உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

தபால்துறையினரின் அலட்சியப் போக்கால் காணாமல் போன 267 பிளஸ் 2 விடைத்தாள்

Important incidents and happenings in and around the world
              முசிறியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 267 பிளஸ் 2 விடைத்தாள் மாயமான சம்பவம் குறித்து, தபால்துறை அதிகாரிகளிடம், தனிப்படை போலீசர் நேற்று விசாரணை நடத்தினர். தபால்துறையினரின் அலட்சியப் போக்கே பார்சல் காணாமல் போனதற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

                     கடந்த மாதம் 8ம் தேதி, திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர். 479 பேர் இயற்பியல் தேர்வும், 150 பேர் பொருளியல் தேர்வும் எழுதினர்.தேர்வு முடிந்த அன்றைய தினம் மாலை, கோவைக்கு அனுப்புவதற்காக அனைத்து விடைத்தாள்களும் உர சாக்கு பைகளில் கட்டி, 'சீல்' வைக்கப்பட்டு, முசிறி தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

                           தனியார் பஸ் மூலம் ஏழு பார்சல்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் பார்சல்களை இறக்கியபோது, அதில், ஒன்றை மட்டும் காணவில்லை. அந்த பார்சலில், 267 இயற்பியல் விடைத்தாள்கள் இருந்தன. இவையனைத்தும் கோவை உப்பிலிபாளையம் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு செல்லவேண்டியவை.

                  இதுகுறித்து, திருச்சி ஆர்.எம்.எஸ்., (ரயில்வே மெயில் சர்வீஸ்) தலைமை பதிவுக்கட்டு அலுவலகத்தில் இருந்து முசிறி தபால் நிலையத்துக்கு தகவல் அனுப்பியது. அதே நேரத்தில், 'பார்சல் வந்து சேரவில்லை' என, கோவையில் இருந்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவம் குறித்து தபால்துறையும், கல்வித்துறையும் விசாரணை நடத்தின. அதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, தபால்துறை மூலம் முசிறி போலீசில் புகார் செய்யப்பட்டது. திருச்சியில் இறக்கியபோது பார்சல் காணவில்லை என்பதால், திருச்சி தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பழனிச்சாமி, மாநகர போலீஸ் கமிஷனர் வன்னிய பெருமாளிடம் புகார் கொடுத்தார்.அவர் உத்தரவுபடி, கன்டோன்மென்ட் போலீசர் வழக்கு பதிந்தனர்.
                     
               திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ்., 'டி' டிவிஷன் மற்றும் தலைமை பதிவுக்கட்டு அலுவலகத்துக்கு, தனிப்படையினர் நேற்று காலை சென்றனர். மதியம் வரை, தபால்துறை உயரதிகாரிகள், அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அங்கிருந்த ரிஜிஸ்டர், பார்சல்களை சோதனை செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், தபால்துறையினரின் அலட்சியப் போக்கே பார்சல் காணாமல் போனதற்கு காரணம் என்று தெரிந்தது.

                     கடந்த மாதம் 8ம் தேதி பார்சல் அனுப்பப்பட்டது. பொதுவாக காக்கி கலர் பையில், 'சீல்' வைத்து, பார்சல் அனுப்பப்படும். அவை எங்கேயாவது காணாமல் போனால், அரசு பார்சல் என்று மக்கள் எடுத்துக் கொடுத்து விடுவர். ஆனால், உர சாக்கில் விடைத்தாள் அனுப்பப்பட்டதால், அதில் பணம் இருக்கலாம் என்று கருதிக்கூட திருடர்கள் திருடி இருக்கலாம். பார்சல் காணாமல் போன அன்றைய தினமே தபால்துறைக்கும், இரு நாட்கள் கழித்து கல்வித்துறைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அப்போதே போலீசில் புகார் கொடுத்திருந்தால், ஓரிரு வாரத்திலேயே பார்சலை கண்டு பிடித்திருக்கலாம். இருதரப்பினரும் இப்பிரச்னையை தட்டிக் கழித்ததால், 267 மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.


downlaod this page as pdf

Read more »

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு

General India news in detail  















மதுரை காமராஜ் பல்கலை முதுகலை அல்பருவ 2009 நவ., எம்.ஏ., - இந்தி, சமூகவியல், வரலாறு, சுற்றுலா மேலாண்மை, எம்.எல்.எம்.,- எம்.எஸ்.சி.,(எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை www.mkudde.org இன்டர்நெட் முகவரியில் அறியலாம். மறுமதிப்பீட்டிற்கு ஏப்.,16 க்குள் விண்ணபிக்க வேண்டும். இதற்கு மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல் இன்டர்நெட் மூலம் விண்ணப்பம் பெறலாம். குறிப்பிட்ட தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்படாது, என கூடுதல் தேர்வாணையர் முத்துமோகன் தெரிவித்தார். 

downlaod this page as pdf

Read more »

டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, மருந்து கடைகளையும் நடத்த வேண்டும் : எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்


Latest indian and world political news information












                   டாஸ்மாக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, தாலுகா வாரியாக மருந்து கடைகளை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்றும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கீழ் கடைகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், காலாவதியான மருந்து விவகார பிரச்னை, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் மீது நடந்த விவாதம்:

சேகர்பாபு-அ.தி.மு.க., : 

                 தினமும் மூட்டை, மூட்டையாக போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும் கைப்பற்றப்படுகின்றன. உயிர்காக்க வேண்டிய மருந்துகளே, காவு வாங்குகின்ற கொடுமையும் நடக்கிறது. போலி மருந்து மற்றும் காலாவதி மருந்துப் பிரச்னை இங்கு உச்சத்தில் இருக்கும்போது, நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சர், பென்னாகரம் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார்.தரமற்ற மருந்துகளை விற்ற விவகாரத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. போலி மருந்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மருந்து பட்டியலில் உள்ளவற்றில், 300க்கும் மேற்பட்ட மருந்துகள் புழக்கத்தில் இருக்கின்றன.இந்தப் பிரச்னையில் போலீசார் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது. சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்து, விசாரணையில் தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ்-காங்கிரஸ்: 

               மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையை வழங்கினால்தான், மற்ற உரிமைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாதுகாப்பான வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது.போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனை மூலம் 500 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த பிறகே, அவரைப் பற்றிய உண்மை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துள்ளது. எனவே, இதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.ஏழை மக்களுக்காக அரசு தரும் மருந்துகளும், ஊசிகளும் எங்கேயோ போய் கடைச்சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக நம்மை நாமே பார்த்து அவமானப்பட்டு நிற்கிறோம். சென்னையில் மட்டும் 5,000 மருந்து கடைகள் உள்ளன. மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள் உள்ளன.இவற்றை பார்வையிட 50 மருந்தக ஆய்வாளர்கள் போதாது. ஒரு தாலுகாவிற்கு ஒரு மருந்தக ஆய்வாளரை நியமிக்க வேண்டும். 2008ம் ஆண்டு, 'சின்கோவிட்' என்ற மருந்து நிறுவனம், மீனாட்சி சுந்தரம் மீது அப்போதே புகார் கொடுத்துள்ளது.அந்த வழக்கு மீண்டும், 'ரீ-ஓப்பன்' செய்யப்படும் என, போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். அப்படியெனில், அப்போது அந்த வழக்கை, 'குளோஸ்' செய்தது யார்? குற்றவாளி தப்பித்தது எப்படி? இதையெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனை அளவில் அரசே மருந்து கடைகளை திறக்க வேண்டும்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது மோசடி வழக்கு மட்டும் பதிவு செய்யாமல், 307,302 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். போலியான மருந்துகளை விற்பனை செய்திருப்பது, மக்களை கொலை செய்ய முயற்சித்ததற்கு சமம். எனவே, இந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மிகக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

வேல்முருகன்-பா.ம.க., : 

                       பல்வேறு கட்சி உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபை குழு, பல இடங்களில் மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி இயங்காத அவற்றை மூடுவதற்கு, நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், அந்நிறுவனங்கள் ஐகோர்ட்டுக்கு செல்கிறார்கள்.வழக்கு வரும்போது, சட்டசபை குழு எடுத்த நடவடிக்கைகளை விவரமாக தெரிவிக்க லாயக்கற்றவர்களாகத் தான், அரசு வக்கீல்கள் இருக்கின்றனர். இதனால், மூடப்பட்ட 10, 15 நாட்களில் மீண்டும் திறந்து விடுகின்றனர்.தற்போது கைதாகியுள்ளவர்களை ஜாமீன் எடுப்பதற்காக, வக்கீல்கள் போட்டி போடுகின்றனர். மக்களின் உயிருடன் விளையாடியவர்களுக்கு, ஆதரவாக செயல்படுவதில்லை என வக்கீல்கள் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்காக ஆஜராகி வாதாடக் கூடாது. மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, மருந்து கடைகளையும் நடத்த வேண்டும்.

நன்மாறன்-மார்க்சிஸ்ட்: 

             கடும் தண்டனை வழங்கி, எதிர்காலத்தில் இப்படி ஒரு சிந்தனை யாருக்கும் எழக்கூடாத அளவிற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்:  

              ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.

சதர்ன் திருமலைக்குமார்-ம.தி.மு.க.,: 

                   மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அரசே மருந்து கடைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.

downlaod this page as pdf

Read more »

Coast Guard boats likely at Cuddalore Port

 
 
A. Rajasekar, Regional Commander Coast Guard, inspecting the Cuddalore port on Monday. 

 
CUDDALORE: 

               Regional Commander of Coast Guard A. Rajasekar made a fleeting visit to the Cuddalore Port here on Monday to study the feasibility of setting up surveillance boats in the area. Before boarding the helicopter at the Anna Stadium here, the Commander told reporters that he had come to see the arrangements for the setting up of a Coast Guard station at Karaikal. To be ready before 2012 The station, to be formed on the model of the one at Puducherry, would be ready before 2012. He did not divulge the number of boats to be berthed at the port. He said the Marine Police of the Tamil Nadu government and other agencies were extending full cooperation in keeping the coast safe. The Commander, who is in charge of the coastal area from Kolkata to Tuticorin, was accompanied by Commandant (Puducherry Coast Guard) D.S. Chauhan.

downlaod this page as pdf

Read more »

Huts Gutted

 CUDDALORE: 

                 As many as 41 huts were gutted in a fire that broke out at C.Kothangudi near Chidambaram on Monday night. However, nobody was injured. The police said that a total number of 51 huts had recently come up on the site.


downlaod this page as pdf

Read more »

அமோக விளைச்சல்: ​கத்தரிக்காய் விலை சரிவு


கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் கத்தரிக்காய் பறிக்கும் விவசாயிகள். 
 
கடலூர்:
 
                  கட​லூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது.​ இதனால் சந்தையில் விலை சரியத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.​ எனினும் தர்மபுரி,​​ கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. பொதுவாக கத்தரிக்காய் டிசம்பர்-ஜனவரி,​​ மே-ஜூன்,​​ அக்டோபர்-​ நவம்பர் என 3 பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.​ நட்டு 40 நாள்களில் அறுவடைக்கு வரும்.​ அடுத்து 110 நாள்கள் வரை பலன் கொடுக்கும்.கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி,​​ அண்ணா கிராமம் மற்றும் கடலூர் வட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு உள்ளது.​ கடலூர் வட்டத்தில் உள்ள நாணமேடு சுபஉப்பளவாடி,​​ கண்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்படும் கத்தரிக்காய்,​​ நாணமேடு கத்தரிக்காய் என்று அழைக்கப்படுகிறது.​ இங்கு கிடைக்கும் கதரிக்காய் மண் வளம் காரணமாக அளவில் பெரிதாகவும் அதிக சுவையாகவும் இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கடலூர் மாவட்டத்தில் தற்போது கத்தரிக்காய் அறுவடை அமோகமாக உள்ளது.​ 
 
இதுகுறித்து நாணமேடு விவசாயி மணவாளன் கூறுகையில்,​​ 
 
                   ""கடலூர் பகுதியில் செவந்தம்பட்டி கத்தரி,​​ மற்றும் நாட்டுக் கத்தரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.​ இதில் செவந்தம்பட்டி கத்தரி,​​ ஏக்கருக்கு 25 மூட்டை ​(60 கிலோ)​ வரை மகசூல் கிடைக்கிறது.கத்தரிக்காய் அறுவடை தொடங்கி 40 நாள்கள் ஆகிவிட்டது.​ தொடக்கத்தில் கிலோ ரூ.​ 20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தார்கள்.​ தற்போது கிலோ ரூ.​ 7-க்கு வாங்குகிறார்கள்.​ இதைவிட விலை குறைந்தால் விவசாயிகளுக்குக் கட்டுப்படி ஆகாது.​ கடலூர் பகுதியில் கத்தரி சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.​ 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்'' என்றார்.கடலூர் காய்கறி அங்காடிகளில் ஒரு மாதத்துக்கு முன்புவரை,​​ கத்தரிக்காய் விலை கிலோவுக்கு ரூ.​ 30 ஆக உயர்ந்து இருந்தது.​ தற்போது கிலோ ரூ.​ 10 முதல் ரூ.​ 12 வரை விற்பனை செய்யப் படுகிறது.​ காய்றிகள் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது என்றும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
 
கத்தரி சாகுபடி குறித்து தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்தது:​ 
 
                  கத்தரி சாகுபடியில் விவசாயிகள் நல்ல லாபம்பெற முடியும்.​ துல்லிய கத்தரி சாகுபடி முறையில் விவசாயிகள் தற்போதைய லாபத்தை இரட்டிப்பாக்க முடியும்.​ இதற்காக விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.கட்டியங்குப்பம் கிராமத்தில்,​​ துல்லிய கத்தரி விவசாயம் செய்ய பயிற்சி அளித்து இருக்கிறோம்.​ சொட்டு நீர் பாசனம் செய்தால் சாதாரணமாக பயன்படுத்தும் தண்ணீரைக் கொண்டு 3 மடங்கு சாகுபடி செய்ய முடியும்.​ மின்சார வெட்டு நேரத்தில்,​​ துல்லிய விவசாயம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.​ பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும்.விவசாயிகள் உரிய லாபம்பெற இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விடுபட வேண்டும்.​ விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில்,​​ விவசாய முறைகளை மட்டுமன்றி சரியான சந்தைப் படுத்துதலையும் தெரிந்திருக்க வேண்டும்.​ இதற்காக விவசாயிகளுக்கு விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கிறோம்.​ தற்போதைய சூழ்நிலையில் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து விவசாய விளைபொருள்களை விற்பனை செய்தால்,​​ விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றார் ராமலிங்கம்.


downlaod this page as pdf

Read more »

'பிள்ளைகளிடம் தாய் தந்தையர் ஜீவனாம்சம் கேட்கலாம்'

 கடலூர்:

                     தாய் தந்தையர் மற்றும் முதியோரைப் பறக்கணிப்பது சட்டப்படி குற்றமாகும்.​ போதுமான பொருளாதார வசதி இல்லாதபோது பிள்ளைகளிடம் தாய்,​​ தந்தையர் ஜீவனாம்சம் கோரிப்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                            தாய் தந்தையர் மற்றும் முதியோரைப் புறக்கணிப்பது சட்டப்படி குற்றமாகும்.​ தாய் தந்தையர் தங்களைப் பராமரித்துக் கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாதபோது,​​ இச் சட்டத்தின்படி முதியோர் தங்களது மகன்,​​ மகள்,​​ பேரன்,​​ பேத்தி ஆகியோரிடமும் மற்றும் முதியோர் வாரிசு இன்றி இறக்கும்போது,​​ அவர்களின் சொத்தை,​​ வாரிசு என்ற முறையில் யார் அடைவார்களோ அவர்களிடம் ஜீவனாம்சம் கேட்கலாம்.ஜீவனாம்சம் கோரும் மனுவை அதற்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களிடம் அளிக்கலாம்.​ வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.​ மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது.​ மேலும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் ஜீவனாம்ச அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.மனுதாரர் கோரினால் அவர் தீர்ப்பாயத்தில் ஆஜராகி உதவி புரிய வேண்டும்.​ மாவட்ட சமூகநல அலுவலர் சமரச அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.​ இச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கோருவோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.​ மாவட்ட அளவில் மாவட்ட சமூகநல அலுவலரையும்,​​ வட்டார அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம். தனியாக வசிக்கும் முதியோர்,​​ சொத்துக்களைப் பாதுகாத்தல் தொடர்பாக காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.​ அனைத்து முதியோர் இல்லங்களும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


downlaod this page as pdf

Read more »

விருத்தாசலத்தில் காலாவதியான மருந்துக் குவியல்

 விருத்தாசலம்:

                    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் செவ்வாய்க்கிழமை காலை காலாவதியான மருந்துகள் குவியலாகக் கிடந்தன .இதில் மாத்திரைகள்,​​ ஊசி மருந்துகள்,​​ டானிக் வகைகள் இருந்தன.​ இந்நிலையில் ​ ​சிறிது நேரத்தில் அந்த மருந்துகளை அடையாளம் தெரியாத சிலர் கொளுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. விருத்தாசலம் ஆற்றில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட இடம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. தமிழகத்தில் காலாவதியான மற்றும் போலி மருந்து விற்பனை விவகாரம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் முழு வீச்சில் மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.​ இந்நிலையில் மருந்துக் கடைக்காரர்​ யாரேனும் ஒருவர் காலா​வ​தியான மருந்துகளை இங்கு கொட்டிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.​​


downlaod this page as pdf

Read more »

சிதம்பரம் அருகே ​ 57 குடிசைகள் எரிந்து நாசம்

 சிதம்பரம்:

                      சிதம்பரம் அருகே 57 குடிசைகள் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து சாம்பலாயின . சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி 64 குடிசைகள் அமைக்கப்பட்டு தொல்காப்பியன் நகர் என பெயரிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாறன் இதனை திறந்து வைத்துள்ளார்.​ இந்நிலையில் இக்குடிசைகள் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது.​ தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.​ எனினும் தீவிபத்தில் 57 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.எஸ்.பி.​ நேரில் விசாரணை:​​ விஷ​மி​களின் நாசவேலை காரணமாக குடிசைகள் தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டதால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மற்றொரு தீவிபத்து:​​ சிதம்​ப​ரம் தேரடிபிள்ளையார்கோயில் தெருவில் உள்ள செல்வம் என்பவரது ஒர்கஷாப் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.​ அருகில் உள்ள கலியபெருமாள் வீட்டிலும்,​​ வள்ளிக்கந்தனின் மரப்பட்டறையிலும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன


downlaod this page as pdf

Read more »

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

 கட​லூர் :

                  தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து,​​ தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும்,​​ பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள்.​ துவரம்பருப்பு,​​ கோதுமை மாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து ​மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.​ ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர்.​ பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது,​​ அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.


downlaod this page as pdf

Read more »

நெய்வேலி கல்லூரியில் கலை பண்பாட்டு விழா

 நெய்வேலி:

                நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே.சங்கர் தலைமை வகித்தார்.​ நெய்வேலி டவுன்ஷிப் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.​ கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் ​(பொறுப்பு)​ சாந்தகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.​ தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,​​ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.​ பேராசிரியர் வி.டி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.


downlaod this page as pdf

Read more »

ஆட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம்

 கடலூர்:

                        கடலூர் அருகே வழிசோதனைப் பாளையம் கிராமத்தினருக்கும்,​​ நாயக்கர் நத்தம் காலனி மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பாக,​​ அமைதிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இரு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களிடையே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.​ இதில் இரு தரப்பிலும் 10 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.​ மற்றும் வைக்கோல் போர்கள்,​​ மோட்டார் கொட்டகைகள்,​​ கொளுத்தப்பட்டன.​ ​ வாழைத் தோட்டங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மோதல் தொடர்பாக இதுவரை 120 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.​ இருதரப்பிலும் 46 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.​ அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.​ ​ 

                       எனினும் பதற்றம் நீடித்து வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை 2-வது முறையாக அமைதிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது.​ நாயக்கர் நத்தம் காலனி மக்கள் சார்பில் கடலூர் நகராட்சித் தலைவர் தாமலைச்செல்வன் தலைமையில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.​ ​ வழிசோதனைப் பாளையம் கிராம மக்கள் சார்பில் காசிராஜன் தலைமையில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் இரு தரப்பிலும் தலா 5 பேர் கொண்ட சமாதானக்குழு அமைக்கப்பட்டது.​ எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இக்குழுவிடம் புகார் தெரிவித்து தீóர்வு காணப்பட வேண்டும் என்று மாவட் ஆட்சியர் அறிவுறுத்தினார்.​ அதை இரு தரப்பினரும் ஏற்று சமாதானமாகப் போவதாக உறுதி அளித்தனர்.தீவைத்து கொளுத்தப்பட்ட வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகள் கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.​ கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன்,​​ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு விலை குறையும் வாய்ப்பு


பண்ருட்டி: 

                     பண்ருட்டியில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பு மற்றும் பலாப்பழம் கூடுதல் விலை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டியில் தற்போது தினந்தோறும் நான்கு லாரிகள் அளவில் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. பண்ருட்டி பலாப்பழம் சுவையும், இனிப்பும் அதிகமாக இருப்பதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி வரை பலாப்பழம் விற்பனைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது ஒருகிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. 20 நாட்களுக்கு பின் தினந்தோறும் 10 லோடுகள் பலாப்பழம் வரத்துவங்கினால் பலாப்பழ விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.


downlaod this page as pdf

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

 கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். 

இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : 

                     கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

                         கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத்திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்


கடலூர்: 

                    கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு மகள் புனிதரசி (24). இவர் வீட்டில் இருந்த படி பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டமூர்த்தியும் புனிதரசியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் புனிதரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்து கூறி மணிண்டன் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது புனிதரசியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஏமாற் றமடைந்த புனிதரசி நியாயம் கிடைக்கவேண்டி பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்த்த பெண் கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்களுடன் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத் தியதைத் தொடர்ந்து புனிதரசி உள்ளிட்டோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்ட மூர்த்தி மீது புகார் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

ஆலோசனை கூட்டம்

 சேத்தியாத்தோப்பு: 

                       எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன் னிலை வகித்தார். வீரசோழன் வரவேற்றார். இளவரசன், டாக்டர் பன் னீர்செல்வம், பாலமுருகன், கோபாலகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் சிலையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வரும் ஆலை நிர் வாகத்தை கண்டிப்பது. அவரது முழு உருவச்சிலையை ஆலையின் முன்பு திறக்க சர்க்ரை துறை ஆணையமும், ஆலை நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு அலுவலர்கள் மற்றும் கரும்பு உதவியாளர்கள் கரும்பு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும் உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


downlaod this page as pdf

Read more »

கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய முடிவு


புவனகிரி: 

              கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மேலமூங்கிலடி ஊராட்சி தலைவர் செல்வி சதானந்தம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 
   
                       புவனகிரி அடுத்த மேலமூங்கிலடி ஊராட்சியில் 650க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு திடீரென நோய் தாக்கினால் அப்பகுதியினர் ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ள சி.முட்லூர் மற்றும் புவனகிரி கால் நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மழைக்காலத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் அவர்கள் கால்நடைகளை அழைத்து செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலமூங்கிலடியில் கால்நடை மருத்துவமனை கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனை அமைக்க கோரி பொது மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

downlaod this page as pdf

Read more »

மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முப்பெரும் விழா


சிதம்பரம்: 

                          சிதம்பரத்தில் புவனகிரி மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம், சென்னை தென்னிந்திய எய்ட்ஸ் செயல் திட்டம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு,குழந்தைகளுக்கான கட்டாய கல்வி சட்டம் மற்றும் மகளிர் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் செயளாளர் கண்ணதாசன் வரவேற்றார். சங்க உறுப்பினர் செல்வராஜ் திட்டம் குறித்துப் பேசினார். அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியை பிரியா, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலையப்பள்ளி தலைமையாசிரியை ராணி, குடந்தை லோட்டஸ் சங்க இயக்குனர் முத்துக்குமார், மோகன் தாஸ், வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சங்க செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

Read more »

போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொடியம்பாளையம் சாலை

 கிள்ளை: 

                     தெற்கு பிச்சாவரத்தில் இருந்து கொடியம்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக் குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் இருந்து நாகை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவ கிராமம் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

                    தற்போது கடலூர் மாவட்டத்துடன் நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் 10.5 கோடி ரூபாய் செலவில் உப்பனாற்றில் உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டது. காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் பாலத்தை திறந்து வைத்தார். கடந்த மாதம் முதல் சிதம்பரத்திலிருந்து கொடியம்பாளையத்திற்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொடியம்பாளையம் சாலை மிகவும் குறுகலாகவும், கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பஸ் வந்தால் இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதி சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும்...செயல்படுமா!: கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு


சிதம்பரம்: 

                        கடலூர் மாவட்டத்தில் 10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருந்தும் இரண்டு மட்டுமே இயங்குவதால் விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சிரமம் இன்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், இடைத்தரகர்கள் இன்றி வாங்கி செல்ல வசதியாக வேளாண் துறை சார்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய
 
                        10 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது விருத்தாசலம், பண்ருட்டியில் முழுமையாகவும், கடலூர் முதுநகரில் வேர்க்கடலையும், திட்டக்குடியில் சோளம் சீசனில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்பாடின்றி பெயரளவில் உள்ளது. காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சேத்தியாத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளே வருவதில்லை. இதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

                    உதாரணமாக சிதம்பரத்தில் கடந்த 1963ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி ஒழுங்கு முறை விற்பனை கூடம் துவங்கப்பட்டது. ஆனால் இதன் செயல்பாடு படிப் படியாக குறைந்தது. நேரடி கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட் டது ஒரு காரணமாக இருந் தாலும், சொந்த இடத்தில் விற்பனை கூடம், உலர் களம், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பயன் தரும் வகையில் அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

                         இதனால் பொருட்கள் வரத்து நின்றதால் சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட விற்பனை கூடம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்காமல் பெயர் பலகை மட்டுமே தொங்குகிறது. விற்பனை கூடத் திற்கு வெளியே நடக்கும் வணிகத்திற்கு விற்பனை கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை அண்ணா கலையரங்கில் உள்ள இயங்காத உழவர் சந்தைக்கும், அதன் நிர்வாக செலவுகளுக்கும் தற் போது செலவு செய்து வருவதாக வர்த்தக சங்கத்தினரும், விவசாயிகளும் புலம்புகின்றனர். சிதம்பரம் அண்ணா கலையரங்கில் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி உழவர் சந்தை, 12 லட்சம் ரூபாய் செலவில் ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கு, மற்றும் 3 லட்சம் ரூபாய் செலவில் உலர்களம் ஆகியவற்றிக்கு அப்போதை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிக்கல் நாட்டினார். ஆனால் அனைத்தும் கல்வெட்டாக காட்சியளிக்கிறது.

                         வேளாண் விற்பனை கூடத்தில் அரசு அறிவித்த 16 வகையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய குறைந்தது 5 ஏக்கர் இடம் தேவை. ஆனால் தற்போது எளிதில் அழுகக்கூடிய காய்கறி, பழங் கள் என மொத்தம் 103 வகையான பொருட்களை விற்பனை செய்ய வேளாண் துறை அறிவித் துள்ளது. இதற்காக குறைந் தது 10 ஏக்கர் இடமாவது தேவைப்படும். ஏற்கனவே சொந்த இடமின்றி, இடப்பற்றாக்குறையால் இயங்காமல் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இந்த அறிவிப்பு எப்படி பொருந்தப் போகிறது என்பது தான் புரியாத புதிர். மேலும், ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகம் இயங்கி வரும் அண்ணா கலையரங்கம் சிதம்பரம் நகரின் விஸ்தாரமான இடமாகும். இந்த இடத்தில்தான் பொதுக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. ஆனால் இங்கு செயல்படாத உழவர் சந்தை, திறக்கப்படாத எம்.எல்.ஏ., அலுவலகம், இயங்காத ஒழுங்கு முறை விற்பனை கூடம், வாகன நிறுத்தம் என அனைத்தும் செயல்பாடாதநிலையே காணப்படுகிறது. வேளாண் துறை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும் இயங்கும் வகையில் நிரந் தர வசதிகளுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை


திட்டக்குடி: 

                       திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மின்நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 18 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எதிர் புறம் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட் டுள்ளது. இது தவிர இளமங்கலத்தில் 30 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திலும், பெரியார் நகரில் ஒரு லட்சத்திலும், வதிஷ்டபுரத்தில் 2.5 லட்சத்திலும், கோழியூரில் ஒரு லட்சத்திலும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மோட்டார் இணைப்புடன் இயங்கி வருகின்றன. இந்நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் காலை 6 முதல் 8 மணி வரைக்கும் மாலை 4 முதல் 5 மணி வரைக்கும் முறையே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு, குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகின்றது.

                        இதில் திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 4.5 லட் சம் கொள்ளளவுடைய நீர்த் தொட்டிக்கு மட்டும் ராட் சத ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு, மின்இணைப்பு இல்லாத நேரத்திலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மற்ற குடிநீர் தொட்டிகள் ஜெனரேட்டர் வசதியின்றி மின்இணைப்பு இல்லாத நேரத்தில் தண்ணீரை மேலேற்ற முடியாமல், உரிய நேரத்தில் குடிநீர் சப்ளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், திட்டக்குடியில் மதியம் 12 முதல் 3 மணி வரையிலும் மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால், மாலை வேளையில் நகர்ப்புற மக்களுக்கே குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின்துண்டிப்பு நேரத்தை காலை 8 முதல் 11 மணி வரை மாற்றியமைத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் தடையின்றி குடிநீர் சப்ளை வழங்க முடியும்.


downlaod this page as pdf

Read more »

மின்தடை அதிகரிக்கும் வேளையில் பகலிலும் எரியுது தெரு விளக்குகள்

 நெல்லிக்குப்பம்: 

                            பகலிலும் மின் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் சிக்கன நடவடிக்கையாக தினமும் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ஆலைரோடு சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. அதேப் போன்று பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை லிங்க் ரோடு சந்திப்பில் தொடர்ந்து பகலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதிகாரிகள் கடைபிடிப்பதாக தெரியவில்லை.

downlaod this page as pdf

Read more »

பயன்பாட்டிற்கு வராத புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

 பரங்கிப்பேட்டை: 

                     சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் வெள்ளாற்று பாலம், சாலை பணி முடிவடையாத நிலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் இருந்து வண்டிகேட் வழியாக கடவாச்சேரிக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பு.முட்லூரில் இருந்து சி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.

                   சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வரை சாலைப்பணி ஓரளவு முடிந்துள்ளது. வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் வகையில் இரவு பகலாக பணிகள் நடக்கிறது. பாலம் கட்டும் பணி மட்டுமே முடிந்து சாலை அமைக்கும் பணி முடியாத நிலையில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இவ்வழியே சென்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக செல்லாமல் வெள்ளாற்று பாலத்தின் வழியாக பணி முழுமை பெறாத சாலை வழியே செல்கிறது. தற்போது தனியார் பஸ் டிரைவர்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் புவனகிரிக்கு செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சிதம்பரம் செல்கிறது.

                         இதன் காரணமாக பயணிகள் சிதம்பரம் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் புவனகிரி வழியாக பஸ் செல்லாது என கூறி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி பணிகள் முடிந்தும் முடியாத புறவழிசாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளும் வேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை போக்க புறவழிச்சாலை பணிகள் முடியும் வரை அந்த சாலையை இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு முழுமையாக அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

படுமோசமான சாலையால் விபத்துக்கள் அதிகரிப்பு


சேத்தியாத்தோப்பு:

                   சேத்தியாத்தோப்பு கானூர் சாலை சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
                  சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குமாரக்குடியிலிருந்து கானூர் வரை சாலையில் பெரும்பகுதி சேதமடைந்து மெகா பள்ளங் கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

ரூ.1.5 லட்சம் கஞ்சா பதுக்கல் பண்ருட்டியில் இரு பெண்கள் கைது


பண்ருட்டி: 

                    பண்ருட்டியில் வீட்டு தோட்டத்தில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் பண்ருட்டி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

                            அதில் கிடைத்த தகவலின் பேரில் பண்ருட்டி ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா (55), அம்பேத்கர் நகரை சேர்ந்த குத்புதீன் மனைவி சந்திரா (40) ஆகியோர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அதில் வீட்டில் பூஜை அறையில் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் வீட்டின் தோட்டத்தில் பாரலில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒன்னரை லட்சம் ரூபாயாகும். விஜயா மற்றும் சந்திராவை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior