உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 07, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்


அன்னையர் தின வாழ்த்துக்கள்

மே 8, 2011 ( ஞயிற்றுக்கிழமை)





Read more »

கடலூரில் அட்சய திருதியை: ரூ. 20 கோடிக்கு நகை விற்பனை

கடலூர்:

                  அட்சய திருதியை முன்னிட்டு கடலூர் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூரில் மட்டும் ரூ. 20 கோடிக்கு நகைகள் விற்பனை ஆகியிருப்பதாக வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீடுகளில் செல்வம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நம்பிக்கை மக்களிடையே பெருகி வருகிறு.
 
           அட்சய திருதியை நேரம் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை என்று கணித்து ஜோதிடர்கள் அறிவித்து இருந்தனர்.  இந்த நேரத்தில் கடலூர் நகைக் கடைகளில் நகை வணிகம் மிக அதிகமாக இருந்தது. கடலூரில் 200க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. கடலூரைச் சுற்றியுள்ள புதுவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை விட, கடலூரில் பொதுவாக நகை வணிகம் அதிகம். புதுவை பிரதான வணிக கேந்திரமாக விளங்கியபோதிலும் பொதுவான நாள்களில் நகை வணிகம், புதுவையை விட கடலூரில் அதிகம் என்கிறார்கள் கடலூர் நகை வணிகர்கள். கடலூர் நகைகளுக்கு மக்களிடையே பாரம்பரியமாக நம்பிக்கை இருந்து வருவதுதான் இதற்குக் காரணம்.
 
            கடலூரில் சாதாரணமாக முகூர்த்த நாள்களையொட்டி, ரூ. 10 கோடி வரை நகை வியாபாரம் இருப்பதாக, நகை வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். அட்சய திருதியையொட்டி கடலூரில் ரூ. 20 கோடிக்கு மேல் நகை வணிகம் நடந்து இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
 
 
நகை வணிகர்கள் சங்க நிர்வாகி ஒருவர்கூறுகையில், 

            ஏனைய பண முதலீடுகளில் நிறைய சந்தை அபாயங்கள் உள்ளன. தங்கத்தின் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே உள்ளது. தங்கத்தை வைத்து உடனே பணமாக்க முடியும். எனவே முதலீட்டுக்கு ஏற்றதாகவும் இருப்பதால், தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளது. ÷அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதும், மக்களை நகை வாங்கத் தூண்டியிருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க வரும் பெண்கள், பெரும்பாலும் வயதான பெண்மணிகளாக இருந்தாலும், புதிய டிசைன் என்ன வந்து இருக்கிறது என்றுதான் கேட்கிறார்கள் என்றார்.
 
இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

             தங்கத்துக்கு 1 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பல நகை வியாபாரிகள் வரி செலுத்துவது இல்லை. பலர் வரிவிதிப்பு எண்கூட வாங்குவது இல்லை. பொதுவாக முகூர்த்த நாள்களில் ரூ.10 கோடி வரை நகை வணிகம் நடைபெறும். கடலூரில் மாதம் ரூ.4 லட்சம் மட்டுமே (ரூ. 4 கோடிக்கு நகை வணிகம்) வரி செலுத்தப்படுகிறது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நகைக் கடை ஒன்று, மாதம் ரூ. 1 லட்சம் வரி செலுத்துகிறது. ஆனால் மற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய நகைக் கடைகள், அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரைதான் வணிக வரி செலுத்துகின்றன.
 
              உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள ஒரு வழக்கு காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக நகை வணிகர்களிடம் இருந்து வரி வசூலிக்க முடியவில்லை. அட்சய திருதியை முன்னிட்டு முகூர்த்த நாள்களை விட, கடலூரில் இருமடங்கு நகை வணிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

Read more »

கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டத்தில் மாதிரி பள்ளிகள் கட்ட ரூ.132 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

          கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டங்களில், மாதிரி பள்ளி கட்டடம் கட்ட 132 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

          தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு, மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகள் கடந்த கல்வி ஆண்டில் துவக்கப்பட்டன.இதற்கென 6 முதல் 9, பிளஸ் 1 வகுப்புகள் அருகில் உள்ள பள்ளிகளில் நடக்கின்றன. அடுத்த கல்வி (2011-2012) ஆண்டில் 10, பிளஸ் 2 வகுப்புகள் துவக்கப்படும். இதற்கான வகுப்பறை கட்டடம் கட்ட, பள்ளிக்கு 3 கோடி ரூபாய் வீதம் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.
 
                இதற்கான நிதி 132 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதில், 54 கோடி ரூபாயில் கடந்த கல்வி ஆண்டில் துவக்கிய 18 பள்ளிகளுக்கு, கட்டடம் கட்டும் பணியை போலீஸ் வீட்டு வசதி கழகத்தினர் துவக்கியுள்ளனர். பத்து மாதத்திற்குள் இப்பணி முடியும். விளையாட்டு மைதானம், ஆய்வக வசதிகள், இணையதள வசதிகள், இலக்கியம், அறிவியல், கணிதம் மன்றங்கள் செயல்படும். 

            இப்பணிகள் முடிந்தபின், 2ம் கட்டமாக அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் 26 மாதிரி பள்ளிகள் துவக்கப்படும். அங்கு, 78 கோடி ரூபாயில் கட்டடங்கள் கட்டப்படும், என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

               "பின்தங்கிய ஒன்றியங்களில் இப்பள்ளி துவக்கப்படும் பட்சத்தில், கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி கிடைக்கும். இவர்களை கல்வியில் வளர்ச்சி அடைய செய்யும்நோக்கில், இத்திட்டம் செயல்படுகிறது,'' என்றார்.

Read more »

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் மென்பொருள்: கோவை அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்

           ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

             சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).

மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, "சென்' குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறியது: 

             கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்டருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடுபட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்கநிலை மொழிப்பெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உருபனியல் பகுப்பாய்வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற்றொடர்கள், வார்த்தை, பால்விகுதி, காலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச்சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.

                          வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப்படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிப்பெயர்க்கலாம். ஆசிரியர்கள் உதவியின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழிப்பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 விபரங்களுக்கு 




 AMRITA VISHWA VIDYAPEETHAM( UNIVERSITY )
  Ettimadai (P.O.)
  Coimbatore - 641 105
  Tamilnadu, India 
  Ph : 0422-2685000
  Fax: 422-2656274




Read more »

ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன்: நோக்கியா நிறுவனம் சாதனை

          நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.

         சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில், கடந்த 2006ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

            கடந்த 2007ம் ஆண்டில், 10 கோடியாக இருந்த மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பு, படிப்படியாக அதிகரித்து, தற்போது 50 கோடியை எட்டியுள்ளது. ஐந்து ஆண்டுகளில், படைக்கப்பட்ட இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, சி 3 என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா இந்தியா நிறுவனத்தின் செயல் பிரிவு இயக்குனர் பிரகாஷ் கடாமா, புதிய மொபைல் போனை வெளியிட்டு கூறியது: 

             சென்னைத் தொழிற்சாலையில் இதுவரை, 28.50 கோடி டாலர் (1,311 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,000 முதல் 6,000 ரூபாய்வரை விலை கொண்ட மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன.  இதையொட்டி 6,074 ரூபாய்விலையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய சி 3 மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இரண்டு 'சிம்' பொருத்தக் கூடிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு பிரகாஷ் கடாமா கூறினார்.

Read more »

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: 9ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 தேர்வு முடிவு 9 ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுத 13 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் 3 பாடத்துக்குள் பெயிலாகும் மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக உடனடி சிறப்பு தேர்வு ஜுன், ஜுலை மாதத்தில் நடத்தப்படவுள்ளது. ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.85. இரண்டு பாடங்களுக்கு கட்டணம் ரூ.135. மூன்று பாடங்களுக்கு கட்டணம் ரூ.185.

           
டந்த மார்ச் மாதம் பள்ளி மாணவராக பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் மூன்றுக்கும் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தால் அவர்கள் எஸ்.எச். விண்ணப்பங்களை அவர்கள் படித்த பள்ளியிலேயே 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அவற்றை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளியிலேயே மே 13 ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை பள்ளியிலேயே பணமாக செலுத்தலாம்.

             கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனிதேர்வர்களும், அதற்கு முன்பு தேர்வு எழுதி தோல்வியுற்ற தனி தேர்வர்களும் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம். இவர்கள் அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் மே 16 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

             பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் மே 24 ந் தேதிக்குள் வந்துசேரும் வகையில் பதிவு தபாலிலோ, அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் மதிப்பெண் சான்றிதழின் நகல், அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். தேர்வுகள் ஜுன் 22 ந் தேதி முதல் ஜுலை 2 ந் தேதி வரை நடைபெறும்.

              சென்னை மாவட்ட மாணவர்கள் விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் கிடைக்கும். வேறு எங்கும் கொடுக்கப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் மேற்கண்ட இடங்களில்தான் கொடுக்க வேண்டும்.

Read more »

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற 11ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. விடைத்தாள் ஜெராக்ஸ் பெறவும், மறுகூட்டலுக்கும் 11 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

          தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சம் மாணவர்கள் எதிர்பார்க்கும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

             மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் அவர்கள் படித்த பள்ளியில் 9 ந் தேதி காலை 10 மணிக்கு ஒட்டப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற 25 ந் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும். தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

          விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல்கள் மற்றும் மறுகூட்டலுக்கு 11 ந் தேதி முதல் 16 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதாவது அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், சென்னையை தவிர்த்த அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படமாட்டாது.


விடைத்தாள் நகல் பெறக் கட்டணம்
 
             பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணமாகும். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணமாகும். தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல்கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்தபிறகு விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

                மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305 கட்டணமும், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 ம் கட்டணமும் ஆகும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தொகையை தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வு இயக்குனர், சென்னை 6 என்ற பெயரில் வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அதை கொடுத்தால் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

              விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கட்டணம் 

             மறுமதிப்பீடு கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,010 செலுத்த வேண்டும். மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.505 கட்டணம் ஆகும். மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305 ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205 ம் கட்டணம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகலுடன் இணைத்து அனுப்பப்படும்

Read more »

A endeavour full of risks

Onerous task:Repair works on FRP boats progress at Thazhanguda in Cuddalore.


CUDDALORE:

         The fibre-reinforced plastic (FRP) boats fitted with outboard engines are mostly used for ferrying the fish catch from the trawlers to the fish landing ports. Since these boats would have to be berthed close to the big vessels in the mid-sea, they always get the beating. Hence, the hulls and rims of the boats are vulnerable to constant friction, and, wear and tear.

         But in a busy season the fishermen are left with little time to attend to the repair works. Therefore, they chose to set right the boats during fishing holidays, spread over 45 days. Restoring the damaged FRP boats is the job of skilled technicians. But not many such technical hands are around in Cuddalore and they have to be scouted for either at Marakkanam or at Nagapattinam. According to E. Lenin (49), a technician from Marakkanam, the FRP boats need careful handling. The dented and broken spots ought to be covered with shiny mats woven with glass filaments.

Hazardous to health

          Inhaling the gossamer filament is hazardous to health. Moreover, the filaments have razor sharp edges that would leave nicks in the hands, if carelessly handled. Depending upon the requirements, the mats are placed in layers with help of a binding agent or resin. A catalyst and accelerator should also be used for easy fixing of the glass fibre mats. Here too, caution is required as the mixture of the catalyst and the accelerator will explore if the proportion is not right.

         Mr Lenin said that the technicians learn the techniques the hard way, either from their peers or through trial-and-error method. After the mats are spread evenly at the required spots, the resin mixture is be applied with a paint brush. Soon, the mats indistinguishably merge with the surface of the boats which are then allowed to dry in sunlight for some time. Afterwards the surface is smoothened with electrically operated grinder discs.

        While taking up this job, the technicians have to wear goggles and cover the nose and mouth with a cloth to guard against inhaling the fine dust and splinters. Mr Lenin said that though a single layer of glass fibre mat might give a silken appearance, when layered, it acquires great strength to withstand the load and pressure. After giving a coat of fluorescent paint the FRPs would be made seaworthy again. The repair cost depends upon the extent of damage. The technicians bargained their pay package as the work might take two days to one week to complete.

Read more »

Sexual abuse of seven-year-girl alleged near Vriddhachalam

CUDDALORE: 

          A seven-year-old girl, who was allegedly subjected to sexual abuse on Wednesday at Nallur in Vriddhachalam taluk, has been admitted to the Cuddalore Government Headquarters Hospital here for treatment.

          Police have arrested 49-year-old S. Selvarasu in this connection, Superintendent of Police Ashwin Kotnis said. The victim's father Venkatesan (38), a daily wage labourer and native of Athanur in Uludurpet taluk, said that his daughter looked dazed and deeply traumatised.

            Mr. Venkatesan, along which his daughter, had gone to his in-laws' place at Nallur to participate in a local festival. When his daughter was playing with the girls in the neighbourhood, Selvarasu accosted her and offered some small coins. He also promised to give more money if she accompanied him to his house. However, after a while the girl came home crying complaining of physical injuries and pain. Mr. Venkatesan lodged a complaint with the Vepur police and admitted his daughter to the Vriddhachalam Government Hospital. She was later referred to the Cuddalore hospital. Hospital sources said laboratory reports are awaited.

Read more »

Goldsmith relieved of jewellery, cash

CUDDALORE: 

         A goldsmith was robbed of a bag containing gold ornaments and gold biscuits weighing 400 gm and Rs.2.5 lakh in cash, while travelling in a town bus from B. Mutlur to Cuddalore on Wednesday night.

        In a complaint lodged with the police, N. Murugesan (48) of Keezhperumbakkam in Villupuram district stated that he used to take finished ornaments to jewellery shops in Chidambaram and collect cash and old ornaments. After completing the day's transactions, he had put the valuables and cash in a bag and boarded an ST bus at Chidambaram. En route, he alighted from the vehicle for refreshments and boarded the town bus.

         At B. Mutlur, another person had boarded the bus along with him but chose to travel on the footboard. When the bus was about to stop at Puduchathiram the unidentified person snatched the bag and jumped from the bus. Mr. Murugesan along with conductor Selvam gave chase for some distance, in vain. The unidentified person was picked up by a two-wheeler rider, who was trailing the bus, and both sped towards Chidambaram.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior