உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

கண்தானம்:ஜி.பிரபாகரன்

சிதம்பரம்:

                 சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்நத ஜி.பிரபாகரன் (31). இவர் அண்மையில் இறந்தார்.  இவரது கண்களை தானமாக அளிக்க அண்ணன் ஜி.பாலு முன்வந்தார். அதன்பேரில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க நிர்வாகிகள் மூலம் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more »

ஏமாறவேண்டாம் மின்வாரியம் எச்சரிக்கை

சிதம்பரம்: 

                       சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மின்வாரியப் பணியாளர்கள் எனக் கூறிக்கொண்டு, பழைய மீட்டர்களை மாற்ற வேண்டும் எனவும், மேலும் சில காரணங்களை கூறி, மின் நுகர்வோர்கள் வீடுகளுக்கு சென்று சில சமூக விரோதிகள் பணம் வசூலிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. சிதம்பரம் மின்வாரிய பணியாளர்கள் எவரும் மேற்படி செயல்களில் ஈடுபடவில்லை. 

                           எனவே, சமூக விரோதிகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.  மேலும் மின்வாரிய பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் நுகர்வோர்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.மின்வாரியப் பணி நிமித்தமாக வரும் நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.  

               தொலைபேசி எண்கள்: செயற்பொறியாளர்- 94458 56028: உதவி செயற்பொறியாளர்- 94458 56047: இளமின் பொறியாளர்- 94458 56049: உதவி மின்பொறியாளர்- 94458 56048.

Read more »

விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

கடலூர்:    

                          வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை விரைந்து முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு)  எஸ்.நடராஜன் உத்தரவிட்டா.  கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் பெயர்கள் குறித்து வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் சரிபார்த்து வருகின்றனர். வாக்காளர் 1529 பாகங்களாக பிரிக்கப்பட்டு இப்பணி நடந்து வருகிறது. புதியதாக பெயர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதில் களப் பணியாளர்கள் 1008 பேர் ஈடுபட்டு உள்ளனர். அவர்களைக் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.   மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை தாங்கிப் பணிகளை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை விரைந்து முடிக்குமாறு  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Read more »

மதுபாட்டில் கடத்திய கார் ஓடையில் கவிழ்ந்தது

குறிஞ்சிப்பாடி :

                  கடலூர் அருகே ஓடையில் கவிழ்ந்து கிடந்த கார் அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

               க   டலூர் அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையம் செங்கால் ஓடையில் நேற்று அதிகாலை அம்பாசிடர் கார் கவிழ்ந்து கிடந்தது. குள்ளஞ்சாவடி போலீசார் சென்று பார்த்தபோது, கார் அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தபோது கார், ஓடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதும், காரில் வந்தவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துவிட்டு தப்பியுள்ளனர். போலீஸ் விசாரணையில் காரின் பதிவெண் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீசார், கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

Read more »

அம்பேத்கர் சிலை நள்ளிரவில் இடமாற்றம்

விருத்தாசலம் :

                   பழையபட்டினம் கிராமத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த அம்பேத்கர் சிலையை, அதிகாரிகள் நள்ளிரவில் வேறு இடத்தில் மாற்றினர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் நூலகம் அருகில் அரசு அனுமதியின்றி அம்பேத்கர் சிலை கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.  இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்ததால் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

                  வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. கடந்த 25ம் தேதி வெண்மணி தியாகிகள் தினத்தன்று தடையை மீறி சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது சிலையை வேறு இடத்தில் மாற்றி நிறுவப்படும் என அதிகாரிகள்  உறுதியளித்தனர்.  இதை அறிந்த ஒரு தரப்பினர், சிலையை வேறு இடத்திற்கு மாற்ற தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை எடுத்து, அதே பகுதியில் வேறு இடத்தில் நிறுவினர். பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி.,கள் ராஜசேகரன், இளங் கோவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

நகை கடையில் கொள்ளை அடித்து தப்பியவர்களின் கார் சிக்கியது

பரங்கிப்பேட்டை :

                     நகை வாங்குவது போல் நடித்து ஐந்து சவரன் செயினை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியோடியவர்களின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் அடுத்த பு.முட்லூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் நகைக் கடை வைத் துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமிகள் இருவர் நகை வாங்குவது போல் நடித்து, ஐந்து சவரன் செயினை கொள்ளை அடித்துக் கொண்டு மாருதி காரில் தப்பிச் சென்றனர்.

                  இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவந்தனர். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்ற மாருதி கார் நேற்று புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லூர் அருகே காலி மனையில் நின்றிருந்தது. அதன் நெம்பர் பிளேட் உடைக் கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்களை போலீசார்  தேடிவருகின்றனர்.

Read more »

வேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு அபராதம்

கடலூர் :

             மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு கடலூர் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் 2007ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி இரவு 12 மணிக்கு குள்ளஞ்சாவடி ஆலப்பாக்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

               அதில் ஆலப்பாக்கம் ரமேஷ், பிரேம்நாத் படுகாயமடைந்தனர் .இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் மணிகண்டனை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-3ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய மணிகண்டனுக்கு 2,100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Read more »

பண்ருட்டி போலீசை கண்டித்து அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி :

               பண்ருட்டியில் போலீசைக் கண்டித்து அனைத் துக் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. கடை சூறையாடியவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு வரும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண் டித்து அனைத்து கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                       பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ., வட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் சேகர், ம.தி. மு.க., நகர செயலாளர் காமராஜ், அ.தி.மு.க., கவுன்சிலர் கமலக் கண்ணன், தே.மு.தி.க., பன்னீர்செல் வம், புதிய தமிழகம் சுதாகர், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் தெய்வீகதாஸ்,மா.கம்யூ., அர்ச்சுணன், பக்கிரிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

திட்டக்குடியில் பதட்டம் போலீஸ் குவிப்பு



திட்டக்குடி :

                      திட்டக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இருவருக்கு நினைவுத் தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் இடம் தேர்வு செய்துள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.  திட்டக்குடியில் கடந்த 1995ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் வதிஷ் டபுரம் சண்முகம், தொளார் ரமேஷ் இறந்தனர். இவர்கள்  இருவருக்கும் நினைவு தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் இளமங்கலம் கிராமத்தில் அரசு பணிமனைக்கு எதிரில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்தனர்.

                அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அங்கு நினைவுத் தூண் அமைக்க நேற்று காலை மணல் கொட்டப்பட்டது.  இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், 8 சப்- இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இன்று   காலை நடைபெறவுள்ள அமைதி ஊர்வலத்திற்கு வதிஷ்டபுரம் முதல் மணல்மேடு அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி வரை செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Read more »

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா

கடலூர் :

                        கணக்குப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமமான வேலை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் நேற்று கடலூரில் தர்ணா செய்தனர். கணக்குப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமமான வேலை வழங்க வேண்டும். ஏற்றுக் கொண் டபடி நிறுத்தி வைத்துள்ள ஐந்து மாற்றல் உத்தரவை வெளியிட வேண்டும். பணித்திறனை கணக்கில் கொண்டு குழுக்களை மறுசீரமைப்பு செய்ய வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்கள் நேற்று கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன் தர்ணா செய்தனர். மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாநில உதவிச்செயலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட உதவி பொருளாளர் முத்துவேல், மாவட்ட தலைவர் மதியழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Read more »

டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                     டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட் டதை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே டாஸ்மாக் விற்பனையார் முனியப் பன் படுகொலை செய் யப்பட்டதை கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.

                  மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பழனிவேல் வரவேற் றார். அரசு பணியாளர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சீனுவாசன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Read more »

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் குறைகேட்பு: அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

சேத்தியாத்தோப்பு :

               சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.

                  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆலையின் ஆட்சியர் (பொறுப்பு) கலைராஜன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோ, கனகசபை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு பதிவு இல்லாதது,  கரும்பு துறையின் நிர்வாக சீர்கேடுகள், விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் வழங்க வேண்டிய சர்க்கரை வழங்காதது, ஆண்டிமடம் கரும்பு கோட்ட பகுதியில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
                     
                     இந்நிலையில் துல்லிய பண் ணையை விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாதுரை, சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு விதைப் பண் ணையை அமைக்கவில்லை. அதிகம் கரும்பு உற்பத்தி செய்துள்ள  பகுதியில் கரும்பு உதவியாளர்கள் நியமிக்கவில்லை. இவை எல்லாம் ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் மட்டுமே செய்ய வேண்டியவை. ஆனால் மூன்று மாதமாக நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு சில விவசாயிகள் பெற்றுள்ள தடை உத்தரவை காரணம் காட்டி ஆண்டிமடம் பகுதியில் பிற விவசாயிகளிடம் கரும்பை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த மெத் தனப்போக்கை கண்டித்து  வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவருடன் விவசாயிகள் பலரும் வெளியேறினர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆதிமூலம், குணசேகரன், ராமையன், தேவதாஸ் படாண்டவர், டாக்டர் பன்னீர் செல்வம், ராமானுஜம், வீரசோழன், குஞ்சிதபாதம், பாபு  ஆகியோர் பேசினர்.

Read more »

அரசு துறைகளில் 2 லட்சம் காலி பணியிடங்கள்: வருவாய் ஊழியர் சங்க பொதுச்செயலர் பேட்டி

கடலூர் :

                 மாநில அரசு துறைகளில் இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் ராஜ்குமார் கூறினார்.

தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் ராஜ்குமார் நேற்று  கூறியதாவது:

                         அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், ஒப்பந்த முறையில் பணியாற்றிய 11 ஆயிரம் பேரில் நான்காயிரம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  ஐகோர்ட்டில் வழக்கு போட்ட போது படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு தரப் பில் கூறப்பட்டுள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், 2.2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இவற்றை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

                          தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்களும், சார்பு நிறுவனங்களில் 6 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட் டத்தை அரசு இலவசம் என கூறிவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்தவுடன் 25 சதவீத கட்டணத்தைச் செலுத்துமாறு கூறுகிறது. எனவே, கட்டணமில்லா சிகிச்சை முறையை அமல்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி சிகிச்சை பெற வகை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

Read more »

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

கடலூர் :

                     ஊதிய உயர்வை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணக்கோரி  அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.இந்தியாவில் பொதுத்துறையில் ஐந்து கோடி ரூபாய் மூலதனத்தில் 1956ல் துவக்கப்பட்ட எல்.ஐ.சி., நிறுவனம் உலகின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறது.

                     கடந்த ஆண்டு மட்டும் தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவ னங்கள் 4,899 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ள நிலையில் மத்திய அரசு எல்.ஐ.சி.,யை சீரழிக்க அன்னிய முதலீடு உயர்வு, இன்சூரன்ஸ் சட்ட திருத்தங்கள் முதலியவற்றை செய்ய துடித்துக் கொண்டுள்ளது.நியாயமான வளர்ச்சிக் கேற்ற ஊதிய உயர்வை வழங்க கோரி நேற்று கடலூர் அலுவலகத்தில் வேலை நிறுத்தம் நடந்தது.இதையொட்டி வாயிற் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் சுஜாதா தலைமையில் நடந்தது.கோரிக்கைகளை விளக்கி கிளை செயலாளர் சுகுமாறன், கோட்ட இணை செயலாளர் மணவாளன் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பி.எஸ். என்.எல்., சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், பாலகிருஷ் ணன் பேசினர். சுகுமார் நன்றி கூறினார்.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

பண்ருட்டி :

                      மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி  சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புவனேஸ்வரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

      பண்ருட்டி தாலுகாவில் மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந் தது. இதில் விடுபட்டவர் கள் புகைப்படம் எடுக்கும் பணி பண்ருட்டி தாலுகா அலுவலக முதல் மாடியில்  நேற்று முன்தினம் துவங்கியது.

                 மூன்று மாதம் நடைபெறும் இந்த முகாமில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுக்க வரும் பயனாளிகள் ரேஷன் கார்டு, விவசாய சமூக பாதுகாப்பு அட்டை, தொழிலாளர் நல வாரிய அட்டையுடன் ஆஜராக வேண்டும். மேற்படி அடையாள அட்டை  இல்லாதவர்கள் அந்ததந்த வி.ஏ.ஒ.விடம் 72,000ரூபாய்க்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் ரேஷன் கார்டு மற்றும் வருமான சான்றுடன் ஆஜராகி புகைப்படம் எடுத்துகொள்ளலாம்.

Read more »

ஜனாதிபதி விருது அதிகம் பெற்ற கடலூர் மாவட்டத்திற்கு பாராட்டு

சிதம்பரம் :

            மாநில அளவில் அதிக அளவில் ஜனாதிபதி விருது பெற்ற கடலூர் மாவட்டத்தை பாராட்டி முதன்மை கல்வி அலுவலருக்கு கேடயம் வழங்கப் பட்டது.மாநில அளவில் கடலூர் மாவட்ட சாரண, சாரணியர் அதிகமான எண் ணிக்கையில் ஜனாதிபதி விருது பெற்றதை பாராட்டி சென்னையில் நடந்த மாநில சாரண இயக்க பொதுக்குழு கூட் டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லிக்கு, மாநில சாரண துணை ஆணையர் லட்சுமி  கேடயம் வழங்கினார்.நிகழ்ச்சியில் சாரண செயலாளர் ராஜேந்திரன், மாநில சாரண ஆணையர் வசுந்தர தேவி, மாநில பொருளாளர் விஜயம், இளையகுமார் பங்கேற்றனர்.

Read more »

விழுப்புரம்- மயிலாடுதுறை சரக்கு ரயில் 3 முறை இயக்கம்

கடலூர் :

                   விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல பாதையாக மாற் றும் பணி கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. ரயில்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத் தப்பட்டது.

                        கடந்த 5ம் தேதி இரண்டு சரக்கு ரயிலும், 7 மற்றும் 17ம் தேதிகளில் தலா ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. நேற்று ஐந்தாவது முறையாக மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. மயிலாடுதுறையில் காலை  7.30 மணிக்கு 45 காலி வேகன்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காலை 9.58 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து விழுப்புரம் சென்றது. பின் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் மாலை 3.20 மணிக்கு கடலூரை கடந்து கும்பகோணம் சென்றது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருவதற்காக தஞ்சாவூருக்கு மற்றொரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

Read more »

தனியார் பள்ளி மழைநீர் சேகரிப்பு தொட்டி இடிந்து விழுந்து எல்.கே.ஜி., மாணவன் சாவு

பரங்கிப்பேட்டை :

                       சிதம்பரம் அருகே தனியார் பள்ளி மழைநீர் சேகரிப்பு தொட் டியில், நான்கு பள்ளி சிறுவர்கள் விழுந்ததில் ஒருவர் இறந்தார்; மூவர் காயமடைந்தனர். பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                          சிதம்பரம் அடுத்த பரங்கிப் பேட்டை கரிக்குப்பத்தில் மர் ஹபா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.  நேற்று காலை 11.30 மணிக்கு இடைவேளை நேரத் தில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள தோட் டத் தில் விளையாடினர். சில மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது நின்று விளையாடியபோது திடீரென தொட்டியின் சிலாப் உடைந்து உள் வாங்கியது.சிலாப் மீது நின்றிருந்த எல்.கே.ஜி., மாணவர் சுதன், யு.கே.ஜி., மாணவர்கள் மகாஷி, தீபிகா, திவாகர் ஆகியோர் ஆறு அடி ஆழமுள்ள மழைநீர் தொட்டியின் உள்ளே விழுந்தனர். மாணவர்களின் அலறல் சத் தம் கேட்டு எல்.கே.ஜி., ஆசிரியை சுரேஷ்குமாரி, நான்கு மாணவர்களையும் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மாணவர் சுதன் இறந்தார். மற்ற மூன்று மாணவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப் பட்டு வருகிறது.மாணவர் சுதன் இறந்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, பள்ளி நிர்வாகத்தினர் தலைமறைவாகினர்.

                    தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து ஓடி வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இறந்த மாணவர் சுதன், சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவேசத்துடன் பள்ளிக்கு சென் றனர். அவர்களை, பரங்கிப் பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சமாதானம் செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், மாணவர் சுதன் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு மருத்துவமனை முன் சின்னூர் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதையேற்று மறியல் கைவிடப்பட்டது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

                      காரணம் இது தான்: பள்ளி கட்டடத்தில் இருந்து  20 அடி தூரத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளது. பள்ளி கட்டடத்தில் விழும் மழைநீர் அங்கு செல்ல பைப் இணைப்பு எதுவும் இல்லை. தரமாகவும் கட்டவில்லை. இதனால், பள்ளி சிறுவர்கள் மேலே ஏறி விளையாடிய போது உள் வாங்கியுள்ளது. பள்ளி எதிரே விளையாட இடம் இருந்தும், பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளிக்கு பின்னால் சென்று விளையாட கூறியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior