அசோகன் முன்னிலை வகித்தார். கோ. சத்திரம் உழவர் மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி மன்றத்தை துவக்கி வைத்தார்.குறிஞ்சிப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குனர் மல்லிகா, விழுப்புரம் இஸ் அக்ரோ கெமிக்கல்ஸ் மேலாளர் உமாபதி, கட்டியங்குப்பம் கூட்டுறவு வேளாண் கடன் சங்க செயலாளர் செல்வராசு, உழவர் மன்ற கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், உழவர் மன்ற தலைவர் ரவீந்திரன், குமரகுரு, ராமலிங்கம், ஜெயவேல், ஆறுமுகம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Read more »

அறிவுத்திறன் போட்டி

நடுவீரப்பட்டு :

                நடுவீரப்பட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப் பட்ட நூலகத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம்  பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டி நடந்தது. நடுவீரப்பட்டு துவக் கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்தையன், லதா ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மாசிலாமணி, சேப்பெருமாள் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மண்டல விளையாட்டு போட்டிக்கு அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு

கடலூர் :

                    திருச்சியில் நடக்கும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கான மண்டல விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி மாதம் திருச்சியில் நடக்கிறது.இதில் பங்கேற்க கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான தேர்வு போட்டி நேற்று நடந்தது.கடலூர்  அண்ணா விளையாட்டரங்கில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து அணி வீரர்கள் மற்றும் தடகள போட்டிகள் நடத்தி மண்டல போட்டிக்கு 50 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கடலூர் தொழிற்பயிற்சி மையத்தின் விளையாட்டு ஆசிரியர் மகேந்திரவர்மன், பயிற்சி ஆசிரியர்கள் சையத் சலீம், ஆறுமுகம் ஆகியோர் சிறந்த வீரர்கள் தேர்வு செய்தனர்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா,  ஜன., 1, 2010 அன்று நடக்கிறது. அதையொட்டி, நேற்று, கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. அதிகாலை முதல் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டன.காலை 7 மணிக்கு சித்சபைக்கு எதிரில் அமைந் துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடத் தப்பட்டது.  பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், உற் சவ ஆச்சாரியார் சிவசங்கர தீட்சதர் கொடியேற்றினார்.

Read more »

கடலூரில் கைத்தறி கண்காட்சி ரூ.15 லட்சம் இலக்கு: கலெக்டர்

கடலூர் :

                 கடலூரில் துவங்கப் பட்டுள்ள கைத்தறி கண் காட்சியில் 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் என இலக்கு நிர்ணயித் துள்ளதாக கலெக்டர் பேசினார்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரியங்கா ஹாலில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 6ம் தேதிவரை நடக்கிறது. கண்காட்சி துவக்க விழா நேற்று காலை நடந்தது.  டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார்.

                   கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில்,இந்த கண்காட்சியில் விற் பனைக்காக கோவை, மதுரை, சேலம், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்ட பட்டு மற்றும் பருத்தி ரக சேலைகள், குளிர்கால தேவைக்கேற்ற ஈரோடு, சென்னிமலை, கரூர் ஸ்பெஷல் ரக போர்வைகள், படுக்கை விரிப்புகள், கலர் துண்டுகள், தலையணை உறைகள், குறிஞ்சிப்பாடி, நடுவீரப்பட்டு, புவனகிரி கைலிகள், கொசு வலைகள், ஆண்களுக்கான ரெடிமேட் சர்ட்டுகள், பெண்களுக்கான சுடிதார் மெட்டீரியல்ஸ், நைட்டீஸ் மற்றும் அனைத்து ரக கைத்தறி ரகங்களும் இடம் பெற்றுள்ளன.அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்குகிறது. இக்கண்காட்சியின் மூலம் 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைத்தறித் தொழிலை பாதுகாக்கவும், ஏழை நெசவாளர்களின் நலன் காத்திடவும் கைத் தறி ஆடைகளை வாங்கி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Read more »

தி.மு.க., எம்.எல்.ஏ.,விற்கு எதிராக கோஷம் அமைச்சரின் ஆதரவாளர்களால் திடீர் பரபரப்பு

நெய்வேலி :

                நெய்வேலியில் நெல்லிக்குப்பம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சபாராஜேந்திரனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது.கடலூர் மாவட்ட தி.மு.க., செயலாளரான அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க் களான நெல்லிக்குப்பம் சபா ராஜேந்திரன், கடலூர் அய்யப்பன் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

                   நெய்வேலி நகர முன்னாள் தி.மு.க., செயலாளர் நாகலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி நேற்று எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன் ஆகியோர் நெய்வேலி நகருக்கு வந்தனர். மேலும் சபாராஜேந்திரன் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் நெய்வேலி நகர  செயலாளர் புகழேந்தி தலைமையில் அண்ணாதுரை சிலை அருகே திரண்டனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படும் சபாராஜேந்திரன் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க விடமாட்டோம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அண்ணாதுரை சிலைக்கு நாகலிங்கம் மாலை அணிவித்த உடன் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

               பிரச்னைகள் தொடரும்! தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக் குப்பம் சட்டசபை தொகுதி நீக்கப் பட்டுள்ளது. இதனால் சபாராஜேந்திரன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெய் வேலி சட்டசபை தொகுதியை குறிவைத்து வருகிறார். இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்து வருவதால், இது போன்று பல பிரச்னைகள் தொடரும் என கட்சியினர் கூறுகின்றனர்.

Read more »

ஓராண்டில் 1,808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை


நெய்வேலி :

                  என்.எல்.சி., சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற ஓராண்டில் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி., சேர்மனாக கடந்தாண்டு டிச., 17ம் தேதி அன்சாரி பொறுப்பேற்றார். அப் போது கனமழை, சுரங்கம் வெட்ட நிலம் கிடைக்காத காரணங்களால் நிறுவனம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து, இலக்கை எட்ட முடியாத நிலை இருந்தது.

        அன்சாரியின் தீவிர முயற்சி மற்றும் பணியாளர்களின் கடின உழைப்பால் கடந்த ஓராண்டில் 15.765 கோடி கன மீட்டர் மேல் மண்ணை நீக்கியும்,  234.80 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்தும், 1,808.60 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக் கப்பட்டுள்ளது.புதிய திட்டங்களை நிறைவு செய்த வகையில் 2009ம் ஆண்டில் ராஜஸ் தான் மாநிலம், பர்சிங்கர் பகுதியில் இந்நிறுவனம் அமைத்துள்ள திறந்தவெளி சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி துவங்கியுள்ளது. மேலும், அனல்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் பிரிவில் இந் தாண்டு மின்உற்பத்தி துவங்கி மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டது.இதுவரையில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து வந்த என்.எல்.சி., நிறுவனம்,  தனது செயல் பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது தூத்துக்குடியில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையத்தை தமிழக மின்வாரியத்துடன் இணைந்து அமைத்து வருகிறது.

                மேலும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் துறையிலும் ஈடுபடவுள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைகளான புனல் மின்சக்தி மற்றும் சூரியஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி  துறைகளிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சாதனை படைக்க கடினமாக உழைத்த அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் என அனைவருக்கும் அன்சாரி, நன்றி தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior