உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 30, 2012

கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவக்கம்

கடலூர்:

டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார்.


 கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 2012 முதல் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக் குடி ஆகிய நகரங்களில் அஞ்சலகம், இந்தியன் வங்கிகளின் மூலம் விரைவில் டி.என்.பி. எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவங்கப்படவுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் டி.என்.பி. எஸ்.சி., ஆன் லைன் சேவை மையத்தை அணுகி தங்களைப் பற்றிய விவரங்களை அளித்து பதிவுக்கட்டணம் 50 ரூபாய் மற்றும் சேவை கட்டணம் 12 ரூபாய் செலுத்தி நிரந்தர பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.





Read more »

கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணி

கடலூர்:

 கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் எம்.சி.சம்பத், 604 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசியது:

"கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். மடிக்கணினி மூலம் உலக நிகழ்வுகளையும், பாடம் தொடர்பான விவரங்களையும் பெற முடியும். தமிழகத்தில் 3 கோடி மக்களுக்கு மேல் வாங்கும் சக்தி இல்லாதவர்களாக உள்ளனர். மடிக்கணினியை நன்மைக்குப் பயன்படுத்தி கல்வியில் முதன்மைப் பெற வேண்டும் என கூறினார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கணினி: 

      விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பிளஸ் 2 மாணவர்களுக்கு எப்போது கணினி வழங்கப்படும்? என கேட்டதற்கு, "ஹார்டுடிஸ்க் தைவானில் தயாரிக்கப்படுகிறது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஆகியுள்ளது. இவர்களின் மதிப்பெண் பட்டியலில் மடிக்கணினி வாங்க தகுதி உடையவர்கள் என அச்சிட்டுத் தரப்படும். இதைக் காண்பித்து பின்னர் மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜி.ஜே.குமார், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ப.மணிமேகலை பழனிசாமி, கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன், மாவட்டக் கவுன்சிலர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior