உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 01, 2011

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரச்சாரம்


கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார், மத்திய அமைச்சர் நெப்போலியன்.
 
கடலூர்:

              முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய நல்ல திட்டங்களை, அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், ரத்து செய்தவர் ஜெயலலிதா என்று, மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
 
கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெப்போலியன் பேசியது:
 
                   நாட்டுக்கு யார் வேணடும்?, மக்களுக்கு நன்மை செய்ய யார் வரவேண்டும்? என்று சிந்தித்து வாக்களியுங்கள். நீண்டகாலம் தி.மு.க.வில் கட்சிப் பணியாற்றி வருபவர் புகழேந்தி. கடந்த முறை அவருக்கு கடலூர் தொகுதியில் வாய்ப்பளிக்க வில்லை என்பதற்காக, அவர் எதிர்ச் செயல்களில் ஈடுபடவில்லை. 5 ஆண்டுகளும் அவர் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா உருப்படியான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. 
 
               மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது, முந்தைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும்.ஆனால் முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் ரத்து செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சி கொத்தடிமை ஆட்சி. அவரது ஆட்சியில் நான் எம்.எல்.ஏ. யாக இருந்தேன். சட்டப்பேரவையில் எனக்கு மைக் வைத்தார்கள். ஆனால் மைக்கில் பேசுவதற்கு இணைப்பு கொடுக்கவே இல்லை.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. 
 
              ஆளுக்கு ஒரு திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்றார் நெப்போலியன். பிரசாரத்தில் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், அ.தி.மு.க. இளைஞரணி நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

பொறியியல் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு அஞ்சலகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு

          பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுக்கு அஞ்சலகங்களிலும் பெயரைப் பதிவு செய்யலாம்.

இதுதொடர்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியின் ரோட்டரி சங்கம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஏஐஇஇஇ மாதிரி நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வு தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவியாக இருக்கும்.விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை மண்டல பொறியியல் கல்லூரியில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் நேரடியாக வந்துப் பதிவு செய்வதற்குப் பதிலாக அருகிலுள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கடலூர், 
சிதம்பரம், 
கரூர், 
குளித்தலை, 
கும்பகோணம், 
மயிலாடுதுறை, 
சீர்காழி, 
நாகப்பட்டினம், 
திருவாரூர், 
பட்டுக்கோட்டை, 
திருத்துறைப்பூண்டி, 
புதுக்கோட்டை, 
ஸ்ரீரங்கம், 
துறையூர், 
பெரம்பலூர், 
ஞ்சாவூர், 
மன்னார்குடி, 
திருச்சி, 
லால்குடி, 
விருத்தாசலம், 
கள்ளக்குறிச்சி, 
திருக்கோவிலூர், 
மதுரை, 
கோவை, 
நெல்லை 

ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

           விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இந்த அஞ்சல் நிலையங்களில் தங்களது பெயரை ரூ. 100 கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்து, நுழைவுச் சீட்டையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

திவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 12.

மேலும் விவரங்களுக்கு, 

மாணவ ஒருங்கிணைப்பாளர் வினோத் 
செல்போன் எண்: 90035 75450,

ஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்திலுள்ள வணிக வளர்ச்சி மேலாளர் செல்போன் எண்: 94432 07898 

ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்

விருத்தாசலம்:

          விருத்தாசலத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு குறித்து தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முறை ஆய்வு செய்தனர்.  வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகளில் தாற்காலிக கூடுதல் ஜன்னல் மற்றும் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முன்பு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது.


Read more »

காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

 
 
சிதம்பரம்:

              உழைப்பால் தமிழகத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓரணியில் இணைந்துள்ளதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  
 
காட்டுமன்னார்கோவிலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியது:  
 
                இதே மேடையில் நானும் மறைந்த சமுதாயத் தலைவர் இளையபெருமாளும் பேசியது பழைய நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. சமுதாயத்துக்காக உடல், பொருள், ஆவி ஆகியவற்றை அர்ப்பணித்தவர் இளையபெருமாள். நானும், இளையபெருமாளும் ஒரு தேர்தலில் சமூகநீதி கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.  ஆனால் இத்தொகுயில் போட்டியிட்ட அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது கருணாநிதி தலைமையில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த சமுதாயக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வெற்றி பெறும்.  
 
              உழைக்கும் சமுதாயமான இரு சமுதாயத்தினரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என திருமாவளவனும், நானும் கூடி பேசி ஓரணியில் சேர்ந்தோம்.  அதற்கு பாலமாக இருந்தவர் துரை.ரவிக்குமார். இனி இரு சமுதாயத்தினரிடையே சண்டை வராது. இத்தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தை துரை.ரவிக்குமாருடன் சேர்ந்து நானும் முதல்வரிடம் தெரிவித்து முதல் பட்ஜெட்டிலேயே தனி தாலுக்காவாக மாற்ற முயற்சி செய்வோம்.  
 
             மேலும் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எனவே துரை.ரவிக்குமாரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார்.  
 
வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசியது: 
 
             கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் நீண்டகால கோரிக்கையான முட்டம்-மணல்மேடு பாலம் அமைக்கவும், வீராணம் ஏரி தூர்வாரவும், வெள்ளத்தடுப்புக்கு பலநூறு கோடிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.  
 
               கூட்டத்தில், பா.ம.க. சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, மாநில துணைத்தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், முன்னாள் பாமக மாவட்டச் செயலர் உ.கண்ணன், திமுக ஒன்றியச் செயலர் முத்துசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசினர்.
 
 
 

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் "பூத் சிலிப்"

சிதம்பரம்:

              சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் அனைவருக்கும் பூத்சிலிப் வழங்கப்படும் என தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தார்.  

இது குறித்து தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தது: 

               அந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கான பூத்சிலிப்பை வழங்குவர். மேற்கண்ட தினங்களில் வாக்காளர்களின் வீட்டிலிருந்து தவறாமல் பூத் சிலிப்பை பெற்றுகொள்ள வேண்டும்.  மேலும் ஏப்ரல் 1,5,8 தேதிகளில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரவு-செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுகிறது.  தேர்தல் பார்வையாளர் ஜி.எம்.கேமை ஆய்வு மேற்கொள்கிறார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வருகிற ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறுகிறது என கோட்டாட்சியர் எம்.இந்துமதி தெரிவித்தார்.

Read more »

நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

           கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ, தமிழ் ஒளி இயக்க நிறுவனர் கதிர் முத்தையன் ஆகியோர் நிகழ்த்தினர். வளவ. துரையன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior