உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

கேமரூனை வென்றது ஜப்பான் (1-0)


புளோயம்பாண்டீன்:
 
           உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் (1-0) கேமரூனை வென்றது.இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினாலும் முதல் 35 நிமிடங்கள் வரை இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்காது என்று ரசிகர்கள் நினைத்திருந்தபோது ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜப்பானின் கெய்சுகே ஹோண்டா கோல் அடித்து ஜப்பானுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. கோலடிக்க எடுத்த முயற்சியில் 72-வது நிமிடத்தில் கேமரூனின் நிக்கோலஸýம், 90-வது நிமிடத்தில் ஜப்பானின் யூகியும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.

Read more »

விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ரோந்து தீவிரம்

கடலூர்:

                    வி ழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு போலீசார்ரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். அனைத்து போலீஸ் சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                சந்தேகப்படும் நபர்கள் தீவிர விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்துப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜுகளும் போலீஸôரால் சோதனையிடப்பட்டன. அவற்றில் தங்கி இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாவட்டத்தில் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள், கியூ பிரிவு போலீஸôரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சோதனையிடப்பட்டன. நாட்டு வெடி தயாரிப்போரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விருத்தாசலம்: 

                   விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆய்வு செய்தனர். விழுப்புரத்தை அடுத்த சித்தணி கிராமத்தில் சனிக்கிழமை, தண்டவாளம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரயில்வே போலீஸôர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்களை தீவிர ஆய்வு செய்தனர். மேலும் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸôர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more »

விரக்தியின் உச்சத்தில் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:

                என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான  பேச்சுவார்த்தை இன்று முடியும், நாளை முடியும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படாததால் தொழிலாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்று, எங்களுக்காக தொழிற்சங்கங்கள் பேசியது போதும், நிர்வாகமே தானாக வழங்கினால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

                 01-01-2007 முதல் என்எல்சி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த 6 மாதமாக நெய்வேலி மற்றும் சென்னையில் பலச்சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க வகையில் சில முன்னேற்றங்களை கண்ட போதிலும் அலவன்சு மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன்தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.÷ஆனால் நிர்வாகமோ ஒப்பந்தம் ஏற்படக்கூடிய தினத்திலிருந்தே வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

                    இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மே 29-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதையடுத்து நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.÷இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தில் பேச்சு நடைபெறவுள்ளது. ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கி 15 தினங்களுக்கு மேலானதால், தொழிற்சங்கங்கள் எந்நேரத்திலும் ஸ்டிரைக் அறிவிக்க நேரிடும் என்பதால், நிர்வாகம் ஜூன் 14 முதல் ஊழியர்கள் எவருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது துறைவாரியாக மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

                   இந்நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு செல்லும் வேளையில், அதிகாரிகளுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் முடிவுற்று அவர்கள் கடந்த ஓராண்டாக 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் புதிய ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு ஊதியமாக பணிச் செயல்பாடுகளுக்கேற்ப ஊதியத்தையும் ஜூன் 11-ல் பெற்றுள்ளனர். இவ்வாறாக அதிகாரிகள் தொடர்ந்து பணப்பயன் பெற்றுவரும் வேளையில், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் கானல் நீராகி வருவது கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலையில் ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுகிறதோ இல்லையோ, நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கினால்கூட அதைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தொழிலாளர்கள் தயாராகியுள்ளனர். தொழிற்சங்கங்கள் விரைந்து விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

Read more »

3 ஆண்டு சட்டப் படிப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

                      தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 ஆண்டு பி.எல். ஹானர்ஸ் படிப்பு ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ம் தேதி முதல் அந்தந்தக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.  தமிழகத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி,  செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் 1,262 இடங்கள் உள்ளன. இவற்றிலும், பல்கலைக்கழகத்தில் உள்ள 3 ஆண்டு பி.எல். ஹானர்ஸ் படிப்புக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 16-ம் தேதி முதல் அந்தந்த சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படவுள்ளன.  விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், அவற்றைப் பூர்த்திச் செய்து அளிப்பதற்கும் ஜூலை 20-ம் தேதி கடைசி நாள்.

Read more »

தமிழகத்தில் இந்த ஆண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை: சி.ஐ.ஐ. தலைவர் தகவல்

                  தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) துறையில் இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து ந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கூறியதாவது: 

                     தமிழகத்தில் ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்த பின்னடைவு நிலை மாறி, இப்போது மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் துறையில் 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, தமிழகத்தில் இப்போது ஐ.டி. துறை சார்ந்த நிறுவனங்களில் பலருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஐ.டி. துறை மேலும் வளர்ச்சி பெறும் வகையில் புதிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களைத் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் அதிக உற்பத்திக்கு...: தரமான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள், சிறந்த நவீனத் தொழில்நுட்பம் மற்றும் காலத்துக்கு ஏற்ற பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் விவசாயத் துறையில் அதிக உற்பத்தியை எட்ட முடியும். தமிழகத்தில் ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க சிஐஐ முக்கிய பங்காற்றுகிறது. சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை- பெங்களூர் இடையே தொழில் பிரகாரம் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கோபாலகிருஷ்ணன் 

சிஐஐ தமிழ்நாடு பிரிவின் அவைத் தலைவர் நந்தினி கூறியதாவது:

                  தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) துறை வளர்ச்சி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகள் வளர்ச்சி பெறவும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன.சென்னை தரமணியில் தமிழக அரசு சார்பில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டைசல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வளர்ச்சி குறித்து சிஐஐ ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கும்.  தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அந்தக் குழுக்களுக்கு சிஐஐ பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் நந்தினி.

Read more »

தடைக்காலத்துக்குப் பின்னும் மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்


கடலூர் நகரத் தெருக்களில் அதிக அளவில் விற்பனை ஆகும், ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள்.
கடலூர்:
 
                 கடலூர் மாவட்டத்தில் 45 நாள்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்த காலம் முடிவடைந்து, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்க வில்லை என்று, மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
 
                 இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல், 45 நாள்கள் கடலில் மீனபிடிக்க பெரிய இயந்திரப் படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும், 700 பெரிய விசைப் படகுகளும் உள்ளன. மீன்பிடித் தடைகாலம் முடிந்து, மே 29-ம் தேதி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.÷முதல் நாளன்று மத்தி மீன்கள் ஏராளமாகக் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மத்தி மீன்கள் அவ்வப்போது பெருமளவில் கிடைத்து வருகின்றன. 4 நாள்களுக்கு  மேல் தங்கி, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காமல் கரை திரும்பி வருவதாக தெரிவிக்கின்றனர்.  கருவாட்டுக்கும், மீன் எண்ணெய் உற்பத்திக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகும் மத்தி மீன்களுக்கும் போதிய விலை கிடைக்க வில்லை என்கிறார்கள்.
 
இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 
 
                       45 நாள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின் கடலுக்குள் சென்று வரும் மீனவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஏற்கெனவே கிடைத்து வந்த மீன்களில் 60 சதவீதம்தான் இப்போது கிடைக்கிறது. தற்போது 200 பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்கின்றன. அண்மையில் கணவாய் மீன்கள் 10 டன்கள் திடீரெனக் கிடைத்தன. இவை வேறுபகுதிகளில் இருந்து, கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணாக நமது பகுதிக்கு வந்தவை. கணவாய் மீன் வெளிநாடுகளுக்கு ஏற்றுதி செய்யப்படுகின்றன. உள்ளூரில் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆழ்கடல் பகுதிகளில் நார்வே, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றன. அவர்களுக்குத் தடைக்காலம் எதுவும் இல்லை. இதனால் ஆழ்கடலில் உற்பத்தியாகிக் கரைநோக்கி வரும் மீன்கள் எதுவும் நமக்குக் கிடைப்பது இல்லை. வெளிநாட்டுக் கப்பல்கள் பிடித்துச் சென்றுவிடுகின்றன. கரையில் இருந்து குறைந்த தூரத்தில் கிடைக்கும் மீன்களும், ரசாயன ஆலைக் கழிவுகள் காரணமாகக் குறைந்து விட்டன. இந்த பருவத்தில் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைக்க வில்லை.÷இதனால் கொடுவா, வஞ்சரம், கணவாய் போன்ற மீன்கள், இறங்கு தளத்திலேயே கிலோ ரூ. 250-க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்கள் கிலோ ரூ. 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி சந்தைகளில் விற்போர் மேலும் கூடுதல் விலை வைத்து விற்பார்கள். இதனால் மீன்கள் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றார் சுப்புராயன். 
 
                    இந்நிலையில் ஏரிகள் குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளன. கடலூர் நகரில் தெரு ஓரங்களில், ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை உள்ளது.  கடல் மீன் விலை அதிகமாக இருப்பதால் பலர் ஏரி மீன்களை வாங்குகிறார்கள். கடல் மீன் வரத்து தொடர்ந்துகுறைவாக இருப்பதும், மீன்பிடி தடைக்காலத்தில் ஏறிய விலை இன்னமும் இறங்காமல் இருப்பதும், மீன் சாப்பிடுவோரை கவலையில் ஆழ்த்தி வருகிறது.

Read more »

Electric scooters distributed to differently-abled persons


Collector P. Seetharaman distributing electrical motorcycles to differently-abled persons in Cuddalore on Monday.

CUDDALORE: 

               Collector P.Seetharaman gave away three electric scooters to three differently-abled students at the weekly grievance day session held here on Monday.

            The Collector said that Chief Minister M.Karunanidhi was keen on providing necessary aid such as the electric scooters and tri-cycles to students and job-goers as they required a great deal of mobility. Accordingly 19 such scooters, each costing Rs 35,000, had been allotted to Cuddalore district (of which three would be given to the employed persons). He said all the electric scooters would be handed over to the beneficiaries within a week.

              On the occasion a student, Vinodh from Madhurakali Manikkam in Vriddhachalam block gave a representation to the Collector seeking a tri-cycle for going to school. Within an hour the Collector arranged for a tri-cycle through the Differently-abled Welfare Officer and gave it to the student. During the session the Collector received 330 petitions seeking house site pattas, old age pension, financial assistance for the differently-abled persons and so on.

Read more »

Excess fee collection in schools opposed

CUDDALORE: 

            Social activists belonging to various fora staged a demonstration in front of the office of the Chief Educational Officer here on Monday protesting collection of excess fee in private and government-aided schools in the district.

              Those who assembled at the CEO's office, under the banner of the Federation of All Public Welfare Organisations, also sent a representation to School Education Minister Thangam Thennarasu urging him to strictly implement the recommendations of Justice Govindarajan Committee on school tuition fee structure.

                It noted that the private and government-aided schools were collecting tuition fees and other miscellaneous fees over and above the level fixed by the committee. Moreover, to gloss over the fact those schools abdicated their responsibility of issuing receipts for the payments. It also pointed out that the teachers in the private and government-aided schools were demanding additional payment for handling the evening classes which obviously was passed on to the students, thereby making it impossible for the wards of the economically weaker sections to attend the special classes.

                  Therefore, the federation called for stringent action against those schools that were extracting more than the permitted fees. The federation alleged that the functioning of the Parent-Teachers' Association was neither visible nor transparent. The Federation called upon the authorities to restructure the PTAs in such a way that only the students studying in the same school and their parents were elected as members. Those who participated included federation organiser M.Nizamudeen, joint organiser V.Kumar, district secretary of the Viduthalai Chiruthaigal Katchi Thirumaran and others.

Read more »

Traffic diversion

CUDDALORE: 

            Owing to the construction of the railway over-bridge at Pachankuppam on the Cuddalore—Vriddhachalam road, traffic would be diverted as follows:

            Buses and cars should go via Chinna Karaikkadu, on both ways, to take to the National Higway-45A, and, the long distance buses and heavy vehicles should go via Kullanchavadi and Alapakkam. The new arrangements would be in force for the next 18 months — till the work is completed, according to a statement from the Collectorate.

Read more »

Bust defiled

CUDDALORE: 

                 The bust of Dr B.R.Ambedkar, installed at Kuyavanpettai colony, within the Annamalai Nagar police station limits at Chidambaram, was found defiled with a string of footwear on Monday morning. The residents registered their protest by blocking the traffic for about an hour. However, after the officials gave an assurance that the culprits would be traced and duly punished they dispersed peacefully.

Read more »

சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவர் வடலூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

குறிஞ்சிப்பாடி : 

                சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள் என வடலூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சுத்த சன்மார்க்க நிலைய வைர விழா, சமச்சீர் கல்வி தொடக்க விழா வடலூரில் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத்தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முதல் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல், நோட்டு புத்தகம், சீருடை, புத்தகப் பை வழங்கி சமச்சீர் கல்வியை தொடங்கி வைத்து பேசியதாவது:

                            சுத்த சன்மார்க்க நிலையத்தை ஓ.பி.ஆர்., தொடங்கி வள்ளலார் குருகுலம் பள்ளியை உருவாக்கி கடலூர் மாவட் டத்தில் உள்ள மாணவர் கள் நல்ல கல்வி பெற வாய்ப்பை உருவாக்கியுள்ளார். இக்கல்வி நிறுவனம் ஒரு பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் படுகிறார்கள். பல கல்வி நிறுவனங்களை புதிதாக உருவாக்கி ஓ.பி. ஆரின் எண்ணங்களை நிறைவு செய்யும் வகையில் தாளா ளர் செல்வராஜ் செயல்படுகிறார்.

                      முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள். ஆண்டுக்கு 100 மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் பல உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்ந்துள்ளது. மேலும் பட்டதாரி இல்லாத குடும்பத்தில் முதல் பட்டதாரி படிப்புக்கு அனைத் தும் இலவசமாக வழங்கி படிக்கும் வாய்ப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Read more »

நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலம் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு :

                    நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் பாலத்திற்கான இணைப்பு சாலை போட்டு உடனடியாக பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகில் நடுவீரப்பட்டு பகுதியில் ஹைமாஸ் விளக்கு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

                      அண்ணா கிராம முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், நடுப்பேட்டை கிளை செயலாளர் நடராஜன், சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அப்துல் அஜிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்... கண்காணிக்கப்படுமா? விபத்தினை தடுக்க நடவடிக்கை அவசியம்

கடலூர் : 

                   பள்ளி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தோறும் அரசு பள்ளிகளை துவங்கினாலும், ஒவ்வொரு பெற்றோரும் தங் களது பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசையில் நகர பகுதிகளில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலேயே சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது.

                        கடலூர் மாவட்டத்தில் உள்ள 228 நர்சரி பள்ளிகள் மற்றும் 112 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக பெரும்பாலான பள்ளி நிர்வாகங்களே பஸ் மற்றும் வேன்களை இயக்கி வருகிறது. இதற்காக மாணவர்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

                    இவைத் தவிர வாடகை வேன், ஆம்னி வேன் மற்றும் ஆட்டோக்களும் மாத கட்டண அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகின்றன. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர் கள் வருவாயை மட்டுமே குறியாக கொண்டு அளவுக்கு அதிகமாக மாணவர்களை திணித்துக் கொண்டு அதிவேகமாக செல் கின்றனர். இதனால் மாணவர்கள் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்திற்குள்ளானதில் ஏழு சிறுவர்கள் இறந்தனர்.

                  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களை ஏற் றிச் செல்லும் வாகனங்களில் நிர் ணயிக்கப்பட்ட அளவிற்கு மட் டுமே ஏற்ற வேண்டும். அதிக வேகம் செல்லக்கூடாது. அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணியில் அமர்த்த வேண்டும். வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

                     அவசர உதவிக்கு தனி கதவு அமைக்க வேண்டும். டிரைவர்களின் கவனத்தை சிதற வைக்கும் வகையில் டேப்ரிக்கார்டர், வீடியோ போன்றவை இயக்கக் கூடாது. மொபைல் போன் பேசக்கூடாது. முதலுதவி மற் றும் தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இவை அனைத்தும் ஓரிரு மாதங்கள் பின்பற்றினர். 

                     பின்னர் வழக்கம் போல் அதிக மாணவர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்லத் துவங்கியதால் மீண்டும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் 19ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். 17 மாணவர்கள் காயமடைந்தனர். நவம்பர் 2ம் தேதி தனியார் வேன் நெய்வேலி அருகே கவிழ்ந்ததில் 20 மாணவர்கள் படுகாயமடைந் தனர். அதே மாதம் 23ம் தேதி சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு அருகே குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு மாணவர் இறந்தார். 34 பேர் படுகாயமடைந்தனர்.

                            இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கலெக்டரின் அதிரடி உத்தரவின் பேரில் வருவாய், போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பள்ளி வாகனங்களை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை விதிமுறைகளை மீறி இயக்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கப்பட்டனர். அதேபோன்று மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்ளையும் சோதனை மேற் கொண்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது குறைந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்ல துவங்கியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திட கடந்தாண்டு மேற்கொண்டது போல் வாகனங்களை சோதனை செய்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் விலை மதிப்பற்ற பள்ளி சிறுவர்களின் உயிரை பாதுகாக்க முடியும்.

Read more »

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் யார்? 12 நாள் குழப்பம் தீர்ந்தது

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்ற குழப்பத்திற்கு நேற்று தீர்வு காணப்பட்டது.க டலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். இவர் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுடன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளிக்கு மாறுதலானார்.

                     இந்நிலையில், கடந்த 3ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவுடன் தனக்கு மனமொத்த மாறுதல் வந்துள்ளது என, விருத்தாசலம் பள்ளிக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட முயன்றார். தனக்கு எந்த தகவலும் இல்லை எனக் கூறி பிரகாசம் வருகைப் பதிவேட்டை மறைத்து வைத்தார். மறுநாளும் இதே பிரச்னை நீடித்ததால் யார் தலைமை ஆசிரியர் என, குழப்பம் நீடித்தது.

                 இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இருவருக்கும் கல்வித்துறை முறையாக இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப் பட்டதையடுத்து நேற்று காலை விருத்தாசலம் பள்ளி தலைமை ஆசிரியராக முருகேசன் பொறுப் பேற்றார். மருத்துவ விடுப்பில் சென்றுள்ள தலைமை ஆசிரியர் பிரகாசத்திற்கு இடமாறுதல் உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read more »

மயூரா ஆற்றின் மணல் குவாரியை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு


கடலூர் : 

                  விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் அனுமதி வழங்கிய மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தள்ளனர். 

மனுவின் விவரம் வருமாறு:

                        விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் 4,000க்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீர் மயூரா ஆற்றிலிருந்து போர்வெல் மூலம் வழங்கப்படுகிறது. இருந்தும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. இந்நிலையில் கடந் தாண்டு மயூரா ஆற்றில் லாரி மூலம் மணல் எடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று மணல் குவாரி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் எடுத்து செல்கின்றன. இதனால் நிலத்தடி நீர் குறைகிறது. மேலும் அருகில் உள்ள நிலங்கள் மழைக் காலத் தில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அருகில் உள்ள நல்லூர் அரசு பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் லாரியின் மூலம் மணல் எடுக்கும் குவாரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more »

கடலூர் - விருத்தாசலம் சாலை போக்குவரத்து மாற்றம்

கடலூர் : 

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங் குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்து விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் நகர பஸ்கள், மினி பஸ்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் வலதுபுறமாக பிரிந்து சின்னகாரைக்காடு ஊர் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் அடைந்து இடது புறமாக திரும்பி கடலூருக்கு செல்ல வேண்டும்.

                         கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக பிரிந்து சின்னகாரைக்காடு வழியாக கடலூர் - விருத்தாசலம் சாலையை அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலம் செல்ல வேண்டும்.கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் தொலைதூர பஸ்கள், கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக (ஆலப்பாக்கம்) பிரிந்து கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டும்.

                      விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் தொலைதூர பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) வலது புறமாக பிரிந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்து கடலூர் செல்ல வேண்டும்.பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் இப்பால கட்டுமான காலமாகிய 18 மாதங்களுக்கு இந்த மாற்றுப்பாதையை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலத்தில் வணிகவரித்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வணிகவரித்துறை உதவி ஆணையர் சமரசம் தலைமை தாங்கினார். உதவி முதன்மை அலுவலர் பாண்டுரங்கன், கூடுதல் அலுவலர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வணிகத் துறை சார்பில் மாதாந்திர நமுனா இணைப்பு படிவம் 1 மற்றும் 2ல் மாற்றம் குறித் தும், வியாபாரிகள் அனைவரும் நிரந்தர கணக்கு எண் வரும் ஜூலை 18ம் தேதிக்குள் பெறுவது குறித்தும், வரி நிலுவை செலுத்துவதற்காக சமாதான திட்டம் தொடர்பான விவாதமும் நடந்தது. கூட்டத்தில் வணிகர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Read more »

தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  புவனகிரி தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா ஸ்டாலின், ராஜவன்னியன் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு நகர தே.மு.தி.க., செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் பாலு, பொரு ளாளர் சிவானந்தம், மகளிரணி செயலாளர் பொற் செல்வி, நகர செயலாளர்கள் மணிகண்டன், ஆனந்தன், நகர மகளிரணி செயலாளர் அஞ்சம்மாள், நிர்வாகிகள் கலியமூர்த்தி, செந்தில், பாலாஜி உட்பட பலர் பேசினர். நகர பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

Read more »

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நடுவீரப்பட்டு : 

                  பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Read more »

மனு கொடுத்த அரை மணி நேரத்தில் உதவி கலெக்டரின் அதிரடியால் மாணவர் மகிழ்ச்சி

கடலூர் : 

                      தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு மனு கொடுத்த அரை மணி நேரத்தில் மடிப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் வட்டம் மதகளிர் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜகன்நாதன் மகன் வினோத் (12) ஏழாம் வகுப்பு மாணவர். இவர் தசை சிதைவு நோய் காரணமாக இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியால் அவதியடைந்து வந்தார்.

                   இந்நிலையில் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமனிடம் சக்கர நாற்காலி உதவி கேட்டு மனு கொடுத்தார். மனு மீது விசாரணை செய்த கலெக்டர் அரை மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாணவர் வினோத்திற்கு மடி சக்கர நாற்காலியை வழங்கினார். மனு கொடுத்த உடன் சக்கர நாற்காலி கிடைத்ததால் மாணவரும் அவரது தாயாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Read more »

ரயில் மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் தோல்வி

கடலூர் : 

                         ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மா.கம்யூ., இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி அறிவிக்கப்பட்டது போல் இன்று ரயில் மறியல் நடக்கிறது. 

                       கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதையை விரைவில் நிறைவேற்றவும், அனைத்து விரைவு ரயில்களும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை மா.கம்யூ., சார்பில் கடலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், மயிலாடுதுறை கூடுதல் டிவிஷனல் மேலாளர் சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

                       கூட்டத்தில் மத்திய அரசிடம் பேசியதில் ரயில் நிறுத்துவது குறித்து ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அச்சிடப்படும் கால அட்டவணையில் தான் மாற்றம் செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை பணியை விரை வில் தொடங்கி முடிக்க ஆவண செய்யப்படும் என கலெக்டர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் மா.கம்யூ., வினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மா.கம்யூ.,வினர் அறிவித்தனர்.

Read more »

ஒரே இரவில் 2 வீடுகளில் திருட்டு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கடலூர் : 

                          கடலூர் அருகே ஒரே இரவில் இரண்டு வீடுகளில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த குட்டியாங்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவரது மனைவி சுதா நேற்று முன் தினம் இரவு வீட்டின் வராண்டாவில் படுத்திருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஏழரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

                     சற்று நேரத்தில் அதே தெருவைச் சேர்ந்த ராஜாராமன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பீரோவில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்ளிட்ட 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இரு சம்பவங்கள் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். ஒரே இரவில் இரண்டு வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குட்டியாங்குப்பம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

Read more »

அம்பேத்கர் சிலை அவமதிப்பு:சிதம்பரம் அருகே மறியல்

சிதம்பரம் : 

                       சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குயவன்பேட்டையில் ஆறடி உயரமுள்ள பீடத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட மார்பளவு அம்பேத்கர் சிலைக்கு நேற்று முன்தினம் இரவு விஷமிகள் செருப்பு மலை போட்டு அவமதித்திருந்தினர். அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை போலீசார் அகற்றினர்.

                       இந்நிலையில் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட செயலர் பால அறவாழி, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணை பொதுச் செயலர் காமராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி சிவபுரி - கவரப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மறியலை கைவிட்டனர். மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குயவன்பேட்டை ஊர் தலைவர் எழிலன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior