உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

அறிவிப்பு

      
                        பல்கலைக்கழக தேர்வு எழுத செல்வதால் 19.05.2010 (புதன் கிழமை) முதல் 26.05.2010 (புதன் கிழமை) வரை செய்திகளை வெளியிட இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் வருகையும் ஆதரவும் தொடர்ந்து எங்களுக்கு தேவை. உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை எங்களுக்கு miyansgroup@gmail.com மின்னஞ்சல் அனுப்பவும்.

நன்றி

மஜாகார்த்தி



Read more »

List Of Engineering Colleges In Tamilnadu

Aalim Muhammed Salegh College of Engineering, Chennai
Aarupadai Veedu Institute of Technology, Kanchipuram
Aksheyaa College of Engineering, Maduranthagam
Asan Memorial College of Engineering and Technology, Chengalpattu
A.C. College of Engineering and Technology, Karaikudi
A.C. College of Technology, Chennai
A.C.T. College of Engineering and Technology, Maduranthagam
A.K.T. Memorial College of Engineering and Technology, Kallakurichi
A.R. Engineering College, Villupuram
A.R.J. College of Engineering and Technology, Mannargudi
A.R.M. College of Engineering and Technology, Chengalpet
A.V.C. College of Engineering, Mayiladutarai
A.V.S. Engineering College, Salem
Adhi College of Engineering and Technology, Kancheepuram
Adhiparasakthi College of Engineering, Vellore
Adhiparasakthi Engineering College, Cheyyar Taluk
Adhiyamaan College of Engineering, Hosur Taluk
Adithya Institute of Technology, Coimbatore
Agricultural Engineering College and Research Institute, Coimbatore
Akshaya College of Engineering & Technology, Coimbatore
Al-Ameen Engineering College, Erode
Alpha College of Engineering, Chennai
Amrita Vishwa Vidyapeetham University (Amrita School of Engineering), Coimbatore
Anand Institute of Higher Technology, Chengalpattu Taluk
Angel College of Engineering and Technology, Tiruppur
Anjalai Ammal Mahalingam Engineering College, Thiruvarur
Anna University Tiruchirappali, Ariyalur Campus, Ariyalur
Anna University Tiruchirappali, Main Campus, Trichy
Anna University Tiruchirappali, Panruti Campus, Panruti
Anna University Tiruchirappali, Ramanathapuram Campus, Ramanathapuram
Anna University Tiruchirappali, Thirukkuvalai Campus, Thirukkuvalai
Anna University Tiruchirappalli, Dindigul Campus, Dindigul
Anna University Tiruchirappalli, Pattukkottai Campus, Pattukkottai
Anna University Tirunelveli, Nagercoil Campus, Nagercoil
Anna University Tirunelveli, Thoothukudi Campus, Thoothukudi
Annai College of Engineering and Technology, Thanjavur
Annai Mathammal Sheela Engineering College, Namakkal
Annai Teresa College of Engineering, Ulundurpet Taluk
Annai Vailankanni College of Engineering, Azhagapapuram (PO)
Annamalai University, Chidambaram
Annamalaiar College of Engineering, Polur
Apollo Engineering College, Sriperumbudur
Arasu Engineering College, Kumbakonam
Archana Institute of Technology, Krishanagiri
Arignar Anna Institute of Science and Technology, Sriperumpudur Taluk
Arulmigu Meenakshi Amman College of Engineering, Cheyyar Taluk
Arunachala College of Engineering for Women, Nagercoil
Arunai Engineering College, Tiruvannamalai
As-Salam College of Engineering and Technology, Thanjavur
Avinashilingam University for Women (Avinashilingam Institute for Home Science and Higher Education for Women), Coimbatore
B.S. Abdur Rahman University (B.S. Abdur Rahman Crescent Engineering College), Chennai
Bharath University (Bharath Institute of Higher Education and Research), Chennai
B.K.R. College of Engineering and Technology, Arakkonam
Balaji Institute of Engineering and Technology, Thiruporur
Balamani Arunachalam Educational & Charitable Trust's Group of Institution, Chengalpet
Bannari Amman Institute of Technology, Erode
Bethlahem Institute of Engineering, Karungal
Bhajarang Engineering College, Tiruvallur Taluk
Bharath Niketan Engineering College, Theni
Bharathidasan Engineering College, Tirupattur Taluk
Bharathidasan Institute of Engineering and Technology, Trichy
Bharathiyar Institute of Engineering for Women, Attur Taluk

Christian College of Engineering and Technology, Oddanchatram
C. Abdul Hakeem College of Engineering and Technology, Vellore
C.A.R.E. School of Engineering, Srirangam
C.M.S. College of Engineering, Ernapuram Post
C.M.S. College of Engineering and Technology, Coimbatore
C.S.I. College of Engineering, Coonoor Taluk
C.S.I. Institute of Technology, Kanyakumari
Cape Institute of Technology, Radhapuram Taluk
Cauvery College of Engineering and Technology, Perur
Central Electro Chemical Research Institute, Karaikudi
Central Institute of Plastic Engineering and Technology (CIPET), Chennai
Chandy College of Engineering, Thoothukudi
Chendhuran College of Engineering and Technology, Thiurmayam Taluk
Chennai College of Engineering and Technology, Chennai
Chennai Institute of Science and Technology for Women, Chengalpet
Chettinad College of Engineering and Technology, Karur
Coimbatore Institute of Engineering and Information Technology, Coimbatore
Coimbatore Institute of Technology, Coimbatore
College of Engineering, Guindy, Chennai

Dhanalakshmi College of Engineering, Chennai
Dr. MGR University (Dr. M.G.R. Educational and Research Insitute), Chennai
D.M.I. College of Engineering, Kancheepuram
D.M.I. Engineering College, Kanyakumari
Dhaanish Ahmed College of Engineering, Chennai
Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology, Mamallapuram
Dhanalakshmi Srinivasan Engineering College, Perambalur
Dr. G.U. Pope College of Engineering, Thoothukudi
Dr. Mahalingam College of Engineering and Technology, Pollachi
Dr. N.G.P. Institute of Technology, Coimbatore
Dr. Nagarathinam,s College of Engineering, Namakkal
Dr. Nalini Institute of Engineering and Technology, Dharapuram
Dr. Navalar Nedunchezhiyan College of Engineering, Cuddalore
Dr. Paul's Engineering College, Vanur Taluk
Dr. Sivanthi Aditanar College of Engineering, Tuticorin

Easwari Engineering College, Chennai
E.S. College of Engineering and Technology, Villupuram
EASA College of Engineering and Technology, Coimbatore
Edayathangudi G.S. Pillay Engineering College, Nagapattinam
Einstein College of Engineering, Tirunelveli Taluk
Er. Perumal Manimekalai College of Engineering, Hosur
Erode Builder Educational Trust,s Group of Institutions, Kangeayam
Erode Sengunthar Engineering College, Erode
Excel College of Engineering and Technology, Namakkal
Excel College of Engineering for Women, Komarapalayam
Excel Engineering College, Komarapalayam

Fatima Michael College of Engineering & Technology, Madurai
Francis Xavier Engineering College, Palayamkottai
 
G.K.M. College of Engineering and Technology, Chennai
Govt. College of Engineering, Bargur
Govt. College of Engineering, Salem
Govt. College of Engineering, Tirunelveli
Govt. College of Technology, Coimbatore
G.G.R. College of Engineering, Vellore
Ganadipathy Tulsi's Engineering College, Vellore
Ganapathy Chettiar College of Engineering and Technology, Paramakudi
Global Institute of Engineering and Technology, Walajah
Gnanamani College of Engineering, Namakkal
Gnanamani College of Technology, Namakkal
Gojan School of Business and Technology, Chennai
Gopal Ramalingam Memorial Engineering College, Chennai
Greentech College of Engineering for Women, Attur Taluk
 
Hindustan University (Hindustan College of Engineering), Chennai
Hindustan Institute of Technology, Coimbatore
Hindusthan College of Engineering and Technology, Coimbatore
Hindusthan Institute of Technology, Coimbatore
Holy Cross Engineering College, Thoothukudi
 
Infant Jesus College of Engineering, Tuticorin
Infant Jesus College of Engineering and Technology, Tuticorin
I.F.E.T. College of Engineering, Villupuram
Idhaya Engineering College for Women, Villupuram
Imayam College of Engineering, Tiruchirappalli
Immanuel Arasar J J College of Engineering, Kanyakumari
Immanuvel Arasar J.J. College of Engineering, Nattalam
Indira Gandhi College of Engineering and Technology for Women, Chengalpattu Taluk
Indira Institute of Engineering and Technology, Thiruvallur
Indra Ganesan College of Engineering, Trichy
Indus College of Engineering, Coimbatore
Info Institute of Engineering, Kovilpalayam
Institute of Road and Transport Technology, Erode
 
J.A. Institute of Engineering and Technology, Chennai
J.C.T. College of Engineering and Technology, Coimbatore
J.J. College of Engineering and Technology, Srirangam
J.K.K. Muniraja Institute of Technology, Gobi Taluk
J.K.K. Nataraja College of Engineering and Technology, Tiruchengode
J.N.N. Institute of Engineering, Uthukottai Taluk
J.P. College of Engineering, Ayikudy Tenkasi Taluk
Jai Sriram College of Technology, Tiruppur
James College of Engineering and Technology, Kanyakumari
Jansons Institute of Engineering and Technology, Coimbatore
Jawaharlal Institute of Technology, Coimbatore
Jaya Engineering College, Tiruvallur
Jayalakshmi Institute of Technology, Thoppur
Jayam College of Engineering and Technology, Pennagaram Taluk
Jayaram College of Engineering and Technology, Thuraiyur Taluk
JEI Mathaajee College of Engineering, Kancheepuram
Jeppiaar Engineering College, Chennai
Jeyamatha Engineering College, Aralvaimozhi
Jeyaraj Annapackiam CSI College of Engineering, Nazareth
Joe Suresh Engineering College, Tirunelveli
John Bosco Engineering College, Tiruvallur
 
 
 

Read more »

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்


     காரைக்குடியில் இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் 

இளநிலை: பி.ஏ.

             வரலாறு, ஆங்கிலம், பொது நிர்வாகம் 

பி.எஸ்.சி.,  

             உளவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி 

பி.லிட். 

         தமிழ்,  

பி.பி.ஏ.,

     பேங்கிங் 

பி.எல்.ஐ.எஸ்.

      1 ஆண்டு
 
பி.சி.ஏ.,, பி.காம்

                போன்ற படிப்புகள் இளநிலை படிப்பில் வழங்கப்படுகிறது.  

முதுநிலை:எம்.ஏ., 

            தமிழ், ஆங்கிலம், வரலாறு, சைல்டு கேர் மற்றும் எஜூகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம், பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ்

எம்.பி.ஏ., -

        எஜுகேஷன் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், கார்ப்ரேட் செகரட்டெரிஷிப், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், வங்கி மற்றும் நிதி, டூரிசம், இன்டர்நேஷனல் பிசினஸ் 

எம்.எஸ்.சி.,

          கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி 

எம்.சி.ஏ., எம்.காம்.,எம்.எல்.ஐ.எஸ்., முதுநிலை டிப்ளமோ: 

             கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பி.ஜி.டி.சி.ஏ.,), ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் மேனேஜ்மென்ட், பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்டிரியல் ரிலேஷன்ஸ், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்மேலும் சுய உதவிக்குழு மேலாண்மை குறித்த 6 மாத சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. 

இது குறித்த தகவல்களுக்கு: 

    அழகப்பா பல்கலைக்கழகம்,
   அழகப்பாநகர்,  
   காரைக்குடி 
   தொலைபேசி : 04565 425200
   மின்னஞ்சல்  : alagappa@md3.vsnl.net.in 
  வலைத்தளம்  : www.alagappauniversity.ac.in

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பஞ்சம்: ஒரு வாரமாக தவியாய் தவிக்கும் நோயாளிகள்

Tamilnadu special news update
சிதம்பரம்: 

                சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பழுதான மின் மோட்டார் சீர் செய்யப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். அறுவை சிகிச் சைக்கு உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட வெளியில் இருந்து தண்ணீர் வாங்கிவர வேண்டிய அவல நிலை உள்ளது.

                       சிதம்பரத்தை மையமாகக் கொண்டு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜ் அரசு மருத்துவமனை உள்ளது. 34 ஆண்டுகள் பழமையான மருத்துவமனை. எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, சித்தா ஆகியன அனைத்து பிரிவுகளும் உள்ளது. எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் ஆபரேஷன் தியேட் டர் உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு மற்றும் பெண்களுக்கென 100 படுக்கை வசதிகளுடன் விஸ்தாரமான புதிய மருத்துவமனை கட்டடம், அதுதவிர அவசர சிகிச்சை பிரிவிற்கென தனி கட்டடம் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. கட்டட வசதி, மருந்து சப்ளை, மருத்துவ உபகரணங்கள் என வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது.  சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 22 டாக்டர்கள் நியமிக் கப்பட உள்ளதாக கூறப் பட்டாலும்  இதுவரை பாற்றாக்குறைதான்.

                  டாக்டர் இல்லாதது ஒருபுறம் என்றாலும், நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லை. யார் எந்த நேரத்திலும் உள்ளே நுழைந்து குடித்துவிட்டு கூத்தடிக்கலாம். நோயாளிகள் கூட பிராந்தி வாங்கி வந்து உள்ளேயே குடித்துவிட்டு சக நோயாளிகளை மிரட் டும் சம்பவங்களும் அடிக் கடி நடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் அச்சத்துடன் தங்கியுள்ளனர். இவை எல்லாவற்றையும் விட முக்கிய பிரச்சனையாக தற்போது தண் ணீர் இல்லாமல் நோயாளிகள் கடந்த ஒரு வாரத் திற்கும் மேலாக தவியாய் தவித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத் தில் சுனாமி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு தண்ணீர் சப்ளை செய்ய தனியாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டிக்கு சப்ளை செய்யும் மின் மோட்டார் பழுதாகி ஒரு வாரத்திற் கும் மேல் ஆகிறது.

                    இதுவரை மின்மோட் டாரை சீர் செய்ய யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. பொதுப்பணித் துறையிடம் கூறியிருக்கிறோம் என மருத்துவமனை அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். பொதுப்பணித்துறையினரும் அதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ளவர்கள் குடிநீர் இன்றி மருத்துவ எதிர்புறம் உள்ள கடை மற்றும் பொது இடங்களுக்கு சென்று பாட்டிலில்,  தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

              மருத்துவமனை வளாகத்திலேயே மறைவான இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் மருத்துவமனை மற்றும் கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாததாலும் மருத்துவமனை உள்ளே தலைகாட்ட முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் படுக்கையில் இருப்பதை விட அதிக நேரம் மருத்துவமனைக்கு வெளியில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். நோயாளிகள் நிலைதான் இப்படி என்றால் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் அவதிப்படுகின்றனர். ஆபரேஷன் தியேட்டருக்கு கூட  வெளியில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர். முதலில் மருத்துவமனைக்கே அவசர சிகிச்சையை அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி


           
                  அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.​ இதற்கு முன்னர் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகள் தோல்வியடைந்தன.​ தற்போது திங்கள்கிழமை ஏவப்பட்ட அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏவுகணை சோதனையானது அனைத்து இலக்குகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்ததாக ஒருங்கிணைந்த சோதனை சரக ​(ஐடிஆர்)​ இயக்குநர் எஸ்.பி.​ தேஷ் கூறினார். திங்கள்கிழமை காலை 9.15 மணி அளவில் நகரும் வாகனத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.​ ஐடிஆர் வளாகம்-4-ல் இருந்து இது ஏவப்பட்டது.​ இந்த ஏவுகணை 1,000 கி.கி.​ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.​ 2,000 கி.மீ.​ தூரம் வரை தரையிலிருந்து விண்ணில் சென்று தரை இலக்கை தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.​ அக்னி ஏவுகணையின் பயணப்பாதை முழுவதும் நவீன ரேடாரால் கண்காணிக்கப்பட்டது.​ தவிர,​​ தொலைநோக்கிகள் மற்றும் மின்னணு நோக்கிகள்,​​ கடற்படைக் கப்பல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.​ வங்கக் கடலில் விழும்படி இதன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.​ இது கடலில் விழுந்தபோது அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றும் அளவிடப்பட்டது.​ ​ராணுவத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவு ​(எஸ்எப்சி),​​ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ​(டிஆர்டிஓ)​ ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த செயல்பாட்டை ஆராய்ந்தனர்.​ ஏவுகணை கிளம்பும்போது எழுந்த வெப்பம் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளும் துல்லியமாக அளவிடப்பட்டன.​ ​கடந்த ஆண்டு மே 19-ம் தேதியும்,​​ நவம்பர் 23-ம் தேதியும் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.அக்னி வடிவமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை.​ இதிலிருந்த பாகங்கள் தவறாக செயல்பட்டதால் முந்தைய சோதனைகள் தோல்வியில் முடிந்தன என்று டிஆர்டிஓ தலைமைக் கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.​ செல்வமூர்த்தி தெரிவித்தார். அடுத்த கட்டமாக 5,000 கி.மீ.​ தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடிவமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.​ 
 
                    ஓராண்டில் இது தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.​ ​ஏ.கே.​ அந்தோனி பாராட்டு:​​ அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததற்காக இதை வடிவமைத்த குழுவினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.​ அந்தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையின்போடு வீலர்ஸ் தீவில் டிஆர்டிஓ தலைவர் சரஸ்வத்,​​ அக்னி-2 ஏவுகணை திட்ட இயக்குநர் அவினாஷ் இருந்தனர்.​ ​அக்னி ஏவுகணை வரிசையில் இடம்பெற்றுள்ள மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவும் திறனை ராணுவ உத்திகள் வகுக்கும் பிரிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு


 
            வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,​​ புதுவையில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:

                ங்கக் கடலில் சென்னையிலிருந்து 850 கி.மீ.​ தொலைவில் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி,​​ புயலாக உருவெடுத்துள்ளது.​ இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து,​​ ஆந்திர மாநில கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.​ இதனால் ஆந்திரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் பாதிப்பு தமிழகத்திலும் இருக்கும்.​ பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.​ தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.​ சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். இந்தத் தொலைதூர புயல் சின்னம் காரணமாக,​​ பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.​ மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் உஷார் நிலை:​​ 

               புயல் சின்னம் காரணமாக,​​ ஆந்திரத்தின் 9 கடலோர மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.​ தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களை,​​ ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது

Read more »

எம்.பி.பி.எஸ்.​ சேர முதல் நாளிலேயே 6,249 பேர் விருப்பம்


எம்.பி.பி.எஸ். ​ படிப்பில் சேர சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை விண்ணப்பம் பெறும் மாணவி.​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ விழுப்புரம்,​​ வேலூர் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து மே 31-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
 
 
           எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர முதல் நாளிலேயே 6,249 மாணவ-மாணவியர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.​ ​ கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர முதல் நாளில் 5,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதை ஒப்பிடும்போது,​​ மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் காண்பிக்கும் ஆர்வம் வெளிப்படுகிறது.​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ விழுப்புரம்,​​ திருச்சி,​​ தஞ்சாவூர்,​​ திருவாரூர் என 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.​ ​ 
 
                  சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்.​ ​படிப்பில் சேரவும் இதே விண்ணப்பத்தைத்தான் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.​ அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.​ ​ எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர மாணவர்கள் பெரிதும் விரும்பும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டும் முதல் நாளான திங்கள்கிழமை 467 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.​ ​ 
 
               விண்ணப்பக் கட்டணம் ரூ.500-ஐ,​​ கடந்த ஆண்டுகளைப் போன்றே 'செயலர்,​​ ​ தேர்வுக் குழு,​​ கீழ்ப்பாக்கம்,​​ சென்னை-10' என்ற பெயருக்கு டி.டி.​ எடுத்துத்தான் பெற வேண்டும்.​ பணமாகச் செலுத்தினால் விண்ணப்பம் அளிக்கப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். சனி, ​​ ஞாயிறும் உண்டு:​ அனைத்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை,​​ ஞாயிற்றுக்கிழமை உள்பட எல்லா நாள்களிலும் எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பெறலாம்.​ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழுச் செயலகத்துக்கு மே 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
 

Read more »

கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேர ​மாணவர்கள் ஆர்வம்


மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வாங்க திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவர்கள்.
 

             கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.​ ​​ இதற்குச் சான்றாக சென்னையில் உள்ள அரசு கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற ஏராளமான மாணவர்கள் திங்கள்கிழமை வரிசையில் காத்திருந்தனர்.​ ​​ 

                   பிளஸ் 2 தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறும் மாணவர்களில்,​​ பொறியியல் படிப்பில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோரும்,​​ மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ கால்நடை மருத்துவ அறிவியல்,​​ வேளாண்மை,​​ சட்டம் போன்ற தொழில் படிப்புகளில் சில ஆயிரம் மாணவர்களும் சேருகின்றனர்.​ ஆனால்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம்.​ ​​ தமிழகம் முழுவதும் 2009-10-ம் ஆண்டு கணக்குப்படி,​​ 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 46,386 இடங்கள்,​​ 133 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 97,652 இடங்கள்,​​ 383 சுயநிதி கல்லூரிகளில் 1,08,637 இடங்கள்,​​ 9 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 3,563 இடங்கள் என 578 கல்லூரிகளில் 2,56,238 இடங்கள் உள்ளன.​ இவற்றில் 2,17,329 இடங்கள் நிரப்பப்பட்டன.​ 2010-11-ம் ஆண்டிலும் அதே அளவு இடங்கள் கிடைப்பதோடு,​​ பல கல்லூரிகளில் 10 சதவீதம் வரை கூடுதல் இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.​ ​​ இந்த ஆண்டு இவற்றில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.​ ​​ ​ 

                   பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை ​(மே 14) வெளியானது.​ பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ​முக்கியமான கணிதம்,​​ இயற்பியல் போன்ற பாடங்களின் மதிப்பெண்ணும் வெகுவாக குறைந்துள்ளது.​ இதனால்,​​ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் குறைந்துள்ளது.​ இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பொறியியல் கல்லூரி அல்லது பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர வாய்ப்பு இல்லாமல் போகும் என கருதப்படுகிறது.​ மாணவர்கள்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளின் பக்கம் படையெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.​ ​​

                  கலை கல்லூரிகளில் கடந்த ஆண்டில் 38,909 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.​ இவற்றில் கலை,​​ அறிவியல் படிப்புகளில் சேர்ந்த பின்னர்,​​ பொறியியல் படிப்பு கிடைத்து அதில் சேர்ந்ததால் ஏற்பட்ட காலி இடங்களும் அடங்கும்.​ கணித பாட மதிப்பெண் குறைவு காரணமாக இந்த ஆண்டு அவ்வாறு காலியிடங்கள் ஏற்படுவதும் குறையும் என்று கூறப்படுகிறது.​ ​​ தவிர,​​ பிளஸ் 2 தேர்வில் வேதியியல்,​​ வணிகவியல்,​​ கணக்குப் பதிவியல்,​​ வணிகக் கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதோடு,​​ கணிசமான மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர்.​ ​​ கல்வித்துறை வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு வணிகவியலில் இந்த ஆண்டு 968 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.​ இதே கடந்த ஆண்டில் 285 மாணவர்கள் தான் வணிகவியலில் 100 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.​ வணிகக் கணிதத்தில் 341 மாணவர்களும் ​(கடந்த ஆண்டில் 198 பேர்)​ ,​​ கணக்குப் பதிவியலில் 851 பேரும் ​(கடந்த ஆண்டில் 621 பேர்)​ 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.​ ​​ 

                 இதனாலும்,​​ கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் வழக்கமாக சேரும் மாணவர்களைவிட 2010-11-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகம் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.​ ​​ மாணவர் சேர்க்கைக்காக அரசு கல்லூரிகளில் கடந்த வாரம் இறுதியில் விண்ணப்ப விற்பனை தொடங்கியது.​ சென்னை மாநிலக் கல்லூரியில் இதுவரை 4,000 விண்ணப்பங்களும்,​​ ராணி மேரி கல்லூரியில் 4,400 விண்ணப்பங்களும்,​​ நந்தனம் கல்லூரியில் 1,000 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன.​ ​​ விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு,​​ அவை சமர்ப்பிக்கப்படும் கால அளவை அந்தந்தக் கல்லூரிகள் நிர்ணயித்துள்ளன.​ எனினும் பெரும்பாலான கல்லூரிகளில் மே 31 வரையிலும்,​​ வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் ஜூன் முதல் வாரம் வரையிலும் விண்ணப்ப விநியோகம் இருக்கும்.​ ​​ சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் கலியபெருமாள்,​​ ​ விண்ணப்ப விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகம் இருக்கும்.​ எனினும் தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் ​அச்சடிக்கப்பட்டுள்ளன.​ தேவைப்பட்டால் மீண்டும் அச்சடிக்கப்படும் என்றார்.

Read more »

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கம்

                 புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு எழும்பூர் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 21ம் தேதியிலிருந்து இயக்கப்படுகிறது.

              புவனேஸ்வர் - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்றும், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதைப் பணி முடிந்து திறப்பு விழா நடந்த பிறகு இந்த ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதைப் பணி முடிந்து கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

                 புவனேஸ்வரிலிருந்து வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.8496) பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்திலிருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் (எண்.8495) காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். எழும்பூரிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை மாலை 6.40 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்.

                  இந்த ரயிலில் ஒரு 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி, ஒரு 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டியுடன், முன்பதிவு செய்யப்படாத சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டி நான்கும் இணைத்து இயக்கப்படுகிறது. குர்தாரோடு, பெர்காம்பூர், விஜயநகரம், தூவாடா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Read more »

என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ்

நெய்வேலி : 

                 என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ் வழங்கப்படுகிறது. என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை கருத்தில் கொண்டு போனஸ் வழங்க சேர்மன் அன்சாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி என்.எல்.சி.,யில் பணியாற்றி வரும் 14 ஆயிரத்து 273 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா, 21 ஆயிரத்து 860 ரூபாய் என மொத்தம் 31 கோடியே 20 லட்சத்து 7,880 ரூபாய் நாளை போனசாக வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் நான்காயிரத்து 21 இன்ஜினியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊக்கத் தொகை முடிவு செய்யாததால் அவர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால், எஸ்.1, எஸ்.2, எஸ்.3, இ1 மற்றும் இ2 வரையிலான இன்ஜினியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக நாளை வழங்கப்படுகிறது.

Read more »

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் மாயமான 'டாப்- அப்' கார்டுகள் : விஜிலென்ஸ் விசாரணை துவக்கம்

கடலூர் : 

                  பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் காணாமல் போன, 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டாப்- அப்' கார்டுகள் குறித்த விசாரணை, விஜிலென்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                      கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப்புள்ள 70 ஆயிரம், 'டாப்-அப்' கார்டுகள் விற்பனைக்கு வந்தன. அப்போது பொறுப்பில் இருந்த பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டுள்ளார். தற்போது நடந்த அலுவலக தணிக்கையின் போது, 10 ஆயிரம், 'டாப்-அப்' கார்டுகள் கொண்ட ஒரு பெட்டி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான கார்டுகள் மதிப்பு, 5.50 லட்ச ரூபாய். இது குறித்து முதன்மை கணக்கு அதிகாரி ராஜா, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்திற்குள்ளே நடந்துள்ளதால் துறை ரீதியான விசாரணை நடத்தி சந்தேக நபரை தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறி அனுப்பி விட்டனர். 

               இது தொடர்பாக நடந்த ஆலோசனையின் பேரில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கென  னியாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜிலென்சில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இச்சம்பவம் குறித்து கடலூரில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரி மகேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே இரண்டு வீடுகளில் 48 சவரன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

விருத்தாசலம் : 

                மங்கலம்பேட்டை அருகே, ஒரே இரவில் இரண்டு வீடுகளில் புகுந்து 48 சவரன் நகை மற்றும் 6.5 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பிஞ்சனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). மக்கள் நல பணியாளர். நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி செல்வம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு சத்தம் கேட்டு எழுந்த செல்வராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார். பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 32 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது.

மற்றொரு சம்பவம்

                செல்வராஜ் வீட்டின் பக்கத்து வீட்டில் பூமாலை (45), அவரது மனைவி மணிமேகலை மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார். அறையில் பீரோவில் இருந்த 16 சவரன் நகை 1.57 லட்ச ரூபாய் பணம் திருட்டு போனது தெரிந்தது. தகவல் அறிந்த டி.எஸ்.பி., ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில், பக்கத்து பக்கத்து வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

நரிக்குறவர்கள் மோதல் : துப்பாக்கி சூடு: வாலிபர் கைது


விருத்தாசலம் : 

              இரு சக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்ட நரிக்குறவர் சங்க தலைவரை, நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

               விருத்தாசலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). நரிக்குறவர் சங்கத் தலைவர். அதே காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இளைய மகன் பாஷா (13). இவர் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த பாண்டியன், பாஷாவை கண்டித்தார். இதுபற்றி பாஷா தனது அண்ணன் வடிவேலுவிடம் (23) கூறினார். உடன் வடிவேல் எப்படி என் தம்பியை திட்டலாம் என பாண்டியனிடம் தகராறு செய்தார்.

                  இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், வடிவேலுவின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். கோபமடைந்த வடிவேல் வேட்டைக்கு செல்ல, லோடு செய்து தயாராக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பாண்டியனை சுட்டார். இதில் பாண்டியனின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடுவதை தடுக்க முயன்ற, விஜய் என்பவரின் மனைவி கொளஞ்சிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்து விருத்தாசலம் போலீசார் வடிவேலுவை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Read more »

கடலூர் பகுதியில் சூதாட்டம் அதிகரிப்பு: தற்கொலைக்கு தள்ளப்படும் அபாயம்

கடலூர்: 

                  கடலூர் அருகே லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடும் இளைஞர்களால் பல குடும்பங்கள் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது முந்தரி சீசன் துவங்கியுள்ளதால் கடலூரைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மலையோர கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.

                  இப்பகுதி இளைஞர்கள் பலர் பகல் நேரத்தில் முந்திரி மற்றும் புளியந்தோப்புகளிலும், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கோவில் மற்றும் பள்ளிக் கூடங்களில் பணம் வைத்து சூதாடி வருகின்றனர். ஆட்டத்திற்கு நபர் ஒருவர் குறைந்தது 5,000 வைப்பதால், தினமும் பல லட்சம் ரூபாய் புழங்குகிறது. சிலர் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பலர் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பறிகொடுத்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக சிலர் நகைகள், இருசக்கர வாகனங்களையும் அடகு வைத்து சூதாடி பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது.

                அதன்படி கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சமுதாயக்கூடம், மேற்கு ராமாபுரம் அரசு துவக்கப் பள்ளி, வண்டிக்குப்பம் புளியந்தோப்பு, புதுப்பாளையம் தெற்குவெளி முந்திரிதோப்பு, முருகர் கோவில், காட்டுப்பாளையம் முருகர் கோவில் அருகில், அரசடிக்குப் பம் புளியாந்தோப்பு, திருமானிக்குழி பனந்தோப்பு, சேடப்பாளையம் புலிகுத்தி வாய்க்கால் அருகே உள்ள மாந்தோப்பு, வழிசோதனைப்பாளையம் தெற்கு தெரு ஆலமரத்தடி, கீரப்பாளையம் மேற்குதெரு மாந்தோப்பு, கிழக்கு தெரு ஓடை, ஒதியடிக்குப்பம் புளியந்தோப்பு, அரசடிக்குப்பம் பலாத்தோப்பு, வெள்ளக்கரை பலாத்தோப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான இளைஞர்கள் சூதாடி வருகின்றனர்.

                   பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப் பட்ட சூதாட்டம் தற்போது நகை மற்றும் பொருட்களை அடகு வைத்து ஆடும் அளவிற்கு சென்றுள்ளதால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதன் காரணமாக சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் சூதாட் டத்தால் பொருட்களை இழந்ததால் குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. அதற்கு முன்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து, விவசாயக் குடும்பங் களை சீரழித்து வரும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்.

Read more »

திருவந்திபுரம் அரசு பள்ளி பிளஸ் 2வில் 80 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: 

                  திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 82 மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். அதில் 65 பேர் தேர்ச்சியடைந்தனர். இதன் மூலம் பள்ளியின் தேர்ச்சி 80 சதவீதம் பெற்றது. இது கடந் தாண்டைவிட 29 சதவீதம் அதிகம். மாணவர் கபில்தேவ் 940 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி சதவீதம் உயர காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி பாராட்டினார்.

Read more »

விருத்தாசலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விருத்தாசலம்: 

                மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருத்தாசலம் ஜி.என்., திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித் தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா, அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு அடுப்புகள் என 1 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கான நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருளாளினி, மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீரகுமார், தாசில்தார் ஜெயராமன், மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ் மேரி, ஒன்றிய சேர்மன் செல்வராசு, நகர சேர்மன் முருகன், முன்னாள் எம்.பி., கணேசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அன்பழகி, சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம், மாற்று திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு டி.வி. எஸ்., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கடலூர்: 

        ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     சென்னை, ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள டி.வி. எஸ்., நிறுவனத்திற்கு 4,000 வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதால் மேற்படி இடத்தில் சென்று வேலை செய்வதற்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி 10ம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். ஐ.டி.ஐ., மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30 வரையிலும், மருத்துவ தகுதி பெறுதல் வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு இரண்டு மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உணவு, உறைவிடம் வசதியும், பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்பும் தரப்படும். வேலையின் போது சீருடை மற்றும் காலணி இலவசமாக வழங்கப்படும். வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி, வாக்காளர் அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், பள்ளி சான்று நகல், ஆகியவற்றினை இணைத்து 

மாவட்ட மேலாளர், 
தாட்கோ, சுப்பராயலு நகர், 
கடலூர் 

                 என்ற முகவரிக்கு 31.5.2010 மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

சிதம்பரம்: 

                 சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வராததால் அரசிடம் 52.33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கேட்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப் பட்டது. அரசு 6 கோடியே 15 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள ஒரு கோடியே 2 லட்சம் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. நிதி நிறுவனங்களும் நகராட்சிக்கு கடன் தர மறுத்து விட்டதால் நகராட்சி சார்பில் 50 லட்சமும் மீதமுள்ள 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை அரசிடம் ஒதுக்கீடு கேட்டு பெறுவது எனவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி நேற்று அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த விவாதங்கள்:

ஜேம்ஸ் (தி.மு.க.,): 

                  முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட புகைப்படம் எடுத்தில் குழப்பம் அதிகமாக உள்ளது. சரியாக வழங்கவில்லை. புகைப்படம் மாறி, மாறி வருகிறது. குடிநீர் தட்டுப் பாடு தீரவில்லை. சில பகுதியில் ஒரு வேலை குடிநீர் வருவதே சிரமமாக உள்ளது.

அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): 

                விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. மக்கள் குடிப்பதற்கே அஞ்சுகின்றனர். பழைய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டது. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைத்தால் மட்டுமே குடிநீரில் கழிவுநீர் கலப் பதை தடுக்க முடியும். இதே குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, உஷா, சிவராம தீட்சதர் பேசினர்.

ரமேஷ் (பா.ம.க.,): 

                   ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. கவுன் சிலர்கள் சொல்லும் எந்த பணியும் நடப்பதில்லை. நகரில் சாலைகள் அத்தனையும் மோசமாக உள்ளது. புதைவடிகால் பணியை காரணம் கூறி சாலை அமைக்க முடியாது என கூறுகிறார்கள் என சரமாரியாக புகார்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் திட்டம் பற்றாக்குறை நிதியை அரசிடம் கேட்டு பெறுவது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

Read more »

வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க மத்திய அரசு குழுவினரிடம் வலியுறுத்தல்

கிள்ளை: 

               கடலூர் மாவடத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க விவசாய சங்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு குழுவிடம் விவசாய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து மத்திய நீர்வள ஆணையர் லால், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சவுத்திரி ஆகியோரிடம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ரவீந்திரன் அளித்துள்ள மனு: 

                 கடலூர் மாவட்டத்திற்கு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என மொத்தம் 424 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் முறையாக நடக்கவும் விவசாயிகள் கூட்டமைப்பு உயர் மட்ட குழு அமைத்து பணிகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் மழைக்காலத்தில் போதிய வடிகால் இல்லாமலும், நவரை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது இப்பகுதியில் வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக 7.5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாப் பேட்டை பாலத்தில் இருந்து பொன்னந்திட்டு வடிகால் வாய்க்கால்வரை உள்ள கரைகளை பலப்படுத்தி 28 பாசன முதன்மை மதகுகள் கட்டி புதிய ஷட்டர் அமைத்து, கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல்வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி: 

                 பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று முதல் நெல் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று கருப்பு எள் 25 மூட்டையும், நெல் 400 மூட்டைகளும், உளுந்து 20 மூட்டையும், ராகி 15 மூட்டையும் மற்றும் பச்சைபயிர், கம்பு, பருத்தி தலா ஒரு மூட்டையும் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நெல் வரத்து கடந்த வாரம் 100 மூட்டை அளவிலே இருந்தது. தற்போது நவரை பருவ அறுவடை துவங்கியதால் நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு 400 நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்தது. 80 கிலோ எடை கொண்ட கருப்பு எள் 2,959ம், பருத்தி குவிண்டால் 2,959ம், நெல் குண்டுமணி 75 கிலோ 727ம், உளுந்து 100 கிலோ 5,469ம், கம்பு 100 கிலோ 1,009ம், ராகி 1,139ம், பச்சை பயிர் 5,859 ரூபாய்க்கும் விற்பனையானது.

Read more »

திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 'மெகா' சைஸ் பள்ளம்

திட்டக்குடி: 

              திட்டக்குடி அருகே மரத்தின் நிழலில் மறைந்துள்ள 'மெகா' சைஸ் பள்ளத்தில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

               விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியே புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட் டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர பெண்ணாடம் சர்க்கரை, சிமென்ட் ஆலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், பள்ளி, கல் லூரி வாகனங்களும் செல்கின்றன. இவ்வழியாக விருத்தாசலம், பெண்ணாடம், ராமநத்தம், பெரம்பலூர் என குறிப் பிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் நேர விரயம் கருதி செல்கின்றனர்.

                   இந்நிலையில் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ் சாலை குண்டும், குழியுமாக ஆங் காங்கே பெயர்ந்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திட்டக்குடி முதல் விருத்தாசலம் வரை சாலை முற்றிலுமாக போக்குவரத் திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆவினங்குடி அரசு மணல் குவாரி அருகில் நெடுஞ்சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. அந்த இடத்தில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை பேட்ஜ் ஒர்க் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்கள் கலக்கம்

பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதால் பெற் றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 102 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 56 சதவீதம் ஆகும். பள்ளி அளவில் சதீஷ்குமார் 1004, மற்றொரு சதீஷ்குமார் 1000, சிலம்பரசன் 987 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலக்கம் அடைந் துள்ளனர்.

Read more »

சிதம்பரம் காமராஜ் பெண்கள் கல்வியியல் கல்லூரி நாள் விழா

சிதம்பரம்: 

                   சிதம்பரம் காமராஜ் பெண்கள் கல்வியியல் கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளா ளர் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். மாணவி தனாபாய் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் காமராஜ் சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி,கல்லூரி நிர் வாக அலுவலர் சந்திரசேகரன், காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சக்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி மாலதி நன்றி கூறினார்.

Read more »

கலெக்டர் துவக்கி வைத்த சாலைப்பணி நடைபெறுமா: கடலூர் மக்கள் எதிர்பார்ப்பு

கடலூர்: 

                கலெக்டர் துவக்கி வைத்த கடலூர் - பண்ருட்டி சாலை பணி இது வரை துவங்கப்படாததால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டி நீண்ட நாட்களாக மூடாமல் கிடந்த சாலைகளில் முக்கிய இடத்தை வகிப்பது கடலூர் - பண்ருட்டி சாலை. கடந்த பருவ மழையின் போது கடுமையான போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதும் இந்த சாலைதான். இந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள் எல்லாம் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து கம்யூ., கட் சிகள் பல்வேறு போராட் டங்களை நடத்தின. சாலையை சீரமைக்கக் கோரி சேற்றிலேயே உருண்டு ஜனநாயக வாலிபர் சங்கம் போராடியது. இதனால் இந்த சாலை யில் தற்காலிகமாக மணல் கொட்டி போக்குவரத்தை ஏற்படுத்தினர். மழை ஓய்ந்து கோடைகாலம் துவங்கியவுடன் ஏற்கனவே சாலைகளில் கொட்டப்பட்ட மண் மேடுகள் உலர்ந்து புழுதியாக பறக்க துவங்கின. செம்மண்டலம் பகுதி முழுவதும் புழுதி நகரமாக காட்சியளித்தன. உள்ளூர் வாகனங்கள் செம்மண்டலம் பக்கமாக செல்லாமல் மாற்றுப்பாதையை தேடின. இந்நிலையை கருத்தில் கொண்டு கலெக்டர் கடலூர் - பண்ருட்டி சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பூமி பூஜை போட்டு சாலைப் பணியை துவக்கி வைத்தார். துவக்க விழா நடந்து 2 மாதத் திற்குமேல் ஆகிவிட்டது. ஆனால் அவர் துவக்கி வைத்த அன்று நடந்த பணிகளோடு நின்று விட் டது. கலெக்டர் துவக்கி வைத்த சாலைக்கே இந்த நிலை என்றால் மற்ற சாலை பணிகளை எப்போது முடிப்பார்கள் என்பது நகராட்சிக்கே வெளிச்சம்.

Read more »

அனைவருக்கும் கல்வி இயக்க மீள் ஆய்வுக் கூட்டம்

கடலூர்: 

                    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மீள் ஆய்வுக் கூட்டம் கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மணவாள ராமானுஜம் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி, தகவல் ஆவணங்கள் அலுவலர் வைத்தியநாதன் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய மேற் பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்பட்ட அனைத்து வகையான பள்ளி கட்டட பணிகளில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித் தும் மீள் ஆய்வு செய்யப்பட்டது.

Read more »

காலாவதியான இடுபொருட்கள் விற்றால் நடவடிக்கை: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

சிறுபாக்கம்; 

               காலாவதியான இடுபொருட்களை விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

இது குறித்து மங்களூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பு: 

               மங்களூர் வட்டாரத்தில் வேளாண்மையில் பயிர் சாகுபடிக்கு தரமான சான்று பெற்ற விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் மிகவும் இன்றியமையாத வேளாண் பொருட்களாகும். இவைகள் அதிக அளவில் தனியார் கடைகளில் உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விற்கப்படுகின்றது. விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களின் பெயர், முகவரி, உற்பத்தி செய்யப்பட்ட நாள், மாதம் மற்றும் இவற்றினை பயன்படுத்தக் கூடிய காலக்கெடு, பேட்ஜ் எண் ஆகியவை விதை மூட்டைகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். குவியல் எண், காலக் கெடு அறிந்தும் விதை மூட்டைகளில் சான்று அட்டைகள் தைக்கப்பட்டுள்ளதா என் பதனை தெரிந்து விவசாயிகள் இடுபொருட்களை வாங்கி பயன்பெற வேண் டும். காலக்கெடு முடிவுற்ற இடுபொருட்களை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் உரக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பிளஸ் 2 தேர்வில் பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி அரியலூர் மாவட்டத்தில் 2ம் இடம்

திட்டக்குடி: 

                  பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி, பிளஸ் 2 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பானுப்ரியா பிளஸ் 2 தேர்வில் 1162 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் 190, ஆங்கிலம் 188, இயற்பியல் 191, வேதியியல் 194, கணிதம் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 199 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி பானுப்ரியாவை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆப்ரகாம், பள்ளி முதல்வர் ராதாரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். மாணவி பானுப்ரியா பெண்ணாடத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க துவங்கினர்

கடலூர்: 

                பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மற்றும் மறு கூட்டலுக்கும் நேற்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கத் துவங்கினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் நகல் களை பெறுவதற்கும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். 15 மற்றும் 16ம் தேதி விடுமுறை தினம் என்பதால் நேற்று 17ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய துவங்கினர். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொறு பாடத்திற்கும் 275 ரூபாயும், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், மறுகூட்டலுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விடைத்தாள் நகல் பெற்ற அடுத்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்கள் மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஒரு பாடத்திற்கு 1,005 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.


Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைக்கு நிதியுதவி

சிதம்பரம்: 

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 டாலர் நிதியுதவி வழங்கினர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய முன் வந்தனர். இந்த நிதியின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 600 மீனவ பெண்களுக்கு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பயிற்சித் திட் டம் துவக்கி ஓர் ஆண்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று பல்கலைக் கழகத்தில் நடந்தது. பொருளாதார துறை தலைவர் சுந்தரவரதராஜன் தலைமை தாங்கினார். வேளாண் கல்லூரி முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். அமெரிக்க நாட்டின் மிக் சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் நிதியை துணைவேந்தர் ராமநாதனிடம் வழங்கினர். இணை பேராசிரியர் ராமநாதன், துணை பேராசிரியர் சீனுவாசன் உள்ளிட் டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read more »

கீரப்பாளையத்தில் புதிய மின் மாற்றி

கீரப் பாளையம்: 

                 சிதம்பரம் அருகே கீரப்பாளையம் துணை மின் நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் மாற்றி துவங்கப்பட்டது. கீரப்பாளையம் ஊராட்சியில் 33/11 கே.வி. வழித் துணை மின் நிலையத்தில் இருந்த திறன் மின் மாற்றியின் திறனை 3 எம்.வி.ஏ.,வில் இருந்து 5 எம்.வி.ஏ., ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் சண்முகம் வழிகாட்டுதலுடன் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் மாற்றி அமைக்கப் பட்டது. துவக்க விழாவில் சிதம்பரம் கோட்ட செயற் பொறியாளர் செல்வசேகர் தலைமை தாங்கினார். கடலூர் எம்.ஆர்.டி. செயற் பொறியாளர் சம் பத்மகஜான் முன்னிலை வகித் தார். கடலூர் மின் பகிர் மான வட்ட மேற்பார் வையாளர் ரவிராம் புதிய மின் மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் குமார், வாசுதேவன், பாலாஜி, மகேந்திரன், உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், சாமிதுரை, குமார், சித்தானந்தன், சீனிவாசன், மோகன் காந்தி பங்கேற்றனர்.

Read more »

கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா

பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் வரும் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள் ளது. இங்கு ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வரும் 25ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் கொடியேற் றத்துடன் விழா துவங்கியது. 21ம் தேதி அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலாவும், 23ம் தேதி மாடுபிடி சண்டை நிகழ்ச்சியும், முக்கிய விழாவான 25ம் தேதி சுவாமி முத்துப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரவாணிகள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் தில்லை கோவிந்தன், ஜனார்த்தனன், ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

Read more »

சஞ்சீவிராயன் கோவிலில் மோட்டார் பழுது: குடிநீரின்றி பொதுமக்கள் அல்லல்

நடுவீரப்பட்டு: 

                  குமளங்குளம் ஊராட்சியில் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் உள்ள சின்டெக் டேங்க் மோட்டார் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு அருகே உள்ள குமளங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் ஒன்றிய பொது நிதியிலிருந்து நடுவீரப்பட்டு - பத்திரக்கோட்டை மெயின் ரோட்டில் இரண்டு, ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஒன்று, அதே தெருவில் மற்றொன்று என நான்கு சின்டெக் டேங்க்குகள் வைத்து ஆஞ்சநேயர் கோவில் அருகில் போர் போட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த மோட்டார் கடந்த ஐந்து மாதங்களாக பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தற்போதுள்ள கடும் மின் வெட்டால் விவசாய மோட்டார் எப்போது இறைக்கும் என பொதுமக்கள் வெயிலில் காலி குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் பிடிக்க அல்லாடி வருகின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது: வேன் பறிமுதல்

சிறுபாக்கம்: 

                       சிறுபாக்கம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து தப்பியோடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த குமராட்சி தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் தமிழ்ச்செல்வன் (25). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு டி.என்.28 ஏ.7599 எண் கொண்ட லாரியில் சவுக்கு லோடு ஏற்றிக் கொண்டு குள்ளஞ்சாவடியிலிருந்து ஈரோடு சென்றார். வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கைகாட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த டி.என்.32 ஆர்.3611 பதிவெண் கொண்ட மகிந்திரா வேன் திடீரென லாரியின் முன்புறம் வேகமாக சென்று குறுக்கே நின்றது. வேனிலிருந்து இறங்கிய வேப்பூர் அடுத்த நரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் மாதேஸ்வரன் (30). அவரது ஆதரவாளர்கள் தண்டபாணி, கோவிந்தசாமி ஆகியோர் லாரி டிரைவர் தமிழ்ச் செல்வனை தாக்கி அவர் வைத்திருந்த 1,300 ரூபாயை பறித்து தப்பியோடினர். இது குறித்து தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து சென்ற மாதேஸ்வரன், தண்டபாணி, கோவிந்தசாமி ஆகிய மூவரையும் நயினார் பாளையம் அருகே பிடித்து கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior