உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அறிவிப்பு


 
             ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு திருச்சியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது வழி படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                  ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி திருச்சியில் 3 மையங்களில் நடைபெறுகிறது.

மையத்தின் பெயர்    பிரிவு 

1. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,         

1. சிறப்பு பிரிவு மற்றும் தெலுங்குரயில் நிலையம் அருகில், 

திருச்சி.              மலையாளம், உருது மொழிப் பிரிவுகள்.

2. தொழிற்கல்விப் பிரிவு. (ஆண்-பெண்).

 2. நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,      

றிவியல் பிரிவு (இரு பாலர்).

பெரியார் நூற்றாண்டு கல்வியியல் கட்டடம், கே.கே. நகர், திருச்சி.          

 3. ஆக்ஸ்ஃபோர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,    கலைப்பிரிவு (இரு பாலர்) பிராட்டியூர் மேற்கு, திருச்சி.16,285 விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

                (தமிழ் வழி -16,128, உருது வழி - 58, தெலுங்கு வழி - 89, மலையாள வழி - 10). கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களுடைய விவரங்கள், கலந்தாய்வு நடைபெறும் தேதி, கலந்தாய்வு மையம் போன்ற விவரங்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் www.pallikalvi.in/ வெளியிடப்பட்டுள்ளன. 

ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு:

                தமிழ் வழி: அறிவியல் பிரிவு, தொழில்கல்வி பிரிவு விண்ணப்பித்த ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் பெண் விண்ணப்பதாரர்களில் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து சாவு

பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் தொழிலாளி ராஜாங்கம்(49). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், திவ்யா(12), தீபிகா(9) என்ற மகள்களும் இருந்தனர்.ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியதால். விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

கல்விக் கடனை வசூலிக்க புதிய திட்டம்


        கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.மாணவரின் பட்டத்துக்கான சான்றிதழில் "பார் கோட்' போன்ற முத்திரை பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
                எனவே, மாணவர் வேலைக்கு சேர்ந்துவிட்டதை வங்கிகள் இனி அறிந்து கொள்ள முடியும். இதனால் கடன் வசூலும் எளிதாகிவிடும் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, கல்விக் கடனுக்கு வட்டியை மத்திய அரசே ஏற்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கடன் வாங்கிப் படிப்பவர்களில் சிலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போய் விடுவதால் சிக்கல் ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறிவந்தனர். புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், மாணவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாகவே கடனை வசூல் செய்வதற்கான நடைமுறைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
               கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டில் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும் இது தொடர்பான ஆணை எதுவும் வரவில்லை என்று கூறி, வட்டிச் சலுகையை அளிக்க வங்கி அதிகாரிகள் மறுத்து வந்தனர்.அ டுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கவுள்ள சூழ்நிலையில், இதுகுறித்த சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம், எல்லா வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த மாணவர் அல்லது மாணவிக்கு வட்டிச் சலுகை கிடைக்கும். பிளஸ் 2 முடித்த பிறகு, மேற்கொள்ளும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப, தொழிற் கல்விக்கு இச் சலுகை வழங்கப்படும்.
 
                  நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு மட்டும் இது கிடைக்கும்.பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினர் எவரும் இச் சலுகையைப் பெறலாம். குடும்ப வருமானம் மட்டுமே அடிப்படையாகக் கருதப்படும், சமூக பின்னணி எதுவும் கருத்தில் கொள்ளப்படாது. மாணவரின் படிப்பு காலம் முடிந்து ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு வரையிலான (இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை) வட்டியை மத்திய அரசே செலுத்தும். அதற்குப் பிந்தைய காலத்துக்கு மாணவர்தான் வட்டியைச் செலுத்த வேண்டும். 
 
                   தகுதியுடைய மாணவருக்கு ஒரு முறை மட்டுமே, அதாவது இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயத்துக்கான (டிப்ளமோ) கல்விக்கு மட்டுமே வட்டி வழங்கப்படும். இருந்தாலும், ஒருங்கிணைந்த பட்டத்துக்கான (இளநிலையும், முதுநிலையும் சேர்ந்தது) கல்விக்கும் கடனுக்கு வட்டியை அரசே ஏற்கும்.படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அல்லது கல்வி நிலையத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை அல்லது கல்வி காரணங்களுக்காக நீக்கப்பட்டாலோ வட்டி மானியம் கிடைக்காது. இருந்தாலும் மருத்துவ காரணங்களுக்காக கல்வியைத் தொடர முடியாமல் போனால் அதற்கு வட்டி மானியம் உண்டு. அதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 
 
              என்.எம்.டி.எப்.சி., என்.எஸ்.கே.எப்.டி.சி., என்.பி.சி.எப்.டி.சி., என்.எஸ்.சி.எப்.டி.சி. மற்றும் என்.எச்.எப்.டி.சி. ஆகிய அமைப்புகளும் அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இந்தக் கடன்களுக்கும் வட்டி மானியத் திட்டம் பொருந்தும்.2009 ஏப்ரல் 1-ம் தேதியில் தொடங்கிய 2009-2010 கல்வி ஆண்டில் இருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். அந்த தேதிக்குப் பிறகு பெறப்பட்ட கல்விக் கடன்களுக்கு வட்டி மானியம் அளிக்கப்படும். அதற்கு முன்பாக பெறப்பட்ட கடன்கள் மானியத் திட்டத்துக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது. இத் திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் என சமூகத்தில் பல்வேறு பிரிவினரில் பலன் அடைந்தவர்கள் குறித்து கண்காணிக்க மனிதவள மேம்பாட்டுத் துறை ஓர் அமைப்பை ஏற்படுத்தும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசாணை பிறப்பிக்காததால் மாணவர்கள் பாதிப்பு


சிதம்பரம்:
 
                 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
         நீதிமன்ற உத்தரவின்படி தமிழகஅரசு அரசாணை பிறப்பிக்காததால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6,7,8,9 வகுப்புகளில் 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் உடனடித்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவினால், அதற்கான தமிழக அரசின் ஆணையை எதிர்பார்த்து கல்வித்துறை அதிகாரிகள் இன்று வரை இந்த மதிப்பெண் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளனர்.இதனால் ஜூன் மாதம் நடைபெற்ற உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கடந்த ஆண்டு படித்த வகுப்பிலேயே பயிலும் நிலை உருவாகியுள்ளது. இதில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு பொருந்தாது என்றாலும் அவர்களின் தேர்ச்சி பட்டியலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பிற வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலுடன் இணைக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
                   கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காததால் 9-ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வுக்கான 10-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாமல் 9-ம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.மேலும் இம் மாணவர்களுக்கு அரசின் இலவசப் புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எனவே தமிழகஅரசு நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பட்டியல்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே 19 வீடுகள் எரிந்து சாம்பல்

சிதம்பரம்:

                 காட்டுமன்னார்கோவில் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 19 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.காட்டுமன்னார்கோவிலை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்சி தெருவில் உள்ள தன்ராஜ் என்பவரது பூட்டியிருந்த வீட்டிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்தது. காற்றில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது.

                தகவல் அறிந்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பகுதியிலிருந்து தீயணைப்புபடையினர் விரைந்து வந்தனர். அவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 19 வீடுகள் மற்றும் அவற்றில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைக்க முயன்ற அடைக்கலசாமி என்பவர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்ராஜ் என்பவரது வீட்டில் மின் கசிவினால் தீப்பிடித்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப் பரவியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் விஜயலட்சுமி, டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 

                      கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் ரொக்கம், வேட்டி சேலை, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் திருமாறன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும், சொந்த விவசாய நிலம் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் அறிவித்தார்.

  கடலூர்  மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

                   தாட்கோ மூலம் இந்த இலவச இணைப்பு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் பெயரில் நிலப் பட்டா இருக்க வேண்டும். கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மின் இணைப்பு வேண்டி மின்சார வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகை தாட்கோவால் செலுத்தப்படும். தகுதி உள்ள விவசாயிகள் கடலூர் மாவட்ட தாட்கோ அலுலகத்தில், தகுந்த ஆவணங்களுடன் 30-6-2010க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய ஐகேச்சர்ஸ்

கடலூர்:

               கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு 24-வது ஆண்டாக மாணவ, மாணவிருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை, அண்மையில் கடலூர் டவுன்ஹாலில் நடத்தியது. மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகரப் பிரமுகர்கள் மகாவீர்மல் மேத்தா, ஜி.எஸ்.சுந்தரம், எஸ்.ரங்கராஜன், அரிமா கே.திருமலை, கணபதி, உச்சாட், ராதாகிருஷ்ணன், வள்ளி விலாஸ் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூரில் துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டது தேசிய ஆணையம்

கடலூர்:

               துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் கடலூரில், துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தது.   துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணையத்தின் செயலர் தீதன், பிரிவுச் செயலர் ராஜேஷ்குமார் ஆகியோர் புதன்கிழமை கடலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.   

 இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். பின்னர் ராஜேஷ்குமார் கூறியது:  

                   துப்புரவுத் தொழிலாளர் புனர்வாழ்வுத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் சுயதொழில் கடன் உதவிகளைப் பெற்று, நல்ல முறையில் தொழில் செய்து வருகிறார்கள். சுற்றுப் பயணத்தில் துப்பரவுத் தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டோம்.  துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளைத் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும். 

                     அவர்களின் படிப்புக்காக மத்திய அரசு பல கோடி நிதி வழங்குகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றும் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் 11 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 17,800 வழங்கப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் ஆணையத்தினர் பெற்றுக் கொண்டனர். துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தாட்கோ மேலாளர் துளசிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

பெட்ரோல் விலை லிட்டருக்குரூ 3.50 உயர்வு : கெரசின், காஸ், டீசல் விலையும் அதிகரிப்பு






                 சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது . அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரையிலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 வரையிலும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வின் முழுஒத்துழைப்போடு இந்த விலையேற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது .

                 பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுவது குறித்து கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதுகுறித்து கிரீத்பரீக் கமிட்டி அமைக்கப்பட்டு, விலையேற்றம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூட்டம் பலமுறை கூடியபோது, முடிவு எடுக்க முடியவில்லை. பல அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால், முடிவு தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று, டில்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க., சார்பில் அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் பெட்ரோலியத்துறை செயலர் சுந்தரேசன் ஆகியோர் பேசினர். அப்போது விலையேற்றம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பெட்ரோலின் விலை இனிமேல், சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இந்தியாவிலும் இருக்கும். பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை உயர்த்தப்படவுள்ளது.

                    பெட்ரோல் பயன்படுத்துவோர் இந்த விலையேற்றத்தை தாங்கும் சக்தி உள்ளவர்கள் என்பதாலும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியிருப்பதாலும் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது.சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டீசலின் விலை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பிறகும் ரூ.23 ஆயிரம் கோடி வரை அரசாங்கத்திற்கு மானியச் செலவு வரும்.

                 ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு மண்ணெண்ணெயின் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை பாகிஸ்தானில் ரூ.36ம்,வங்கதேசத்தில் ரூ.30, நேபாளத்தில் ரூ.31ம், இலங்கையில் ரூ.21ம் ஆக உள்ளது.நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.310 வரை விற்கப்படுகிறது. இனி இதற்கு ரூ.35 வரை விலை அதிகரிக்கும் . தற்போது 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ரூ.262 வரை அரசு மானியம் வழங்குகிறது. இந்த விலையேற்றங்கள் தவிர்க்க இயலாதது. மத்திய அரசின் இந்த விலையேற்ற முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்தன.

ஆதரவு: 

                    குறிப்பாக முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது முழு ஆதரவையும் அளித்தது. தேசியவாத காங்கிரசும் இதேபோல ஆதரவு தெரிவித்தது. மம்தா பானர்ஜி, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். டில்லியில்தான் இருக்கிறார் . ஆனால், பெட்ரோல் விலை உயர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த விலையேற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை ஒருபோதும் பாதிக்காது. இவ்வாறு முரளி தியோரா கூறினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவார், எக்காரணம் கொண்டும் விலை உயர்வை வாபஸ் பெறக்கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் மொத்த பணவீக்கத்தை 0.9 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்தார். விலை உயர்வை பா.ஜ., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துள்ளன.

Read more »

தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு:பெயர்களை சேர்க்க வரும் 16ம் தேதி வரை கெடு




              வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி வரும் ஜூலை முதல் தேதி துவங்குகிறது. பெயர்களை சேர்க்க, நீக்க 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது:

               இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஜூலை முதல் தேதி துவங்குகிறது. அன்றே, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பெயர்களை சேர்க்க, நீக்க, மாற்றம் செய்ய ஜூலை 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள், ஜூலை 10 மற்றும் 11ம் தேதி சனி, ஞாயிறு கிழமைகளில் நடக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்படும்.

                               ஏற்கனவே உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் மட்டுமன்றி, தபால் அலுவலகங்களிலும், படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம். மொத்தமாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தபால் அலுவலகங்களில், சிறப்பு முகாம் நாட்களிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை தபால் துறை செய்துள்ளது.ஏற்கனவே நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில்,100 சதவீத கள ஆய்வு முடிந்துள்ளது. இப்பணி கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி, தற்போது முடிந்துள்ளது. பெயர்களை சேர்க்க மொத்தம் 47 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 31 லட்சம் வாக்காளர்கள் ஏற்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 லட்சம் பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

                சில மாவட்டங்களில் சிலரது பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, இவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.கடந்த லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் மொத்தம் நான்கு கோடியே 16 லட்சம் வாக்காளர் இருந்தனர். தற்போது மேலும் 14 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆண்களும், பெண்களும் சம அளவில் உள்ளனர்.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.

Read more »

நெய்வேலியில் வேன்மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு

நெய்வேலி:

                  நெய்வேலி புதுநகர் 28-வது வட்டம் 2-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32), என்.எல்.சி. தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு நோக்கி திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

               இதுகுறித்து நெய்வேலி தெர்மல்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெய்வேலியை அடுத்த மந்தார குப்பம் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவர் மந்தார குப்பத்தை அடுத்த வீணங்கேணி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற பொன்னம்மாள் மீது அந்தவழியாக வந்த வேன்மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Read more »

Additional compensation given

CUDDALORE: 

          Following a settlement reached through the Lok Adalat, the Neyveli Lignite Corporation on Friday disbursed an additional compensation of Rs. 2.08 crore to land providers.

          NLC Director (Mines) B. Surender Mohan gave away the cheques to 117 land owners who had given 62 acres of land in Kangaikondan area to the NLC. A statement from the NLC said that so far 10,500 cases seeking additional compensation, over and above fixed by the government, were cleared by the Lok Adalat and a sum of Rs. 100 crore was disbursed. The compensation fixed was as follows: Rs. 6 lakh for an acre of irrigated land, Rs. 5 lakh for an acre of rainfed areas and Rs. 50,000 for a cent of house sites acquired for the sake of the NLC.

Read more »

Panchayat wards reorganisation

CUDDALORE: 

           The work on reorganisation of multi-member panchayat wards into single-member wards will begin in July and end in November, according to Collector P. Seetharaman.

            In a statement released here, he said 13 panchayats unions in the district comprised 681 panchayats. These local bodies had a total of 1,852 multi-member wards and it had been proposed to convert these into 4,917 single-member wards. A training programme was organised here on Friday to instruct Block Development Officers and their deputies on how to go about the task. The reorganisation measure would be discussed at special panchayat meetings to be convened in the second fortnight of every month to ascertain the views of the villagers, Mr. Seetharaman said.

Read more »

விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் தென்மாவட்ட ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதம்


                             விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தென்மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும், ஆறு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர். 

                     விருத்தாச்சலம் அருகே நேற்று முன்தினம் இரவு, ரயில்வே தண்டவாளத்தில், பெரிய மரம் ஒன்று திடீரென விழுந்தது. இதனால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள், தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே படையினர் மரத்தை வெட்டி, எடுத்து அப்புறப்படுத்த பல மணி நேரம் ஆனது.

              இதனால் சென்னை வந்து சேர வேண்டிய தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் ஐந்து, ஆறு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. வழக்கமாக காலை 5.10 மணிக்கு வர வேண்டிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அடுத்து வர வேண்டிய பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன. 6.40க்கு வர வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 11.50க்கும், 7.10க்கு வர வேண்டிய பொதிகை 1.10க்கும், 7.40க்கு வர வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதியம்1.30க்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தன.

             காலை 8.20க்கு வர வேண்டிய ராமேஸ்வரம் -சென்னை எக்ஸ்பிரஸ் மதியம் 1.50க்கும், காலை 8.40க்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 2.10 மணிக்கும், 8.55 மணிக்கு வர வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 2.30 மணிக்கும் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. நேற்று பகல் 12.40க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாக 2.35க்கு புறப்பட்டுச் சென்றது. உரிய நேரத்தில் புறப்படும் என்ற எதிர்பார்ப்பில் முன்கூட்டியே வந்த பயணிகள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்தில் காத்துக் கிடந்தனர். ரயிலில் வரும் உறவினர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும், ரயிலின் வருகைக்காக காத்துக் கிடந்ததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Read more »

தமிழக அரசின் மாதாந்திர நிதியுதவி பெற நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

             தமிழக அரசின் மாதாந்திர நிதியுதவி பெற நலிந்த கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                 இயல், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், சிற்பம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்து விளங் கிய 58 வயதிற்கு மேற் பட்ட தற்போது வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது. இந்த நிதியுதவி பெற தகுதி உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் www.tn.gov.inappforms/artculture/iyal_isai_appform.pdf என்ற இணையதள முகவரியிலிருந்தோ அல்லது உதவி இயக்குனர், தஞ்சாவூர் மண்டலக் கலை பண் பாட்டு மையம், 5, மணிமேகலை தெரு, முத்தமிழ் நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய சுய முகவரியிட்ட கவரை தாபாலில் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

                 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் மற்றும் கோட்ட வருவாய் அலுவலரின் (ஆர்.டி.ஒ.,) பரிந்துரையை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு வரும் ஜூலை 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண் டும். கடந்தாண்டு விண் ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை.

Read more »

ஊராட்சியில் பல உறுப்பினர் வார்டை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்ற பயிற்சி

கடலூர் :

             கடலூரில் கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டினை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

               13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 681 கிராம ஊராட்சிகளில் தற்போது 1,852 பல உறுப்பினர் வார்டுகள் உள்ளன. இதனை 4,917 ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்த பயிற்சி கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. கலெக்டர் தலைமை தாங்கினார். கலெக்டர் நேர்முக உதவியாளர் தர்மசிவம் (வளர்ச்சி), ஊராட்சி உதவி இயக்குனர் பட்டாபிராமன் (பொறுப்பு) ஆகியோர் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.மேலும் ஒரு வார்டு உறுப்பினராக மாற்றும் பணி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001ன் படியும், 2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டசபை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வார்டு அமைக்கும் இப்பணி வரும் ஜூலை முதல் துவங்கி நவம்பரில் முடிகிறது.மேலும் ஒவ்வொரு மாதத்தில் 15ம் தேதிக்கு மேல் ஊராட்சியில் சிறப்புக் கூட்டம் கூட்டி தங்கள் கருத்துக்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலெக்டருக்கு அனுப்பி வைப்பார்கள்.

Read more »

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி உண்டு உறைவிட பள்ளிக்கு விடுமுறை

கடலூர், :

              அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வந்த உண்டு உறைவிட பள்ளி மாவட்ட நிர் வாகத்தின் அனுமதியின்றி விடுமுறை விடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


               கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூரிபா காந்தி வித்யசாலை என்ற பெயரில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இதில் 50 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியை நிர்வகித்து வரும் தனியார் தொண்டு நிறுவனம் சரிவர பராமரிக்காததால், இந்த பள்ளியை வடலூரில் உள்ள சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்துடன் ஒப்படைக்க கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார். கல்வி இயக்க அதிகாரிகள் நேற்று சென்ற போது உண்டு உறைவிடப் பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Read more »

புதுச்சேரி இரட்டை கொலை வழக்கு: இரண்டு கோர்ட்டுகளில் 6 பேர் சரண்

கடலூர் : 

              புதுச்சேரியில் ரவுடிகள் இருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் பண்ருட்டி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இதே போல் திண்டிவனம் கோர்ட்டில் இருவர் சரணடைந்தனர்.  

                 புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த கழுவா செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பிளாக் பாலாஜி ஆகியோர் கடந்த 18ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். பெரியக்கடை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் லாஸ் பேட்டையைச் சேர்ந்த பொன்னுரங்கன் மகன் சுந்தர் (25), பங்கஜான்சன் மகன் சந்திரன் என்கிற ஸ்ரீராம் (26), ஆறுமுகம் மகன் பிரபு (25), முத்தியால்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் (25) ஆகியோர், தங்களை இரட்டை கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி போலீசார் தேடுவதாக கூறி நேற்று மதியம் பண்ருட்டி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஈஸ்வரன் முன்னிலையில் சரணடைந்தனர்.

               நான்கு பேரையும் 15 நாள் காவலில் வைக்கவும், புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நான்கு பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், இவ்வழக்கு தொடர்பாக அரியாங்குப்பம் அருந்தமிழன் (23), வாணரப்பேட்டை சுரேஷ் (21) ஆகிய இருவரும் நேற்று மாலை திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் மாஜிஸ்திரேட் ஜெயசூர்யா முன்னிலையில் சரணடைந்தனர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இருவரும் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பட்டதாரிகள்: 

              கோர்ட்டில் சரணடைந்த அருந்தமிழன், சுரேஷ் ஆகிய இருவரும் வானூர் அடுத்த புளிச்சப்பள்ளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஓட்டல் மேலாண்மை படிப்பு முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

"காந்தி காலடித்தேடி' பயணக்குழு தடயங்கள் சேகரிப்பு

சிதம்பரம் :

             சிதம்பரத்திற்கு காந்தி வந்தது தொடர்பான தடயங்கள் மற்றும் விவரங்களை "காந்தியடிகள் காலடித்தேடி' பயணக்குழுவினர் சேகரித்தனர்.

             தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காந்தியடிகள், 1896ம் ஆண்டு முதல் 1946ம் ஆண்டு வரை 20 முறை தமிழகத்திற்கு வந்து மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியுள்ளார். காந்தி தமிழகத்திற்கு வந்த வரலாறு மறைந்து விடக்கூடாது என்பதற்காக, அவர் பயணித்த ஊர்களுக்குச் சென்று தடயங்களை சேகரித்து, ஆவணமாக வெளியிட காந்திய அமைப்புகள் முடிவு செய்து "காந்தியடிகள் காலடித்தேடி' என்ற பயணத்தை மேற்கொண் டுள்ளன.

                காந்தி கல்வி நிலைய நிர்வாகி அண்ணாமலை தலைமையில் காந்திய அமைப்பைச் சேர்ந்த மோகன், சிவக்குமார், விப்ரநாராயணன், நித்யானந்தம் ஆகியோர் அடங் கிய ஐந்து பேர் கொண்ட பயணக் குழுவினர் கடந்த 11ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காந்தி பயணித்த ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று தடயங்கள் மற்றும் விவரங்களை சேகரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் காந்தி வந்த கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் போன்ற பகுதிகளுக்கு அக்குழுவினர் வந்தனர். சிதம்பரம் வந்த பயணக்குழுவினரை சிதம்பரம் காந்தி மன்ற செயலாளர் குஞ்சிதபாதம், தலைவர் ராமலிங்கம் வரவேற்றனர். அவர்களிடம் காந்தி வந்தது தொடர்பாக விவரங்களை சேகரித்துக் கொண்டு நந்தனார் கோவிலுக்குச் சென்று கடந்த 1927ம் ஆண்டு செப். 11ம் தேதி காந்தி திறந்து வைத்த கல்வெட்டை பார்வையிட்டனர்.1934ம் ஆண்டு பிப். 16ல் நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு வந்த போது பார்வையாளர் பதிவேட்டில், இந்த இடத்திற்கு பல ஆண் டுகளுக்கு பின் மீண்டும் வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது என தனது கைப்பட குறிப்பு எழுதி வைத்துள்ளார். இதுவரை அந்த குறிப்பு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த குறிப்பு பதிவேட்டை பயணக் குழுவினர் பார்வை யிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதியிடம் விளக் கம் கேட்டறிந்தனர்.

                  பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பெண்கள் பள்ளிக்குச் சென்று 1921 செப். 17ல் காந்தி வருகை தந்தது குறித்த கல்வெட்டு, அப்போதைய பள்ளி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் மற்றும் காந்தி வந்து சென்றது அவரது நினைவாக இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் ஒற்றை செருப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் சரஸ்வதி, நீலாவதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பயணக்குழுவினர் கடலூர் சென்றனர்.

Read more »

மத்திய அரசின் தொழில் முனைவோர் பயிற்சி கடலூரில் வரும் 28ம் தேதி துவக்கம்

கடலூர் : 

            தொழில் முனைவோருக்கான 6 வார கால பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி கடலூரில் துவங்குகிறது.

                 மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் சார் பில் கடலூர் பீச் ரோடு, ரங்கநாதன் நகரில் இயங்கி வரும் வாஸ் தொண்டு நிறுவனத் தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. முகாமில் தொழில் தொடங்குவதற்கான உரிய ஆலோசனைகள், குறைந்த முதலீட்டில் தொழில் துவங்குவது, தேர்வு செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி செய்முறை விளக்கம், தொழில் துவங்க வங்கிகளில் கடனுதவி பெற தேவையான திட்ட அறிக்கை தயாரித்தல், நிர்வாக திறமையை மேம்படுத்துதல், அரசின் சலுகைகள், கடன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு கடன் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 45 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு பயிற்சி நடைபெறும் இடத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களில் தகுதியுள்ள 25 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 

சிவலிங்கம், 
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், 
65/1 ஜி.எஸ்.டி.ரோடு, 
கிண்டி, 
சென்னை-32 

என்ற முகவரியிலோ அல்லது 90920 90131, 9443397922 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Read more »

முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க.,வினருக்கு வலை

கடலூர் :

                 முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

                கடலூர் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (25). பா.ம.க., இளைஞரணி மாவட்ட செயலாளர். இதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். தே.மு.தி.க.,வைச் சேர்ந்த இவர் கடலூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடி மற்றும் கத்தியால் தாக்கினர். அதில் படுகாயமடைந்த கார்த்தி, முரளி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தே.மு.தி.க., கவுன்சிலர் அய்யனார், பாவாடைராஜ், ராஜ்குமார், கொக்கி என்கிற ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

விவாகரத்து கோரி கோர்ட் முன் தற்கொலைக்கு முயன்றவர் கைது

கடலூர் :

                 விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்காத விரக்தியில் கோர்ட் முன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை பாலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (48). விவசாய லி வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி (42), மகள் பிரபா (22), மகன் வேலன் (18). ஐந்தாண்டிற்கு முன் லட்சுமிக்கு என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் தோட்டக்கலை துறையில் வேலை கிடைத்தது. அதன் பிறகு லட்சுமி தனது பிள்ளைகளுடன் நெய்வேலியில் வசித்து வருகிறார்.

              குமுடிமுளை கிராமத்தில் தனியாக வசித்து வரும் பன்னீர்செல்வம் தனது மனைவியை குடும்பம் நடத்த பலமுறை அழைத்தும் மறுத்து விட்டார். அதனால் பன்னீர்செல்வம் விவாகரத்து கோரி சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நான்கு மாதங்களுக்கு முன் கடலூர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோர்ட்டில் இருந்து பலமுறை சம்மன் அனுப்பியும் லட்சுமி ஆஜராகாததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் வழக்கை விரைந்து முடிக்காததைக் கண்டித்து நேற்று காலை 11.30 மணி அளவில் கடலூர் முதன்மை உரிமையியல் நீதிமன்றம் முன் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்து குடிக்க முயன்றார்.கடலூர் புதுநகர் போலீசார், பன்னீர்செல்வம் வைத்திருந்த பூச்சி மருந்தை பறிமுதல் செய்தனர். தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்து இரு நபர் ஜாமீனில் விடுவித்தனர்.

Read more »

இடது கை விரலை இழந்தவர் டாக்டர் மீது போலீசில் புகார்

கடலூர் : 

                கடலூரில் டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தனது இடது கை விரல் அழுகி அகற்றப்பட்டது என்றும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

                         கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் மோகன் (35). இவரது இடது கை விரலில் கடந்த ஏப். 4ம் தேதி காயம் ஏற்பட்டது. பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். பின் கடலூர் எலும்பு முறிவு டாக்டர் பாண்டியன் என்பரிடம் சென்றார். பரிசோதித்த டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதில் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் அனுமதி கிடைக்கும். மீதி 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண் டும் என்றார். அதன்படி பணம் செலுத்தியதும் ஏப்.7ம் தேதி மோகனுக்கு அறுவை சிகிச்சை செய்த பின் 9ம் தேதி வீட்டிற்கு அனுப்பினார். ஏழு முறை கிளீனிக் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் விரல் அழுகி துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த மோகன் கடந்த மே மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள ரைட் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள், விரலை எடுத்து விடவேண்டும். இல்லை என்றால் மற்ற விரல் களும் பாதிக்கும் என்றனர். அதன்படி மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றப்பட்டது. டாக்டர் பாண்டியன் அளித்த தவறான சிகிச்சையால் தனது கை விரலை இழந்து விட்டதாகவும், இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் மோகன் நேற்று காலை புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior