உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கின்னஸில் இடம்பெறத் தகுதி படைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசுகிறார் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி
 
சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி உள்ளதாக பத்மபூஷன் விருது பெற்ற பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் என். ரங்கபாஷ்யம் தெரிவித்தார். இப்பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் வெள்ளி விழா, வைர விழா, பவள விழாக்களைக் கொண்டாடியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற தகுதி பெற்றுள்ளதாக அவர் கூறினார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 
இதில் டாக்டர் ரங்கபாஷ்யம் மேலும் பேசியது: 
 
                 ஒடுக்கப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், சஞ்சய்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயன்ஸ், மெட்ராஸ் மெடிக்கல் சென்டர் ஆகியவற்றுக்கு இணையான தரத்தில் இந்த மருத்துவக் கல்லூரி நவீன உபகரணங்களுடன் சிறந்து விளங்குகிறது.  இப்போது மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருத்துவக் கல்லூரி கிராமப்புற பகுதியில் அமைந்து அம்மக்களுக்கு பயிற்சி அளிப்பதால் அந்த தகுதியையும் இங்கு பயிலும் மாணவர்கள் பெற்று விடுகின்றனர். 
 
இவ்விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள், மருத்துவப்புல முதல்வர்கள், மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை கௌரவித்து இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி எம்.பி. கூறியது: 
 
                 அண்ணாமலைப் பல்கலையில் பல் மருத்துவக் கல்லூரியாக தொடங்கப்பட்டு அது மருத்துவக்கல்லூரியாக அமைக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்முதலாக தொடங்கப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட பகுதியில் தொடங்கப்பட்டது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகும். பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரிகளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க மருத்துவர்கள் கொண்ட குழுவை மணிப்பால் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்ட பின்னரே இங்கு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது என்றார் இணைவேந்தர். 
 
முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு வாழ்த்துரை வழங்கி பேசியது: 
 
                இந்த மருத்துவமனையில் 27 வகையான வசதிகள் உள்ளது. மேலும் இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைக்க வேண்டும். மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னதாக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என். சிதம்பரம் வரவேற்றார். 
 
                    பதிவாளர் எம். ரத்தினசபாபதி வாழ்த்துச் செய்திகளை படித்தார். துணைவேந்தர் எம். ராமநாதன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். ரமேஷ் வெள்ளிவிழா அறிக்கையை படித்தார்.  இந்நிகழ்ச்சியின்போது என். ரங்கபாஷ்யம் பெயரில்  50ஆயிரத்துக்கு இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் அறிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Read more »

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில்10 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

             கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், |10.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

               மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 11 பேருக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 15 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் 17 பேருக்கு தலா |3ஆயிரம் வீதம், தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன், ஒருவருக்கு 3 சக்கர வண்டி, எய்ட்ஸ் பாதித்த 58 குழந்தைகளுக்கு 1.21 லட்சம் கல்வி உதவித் தொகை, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்: ஆயிரம் பேர் பங்கேற்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார மையத்தில் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை  கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். 

                  இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பர், டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் எத்திராஜ், டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரம் பேர் பங்கேற்று பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதத்துக்கு அணியும் மைக்ரோ செல்லுலார் ரப்பர் காலணிகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். சர்க்கரை நோயால் அவதியுறும் நோயாளிகள் விழிப்புணர்வு பெறும் வகையில் உணவு பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் எது, சாப்பிடக்கூடாதது எது என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

Read more »

பொது மக்களை அச்சுறுத்தும் ​ சிதிலமடைந்த கடலூர் சில்வர் பீச் பொதுக்கழிப்பறைகள்

கடலூர்:

                  ​ கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் சீர்குலைந்து,​​ கடற்கரைக்கு வருவோரை அறுவெறுப்புக்கும்,​​ பாதுகாப்பற்ற நிலைக்கும் உள்ளாக்கி வருகின்றன.​ ​2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பல இடங்களில் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டன.​ பராமரிப்பு இன்றியும் அவற்றைப் பயன்படுத்துவோரின் அலட்சியம் காரணமாகவும் அவை அனைத்தும் சீர்குலைந்து கிடக்கின்றன.​ ​​ 

                  இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த கழிவறைகள் மாறி வருகின்றன.​ இவை கொள்ளையர்கள் பதுங்கி இருந்து,​​ பீச்சுக்கு வருவோரிடம் வழிப்பறி செய்ய வசதியான இடமாக மாறி வருகின்றன.​ ​​ ​ சிலவர் பீச்சில் மின் விளக்குகள் ஒழுங்காக எரியாத நிலையில்,​​ கடற்கரைக்குக் காற்று வாங்க வருவோரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது.

                        பீச்சுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.​ அதில் ஒரு பகுதியை இந்த பீச்சின் பராமரிப்புக்குச் செலவிட்டால்கூட,​​ மக்களுக்கு ஓரளவேனும் பயனுள்ளதாக அமையும் என்கிறார்கள் கடற்கரைக்கு வருவோர்.​ ​  இந்தப் பொதுக் கழிப்பறைகளை,​​ நகராட்சி பழுதுபார்த்து முறையாகப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது இடித்து தள்ளிவிட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

Read more »

கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்ப்பது எப்படி?​​ வேளாண் மாணவர்கள் விளக்கம்

கடலூர்:

                ​ ​ கடலூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு இருக்கும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள்,​​ விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்க்கும் முறைகளை விளக்கிக் கூறினர்.​ ​மணக்குப்பம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில்,​​ செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.​ ​​

                  இதில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள்,​​ மாட்டுத் தீவனம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தினர்.​ ​கோ 3 ரகம் புல் கறவை மாடுகளுக்கு ஏற்றது.​ இதைத் தீவனமாக உட்கொள்ளும் கறவை மாடுகள் கூடுதலாக பால் கறக்கும்,​​ மாடுகள் விரும்பிச் சாப்பிடும்.​ சினை பிடிக்காத மாடுகளுக்கு சினை பிடிக்கவும் ஏதுவாக இருக்கும்.​ 10 சென்ட் நிலத்தில் பயிரிடப்படும் ​ இந்த ரக புல்லைக் கொண்டு,​​ ஆண்டு முழுவதும் ஒரு பசுவைப் பராமரிக்க முடியும்.​ ​இதனால் மாட்டுத் தீவனச் செலவும் குறையும் என்றும் எடுத்துரைத்தனர்.​ மாடுகளுக்கு காப்பீடு செய்வதின் அவசியம் பற்றியும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

Read more »

பரங்கிப்பேட்டை பகுதியில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு மானியம்

சிதம்பரம்:
 
             குறைந்த செலவில் கூடுதல் மகசூல் தரும் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் தெரிவித்துள்ளார்.​ ​
 
இதுகுறித்து ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ ​
 
                      சிதம்பரம், ​​ பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.​ 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் மட்டும் போதுமானதாகும்.​ ஒரு ஏக்கருக்கு 1 சென்ட் என்ற அளவில் பாய் நாற்றங்கால் விதைப்பு செய்ய வேண்டும்.​ ​நடவுக்கு 13 முதல் 15 நாள் வயதுடைய இளம் நாற்றுக்களை குத்துக்கு ஒன்று வீதம் 22.5 செ.மீட்டருக்கு 22.5 செ.மீட்டர் என்ற அளவில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.​ 
 
                இதற்கு மார்க்கர் கருவியை பயன்படுத்தலாம்.​ நடவு வயலில் களை எடுக்க கோனோவீடர் எனும் களைக்கருவியை நட்ட 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை பயன்படுத்த வேண்டும்.​ இக்கருவியை பயன்படுத்துவதால் களைகள் கீழே தள்ளப்பட்டு மக்கி உரமாக பயிருக்கு கிடைப்பதுடன்,​​ நல்ல காற்றோட்டமும் பயிருக்கு கிடைக்கும்.​ ​இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையானபோது தழைச்சத்தினை பயிருக்கு இட வேண்டும்.​ செம்மை நெல் சாகுபடியில் சாதாரண முறையை விட,​​ 25 சதவீத மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.​ ​
 
                    ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 5 கிராமங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத் தளைகள் அமைக்கப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு கிராமத்திலும் 25 ஏக்கர் பரப்பில் தொகுப்பாக இந்த செயல் விளக்கத்தளைகள் அமைக்கப்படவுள்ளன.​ அச்செயல் விளக்கத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.​ ​எனவே,​​ தங்களது நிலங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத்தளைகளை அமைக்க விரும்பும் விவசாயிகள்,​​ தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

Rajah Muthiah Medical college celebrates silver jubilee


Pro-Chancellor of Annamalai University M.A.M.Ramaswamy speaking at the silver jubilee celebrations of Rajah Muthiah Medical College at Chidambaram on Tuesday. 
 
CUDDALORE: 

          Padma Bhushan awardee and surgeon N. Rangabashyam has said that Annamalai University deserves a place in the Guinness Book of World Records for the number of jubilee celebrations organised by the 80-year-old institution.

            Dr. Rangabashyam was speaking at the silver jubilee celebrations of Rajah Muthiah Medical College (RMMC) run by the university at Chidambaram, near here on Tuesday. The state-of-the-art medical facilities at the RMMC were comparable to All India Institute of Medical Sciences, Sanjay Gandhi Institute of Medical Sciences and Madras Medical College, he said. By virtue of its location, the RMMC was catering for the rural population and setting an example for the country on how to deliver healthcare services to villages where Mahatma Gandhi saw the soul of the nation.

           Dr. Rangabashyam said that even decades before the authorities were grappling with the issue of rural healthcare services, Annamalai University had set a trend by establishing the medical college 25 years ago in the rural settings. Hence, the RMMC could serve as an example of how “proper doctors” could be trained by screening a large number of villagers. He paid encomiums to the vision of founder Pro-Chancellors Rajah Sir Annamalai Chettiar and Rajah Sir Muthiah Chettiar, and Pro-Chancellor M.A.M. Ramaswamy for setting up portals of education in the remote corner of Tamil Nadu.

          The Pro-Chancellor recalled how the RMMC had come into being against odds. Originally planned as a dental college, it had blossomed into a full-fledged medical college, with a hospital fitted with modern equipment and over 1,000 beds. Mr Ramaswamy said that thanks to the vision of his forefathers, the RMMC could be built when construction costs were much lower than now. The RMMC was not built overnight. It took shape after overcoming many struggles. Looking back now, he was feeling proud about its growth. The Pro-Chancellor recalled the services rendered by S.V. Chittibabu, former vice-chancellor (during whose tenure the RMMC had been started), the successive vice-chancellors, deans and medical superintendents for the development of the college.

              Mr Chittibabu, terming the success of the RMMC as a “saga of achievement,” called upon the Pro-Chancellor to start a super specialty medical institution, have a tie-up with reputed medical institutions, in India and abroad, and put in place a roadmap for future development with provision for research. Vice-Chancellor M.Ramanathan said that the RMMC was adequately meeting the needs in the districts of Cuddalore, Villupuram and Nagapattinam, and also the clinical needs of the students.

              Registrar M. Rathinasabapathi, Dean (Faculty of Medicine) N.Chidambaram and Medical Superintendent S.Viswanathan spoke. The Pro-Chancellor set up an endowment in the name of Dr Rangabashyam with a contribution of Rs 50,000 and released the RMMC magazine.

Read more »

Water supply for irrigation stepped up

CUDDALORE: 

            The discharge from the Lower Anicut into the Vadavar (the feeder canal for the Veeranam tank) is being maintained at 2,075 cusecs to meet the requirements of the ayacutdars, according to Collector P. Seetharaman.

           In a statement released here, he said farmers had recently made representations to him stating that the elevated farmlands under the Vadavar system and the tail-end ayacut areas under the Sethiathope anicut could not get adequate water for irrigation because of insufficient supply. Hence, arrangements had been made to step up the discharge from the Coleroon into the Lower Anicut to enhance inflow into the Vadavar. As of now, 400 cusecs of water was let out for irrigation from the Veeranam tank, 75 cusecs for drinking purpose to Chennai and 650 cusecs into the Sethiathope anicut. The Collector urged the farmers to use water judiciously.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior