உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 08, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு

கடலூர் : 
            கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 
          மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் தமிழரசன், இளங்கோவன், பூங்காவனம், கணபதி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

நெல்லிக்குப்பம்: 

              நகர தி.மு.க., சார்பில் செயலர் மணிவண்ணன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கினர். நெசவாளரணி பழனிசாமி, பொருளாளர் ஜெயசீலன், துணை செயலர் தனகோடி, அருணகிரி, இளைஞரணி பார்த்தசாரதி, சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். 

விருத்தாசலம்: 

               நகர செயலர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்க பாலகிருஷ்ணன், ராமு, வாசு சுந்தரேசன், இளைஞர் அணி பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆளுனர் உரை  


           இந்திய மருத்துவ,  ஹோமியோபதி பல்கலைக்கழகம்  சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது. பாரம்பரியம்மிக்க இந்திய மருத்துவத்தையும், ஹோமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க, இப்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி இந்திய மருத்துவ, ஹோமியோபதி பல்கலைக்கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  

புதிய கல்லூரிகள்  

                 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 5 இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புதிதாக விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.  தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்  வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்காக தனியே, "தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்' கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு தொடங்கப்படும். 

 80 ஆயிரம் மாணவர்கள் 

                  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தொழிற்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 80,450 மாணவர்கள் இந்த ஆண்டு பயன்பெற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பிற முக்கியத் திட்டங்கள்  

              கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.  மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 

            பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூரில் 1100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

              சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 450 கோடியில் சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் கூறினார்.  சென்னையில் அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக மூலக்கடை-திருமங்கலம், மூலக்கடை-திருவான்மியூர், லஸ்-ஐய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.  

 ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்: 

  *  கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள். 

*  நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் திட்டம்.  அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து.   

*  பஞ்சமி நில மீட்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முடிவு.   

*  நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுத்திட சிறப்புத் திட்டம்.  

*  பச்சிளம் குழந்தைகளுக்காக ரூ.10 கோடியில் தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்  

*  கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம். 

  *  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஒசூரில் 1,100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டம்.  

*  சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நிலத்தடி நீரைச் செறிவூட்ட சிறப்புத் திட்டம்.  

*  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த முடிவு.   

*  சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.450 கோடியில் சிறப்புத் திட்டம்.  

*  கள்ளக்குறிச்சி, நெம்மேலி, நாகலாபுரம், அரூர், திருச்சுழி ஆகிய இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள். 

  *  நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விவசாயக் கல்லூரி. 

  *  சென்னையில், மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை புதிய பாதைகளில் மெட்ரோ ரயில் விடுவது குறித்து திட்ட ஆய்வு.

Read more »

கடலூர் கிராமங்களில் மலர்ந்து வரும் மாங்குரோவ் காடுகள்


கடலூர் அருகே நொச்சிக்காடு கிராமத்தில் உப்பங்கழிப் பகுதியில் வளர்ந்து இருக்கும் சுரபுன்னைச் செடிகள்.
கடலூர்:

           டலூர் அருகே உள்ள கிராமங்களில் மாங்குரோவ் காடுகள் மலர தொடங்கி உள்ளன. 

       சுரபுன்னைக் காடுகள் என்றும் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படும் பிச்சாவரம் சதுப்பு நில வனப்பகுதி உலகப் பிரசித்தி பெற்றது. வங்கக் கடலோரப் பகுதிகளில், மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில்தான் எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள் உள்ளன.  பிச்சாவரம் வனப் பகுதிகளில் இந்த மாங்குரோவ் காட்டு மரங்கள் பெருமளவுக்கு இருப்பதால், 2004 சுனாமிப் பேரலைத் தாக்குதலில் இப் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. 

              ஆடுகள் மேய்ச்சல் காரணமாகவும், விறகு வெட்டுவோர், இறால் பண்ணை அமைப்போர், மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடங்களை மாற்றிக் கொள்வதாலும் பிச்சாவரம் வனப்பகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மரங்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.  வனத்துறையினர் புதிய செடிகளை நட்டு வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வந்தபோதிலும், அதனால் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. 

               கடலூரில் கெடிலம் ஆறு கடலில் கலக்கும் உப்பங்கழிப் பகுதியில், மாங்குரோவ் காட்டு மரக் கன்றுகளை, சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் நட்டனர். மரங்கள் நன்கு வளர்ந்தும், வனத்துறையினர் முறையாக பராமரிக்காததால், மரங்கள் பல பட்டுப் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  ஆலமரத்தின் பணி  இந்நிலையில் கடலூரை அடுத்த நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி, திருச்சோபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள உப்பனாற்றுப் பகுதிகளில், மாங்குரோவ் காட்டு மரங்களான சுரபுன்னை, அவிசீனியா கன்றுகளை நட்டு பராமரிக்கும் முயற்சியில், ஆலமரம் என்ற தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.  

             இதுவரை மேற்கண்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்றுகள் நடப்பட்டு இருப்பதாக, அந்த அமைப்பின் செயலாளர் இளையராஜா புதன்கிழமை தெரிவித்தார். 3 மாதங்களுக்கு முன் நடப்பட்ட சுரபுன்னை, அவிசீனியா கன்றுகள் தற்போது நன்றாகத் துளிர்த்து வளர்ந்து இருப்பாகவும் அவர் கூறினார்.  சுனாமியின் போது நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்ட மனித உயிரிழப்பே இத்தகைய மரம் நடும் பணிக்குத் தங்களைத் தூண்டியதாகவும் அவர் கூறினார்.  

Read more »

விருத்தாசலத்தில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது


விருத்தாசலத்தில் பொங்கலை வரவேற்று கும்மிக் கொட்டி நடனமாடும் மாணவிகள். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.
 
விருத்தாசலம்:

               விருத்தாசலத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் வெள்ளிக்கிழமை முதல் ஒருசில பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழாவும் நடைபெற்றது. 

               விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தோரணங்கள், கரும்புகள் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பழம்பெரும் பண்பாட்டை விளக்கும் வகையில் மாணவர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் தாவணி அணிந்தும் வந்திருந்தனர். விழாவில் மாணவிகளின் கும்மி நடனம் நடைபெற்றது. பின்னர் மண் பானையில் சமத்துவப் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவப் பொங்கல் வழங்கப்பட்டது.  

சமத்துவப் பொங்கல் குறித்து பள்ளி முதல்வர் சந்தானம் தெரிவித்தது: 

                   பள்ளி மாணவர்களிடத்தில் பொங்கல் விழாவான சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் குறித்தும், இவ்விழாவின் சிறப்புகள் குறித்து தெரியபடுத்தவும், மாணவ-மாணவிகள் சமய பேதங்களை மறந்து அனைவரையும் சமமாக மதித்து நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவும் இவ்விழாவை நடத்தினோம் என தெரிவித்தார்.  

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறியது:  

              சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கும்மி போன்ற விளையாட்டுகள் இதுவரை எங்களுக்கு தெரியாது. ஆனால் சமத்துவப் பொங்கலை முன்னிட்டு எங்கள் ஆசிரியர்கள் கும்மி விளையாட்டு எப்படி விளையாடுவது என சொல்லி தந்தனர். கும்மிக் கொட்டி விளையாட இன்னும் ஆர்வமாக இருக்கிறது என தெரிவித்தனர். 

                நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சந்தானம், ஆசிரியர்கள் பெர்னத்மேரி, சுகுமார், செந்தில்குமார், ரமேஷ், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  மண்பானைகள்: பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண் பானைகள், மண் சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

பொங்கல் விழா குறித்து சமூக ஆர்வலரான சி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தது:  

                பொங்கல் திருவிழா என்பது ஜாதி, மதம் இவைகளை கடந்து அனைவரும் கொண்டாடும் சிறப்பான திருவிழாவாகும். சூரியப் பொங்கல் அன்று வீட்டின் வாசல்களில் மாக்கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரியனை வணங்கி வழிபடுவார்கள். அதேபோல் மாட்டுப் பொங்கல் அன்று தனக்காக உழைக்கும் மாட்டுக்கு பொங்கலிட்டு நன்றி செலுத்துவர்.  மேலும் காணும் பொங்கல் விழாவில் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். 

             ஆனால் தற்போது பொங்கல் விழாவில் இதுபோன்ற நிகழ்வுகள் மெல்ல குறைந்து வருகின்றன. இதுபோன்ற நிலை இல்லாமல் அனைவரும் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சமத்துவப் பொங்கல் விழாவை அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என கூறினார். 
 
             பொங்கல் விழாவை அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சிறப்பாக கொண்டாடி தைத் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Read more »

விருத்தாசலத்தில் வெள்ள நிவாரணம் வழங்காமல் அலைக்கழிக்கப்படும் வடக்கு வெள்ளூர் கிராம மக்கள்!

நெய்வேலி:

              மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகையை வடக்கு வெள்ளூர் கிராம மக்களிடம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், 

                    எங்களிடம் எல்லா ஆவணங்களையும் விஏஓ பெற்றுக்கொண்டார். ஆனால் இதுநாள் வரை பணம் எங்களுக்கு வழங்கவில்லை. கேட்டால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பொங்கல் பண்டிகை கழித்து வாருங்கள், வந்திருந்தால் தருகிறேன் என்கிறார். பலருக்கு அரசு வழங்கிய தொகையைக் காட்டிலும் குறைவாகவே நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார். மேலும் சொந்த விருப்பு - வெறுப்புகளை வெள்ள நிவாரணம் வழங்குவதில் வெளிப்படுத்துகிறார். தனக்கு பிடிக்காதவர்களுக்கு வந்திருந்த நிவாரணத் தொகையை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டார் என்றனர் கிராம மக்கள்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 

                  வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட 98  குடியிருப்புகளில் 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டவை, எஞ்சிய 18 மட்டுமே முழுமையாக பாதிக்கப்பட்டது. கூனங்குறிச்சி ஊராட்சியில் பலர் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வெள்ள நிவாரணத் தொகைக்கான ஒதுக்கீடு பெற்றிருந்தனர். அவற்றை ஆராய்ந்தபோது, அவ்வாறு எதுவும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து 10 பேரின் தொகை வருவாய் ஆய்வாளரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளேன் என்றார் பாலசுப்ரமணியன்.

Read more »

பண்ருட்டி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழாவை நடத்த தடை விதிக்க கோரிக்கை

பண்ருட்டி:

               பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் ஆற்றுத் திருவிழாவை கெடிலம் நதியில் நடத்த தடை விதிக்க வேண்டும் என ஆட்சியர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் மனு அனுப்பியுள்ளார். 

வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: 

              தை பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பண்ருட்டி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொள்வர்.  தற்போது கெடிலம் நதியில் நகர நிர்வாகம் குப்பைகளை கொட்டி நதியின் புனிதத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் லிங்க் ரோடு சீரமைப்பு என்ற பெயரில் 15 வார்டு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை கால்வாய் மூலம் கெடிலம் நதியில் கலக்கக்கூடிய அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

              இந்நிலையில் பண்ருட்டி நகராட்சி சார்பில் வரும் 19-ம் தேதி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.  தற்போது உள்ள நிலையில் கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழா நடைபெறுமானால், அதில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு சொல்ல இயலாத வியாதிகள் ஏற்படும். மேலும் மணல்  அள்ளிய பள்ளத்தில் குப்பைகள் தேங்கி புதைகுழிபோல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருவிழா சமயத்தில் வருபவர்கள் இதில் தவறி விழுந்தாலோ அல்லது குளிக்க இறங்கினாலோ உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. 

                 திருவிழாவுக்காக நதியை சுத்தம் செய்ய நகராட்சியின் பொது நிதி பெருமளவில்  வீணாகும். எனவே ஆற்றுத் திருவிழா நடைபெறும் கெடிலம் நதியின் நிலையை நேரில் ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகத்தில் நடத்தப்பட உள்ள ஆற்றுத் திருவிழாவை நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Read more »

தமிழ் நாள்காட்டி வெளியிட அரசுக்கு கோரிக்கை

கடலூர்:

          தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்து இருப்பதால், தமிழ் நாள்காட்டியை வெளியிட வேண்டும் என்று உலகத் தமிழ்க் கழகம் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளது.  உலகத் தமிழ்க் கழக கடலூர் கிளை செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

               தைத் திங்கள் முதல் நாளில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. போகி திருநாளன்று, கடலூர் நகரம் முழுவதும் ஊர்திகளில் சுற்றி வந்து, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மக்களுக்குத் தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.  தமிழ் புத்தாண்டை பின்பற்றும் வகையில், தமிழ் நாள்காட்டி, நாள் குறிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். அனைத்து  மாவட்டத் தலைநகரங்களிலும் திருவள்ளுவர் அரங்கங்களை அமைக்கவேண்டும். தமிழ் இணைய ஒருங்கு குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.    கூட்டத்துக்கு கிளைத் தலைவர் காத்தப்பன் தலைமை தாங்கினார். 

                 உலகத் தமிழ்க் கழக தலைமையகத் துணைத் தலைவர் கதிர் முத்தையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். செயலாளர் பழநிவேல் வரவேற்றார். அ.தென்னவன், குமரப்பன், சீனுவாசன், தமிழன்பன், த.பாலு,  இளஞ்செழியன் முத்திரை முத்துக்குமரன், கவிஞர் வெ.கி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குமரன் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம் : 

            விடுதிக்கு சாலை வசதி செய்துதரக் கோரி சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி உள்ளது. மாணவர்கள் விடுதிக்குச் செல்ல சாலை வசதியில்லாததால் மழைக் காலங்களில் சேறும், சகதியிலும் செல்கின்றனர். மேமலும் கழிப்பிட வசதியுமின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று விடுதியில் சாலை வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வே ண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்தமாக வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

கடலூர் : 

          புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
 
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வெளியிடப்பட்டது. தற்போது புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி அனைத்து வட்டங்களிலும் நடந்து வருகிறது. பொது மக்கள் இதனை பயன்படுத்தி வாக்காளர் அடை யாள அட்டையை பெற்று பயனடைய வேண்டும். 

              இது குறித்து மேலும் விபரங்களுக்கு 04142- 230651, 230652, 230653, 230654, 232811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Read more »

Sand lorry operators begin stir


In protest:Lorries parked on the Manjakuppam Grounds in Cuddalore on Friday.

CUDDALORE:

           Sand lorry operators in Cuddalore district began an indefinite strike on Friday, protesting the government policy to dispense with the practice of employing mechanical devices for sand excavation.

          Several lorries have been parked in the Manjakuppam Grounds here and these would not clear the place until the government comes up with a solution, according to sources at The Cuddalore Taluk Lorry Owners' Association. Starting from December 27, 2010, the government had stopped the excavation of sand using mechanical devices and employed labourers. Considering the growing demand of the construction industry and the volume of sand to be handled every day, it was obvious that the labourers would fall short of expectations, the sources said.

            The manual scooping of sand had caused an inordinate delay in loading operations, which made the vehicles wait at the quarry for days. This, in turn, led to rise in the price of sand and, therefore, the strike had become inevitable, the sources added. The new guideline would not only affect private constructions but also stall the progress of works on concrete houses being built under the Kalaignar Housing Scheme and other public buildings. The association urged the government to immediately restore the mining of sand from the river bed by deploying mechanical devices at the designated places. It also called upon the authorities to take stringent action against those involved in sand smuggling using tractors and bullock carts. The association sought uniform rules on unit levels to be loaded on to the lorries.

Read more »

NGOs told to register before January end: Cuddalore Collector P. Seetharaman.

CUDDALORE: 

          All non-governmental organisations that are running orphanages and old age homes (both free and paid ones) in Cuddalore district should register with the Social Welfare Officer before the end of January, according to Collector P. Seetharaman. In a statement issued here, he warned of legal action against the NGOs that do not comply with the direction.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior