உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் ஒன்றியத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்:

கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பத்மநாபன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






Read more »

கடலூரில் அட்சய திருதியையொட்டி நகைகடைகளில் அலைமோதியது கூட்டம்

கடலூர்:

அட்சய திருதியையொட்டி கடலூரில் உள்ள நகைகடைகளில் கூட்டம் அலை மோதியது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் இருந்ததால், கடலூரில் நகைகடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோட்டில் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது  நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம்காத்திருந்து நகைகள் வாங்கும் நிலை ஏற்பட்டது. கூட்டத்தை தவிர்க்க பலர், கடைகளில் ஏற்கனவே  நகைகளை தேர்வு  செய்து  முன்பதிவு செய்து அட்ச ய திருதியைன்று நகைகளை வாங்கிச் öŒன்றனர். நேற்று  மாலை நகைக் கடைகளுக்கு மக்களின் வருகை அதிகரித்ததால், லாரன்ஸ் ரோட்டில் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தை தொடர்ந்து லாரன்ஸ்  ரோட்டில் போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முகாம் அலுவலத்தில் நேற்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு  உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 கடலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக 23 மையங்கள், 1459 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1324 டேட்டா எண்டிரி ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பு பணி @நற்று முன்தினம் துவங்கியது. நேற்று சா திவாரி கணக்கெடுப்பாளர்கள் கடலூரில் கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ராஜே ந்திர ரத்னுவிடம் விபரங்களை கேட்டு பதிவு செய்தனர். கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மையங்களிலும் மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior