உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் மாநிலத்தில் 3 வது இடம்

கடலூர்:  தமிழக அளவில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். தான் ஐஏஎஸ் ஆக விரும்பு வதாக தெரிவித் துள்ளார். கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3 வது இடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இம்மாணவன் பெற்ற மதிப்பெண்கள் விவரம்  ஆங்கிலம்-96, கணிதம்- 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்-100, ஹிந்தி...

Read more »

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி முதலிடம்

சிதம்பரம் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதீஸ்வரி சிதம்பரம் நகரில் முதலிடமும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.  இம்மாணவி  அறிவியலில் 100, கணிதம், சமூக அறிவியல், பாடங்களில் தலா 99, தமிழில்-96, ஆங்கிலத்தில்-97  மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.  இப்பள்ளியில் தேர்வு எழுதிய 434 பேரில்...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 5 பேர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்ட அளவில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தினார். இதேபள்ளி மாணவி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கடலூர்:  தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதலாகும். தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு:  கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாவட்டத்தில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி...

Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர்:  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 425 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 425 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.  இதில் பள்ளி மாணவி கிருத்திகா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior