உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009


Read more »

பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திறன் வளர்த்தல் பயிற்சி

சிறுபாக்கம் :

                 சிறுபாக்கம் தெற்கு தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது. மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் தலைமை தாங்கினார். ஆணையர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். ஈரோடு மாவட் டம் பவானி சாகரை சேர்ந்த திட்ட அலுவலர் சண்முகம் பயிற்சி அளித்தார்.

Read more »

நல்ல தண்ணீர் குளத்திற்கு தடுப்பு சுவர்: பட்டாக்குறிச்சி மக்கள் எதிர்பார்ப்பு

 ராமநத்தம் :

             ராமநத்தம் அடுத்த பட்டாக்குறிச்சி ஊராட்சி நல்ல தண்ணீர் குளத்திற்கு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்களூர் ஒன்றியம் ராமநத்தம் அடுத்த பட் டாக்குறிச்சி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாறுதல், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டது.

                   இத்திட்டத்தில் நல்ல தண் ணீர் குளம் 5 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. குளம் மூன்று மீட்டர் ஆழம் இருப்பதால் அவ்வழியே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் குளத்தில் இருக்கும் தண்ணீரை கண்டு ஆவலோடு சென்று பார்த்து வருகின்றனர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் கரையில் நின்று பார்வையிடும் மாணவ, மாணவிகள் தவறி குளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குளத்தில் இறங்கி அசுத்தம் செய்யும் நிலை உள்ளது. இதனை தடுத்திட குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வெள்ளத்தில் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் :

               கடலூரில் மா.கம்யூ., கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப் பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப் பினர் தனசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், முத்துவேல், சுகுமாறன், மாதவன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

                கூட்டத்தில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற் பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் சேதமடைந் துள்ளன. வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குண்டும், குழியுமாகியுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. காட்டுமன்னார்கோவில்: மா.கம்யூ.,  வட்ட குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் நடந் தது. வட்டச் செயலா ளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  வட்ட குழு உறுப்பினர்கள் நீலமேகன், ராமு, கிருஷ்ணமூர்த்தி, தங்கசாமி, பூராசாமி பங்கேற்றனர். கூட்டத்தில், மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் சரி செய்து கொடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்: டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டையில் நடந்த போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாமில் டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்றார்.பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் இணைந்து போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு முகாம் மஹ்மூதியா ஷாதி மகாலில் நடந்தது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்றார். மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து விதிகள் குறித்து டி.எஸ்.பி., மூவேந்தன் பேசினார்.

             சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் காஜா கமால், பாவாஜான், நடராஜன், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பா.ம.க., நகர செயலாளர் முருகன், கொத்தட்டை ஊராட்சி தலைவர் பழனி, தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர் முனவர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஐக்கிய மஜ்லீஸ் பொதுச் செயலாளர் இஸ்ஹாக் நன்றி கூறினார்.

Read more »

வக்கீல்கள், குமாஸ்தாக்கள் மூன்று நாள் வேலை நிறுத்தம்

கடலூர் :

                வக்கீல்கள் மற்றும் குமாஸ்தாக்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் தலைவர் லோகநாதன், செயலாளர் துரை பிரேம் குமார் தலைமையில் கடலூரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சேம நல நிதி 2 லட்சம் ரூபாயை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தக் கோரி தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நேற்று 29 முதல் 31ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவ்வேலை நிறுத்தத்தில் 1,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது.

               குமாஸ்தாக்கள் சங்கம்: கடலூர் வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் சேம நல நிதியை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தக் கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாநில நல நிதி தலைவர் நடராஜன் தலைமையில் கடலூர் சங்க தலைவர் வசந்தகுமார் முன்னிலையில் 60 பேர் பணிகளை புறக்கணித்தனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. தொடர்ந்து இன்றும் 30ம் தேதி, நாளையும் 31ம் தேதியும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.

Read more »

மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

கிள்ளை :

                    மீனவர்களுக்கு அடை யாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது.சிதம்பரம் அருகே முடசல் ஓடை, சூரியா நகர், கூழையார்  மீனவர்களுக்கு மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து முடசல் ஓடை  பகுதியில் உள்ள மூன்று மீனவ கிராமங்களைச் சேர்ந்த  கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அடை யாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. முடசல் ஓடை கிராமத் தலைவர் நல்லரையன் தலைமை தாங்கினார். விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் அறிவழகன், துணைத் தலைவர் ரவி,பொருளாளர் பத்மராஜ், சூர்யா நகர் தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி புகைப்படம் எடுக்கும் பணியை துவக்கி வைத் தார். மூன்று கிராமங்களில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது.

Read more »

பரிமலையில் அன்னதானம் பொருட்கள் அனுப்பும் விழா

நெல்லிக்குப்பம் :

                   சபரிமலை சன்னிதானத்தில் மண்டல பூஜை, மகர ஜோதி காலங்களில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்ட சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 7, 8 தேதிகளில் சபரிமலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை நெல்லிக்குப்பத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கும் விழா நடந்தது. மாவட்ட துணைத்தவைர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.பொருட்களை ஏற்றிய லாரியை மாவட்ட செயலாளர் சிவராமன் கொடியசைத்து அனுப்பி வைத் தார். யாகமூர்த்தி, கல்யாணசுந்தரம், கண்ணபிரான், வாசுதேவன், சட்டநாதன், பலராமன், செல் வராஜ், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

ஊராட்சி தலைவருக்கு கிராமிய ரத்னா விருது

விருத்தாசலம் :

                       சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் கோவிலானூர் ஊராட்சி தலைவருக்கு கிராமிய ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கில் இந்திய கலாசார மேம்பாட்டு பாதுகாப்பு கவுன்சில் சார்பில் பொதுவாழ்வில் நேர்மை, ஒழுக் கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் சேவை புரிந்து வருவோரை பாராட்டி விருது வழங் கும் விழா நடந்தது. விருத் தாசலம் அடுத்த கோவிலானூர் ஊராட்சி தலைவர் தனசெல்வியை பாராட்டி கவுன்சில் சேர்மன் சாந்தி கிராமிய ரத்னா என்ற தமிழ் கலாசார பட்டம் மற்றும் விருது வழங்கினார். விழாவில் கவுன்சில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

காங்., சேவாதளம் கலெக்டருக்கு மனு

காட்டுமன்னார்கோவில் :

                  காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராம மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு சேவாதள கூடுதல் தலைமை அமைப்பாளர் சரவணகுமார் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 375 குடும்பங்களை  அரசு அதிகாரிகள் எள்ளேரி கிழக்கு என்ற கிராமத்தை உருவாக்கி சாலை ஓரத்தில் வசித்து வர செய்தனர். அவர்கள் 575 ரேஷன் கார்டுகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களில் 100 பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.


தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் அகலப்பாதை அமைக்க பணிகள் தொடங்க இருப்பதால் அவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 475 குடும் பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடை: பண்ருட்டி நகர மன்றத்தில் நாளை முடிவு

பண்ருட்டி :

               மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடை செய்து பண்ருட்டி நகர மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.பண்ருட்டி நகர மன்ற மாதாந்திரக் கூட்டாம் நாளை (31ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது.  சேர்மன் பச்சையப் பன் தலைமை தாங்குகிறார். கமிஷனர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மறுசுழற்சிக்கு உபயோகப்படாத 20 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ் டிக் பைகள் விற்பனையை தடை செய் வது. திருமண மண்டபங்கள், சிற்றுண்டி, கோழி இறைச்சி கடை, பூக்கடைகளுக்கு மாதாந்திர கூடுதல் சேவை கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Read more »

கோஷ்டி மோதல் வழக்கு: தாசில்தாருக்கு பரிந்துரை

நடுவீரப்பட்டு :

             நிலத்தகராறு காரணமாக இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச் னையை தீர்க்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி, நாராயணசாமி. இருவருக்கும் நிலப் பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி நாராயணசாமி பிரச்னைக்குரிய நிலத்தில் பயிர் செய்ய முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடுவீரப்பட்டு போலீசார், இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இவர்களுக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு வழக்கை கடலூர் தாசில் தாருக்கு பரிந்துரை  செய்து அனுப்பியுள்ளனர்.

Read more »

காங்., கட்சியின் 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

புவனகிரி :

           காங்., கட்சியின் 125ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழா காங்., கட்சியினரால் மாவட் டத்தில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

                புவனகிரி வட்டார காங்., சார் பில் சேர்மன் தனலட்சுமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் காங்.,பிரிவு தலைவர் குமார் தலைமையில் ராகவேந்திரர் கோவில் தனித்தனியே சிறப்பு பூஜை நடத்தி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார காங்., தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் கந்தசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம், மஞ்சக்கொல்லை வேல்முருகன், இளையபெருமாள், பாலு, பாலசுந்தரம், புவனகிரி விவசாய சங்க தலைவர் குமார், மாவட்ட செயலாளர் ரகுநாதன், இளைஞர் காங்., துணை தலைவர் பன்னீர்செல்வம், விவசாய பிரிவு செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 திட்டக்குடி:

                   மாநில சேவாதள அமைப்பாளர் அன்பரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், நகர தலைவர் கனகசபை முன்னிலை வகித்தனர். குணசேகரன் வரவேற்றார். திட்டக் குடி நானூற்றொருவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட் டது. முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் இளைஞர் காங்., நிர்வாகிகள் பாலமுருகன், சவுந்தர்ராஜன், வக்கீல் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


விருத்தாசலம்:

                  நகர காங்., சார்பில் நடந்த விழாவிற்கு இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராதாகிருஷ் ணன், ராமு, துரைசாமி முன் னிலை வகித்தனர். ஜெட்லி வரவேற்றார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன் னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, வட்டார தலைவர் ராஜிவ்காந்தி, ராஜரத்தினம், சவுந்தரராஜன், சண் முகம், இளங்கோமணி, இளைஞர் காங்., நகர தலைவர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நெய்வேலி:

                  நகர காங்., சார்பில் நடந்த விழாவிற்கு நகர எஸ்.சி., எஸ்.டி., தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். கலியமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் புருஷோத்தமன், மாநில சேவாதள அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கோவிந்தராஜ், சத்தியசீலன், தங் கம், ராமர் பங்கேற்றனர்.

கடலூர்:

                தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன் சார்பில் மாவட்ட  தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Read more »

ஒறையூர் ஊராட்சியில் 'டிவி' வழங்கல்

பண்ருட்டி :

                 ஒறையூர்  ஊராட்சியில் 1685 நபர்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப் பட்டது. பண்ருட்டி அடுத்த ஒறையூர் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் துளசிசங்கரன் தலைமை தாங்கினார்.  தாசில்தார் பாபு, அண்ணாகிராம ஒன்றிய தி.மு.க., செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். பயனாளிகள் 1685 நபர்களுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் இலவச "டிவி' வழங்கினார். விழாவில் தொரப்பாடி பேரூராட்சி சேர்மன் ஜெயலட்சுமி, துணை சேர்மன் அருணாசலம், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Read more »

இடையூறுகளை மீறி நேர்மையாக செயல்படவேண்டும்: போலீசாருக்கு டி.ஐ.ஜி., மாசானமுத்து 'அட்வைஸ்'

கடலூர் :

                 போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக நேர்மையாக பணி புரிய சபதம் எடுக்க வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., மாசானமுத்து கடந்த 17ம் தேதி முதல் ஆய்வு மேற் கொண்டு வருகிறார். நேற்று ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீவிரவாதிகளிடம் இருந்து "வி.ஐ.பி.,'க்களை பாதுகாப்பது, காரில் வந்து தாக்க முயற்சிக்கும் தீவிரவாதிகள் மற்றும் பதுங்கியிருந்து தாக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் முறைகள் குறித்த கமாண்டோ படையினரின் செயல் விளக் கத்தை பாராட்டினார்.

   பின்னர் நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:

                      ஆண் போலீசாரைவிட பெண் போலீசார் உடைகளை சிறப்பாக வைத்துள் ளனர். கடலூர்  மாவட்டம் கம்பீரமான மாவட்டம். கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இந்த மாவட்டத்தில் ஜாதி மோதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகம் நடந்துள்ளது. சிறு பிரச்னை கூட பெரிய மோதலில் முடியும். தீவரவாதத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டம். மாவட் டத்தில் முன்பு பணி புரிந்தவர்கள் தற்போது உயர் அதிகாரிகளாக உள்ளனர். பொது மக்கள் போலீஸ் துறையை நேசிப்பது குறைவாக உள்ளது.

                        போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக நேர்மையாக பணிபுரிய நாம் சபதம் எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு நன்மை செய்து பணிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.நீங்கள் அனைவரும் செல்வ சீமான்கள் வீட்டில் பிறந்தவர்கள் அல்ல. போலீசாவதற்கு முன் நீங் கள் எப்படி இருந்தீர்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். கஷ்டத்தை மறந்து பணிபுரிய வேண் டும். தற்போது 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதனை சேமித்து வைக்கும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பணத்தில் பெற்றோர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

                  நல்லது செய்ய பல இடையூறு வரும். அதனையும் மீறி நேர்மையாக செயல்பட வேண்டும். நான் அதிகம் நேசிப்பது கடலூர் மாவட்டம். 20 ஆண்டிற்கு முன் விருத்தாச் சலத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தேன். தற்போது டி.ஐ.ஜி., யாக வந்து ஆய்வு செய்வதை பெருமையாக கருதுகிறேன். நீங் கள் சிறப்பாக பணி புரிந்து போலீஸ்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.அப்போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ், ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி.,க்கள் ஸ்டாலின், அரிகிருஷ்ணன், தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

மணல் லாரிகளால் சாலைகள் பாழானது



நெல்லிக்குப்பம் :

                   மேல்பட்டாம்பாக்கத்தில் மணல் லாரிகள் சென் றதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை கள் பாழாகி யுள்ளன. மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில் 6 மாதங்களுக்கு மேல் அரசு மணல் குவாரி செயல் பட் டது. தினமும் ஆயிரத்திற் கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிச் சென்றது. மழைக் காலத்திலும் தொடர்ந்து மணல் லாரிகள் சென்றதால் மேல் பட்டாம்பாக்கம் முக்கிய சாலை  வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமானது. சாலையை சீர் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். மழை நின்றதும் சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுவரை வேலை துவங்கவில்லை. அச்சாலையில் தற்போது அதிகம் கரும்பு டிராக்டர்கள் வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக சாலையை புதுப்பிக்க வேண்டும்.

Read more »

பூட்டி கிடக்குது ஆர்.ஐ., அலுவலகம்: சிறுபாக்கம் குறுவட்ட மக்கள் அவதி

சிறுபாக்கம் :

             சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பழுதடைந்துள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகாவின் குறுவட்டமான சிறுபாக்கத்தில் பஸ் நிலையம் அருகில் 20 ஆண்டிற்கு முன்  வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட் டது.

               இந்த கட்டடம் பழுதானதால் கடந்த ஏழு ஆண்டாக பயன்பாடின்றி உள்ளது.சிறுபாக்கத்திற்கு வரும் வருவாய் ஆய்வாளர் தனி அலுவலகம் இல்லாததால் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சில மணி நேரம் மட்டுமே தங்கும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் வருவாய் ஆய்வாளரை தேடி அலையும் நிலை உள்ளது. மேலும், சிறுபாக்கம் குறுவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் நிலவரி, நில தீர்வை, அளவீடு, உதவித் தொகை பெற விண்ணப்பம் உள்ளிட்ட  பணிகளுக்கு  35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திட்டக் குடி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த அவல நிலையை போக்கிட பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டி வருவாய் ஆய்வாளர் கிராமத்தில் தங்கி பணி புரிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

திருவாமூர் மலட்டாறு ஆக்கிரமிப்பு: நிலத்தடி நீர் சேமிக்க முடியாத நிலை

பண்ருட்டி :

                   திருவாமூரில் மலட்டாற்றை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி பகுதியில் உள்ள மலட் டாறு பகுதி முழுவதும் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்துள் ளனர். நத்தம் ஏரியில் இருந்து பிரிந்து வரும் தண்ணீர்  திருவாமூர் மலட்டாறு சப் டிவிஷன் ஆற்றுக்கு வருகிறது.

            மலட்டாறு தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பல ஆண்டாக பயிர் செய்து வருகின்றனர்.  தற்போது ஆற்றில் தண்ணீர் செல்லும் பகுதியில் களிமண் கொட்டி ஆக்கிரமித்து சவுக்கை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் செய்து வருகின்றனர்.மணல் பகுதியில் களிமண் அடித்து பயிர் செய்வதால் மழை நேரத்தில் ஆற்றில் வரும் தண்ணீர் மணலில் நீரை சேமிப்பது போல் களிமண்பகுதி கலந்த பகுதியில் நீரை சேமிக்க முடியவில்லை. இதனால் மழைகாலங்களில் வரும்  வெள்ள நீர் கெடிலம் ஆற்றுவழியாக வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

                 இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அதிகாரிகளும், வருவாய் துறையினரும் கண்டுகொள்வதில்லை. நிலத்தடி நீர் உள்வாங்கியதால்  விவசாய பம்ப் செட்டுகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. பல இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மேலும் போர் பைப்பை பாதாளத்திற்கு  சென்று தண்ணீர் எடுத்து பயிர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு ஆறு, ஏரி, குளம் உள் ளிட்ட நீர்வழிபுறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.

Read more »

மீனவர்கள் கோஷ்டி மோதல்: சமாதானக் கூட்டம்

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டை அருகே மீனவர்கள் கோஷ்டி மோதலையொட்டி  தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.

                    பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கிராம மீனவர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இருந்தும் கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம் தாசில்தார் தனவந்தகிருஷ்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. அதில் இரு பிரிவுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருபிரிவுகளை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து அதன் மூலமே கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துகொள்ளுவது, அதையும் மீறி பிரச்னை ஏற்பட்டால் போலீஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ், துணை சேர்மன் செழியன், வருவாய் ஆய்வாளர் ஹேமா ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

குடும்ப தகராறில் மனைவி தீக்குளிப்பு: காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

சிறுபாக்கம் :

                தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்தார்.சிறுபாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந் தவர் ஆறுமுகம் (40). இவரது மனைவி கவுரி (30). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த கவுரி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஆறுமுகம் ஓடிச் சென்று தீயை அணைத்து கவுரியை காப்பாற்ற முயன்றார். தீயில் கருகி ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

தம்பி மனைவிக்கு தீ வைத்த அண்ணனுக்கு போலீஸ் வலை

சிதம்பரம் :

               தம்பி மனைவியை தீ வைத்து எரித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த வல்லத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் (60), சிவலிங்கம் (56). சகோதரர்களான இவர்களுக்குள் வேலித் தகராறு உள்ளது. நேற்று பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள பூவரசு மரத்தை சிவலிங்கம் வெட்ட முயன்றதில் தகராறு ஏற்பட்டது.அப்போது சுப்ரமணியன் அவரது மகன் கள் வீராபாண்டியன் (30), பன்னீர்செல் வம் (32) ஆகியோர்  சிவலிங்கம் மற்றும் அவரது மனைவி செல்வியையும் ஆபாசமாக திட்டி தாக்கினர்.

                  ஆத்திரமடைந்த செல்வி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக கூறினார். உடன் சுப்ரமணியன், செல்வி மீது தீயை பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த செல்வி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியன், வீரபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

பஸ் டயர் வெடித்தது: தொழிலாளி காயம்

திட்டக்குடி :

                      பஸ் டயர் வெடித்து கூலி தொழிலாளி பலத்த காயமடைந்தார். திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர்  சேகர் (45). ஆவட்டி கூட்டு ரோட்டில் இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு மங்களூர் செல்லும் தனியார் பஸ்சில்(டி.என். 31- எல். 1515 ) சென்று கொண்டிருந்தார். புலிவலம் அருகே பஸ் சென்றபோது டயர் வெடித்தது. அதில் பஸ்சின் உட்புறம் பெயர்ந் தது. அதில் சீட்டில் உட்கார்ந்திருந்த சேகரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. உடன் அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கால் நரம்பு மற்றும் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவலறிந்த உறவினர்கள் விரைந்து வந்து மேல் சிகிச்சைக்காக சேகரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பஸ்சில் பயணித்த சக பயணி ஒருவர் கூறுகையில், வழித்தடம் சரியில்லாத காரணத்தால் பஸ்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

Read more »

லாரி மீது பஸ் மோதல்

சிறுபாக்கம் :

                    நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தொண்டங் குறிச்சி கைகாட்டி அருகே விடியற்காலை 5 மணி அளவில் டி.என்.28- ஈ. 9960 பதிவெண் கொண்ட லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் (டி.என்.21- என். 1102)  நின்றிருந்த லாரியின் பின் னால் மோதியது.  பஸ்சின் இடது புறம் கிழித்து சென் றதில் பஸ் கண்டக்டர் திருச்சி தனபால் (40), அரியலூர் திவ்யா (18), சென்னை பஷீர்அகமது (40), தூத்துக் குடி தம்பிதுரை (57), இவரது மனைவி தனலட்சுமி (50), கோவிலூர் தியாகராஜன் (37), திருச்சி பொன் மலை விக்னேஷ் (28) உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

பைக்குகள் திருடிய ஆசாமி கைது

கடலூர் :

            பைக்குகள் திருடிய வரை போலீசார் கைது செய்தனர்.எஸ்.பி.,யின் சிறப்பு படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான் தலைமையிலான குழுவினர் காட்டுமன்னார்கோவிலில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது மோட்டார் பைக் கில் வந்த மீன்சுருட்டி அடுத்த வன்குடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமியை(29) பிடித்து விசாரித்தனர்.   அதில் அவர் 4  மோட்டார் பைக் திருடி யதும், கொலை வழக்கில் மீன்சுருட்டி போலீசார் தேடி வருவது தெரிய வந் தது. காட்டுமன்னார்கோவில் போலீசில் பழனி சாமி ஒப்படைத்தனர்.

Read more »

கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலூர் :

                கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் மகன் அந்தோணி இருதயராஜ் (27). இவர் மீது மூங்கில்துறைப்பட்டு மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ரெட்டிச்சாவடி பகுதியில் கொலை முயற் சியில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவரது நடவடிக் கையை தடுத்திட எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் பரிந்துரையை ஏற்று  அந்தோணி இருதயராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.இதன் நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அந்தோணி இருதயராஜியிடம் போலீசார் வழங்கினர்.

Read more »

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் திண்டிவனத்தில் கார் மோதி பலி

திண்டிவனம் :

                       திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார். கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் தமிழ்ச்செல்வமணி. இவரது மகன் பிரியதர் ஷன்(18). இவர் திண்டிவனம் அடுத்த சாரம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.பிரியதர்ஷன் நேற்று மாலை 4.40 மணியளவில்  வகுப்பு முடிந்த பின் சக மாணவர்களுடன் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த டாடா சுமோ  ஒன்று திடீரென  பிரியதர்ஷன் மீது மோதியது.

                 பலத்த காயமடைந்த  பிரியதர்ஷனை விபத்து ஏற்படுத்திய வாகனம் மூலம் சக மாணவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதால் மாணவர்கள் வெளியே வந்து  பார்த்த போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதை தொடர்ந்து வேறு வாகனம்  மூலம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வாகனத்தை தேடிவருகின்றனர்.

Read more »

சூனியத்தை அகற்றுவதாக கூறி நகை திருடிய பெண் சிக்கினார்

திட்டக்குடி :

                 சூனியத்தை அகற் றுவதாக கூறி நகை, பணத்துடன் தப்பியோடிய பெண்ணை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரை சேர்ந்தவர் அச்சுதன் (80). முன்னாள் ராணுவ வீரரான இவர், உடல் நிலை சரியில்லாத தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை அச்சுதன் வீட் டிற்கு வந்த பெண் ஒருவர், வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதால் தான், உங்கள் மனைவி படுக்கையில் இப்பதாகவும், பூஜை செய்து  அகற்றுவதாக கூறினார்.

                           அச்சுதன் ஒப்புக் கொண்டதும், அந்த பெண் வீட்டிற்குள் பூஜை செய்து, விபூதி கொடுத்து பணம், நகைள் மீது தடவுமாறு கூறினார். அதன்படி அச்சுதன் பெட்டியில் வைத்திருந்த 21 ஆயிரம் பணம், 4 சவரன் செயின் மீது விபூதி தடவினார். பின் வீட்டின் பின் னால் சென்று சூடத்தை ஏற்றிவிட்டு உள்ளே வந்தார். அப்போது, அப் பெண் பணம் மற்றும் நகைகள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்ததை கண்டு அச்சுதன்  கேட்டார். உடன்  அச்சுதனை தள்ளிவிட்டு பின்புறமாக ஓடினர்.  அச்சுதன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விரட்டினர்.  அப்பெண், பணம் மற்றும் நகைகள் வைத்திருந்த பையை வீசிவிட்டு ஓடி வெள் ளாற்றில் உள்ள "நாணல்' புதரில் மறைந்துக் கொண் டார். அவரை கிராம மக்கள் பிடித்து  போலீசில் ஒப்படைத்தனர்.

                  போலீசார் விசாரணையில், திட்டக்குடி அடுத்த பட்டூர் செல்வராஜ் மனைவி வளர்மதி (35) என்பதும், இரண்டு நாளாக பருத்தி செடிக்கு களை பறிப்பது போல நோட்டமிட்டு, திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி பெண் ஒருவர் துணிச்சலாக நகையை திருடிக் கொண்டு ஓடிய சம்பவம் வாகையூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                        போதை ஏறியதால் சிக்கினார்: அச்சுதன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதால் மிலிட்டரி மதுபானம் வீட்டில் இருந்துள்ளது. பணம், நகையை கொள்ளையடித்த வளர் மதி, வீட்டிலிருந்த மிலிட் டரி மதுபானத்தை "ராவாக' குடித்துள்ளார். போதை அதிகமானதால் தப்பியோட முடியாமல் மக்களிடம் சிக்கிக் கொண்டார்.

Read more »

போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் பைக் மாயம்

பண்ருட்டி :

                    பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தியிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிபவர் முருகன். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனது ஹீரோ ஹோண்டா மோட் டார் சைக்கிளை (டி.என்.31-ஈ-9060) போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்திவிட்டு சென்றார். மாலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.இதையறிந்த சக போலீசார் தங்களது மோட்டார் சைக்கிள்களை ஸ்டேஷன் வாசற்படி முன் நிறுத்திக் கொண்டனர்.

Read more »

தீ குளித்த இரு பெண்கள் பலி

கடலூர் :

                  கடலூரில் தனித்தனியே தீ குளித்த இரு பெண்கள் இறந்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி குணசுந்தரி(29).திருமணமாகி 9 ஆண் டுகளாகும் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி குணசுந்தரிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

                     அதில் விரக்தியடைந்த குணசுந்தரி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: கடலூர் முதுநகர் இருசப்பச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வாசு மனைவி இளஞ்சியம்(36). இரண்டு பெண் கள் உள்ளனர். இந்நிலையில் 4 ஆண்டிற்கு முன் வாசு இறந்ததால் குடும் பத்தில் வறுமை நிலவியது. அதில் விரக்தியடைந்த இளஞ்சியம் நேற்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior