உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதி: பழ. நெடுமாறன்


            
             நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.  
 
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அளித்த பேட்டி: 
 
                 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியானது அல்ல.  கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பது குற்றம் உள்ள நெஞ்சின் குறுகுறுப்பைக் காட்டுகிறது.  தன் மீதும், தனது குடும்பத்தின் மீது வஞ்சகம் தீர்க்கும் படலத்தை சிறப்பாக சிலர் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று கூறும் கருணாநிதி, வஞ்சகம் செய்தவர்களை பகிரங்கமாக வெளியில் கூற வேண்டும்.  
 
             அலைக்கற்றை விவகாரத்தில் கைதாகி சிறையிலுள்ள கட்சியின் கொள்கை விளக்க பிரசார குழுச் செயலரான ஆ. ராசாவை பார்க்கச் செல்ல விரும்பாதவர், மகளைப் பார்க்க செல்கிறார். தமிழகத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறது. மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். எனவே, புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.  தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களுக்கு எதிரான இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும் என்றார் நெடுமாறன்.
 
 

Read more »

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலைவிபத்தில் மரணம்


         
             
  திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
             இந்நிலையில், வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதியும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கால் மணி நேர இடைவெளியில் அவர் யதேச்சையாக விபத்துக்கு உள்ளான மரியம் பிச்சையின் காரைக் கண்டு நிறுத்தி உதவியுள்ளார். உடனடியாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய, அங்கிருந்து அவர் திருச்சி திரும்பினார். ஆனால், சிவபதியின் காரும் விபத்துக்கு உள்ளானதாக காலையில் தகவல் பரவியது. 
 
           இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், சாலைவிபத்தில் பலியான அமைச்சர் மரியம்பிச்சைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
 
 

Read more »

இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைப்பு

             சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பழைய பாடப் புத்தகங்களே பயன்படுத்தப்பட உள்ளன.  பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

           அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.50 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.  கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென்று அப்போது முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:  இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது.  

ஆராய வல்லுநர் குழு: 

                சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, இந்தக் கல்வியாண்டில் பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. முன்னதாக, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், "ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் அதற்கான பணிகளில் அந்த அரசு ஈடுபட்டது.  

               சமச்சீர் கல்வித் திட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆராய, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை 2007-ம் ஆண்டு அரசுக்கு அளித்தது.  சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு சில தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டத்தை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  ஆனாலும், இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. இதையடுத்து, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.  இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதால், பழைய புத்தகங்களை மாணவர்கள் தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது

பழைய பாடத் திட்டத்தின் கீழ் 6 கோடி புத்தகங்கள் புதிதாக அச்சடிப்பு


              சமச்சீர் கல்விக்குப் பதிலாக இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளதையடுத்து, புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.  பத்தாம் வகுப்பு வரை 2011-12-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்திருந்தது. இதற்காக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் 7.68 கோடி புத்தகங்களை அச்சிடும் பணிகளை மேற்கொண்டு வந்தது.  சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இதுவரை 6.5 கோடி புத்தகங்கள் ரூ.216 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ளன. 

              இந்த நிலையில் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றும் அரசின் முடிவையடுத்து, சமச்சீர் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சமச்சீர் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன. அந்தப் பணிகளே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், ஜூன் 15-ம் தேதிக்குள் புத்தகங்களை முழுவதுமாக அச்சிட்டு வழங்குவது சாத்தியமில்லாதது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

             முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்துப் பாடல் உள்ளிட்ட படைப்புகள் சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவதை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.  அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்களை அச்சிடுவது தொடர்பாக பதிப்பாளர்களிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:  

              பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களைப் புதிதாக அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை அளித்து புத்தகங்கள் பதிப்பிக்கப்படும்.  புத்தகங்களை அச்சிடும் பணிகள் முழுவதுமாக முடிய 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகலாம். இந்தப் பணிகளுக்காக மொத்தம் 14 ஆயிரம் டன் அச்சுக் காகிதம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை அச்சிட ரூ.110 கோடி வரை செலவாகலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.  இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்காக புதிதாக டெண்டர் கோரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமச்சீர் கல்வி புத்தகங்கள் பெரியதாகவும், பல வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டதால், அதிக செலவு ஆனது. ஆனால், பழையப் பாடத்திட்டத்தின் படி சிறிய புத்தகங்கள், குறைந்த அளவிலான வண்ணங்களில் தயாரிக்கப்படுவதால் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 பழையப் புத்தகங்கள்: 

               தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் இப்போது 40 ஆயிரம் பழையப் பாடப் புத்தகங்கள் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதோடு, அந்தந்தப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், பழைய மாணவர்களிடமும் புத்தகங்கள் இருக்கும். இணையதளத்திலும் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை வைத்து ஜூன் 15 முதல் பள்ளிகளில் பாடங்களை நடத்த முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.  அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழையப் புத்தகக் கடைகளையும், முன்னாள் மாணவர்களையும் பள்ளி மாணவர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

இடம் இல்லை:  

               தமிழகம் முழுவதும் 65 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் ஒரு மையத்தை அமைத்து சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.  இப்போது புதிதாக அச்சடிக்கப்பட உள்ள 6.4 கோடி புத்தகங்களை இந்த மையங்களில் வைத்து விநியோகிக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 கிடங்குகளிலும் சமச்சீர் புத்தகங்கள் நிறைந்துள்ளன.  எனவே, புதிதாக அச்சடிக்கும் புத்தகங்களை எப்படி எடுத்துச் சென்று விநியோகிப்பது, ஏற்கெனவே அச்சடித்துள்ள புத்தகங்களை என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  பதிப்பாளர்கள் மூலம் புத்தகங்களை நேரடியாகப் பள்ளிகளுக்கே எடுத்துச் சென்று விநியோகிக்கும் யோசனையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Read more »

என்.எல்.சி.சார்பில் மின் உற்பத்தியை 1 கோடி யூனிட்டாக அதிகரிக்க நடவடிக்கை

            நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) சார்பில், ஒரு மணிக்கு ஒரு கோடி யூனிட்டாக மின் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி. நிறுவன தின விழா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏ.ஆர்.அன்சாரி பேசியது:

          உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் என்.எல்.சி. 59-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நவரத்னா தகுதி பெற்றுள்ள  19-வது நிறுவனம் என்.எல்.சி. ஆகும். அதற்கு உயர்ந்த நிலையான மகாரத்னா நிலையை விரைவில் இந்த நிறுவனம் அடையும். இப்போது மணிக்கு சுமார் 25 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை ஒரு கோடி யூனிட்டாக அதிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

            இதை மணிக்கு 2 கோடி யூனிட்டாக அதிகரிக்கும் பட்சத்தில் மகாரத்னா இலக்கை அடைய முடியும். 2009-10-ம் நிதியாண்டில் நிறுவனம் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியில் இயங்கும் புதிய நிலையங்களை என்.எல்.சி. அமைக்க உள்ளது. இதற்காக நிலக்கரி சுரங்கங்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மிகக் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் இனி நிலைத்து நிற்க முடியும். எனவே உற்பத்தி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

               நிறுவனத்தின் இயக்குநர்கள் பி.சுரேந்தர் மோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜெ.மகிழ்செல்வன், எஸ்.கே.ஆச்சார்யா உள்ளிட்ட பணியாளர்கள், தொழிற் சங்கங்கள், பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Read more »

வேலைவாய்ப்புப் பதிவை பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்

கடலூர்:

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 25-ம் தேதிமுதல் தங்கள் பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              2011 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டியதை, அவர்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  இணையதளம் மூலம் இப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை வழங்கப்படும். ஏற்கெனவே 10-ம் வகுப்பு தேர்ச்சியை பதிவு  செய்தவர்களும், கூடுதல் கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சியைப் பதிவு செய்து கொள்ளலாம்.  

              இதற்காக மாணவர்கள் தங்களது குடும்ப அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வருதல் வேண்டும்.  இப் பதிவுக்காக எவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்துத்துச் செல்லத் தேவையில்லை. பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இப்பதிவு பள்ளிகளில் 25-5-2011 முதல் 10-6-2011 வரை நடைபெறும். இந்த நாள்களில் எப்போது பதிவு செய்தாலும் 25-5-2011 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாதக் கருதப்படும்.  மாவட்டக் கல்வித்துறையும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

மாணவர்களுக்கான என்.எல்.சி. பஸ் பாஸ் கட்டணம் ரூ.100 ஆக உயர்வு

நெய்வேலி:

              நெய்வேலி நகரில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கிய என்.எல்.சி. பஸ் பிரிவு இந்த ஆண்டு அக்கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்தி அறிவிப்புச் செய்துள்ளது.

               மந்தாரக்குப்பம், தாண்டவன்குப்பம், வட்டம் 21, 28, 29, 30 பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நகரியத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர மேற்கண்ட பகுதிகளிலிருந்து என்.எல்.சி. பஸ் பிரிவு ரூ.15 சலுகைக் கட்டணத்தில் பஸ்களை இயக்கி வந்தது. இந்த பஸ் பாஸ்களை ஒவ்வொரு பள்ளி மூலமாக என்.எல்.சி. பஸ் பிரிவு விநியோகித்து வந்தது.

              இதனால் பல ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வந்தனர்.÷இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பஸ் கட்டணம் திடீரென ரூ.100 ஆக அதிகரித்து என்.எல்.சி. பஸ் பிரிவு உத்தரவு பிறப்பித்து ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. ஆனால் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபமீட்டும் என்.எல்.சி. நிறுவனம் திடீரென பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வியப்பாக உள்ளது.

            பஸ் பிரிவை ஒரு சேவை நோக்குடன் நடத்தி வரும் என்.எல்.சி. நிறுவனம், நெய்வேலி நகர பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் (குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.4) பஸ்களை இயக்கிவரும் என்எல்சி நிறுவனம், மாணவ, மாணவியரின் நலனில் ஏன் பாரபட்சம் காட்ட வேண்டும்? ஒரு அரசாங்கம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிவரும் வேளையில் சில ஆயிரம் மாணவர்கள் பெறுகிற இந்த கட்டணச் சலுகையை ஏன் உயர்த்த வேண்டும்? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.



Read more »

கடலூர் மாவட்ட ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் பட்டியல் தயார்

கடலூர்:

               கடலூர் மாவட்ட ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் பட்டியலை காவல் துறையினர் தயாரித்து வருகிறார்கள்.

                புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ள காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம், தமிழ்நாட்டில் ரௌடிகள் சாம்ராஜ்யம், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக ரெüடிகள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போர், கடும்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

              கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் இப்பட்டியல் கடந்த 2 நாள்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2 நாள்களாக, இரவு பகலாக போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில், 200 போலீஸôர் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட எல்லைப் பகுதிகள், ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 125 லாட்ஜுகள் சோதனையிடப்பட்டன. கடந்த 2 நாள்களாக நடந்த சோதனைகளில், 109 சந்தேகத்துக்கிடமான நபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

              நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருக்கத் தலைமறைவாக இருந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள 133 பேரை போலீஸôர் கைது செய்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளச் சாராய வழக்குகளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து விதிகளை மீறி, குடிபோதையில் வாகனங்களை ஓட்டியோர், ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் 334 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

             புதிய ஆட்சி பொறுப்பு ஏற்று சட்டப்பேரவைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் காவல் நிலையங்களில் லாக்அப்பில் யாரையும் அடைத்து வைத்து இருக்க வேண்டாம். குற்றச்சாட்டு இருந்தால் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உடனே அனுப்பி விடவேண்டும், 6 மணிக்கு மேல், பெண்கள் மற்றும் முதியோரைக் காவல் நிலையங்களுக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் காவல் நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.



Read more »

நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

நெய்வேலி:

            கடலூர் மக்களளவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.

             நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவன ஆதரவுடன் செயல்படும் ஜவகர் கல்விக் கழகத்தின்கீழ் ஜவகர் அறிவியல் கல்லூரி கடந்த 1987-ம் ஆண்டுமுதல் செயல்படுகிறது. இக்கல்லூரியை அப்போது மத்திய இணையமைச்சராகவும், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். இக்கல்லூரியில் 9 இளங்கலைப் பட்டப் படிப்பும், 2 முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது. 1,600 மாணவர்களுடன், 28 நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் 25 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், 30-க்கும் மேற்பட்ட தாற்காலிக பேராசிரியர்களும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கல்லூரி நடத்துவதில் அதிக செலவினங்கள் ஏற்படுவதாகவும்,மேலும் ஆண்டுக்காண்டு நஷ்டம் அதிகரித்து வருவதாகக் கூறி, நெய்வேலி ஜவகர் கல்விக்கழகம் கல்லூரியை மூடுவது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகத் தெரிகிறது.

              மேலும் இந்த ஆண்டுக்கான இளங்கலைப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தையும் நிறுத்திவைத்தது. இதற்கு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்நிலையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சந்திரசேகர், திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து பேராசியர்களிடமும், ஜவகர் கல்விக்கழக நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார். 

             இணை இயக்குநர் வருகையை அறிந்த நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகிகள் இணை இயக்குநரை சந்தித்து கல்லூரியை மூடக்கூடாது என வலியுறுத்தியதோடு, சுற்றுப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கல்லூரியை தொடர்ந்து நடத்த ஆவண செய்யவேண்டும் என்றனர். கல்லூரியின் பேராசிரியர்கள் நலச் சங்க நிர்வாகி ராஜேந்திரன், கல்லூரியில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடு தொடர்பான மனுவையும் இணை இயக்குநர் சந்திரசேகரிடம் வழங்கினார். 

             இந்நிலையில் கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி, மே 18-ம் தேதி என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியை சந்தித்து,  ஜவகர் அறிவியல் கல்லூரியை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முறையிட்டுள்ளார். அப்போது என்.எல்.சி. நிறுவனம் நவரத்னா தகுதி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன்,  ஜவகர் அறிவியல் கல்லூரியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும், பேராசிரியர்களின் சம்பளம் தொடர்பாக மத்திய அரசு மூலமாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பரிந்துரை செய்து, அவர்களின்  ஊதியத்துக்கான மானியம் பெற்றுத்தர பரிந்துரை செய்கிறேன்.

             நீங்களும் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுத்து நெய்வேலியைச் சுற்றிவாழும் மாணவ,மாணவியர் பாதிக்கப்படாவண்ணம் கல்லூரி தொடர்ந்து இயக்கவேண்டும் என்று கோரியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கல்லூரி தொடர்ந்து இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.

              இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சனிக்கிழமை முதல் 2011-2012-ம் ஆண்டு புதிய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்ப டிப்புக்கான விண்ணப்பத்தை விநியோகிக்க தொடங்கியுது. சனிக்கிழமை சுமார் 50 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வி.டி.சந்திரசேகர் தெரிவித்தார்.  



Read more »

கடலுரில்அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு வரவேற்பு

கடலூர்:

           முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், ஊரகத் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எம்.சி. சம்பத், ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாகக்  கடலூர் வந்தபோது, அவருக்கு எளிமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

            அமைச்சர்கள் முதல்முறையாக மட்டுமன்றி, எப்போது வந்தாலும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் பத்திரிகை விளம்பரங்கள், வழியெங்கும் கொடி தோரணங்கள், கோஷ்டிகள் போட்டி போட்டுக் கொண்டு, நகர வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் வெளியே தெரியாமல் மறைந்து போகும் அளவுக்கு வைக்கும் டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார வளைவுகள், எங்கும் அமைச்சர்களின் துதிபாடும் கோஷங்கள்தான் கடந்த தி.மு.க. ஆட்சியின் அமைச்சரவைக் கலாசாரம்.

           இந்த சம்பிரதாயங்களையும் சடங்காச் சாரங்களையும் தகர்த்தெரியும் வகையில் ஜெயலலிதாவின் ஆணைப்படி, மிக எளிமையாக, அமைச்சர் எம்.சி. சம்பத்துக்குக் கடலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டதைப் பொதுமக்கள் பலராலும், நம்பவே முடியவில்லை.  மாலை 6-15 மணிக்கு கடலூர் நகருக்குள் வந்த அமைச்சர் சம்பத், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.÷அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் அமைச்சர்  எம்.சி. சம்பத் வாழ்க, ஊரகத் தொழில்கள் அமைச்சர் வாழ்க என்று கோஷமிட்டார்.

             அவரை அமைச்சர் சம்பத் உடனேயே கையசைத்துக் கட்டுப்படுத்தினார். கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் சிலரும் அவரைக் கண்டித்ததுடன், "என்ன அமைச்சரை வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறாயா? அம்மா வாழ்க என்பதுடன் நிறுத்திக் கொள்' என்று கூறிக் கட்டுப்படுத்தினர்.  அதைத் தொடர்ந்து, சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அமைச்சர் சம்பத், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு, சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கூடியிருந்தாலும், எங்கும் எளிமையே கோலோச்சி இருந்தது.

            கட்சியினர் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த எளிமை என்றும் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் பலர் தூரத்தில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் வருவதற்கு முன்னரே சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் அமைச்சரை வரவேற்கக் காத்து இருந்தனர்.

             அமைச்சர் சுற்றுலா மாளிகை அறையில் நுழைந்ததும், தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு அமைச்சரின் அறைக்குள் நுழைந்து விட்டனர். எனவே சற்று நேரம் காத்து இருந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர். அமைச்சரை அ.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலர்  முருகுமணி, மருத்துவ அணிச் செயலாளர் சீனிவாசராஜா, மீனவர் அணிச் செயலர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சிவசுப்பிரமணியன், ஒன்றியச் செயலர் பழநிச்சாமி, நகரச் செயலர் ஆர். குமரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.



Read more »

வடலூருக்கு சுற்றுலா வந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி மாயம்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூருக்கு சுற்றுலா வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றி சிறுமி மாயமானார். 

              ராமநாதபுரம் மாவட்டம், குமுதி செங்கப்படையைச் சேர்ந்தவர் பசுபதி செல்வம். இவரது மகள் சித்திரைச்செல்வி (11). மனநலம் குன்றிய இவர், ராமநாதபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மூளை வளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார். இப்பள்ளியை நடத்தி வரும் பானுமதி (41), கடந்த 6ம் தேதி தனது பள்ளியில் படிக்கும், 12 மாணவர்களுடன் சுற்றுலாவிற்கு புறப்பட்டார். கடந்த 14ம் தேதி கடலூர் மாவட்டம், வடலூரில் சத்திய ஞானசபையைப் பார்த்துவிட்டு பஸ் நிலையத்திற்கு வரும் வழியில், சித்திரைச்செல்வி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பானுமதி கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன சிறுமி சித்திரைச்செல்வியை தேடிவருகின்றனர்

Read more »

அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

 http://img.dinamalar.com/data/large/large_244715.jpg




சிதம்பரம் : 

           சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் முதுகலை இயற்பியல் படித்த பழைய மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர். 

              சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், முதுகலை இயற்பியல் பாடப்பிரிவில் 1984 - 86ம் ஆண்டு 73 பேர் படித்துள்ளனர். அவர்கள் தற்போது விஞ்ஞானிகளாக, கம்ப்யூட்டர் துறை வல்லுனர்களாக, பேராசிரியர்களாக, பல்வேறு துறைகளில் உயர் பதவிகள், பள்ளி ஆசிரியர்களாக, தொழிலதிபர்களாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் படித்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என வசித்து வரும் அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தனர். 

              சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணி செய்யும் கோபி ஆனந்தன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இயற்பியல் துறை பேராசிரியர் ராமசாமி ஆகியோர் அதற்கான முயற்சியில் இறங்கினர். ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தங்களின் விருப்பங்களைத் தெரிவிக்க அனைவரும் சந்திக்க முடிவு செய்து, நேற்று அவர்கள் படித்த அண்ணாமலை பல்கலை இயற்பியல் துறை வளாகத்தில் சந்தித்துக் கொண்டனர். 

             சந்திப்பு நிகழ்ச்சியில், அமெரிக்காவில் இன்ஜினியர் தனசேகரன், மத்திய அரசின் தொழில் முனைவோர் அமைப்பு உதவி பொது மேலாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பெங்களூரு விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி முருகன், தேசிய தகவல் தொடர்பு துறை அதிகாரி வெங்கட்ட ரமண ஆனந்தன், டில்லி விமான நிலைய அதிகாரி புனிதவதி ஞானம்மாள், டில்லி ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் மேரி எலிசபெத், ரயில்வே அதிகாரி சர்தார், தொழிலதிபர் புருஷோத்தமன் உள்ளிட்ட பழைய மாணவர்கள் 45 பேர், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் மனைவி மற்றும் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டனர். 

               தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர். அவர்கள் படித்தபோது எடுத்த குரூப் போட்டோவை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்ததுடன் மனைவி, குழந்தைகளுக்கு காண்பித்து மகிழ்ந்தனர். இறுதியில் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பு முன் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்த அவர்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.
   
  

Read more »

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயத்திற்கு ரூ.972 கோடி கடன்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 972 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.. 

கடலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி கடன் திட்டத்தை வெளியிட்டு கூறியது: 

          கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2011 - 12ல் ஆண்டு கடன் திட்டம் 1,662.55 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்காக 1,150.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 69 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2010 - 11ம் ஆண்டில் ஆண்டு கடன் திட்டம் 1,448.50 கோடி ரூபாய். இந்த ஆண்டு 14.77 சதவீதம் வளர்ச்சியை திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மை துறையில் 1,017.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,041.89 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

              வேளாண்மை இல்லாத பிற திட்டங்களுக்கு 66.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 68.56 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கடன் திட்டத்தின் மூலம் 3,73,335 பயனாளிகள் பயனடைய உள்ளனர். நடப்பு ஆண்டில் பயிர் கடனாக மட்டும் 972.64 கோடி ரூபாய் பயர் கடனாக வழங்கப்படவுள்ளது. வணிக வங்கிகளின் மூலம் 1,307.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,752.72 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் 255.70 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.



Read more »

Annual Credit Plan for Cuddalore launched for the finacial year 2011-2012

CUDDALORE: 

          Collector P.Seetharaman launched the Annual Credit Plan for the current financial year of 2011-2012 with a total outlay of Rs.1,662.55 crore at his camp office here on Saturday.

              The allocation is higher by Rs.214.02 crore, an increase of Rs.14.77 crore, over that of the previous financial year's Rs.1,448.53 crore. The Collector said that since Cuddalore was primarily an agrarian district, the lion's share of Rs.1,150.86 crore (69 per cent of the ACP) had been earmarked for agriculture.

             While the share of the other priority sector would be Rs.442.49 crore (27 per cent), exposure to the non-farm sector credit would be only Rs.69.20 crore (four per cent).
The Collector noted that a total number of 3,73,335 people would benefit from the new ACP, and of them 21,000 would be beneficiaries of various government-sponsored schemes to the tune of Rs.135.40 crore. The ACP had made provision for extending crop loans to the extent of Rs.972.64 crore, for minor irrigation – Rs.64.22 crore, farm mechanisation – Rs.39.59 crore and for dairy development – Rs.25.08 crore.
   
          While nationalised banks would take up the major responsibility of disbursing 78.62 per cent of the credit, the share of the cooperative banks would be 15.38 per cent. The Collector said that in the previous year, the commercial banks gave away credit totalling Rs.1,752.72 crore, far in excess of their aggregate target of Rs.1,307.05 crore, an achievement of 121 per cent. On the occasion, the banks had been directed to ensure that all agricultural jewel loans as well as crop loans were brought under the crop insurance scheme.

                The crop insurance premium was highly subsidised by the government and therefore the scheme would be beneficial to farmers and banks because it would act as a risk mitigation mechanism. The banks were also cautioned that if they did not adhere to the guidelines they would have to forego interest subvention on crop loans and also classify the entire agriculture jewel loans (carrying an interest rate of 7 per cent) as non-priority advances (carrying higher percentage of interest).

           It was also brought to the notice of the district administration that the repayment of the loans sanctioned under the government-sponsored schemes, to the self-help groups, and educational loans were irregular and overdue and the amount thus given away had to be classified as non-performing assets. The defaulters were not even responding to the legal notices or the field-level officials. The lead bank (Indian Bank) had asked the banks concerned to furnish the details of the overdue amount for taking necessary recovery measures.



Read more »

Sethiathope M.R.Krishnamurthy Cooperative sugar mill sets target

CUDDALORE:

           The M.R.Krishnamurthy Cooperative Sugar Mill at Sethiathope has set itself a target of achieving its maximum installed crushing capacity of 4.3 lakh tonnes of sugar cane during 2011-2012.

           This will be higher by 1.6 lakh tonnes than the targeted crushing of 2.7 lakh tonnes of sugar cane for the financial year 2010-2011, according to Asia Mariam, Special Officer of the cooperative sugar mill. In a statement released here, Ms Mariam said that even the 2.7-lakh-tonne target was higher than the previous financial year's target of 2.1 lakh tonnes.

        The crushing performance was being increased to meet the bagasse requirements of the proposed 15-MW co-generation plant to be set up by the sugar mill. The Special Officer further noted that the mill could realise its target only through expanding the area under sugar cane and encouraging farmers to raise cane varieties with high recovery rate or high sugar potential. She also said that as of now, the cooperative sugar mill had under its purview a registered sugar cane area spreading over 11,000 acres. However, for attaining the full crushing potential of the sugar mill, the management had called upon farmers to increase the area under sugar cane.

         Moreover, she pointed out that the COC -86032 sugar cane variety had proved to be rich in sugar content but it was grown in a comparatively smaller area. Therefore, Ms Mariam called upon the farmers to take to high yielding varieties such as COC-86032, COC-24 and S.I-7 . She promised all help to the farmers in getting the required quantity of seed sugar cane. Ms Mariam also thanked the farmers and transporters for having ensured uninterrupted supply of sugar cane to the mill.



Read more »

Dismantling of Sri Selva Vinayagar temple to begin in Cuddalore



Rituals were performed at Sri Selva Vinayagar Temple situated on Nethaji Road in Cuddalore on Sunday.


CUDDALORE: 

         Special pujas and “palalayam” rituals were performed before the dismantling of the 200-year-old Sri Selva Vinayagar Temple situated on Nethaji Road here on Sunday. The presiding deity will soon be shifted to a new temple coming up on an adjacent site.

        According to sources, prior to renovation or reconstruction of an ancient temple, “palalayam” would have to be performed and after which the sanctum sanctorum would be closed and the main deity shut out from the public worship. The original idol thus taken out would be preserved as per the ‘Agama sastras.' Until the new structure is ready, an alternative idol - carved out of granite or wood - would be placed for worship in a temporary shelter on the same precinct.

          In this case, two shrines - that of Sri Selva Vinayagar and Draupadi Amman - are located on the same premises.

Sri Selva Vinayagar Devotees' Trust has taken up the reconstruction work for two reasons: 

             Nethaji Road that forms part of East Coast Road is a narrow stretch and, therefore, facing the imminent threat of demolition by the Highways Department; second, the temple structure has started getting dilapidated. The Trust, therefore, has drafted a plan to reconstruct both the shrines at an estimated cost of Rs. 1 crore.

          The shrine for Sri Selva Vinayagar is nearing completion and the granite stones for the purpose have been brought from Thiruvakkarai. The old shrine of Draupadi Amman has been pulled down and the stones to be disassembled from the existing structure would be utilised for reconstruction. Secretary of the Trust R. Ganapathy told The Hindu that the services of Sthapathi K.P. Athiappan of Salem had been requisitioned for the purpose. In the new Sri Selva Vinayagar shrine, only the “vimanam” had to be erected and for the Draupadi Amman shrine, the basement and the construction of lotus pedestal (Padma Peedam) were completed.



Read more »

Flood control measures yet to take off in Cuddalore district

CUDDALORE: 

          Flood control measures at a total outlay of Rs. 600 crore are yet to take off in Cuddalore district.

        The Assembly elections have stalled the tender procedures for assigning as many as 54 works in this regard, according to K.V. Elangeeran, president of the Vettuvaikkal and Naraikkal Eri Paasana Vivasayigal Sangam. In a statement released here, Mr. Elangeeran said that under the flood control scheme, it was proposed to take up various works such as strengthening weak bunds, lining up canals with tiles or cement blocks, removing silt and clearing waterways of outgrowths.

       However, now with the prospects of the release of Mettur water getting advanced to June 6, none of these works could be taken up. Mr. Elangeeran said that within 20 days of water release from the Mettur Dam, the water would reach the Keelanai and from there it would flow to Veeranam and tail-end of the delta region, including Chidambaram and Kattumannakoil blocks. He said that farmers in the region were usually raising samba crop once a year and their normal sowing season would begin in July. If the Mettur water were to be released now, flood control works would get postponed unusually. Therefore, Mr. Elangeeran appealed to the authorities to resolve the issue without sacrificing both the short-term and long-term interests of the farmers.

Read more »

Underground drainage project to be expedited says M.C.Sampath

CUDDALORE: 

         Rural Industries Minister M.C.Sampath told presspersons here on Sunday that steps would be taken for the speedy implementation of all government schemes. As regards Cuddalore constituency, the works on the underground drainage project would be expedited and all pending projects would be completed in a time-bound manner.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior