உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள்

          

             ""தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்படும்,'' என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

                   மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்பட்டு வந்தது. இதை ரயில்வே துறை முன்பதிவு பெட்டிகளாக மாற்றியமைத்தது. இம்மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் இடர்பாடுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இப்பெட்டிகளை முன்போலவே முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மே மாதம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று மம்தா பானர்ஜி கடந்த 22ம் தேதி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், 

                     "அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும். "இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி) பெட்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு படுக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும்' என கூறியுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிப்பு







                  ""பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது,'' என்று, சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

              பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.  சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதி நிர்மலா, மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்,  அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: 

                  "எச்1என்1' எனப்படும் பன்றிக் காய்ச்சல், கேரளாவில் பரவுவதாக செய்தி வந்ததும், அந்த நோயை தடுப்பது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பின், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் ஆறு மாவட்டங்களின் துணை சுகாதார இயக்குனர்களை தொடர்பு கொண்டு, இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை தெரிவித்தோம். பஸ் ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது.  தமிழகத்தில் இதுவரை 21 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேர், சென்னையில் மூன்று பேர், திருவள்ளூரில் இரண்டு பேர், நாகை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

              இந்த காய்ச்சலால் ஒருவர் கூட இறக்கவில்லை. மக்கள் வீண் பீதியை பரப்பக் கூடாது. இந்நோயின் வீரியம் குறைந்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான, "டாமி ப்ளூ' மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளன. அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருந்து அனுப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையிலான குழு, கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை இக்குழு கண்காணிக்கும். அரசு மருத்துவமனைகளில், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

                  நோய் அறிகுறிகளான இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்மல் வரும் போது, துணியால் மூக்கை பொத்த வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, வேறு மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கக் கூடாது. நோய் முற்றிய பின் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Read more »

ஜூலை 5-ல் கடையடைப்பு - எதிர்க்கட்சிகள் அழைப்பு


            பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி நாடு முழுக்க கடையடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
                     ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து வருகின்றன. விலைவாசி உயர்வு குறித்து முதலமைச்சர்களின் மாநாடு பிரதமர் தலைமையில் 6.2.2010 அன்று நடைபெற்றதே தவிர, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.  மாறாக, விலைவாசி மேலும் உயர்வதற்கான வழிகளைத் தான் தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

             இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு முடிந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மூன்று முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருள்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போனால், அனைத்துப் பொருள்களின் விலைகளும் மேலும் உயர்ந்து கொண்டே போகுமே தவிர குறையாது. இந்த முறை பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.  இது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.  டீசல் விலையையும் இது போன்று உயர்த்திக் கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

                  மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பின் காரணமாக லாரி வாடகை, சரக்குக் கட்டணம், வேன் வாடகை, போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயரும். இதனையடுத்து, உணவுப் பொருள்கள் உட்பட, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி, வேளாண் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தனது முழு ஆதரவை அளித்திருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

                மேலும், இந்த விலை ஏற்றத்திற்காக மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் மு.க. அழகிரி கலந்து கொண்டு இந்த விலையேற்றத்திற்கு முழு ஆதரவு அளித்திருக்கிறார். பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது மிகப் பெரிய நிதிச் சுமையை மத்திய அரசும், மாநில அரசும் திணித்துள்ளன.  இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கின்றனர்.  இந்த விலை உயர்வுக்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதோடு, இந்த விலை உயர்வுக்குக் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க. மாநில அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                    மேலும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசில் அங்கம் வகிக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளருடன் ஆலோசித்து எடுத்த முடிவின்படி, எதிர்க்கட்சிகள் இணைந்து ஜூலை 5-ம் தேதி (திங்கள்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட ஒத்தக் கருத்துடைய  கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.  மேலும், அனைத்து வியாபாரிகளும், தொழிற்சங்க அமைப்புகளும், வாகன உரிமையாளர்களும் மற்றும் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

என்.எல்.சி. ஸ்டிரைக்: தீவிர பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள்

நெய்வேலி:

                என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 30) இரவுப்பணி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகமும் ஸ்டிரைக்கை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

               01-01-2007 முதல் என்எல்சி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த 6 மாதமாக நெய்வேலி மற்றும் சென்னையில் மாறிமாறி பல சுற்று பேச்சு நடத்தினர்.இப்பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அலவன்சு மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன் தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டி வருவதால், நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே முட்டுக்கட்டை நிலவி வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மே 30-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதையடுத்து நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11 மற்றும் 15-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொ.மு.ச. அறிவிப்பு:

              இதனிடையே தொமுச நிர்வாகக் குழு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தொமுச பேரவைக்கு தொமுச நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்திருப்பதால் தொமுச போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும், 30-ம் தேதி இரவுப் பணிமுதல் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாகவும் அச்சங்கத்தின் செயலர் ஆர்.கோபாலன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அறிவிப்புச் செய்திருந்த நிலையிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்துக்கு அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களிடமும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். 

                இதனிடையே செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது அலவன்ஸ் நிலுவைத் தொகை வழங்குவதில் கூடுதலாக மேலும் இரு மாதங்கள் சேர்த்து வழங்குவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்கிரிமென்ட் விஷயத்தைப் பொறுத்தமட்டில் 2007-ம் ஆண்டு முதலும், சிறப்பு இன்கிரிமென்ட் 2009-ம் ஆண்டு முதலும், 15 மாத அலவன்ஸ நிலுவைத் தொகையாக வழங்கினால் மட்டுமே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தொமுச செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைப்பிடிக்குமானால் புதன்கிழமை இரவுப்பணி முதல் திட்டமிட்டபடி ஸ்டிரைக் தொடங்கும் என்றார் அவர்.

பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார்:
         என்எல்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவிருப்பதாக நெய்வேலி டிஎஸ்பி மணி தெரிவித்தார். அதன்படி ஒரு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பி, 55 இன்ஸ்பெக்டர்கள், 252 எஸ்ஐக்கள், 1066 காவலர்கள், 358 சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

மனக் குமுறலில் போலீ ர்
 
              கோவையில் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôருக்கு, 3 நாள் சிறப்பு விடுப்பு அளித்திருந்தது காவல்துறை. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீஸôரும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மாநாடு முடிந்து 3 நாள் கிடைத்த சிறப்பு விடுப்பை ஜாலியாக அனுபவிக்கலாம் என வீடு திரும்பியபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து போலீஸாரும், நெய்வேலி பந்தோபஸ்து பணிக்குச் செல்லவேண்டும் என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து. இரு மாவட்ட போலீஸôரும் மிகுந்த மன வருத்தமடைந்துள்ளனர்.எங்களுக்கு எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற விடுப்பு கிடைக்கும். ஆனால் தற்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கின்றனர் போலீஸார்.

Read more »

கடலூர் சிப்காட் ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதாகப் புகார்

கடலூர்:

                அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனத் தன்மை கொண்ட  ரசாயனக் கழிவுகள் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து கடலில் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது. 

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:

                  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட ரசாயனக் கழிவுகளை சேகரித்து கடலில் கொண்டுபோய் கலக்கும் கியூசெக்ஸ் நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளாக கன்சென்ட் டூ ஆபரேட் என்ற அனுமதி வாங்காமல், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு ரசாயனத் தன்மை கொண்ட ஆலைக் கழிவுகள் அங்கிருந்து கடலில் கலக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 

                இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க வில்லை.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மட்டுமே இந்த நிறுவனம் கடலில் கலக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுகளைக் கடலில் கலப்பதுடன் உரிய அனுமதியின்றி செயல்படும் இந்த நிறுவனத்தை மூட உத்தரவிட வேண்டும்.ரசாயனக் கழிவுகளால் மக்கள் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் 16-வது இடத்தில் கடலூர் இருக்கும் நிலையில், புதிய தொழிற்சாலைகள் அமைவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை விளக்கம் கேட்டு இருக்கிறது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விளக்கிக் கூறுவது இல்லை. விதிகளை மீறி, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் பல அனுமதியை புதுப்பிக்காமலேயே இயங்குகின்றன. 

                 தொழிற்சாலை மாசு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்ஃபோன் மற்றும் தொலைபேசி எண்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனப் பொருள்கள் மற்றும் கழிவுகளை லாரிகளில் எடுத்துச் செல்லும்போது, அடிக்கடி சாலைகளில் வழிந்து கொட்டிவிட்டுச் செல்வதை தடுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளுக்கு 7 கி.மீ. தொலைவில் அனல் முன் நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. கடற்கரை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படியும் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மாங்குரோவ் காடுகளை தொழிற்சாலை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற, மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.  மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை சிப்காட் வளாகத்தில் கட்ட வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆயிற்று என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

                    கூட்டத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, உறுப்பினர் ப.சண்முகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எம்.நிஜாமுதீன், அருள்செல்வம், ராமநாதன், புகழேந்தி, ஊராட்சித் தலைவர்கள் ஆனந்தன், பாவாடை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ 11.7 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம்:
 
               சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  பிரசாதக் கடைகள் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் போயின. சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்திய பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பிரகாரத்தில் பிரசாதக் கடைகள் வைக்க ஏலம் விடப்பட்டன. அப்போது ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம் போனது. கடை நடத்தும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைவதால் கடந்த ஜூன் 21-ம் தேதி ஏலம் விடப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக ரூ.10.50 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டதால் ஏலம் ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன், செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் கேட்ட புவனகிரி வடக்குதிட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் ஆலமர செடிகள்





சிதம்பரம்:

                வரலாற்று சிறப்புவாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்கள் முறையாக பராமரிப்பின்றி ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. நாளுக்கு நாள் இச்செடிகள் அதிகரித்துவரும் நிலையில், மரமாக வளர்ந்து கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                   கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் "பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் ஆகாயத்தலமான நடராஜர் கோவில் அமைந்துள்ளது. தரிசித்தால் முக்தி அளிக்கும் இக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் உலக அளவில் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. நடராஜர் கோவில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளது. கோவிலின் நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள் சிற்ப கலைநுட்பத்துடன் கட்டப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன. 135 அடி உயரத்தில் இருந்து 140 அடி உயரம் வரை உள்ள கோபுரங்களின் நுழைவாயில் பகுதி மட்டுமே 49 அடி உயரம் கொண்டவை. ஏழு நிலை கோபுரங்களின் மேல் பகுதி புராண இதிகாசங்களில் கூறப்படும் இறைவனை அருள் விளையாடல்கள், கூத்தின் விகற்பங்கள் காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. கோபுர வாயிலில் நிலைத் தூண்கள் மூன்றடி சதுரமும், முப்பது அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் கோபுரங்கள் கட்டப்பட்டவை.

                 கிழக்கு ராஜகோபுரம் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1138 -1150ம் ஆண்டில் கட்டப்பட்டது. 108 பரத நாட்டிய கர்ணங்கள் இடம் பெற்றுள்ளது. மேற்கு கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி. 1237-40ம் ஆண்டில் கட்டப்பட்டது. மேற்கு கோபுரம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கி.பி.1207ம் ஆண்டு கட்டினார். வடக்கு கோபுரம் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 140 அடி உயரத்தில் கட்டப்பட்டது. சிற்பக்கலை சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள நான்கு ராஜகோபுரங்களும் 800 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

              இக்கோபுரங்கள், தொழிலதிபர்கள் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனித்தனி தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால், கோபுரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இதில் தற்போது ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. கோவிலை கைப்பற்றுவதில் ஆர்வம் செலுத்தும் தீட்சிதர்களும் சரி, அறநிலையத் துறையும் சரி கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்ற அக்கறை எடுத்துக் கொள்ளாததால் செடிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன.

              செடிகள் அகற்றப்படாத நிலை நீடித்தால் கோபுரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல், காளஸ்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவை இங்கு ஏற்படாமல் தடுக்கவும், வரலாற்று சின்னங்களான கோபுரங்களை பாதுகாக்கவும் போர்க்கால அடிப்படையில், நடராஜர் கோவில் ராஜகோபுர செடிகளை அகற்ற வேண்டும்.

Read more »

விருத்தாசலம் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?



விருத்தாசலம்:

           விருத்தாசலம் புறவழிச்சாலை பணிகள் முடிந்தும், ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழ்நாடு ரோடு செக்டார் புராஜக்ட் மூலம் 20 கோடி ரூபாய் செலவில், கடலூர் ரோடு குப்பநத்தத்தில் இருந்து வேப்பூர் ரோடு மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 2010 ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பணிகள் துவங்கியது.

                புறவழிச்சாலை அமைக்கப்படும் பாதையில் மணிமுக்தா ஆறும், ரயில் பாதையும் செல்வதால் இந்த இரண்டு இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்க 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, "இர்கான்' எனப்படும் "இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன்' வசம் பணி ஒப்படைக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதத்திற்குள் மற்ற பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து புறவழிச்சாலை போக்குவரத்திற்கு தயாராக உள்ள நிலையில், ரயில்வே மேம்பால பணிகள் மட்டும் நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துச் செல்கிறது. இதுவரை பில்லர்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால், புறவழிச்சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது.

                    பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு தான் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் உள்ள ரயில் பாதையின் மேல் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. அவ்வாறு முடித்திருந்தால் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனப் போக்குவரத்து, புறவழிச்சாலை வழியாக சென்றிருக்கும்.வேறு வழியின்றி போக்குவரத்து நெரிசலுடன் ரயில்வே ஜங்ஷன் வழியாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே மேம்பால பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

AIADMK cadre stage demo

CUDDALORE: 

           All India Anna Dravida Munnetra Kazhagam cadre, led by party organising secretary S. Semmalai staged, a demonstration near the bus stand at Thittakudi on Monday urging the State government to initiate measures soon to desilt the Wellington tank and revive water storage. The protestors said the tank used to cater to the irrigation needs of 25,000 acres in the ayacut areas, besides feeding ponds in the region. The State government had sanctioned Rs. 20 crore during 2007-2008 for desilting, but the work was never completed. As a result, the tank and the ponds had gone dry. This affected farmers who were unable to raise crops.

Read more »

Financial aid for special SHGs


Helping hand: Collector P. Seetharaman disbursing aid to differently abled persons in Cuddalore on Tuesday. 
 
CUDDALORE: 

           Special self-help groups comprising differently abled persons in Cuddalore district have been given financial assistance to the tune of Rs. 4.12 crore, according to Collector P. Seetharaman.

          At a function organised here on Tuesday to distribute the benefits, he told reporters that financial support was extended under the ‘Vazhnthu Kattuvom' scheme for economic empowerment and poverty alleviation. The scheme would be implemented in stages in 236 panchayats of four blocks. So far, 625 special SHGs had been formed and of them, 505 that came into existence four months ago received monetary assistance of Rs. 40.70 lakh. A sum of Rs. 3.71 crore was distributed to the remaining special SHGs in the form of revolving fund, direct loan, and economic assistance. With a view to training the differently abled persons to take up self-help ventures, the National Finance Corporation for Differently abled had sanctioned Rs. 18.75 lakh through the District Central Cooperative Bank to 122 beneficiaries.

                Mr. Seetharaman also said that under the individual livelihood support scheme, a sum of Rs. 6.36 crore was disbursed among 4,230 differently abled persons and 2,835 persons belonging to the deprived sections Under the Kalaignar Health Scheme, 198 differently abled beneficiaries were identified in the Nallur and Vriddhachalam blocks, and 59 of them underwent life-saving operations. During the current year, it was proposed to cover 200 more persons under the scheme. The Collector gave away cheques for Rs. 8,000 (at the rate of Rs. 1,000 a month for the past eight months) to artists. Under the Education for All scheme, aids such as calipers, hearing aids and tricycles worth over Rs. 10 lakh were given to 596 beneficiaries, Mr. Seetharaman said. District Revenue Officer S. Natarjan, Welfare Officer for the differently abled Srinivasan, Project Officer (Vazhnthu Kattuvom) Nithyanandam, Personal Assistant to Collector Umapathi were present.

Read more »

கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி பணியில் தாமதம் காட்டுவதேன்? : மாஜி அமைச்சர் செம்மலை கேள்வி

திட்டக்குடி: 

               சட்டசபை வளாகத்தை விரைந்து முடித்த கருணாநிதி, வெலிங்டன் ஏரியை முடிப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.

                      திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரியை விரைந்து சீரமைக்கக் கோரியும், தி.மு. க., அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திட் டக்குடி பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் முன்னிலை வகித்தார். மங் களூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி வரவேற்றார். எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு சுப்ரமணியன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நீதிமன்னன், வக்கீல்கள் பாலசுரேந்திரன், முத்தழகன், பொன்னேரி முத்து, தொகுதி பொறுப் பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:

                 பொதுப்பணித் துறையை நிர்வகிக்கும் முதல்வர் கருணாநிதி 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் வெலிங்டன் ஏரி பணிகள் நிறைவடையவில்லை. இதனால் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி இன்றியும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும் கிணறுகள் வற் றிய நிலையில் கிணற்று பாசனமும் அடியோடு பாதிப்படைந்துள்ளது. சட்டசபை வளாகத்தை விரைவில் முடித்த கருணாநிதி, விவசாயிகளின் வாழ் வாதாரமான வெலிங்டன் ஏரியை விரைந்து முடிப்பதில் தாமதம் காட்டுவது ஏன். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஆனால் உற்பத்தி பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரசு பஸ் சில் கலருக்கு தகுந்தாற் போல் டிக்கெட் விலை உயர்வு ஏற்படுத்தி, பஸ் கட்டணம் உயரவில்லை என மார்தட்டி வருகிறார் கருணாநிதி.தி.மு.க., அரசின் மெத் தனப் போக்கைக் கண்டித்து வரும் 5ம் தேதி இடதுசாரிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க., சார்பில் மாபெரும் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. 2011ல் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு செம்மலை பேசினார்

Read more »

கடலூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர்: உள்ளாட்சி அமைப்புகள் திடீர் அறிவிப்பு

கடலூர்:  

                அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் திடீரென அறிவித்து வருவதால், ஏற்கனவே மனைகளை வாங்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக கிராமப் பகுதி மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்வது கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

               இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம்,  புவனகிரி, சிதம்பரம் போன்ற நகரப் பகுதிகளில் வீடுகளின் தேவை  அதிகரித்து வருவதால் இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் படு பிசியாகி உள்ளது.கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்க ளது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நகரப் பகுதியில் எதற்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு வருவதாலும், அதற்கேற்ப வீட்டு மனைகள் இல்லாததால், இருக் கின்ற மனைகளின் விலை கடந்த நான்காண்டுகளில் பல மடங்கு உயர்ந் துள்ளது. வீட்டு மனைகளின் தேவை அதிகரித்துள்ளதை அறிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நகரப் பகுதி மற்றும் நகரத்தை ஒட்டிய ஊராட்சி பகுதிகளில் உள்ள விளை நிலங் களை வாங்கி மனைப் பிரிவுகளாக மாற்றி இரட்டிப்பு விலைக்கு விற்று வருகின்றனர்.கடந்த காலங்களில் புதிய நகர்கள் உருவாக்க வேண்டும் எனில் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி மற்றும் "டி.டி.பி.,' அனுமதி பெற் றால்தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்.

                 இந்த அனுமதி பெற புதிய நகர் களை உருவாக்குபவர்கள் அப்பகுதிக்கு அடிப்படை தேவைகளான 23 அடி அகல சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.மேலும், விளையாட்டுத் திடல், பூங்கா அமைக்கவும், பொது உபயோகத்திற்கு தனியாக இடம் ஒதுக்கி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப் போதுதான் அந்த பகுதிகளுக்கு தேவையான அடிப் படை வசதிகளை அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் செய்து தரும்.ஆனால் தற்போது தங்கள் பெயரில் உள்ள இடத்தை வேறு ஒருவருக்கு விற்க என்.ஒ.சி., சான்றிதழ் தேவையில்லை என்ற சட்ட விதி இருப்பதால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமலேயே நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உருவாக் கப்பட்டுள்ளன.

            இதில் மனைகளை வாங்கிய பலர் வீடுகளையும் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி நிர்வாகங்கள் உள் ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர் என அறிவித்துள்ளனர். இது தொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. அதில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அந்த இடங்களில் கட்டடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்காது. அந்த பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படமாட்டாது. மேலும், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1071 ன் படியும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாத மனைகளை வாங்கியவர்களும், அதில் வீடு கட்டி வசித்து வருபவர்கள் நகராட்சி நிர்வாகங்களின் திடீர் அறிவிப்பை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

Read more »

திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் அரசு பள்ளியைதரம் உயர்த்த கோரிக்கை

விருத்தாசலம்: 

                 தீவளூர் அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி முதல்வருக்கு விடுத் துள்ள கோரிக்கை மனு:

                 திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் கிராம அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி கடந்த 24 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த கிராமத்தில் உள்ள மாணவ - மாணவிகள் தங்களின் மேல்நிலைக் கல்வியை தொடர பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 2010- 11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆதி திராவிடர் நலத்துறையின் மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் நான்கு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதில் தீவளூர் பள்ளியும் ஒன்றாகும். இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் மேல்நிலைக் கல்வியை சிரமத்துடனே பயின்று வருகின்றனர். எனவே இப்பள்ளியை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை

கடலூர்: 

            கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த மழையில் அதிக பட்சமாக காட்டுமைலூரில் 17 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

மழை அளவு விவரம் மி.மீ.,ல் வருமாறு:

காட்டுமைலூர் 17,  
வேப்பூர் 15, 
லக்கூர் 13, 
கடலூர்,தொழுதூர் 9, 
குப்பநத்தம் 8.6, 
மே.மாத்தூர், விருத்தாசலம் 8, 
லால்பேட்டையில் 5, 
கீழ்ச்செருவாயில் 2 மி.மீ., 

என மாவட்டம் முழுவதும் பரவலாக 94.60 மி.மீ., மழை பெய்தது.

Read more »

பூட்டிக் கிடந்த வட்டாரவள மைய அலுவலகம்

பண்ருட்டி: 

            பண்ருட்டி அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய அலுவலகம் நேற்று காலை 10.15 மணிவரை திறக்காமல் பூட்டிக் கிடந்தது. பண்ருட்டி பூங்குணம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை 10.15 மணி வரை திறக்கப்படாமல் பூட்டியிருந்தது. அதன் பிறகு வட்டார வள மைய பயிற்றுநர் கோமதி மையத்தை திறந்தார்.

இதனைத் தொடர்ந்து 10.30 மணிக்கு வந்த மேற்பார்வையாளர் தங்கசாமி கூறுகையில்,

                "காடாம்புலியூர் உண்டு உறைவிட பள்ளி ஆய்வுக் காக சென்று வந்ததால் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் வரமுடியவில்லை. அலுவலகம் திறப்பதற்கு நியமித்த பயிற்றுநர்கள் திறக்காதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

மேலவையில் பிரதிநிதித்துவம் அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

கடலூர்: 

                 தமிழக அரசின் சட்ட மேலவையில் அரசு அலுவலர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத்தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார்.

               கூட்டத்தில், தமிழகத் தில் அமையவுள்ள மேலவையில் 78 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப் பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 52 உறுப்பினர்களும், பட்டதாரி ஆசிரியர்களால் ஏழு பேரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 7 பேரும் நியமிக்க உள்ளனர். 12 உறுப்பினர்களை ஆளுனர் நியமிக்கவுள்ளார். இதில் அரசு அலுவலர்களுக்கு வாய்ப்புகள் ஏதுமில்லை. இப்பிரதிநிதித்துவ உரிமையை இழந்தவர்களாக அரசு அலுவலர்கள் உள்ளனர்.அரசு அலுவலர்களின் நிரந்தர பாதுகாவலராக விளங்கும் முதல்வர் மேலவையில் பிரதிநிதித்துவம் வழங்க கேட்டுக் கொள்கிறோம் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர் முத்தழகன் முன்னிலை வகித்தார்.தமிழ் இலக்கியங்களில் நாட்டு நலப்பணித் திட்ட கூறுகள் என்ற தலைப்பில் நடந்த வாய்மொழித் தேர்வில் ஆய்வாளர் சண்முகம் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வேட்டினை சமர்ப்பித்தார். தேர்வாளராக சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் ராஜபாண்டியன், நெறியாளர் தங்கதுரை மற்றும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

               ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் திட்ட இயக்குநரின் அநாகரிகமான பேச்சினால் மனமுடைந்த சாலை ஆய்வாளர் சித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலை கண் டித்து கடலூர் பீச்ரோட் டில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட  துணைத் தலைவர் துரை, செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன் காசிநாதன் உள்பட  பலர் பங் கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்: துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம்

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. விருத்தாசலம் நகரத்தில் பிரதான சாலையாக ஜங்ஷன் ரோடு, கடைவீதி இருப்பதால் இந்த இரண்டு சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். 

                  இப்பகுதியில் உள்ள கடைகள், டீ கடைகள், ஒயின் ஷாப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் சாக்கடை கால்வாயில் போடுகின்றனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. நேற்று காலை கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர்  சாலையில் வழிந்து ஆறுபோல் ஓடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடன் நகராட்சி ஊழியர்கள் கால்வாயிலிருந்த அடைப்பை எடுத்து சரிசெய்தனர்.

Read more »

புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் தொற்றுநோய் அபாயம்

புவனகிரி:

                  புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.புவனகிரி தில்லை நகர் 10 ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட  அனைத்து அடிப்படை  வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்நகரில்  அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நரின் தென் பகுதி பூங்கா இடத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் மூலம் வரும் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.

Read more »

படுமோசமான நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம்

சிதம்பரம்: 

              சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் சிதம்பரம் பஸ் நிலையம் குண்டும், குழியுமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

                 புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு  ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். பல்லாயிரக் கணக்கில் பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அந்த தரத் திற்கேற்ப எந்த அடிப்படை வசதியோ, சுகாதார வசதியோ இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் பயணிகள் சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத நிலையில் அதிகம் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் ஓடுவதால் ஈ. கொசுத் தொல்லை.  பயணிகளை அச்சுறுத்தும் பழைய கட்டடங்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் பயணிகள் முகம் சுளித்தும், மூக்கை பிடித்துக் கொண்டும் செல்ல வேண்டிய நிலை. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாகவும் மாறி விடுகிறது. பஸ் நிலையத்தில் உயர் கோபுர விளக்கு போடப்பட்டது. ஆனால் முழுமையாக எரியாமல் ஒப்புக்கென கண் சிமிட்டுகிறதே தவிர வெளிச்சம் தரவில்லை.

                 முக்கியமாக பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதி மற்றும் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கம் செல்லும் பஸ்கள் செல்லும் பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்தும் குண்டும், குழியுமாக சாலை மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்து விட்டால் குளமாக மாறி விடுகிறது. இதனால் பஸ் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் 90 லட்சம் ரூபாய் செலவில் பஸ் நிலையத்தில் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுமையாக பஸ் நிலையம் புதுப்பிக்கப்படாத நிலையே உள்ளது. சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்கள் சிறப்பாக இருக்கும் நிலையில் சுற்றுலா தலமாக சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் இப்படியா என பொதுமக்கள் முகம் சுளிக்கின்ற நிலைதான் உள்ளது.

Read more »

பள்ளியில் அரசு விழா: மாணவர்களின் படிப்பு பாதிப்பு

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் பகுதிகளில் அரசு விழா என்றால் பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

                அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் அபூர்வம் தலைமை தாங்கினார். பலராமன், சங்கர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பன்னீர்செல் வம் வரவேற்றார்.   டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல். ஏ., சபாராஜேந்திரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். சமூக  நல பாதுகாப்பு தாசில்தார் மங்களம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் உட்பட பலதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டா 14 பேருக்கு உதவித்தொகை ஆறு பேருக்கு பட்டா மாற்றம் உத்தரவுகள் வழங்கப்பட்டது.

இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் திறந்து வைத்து பேசுகையில், 

                   "அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் வருவாய் துறையினருக்கு ஓய்வே இல்லை. குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது. மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். உங்களுக்காக பணியாற்றவே நாங்கள் இருக்கிறோம்' என கூறினார். அரசு சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம், மனுநீதிநாள், மக்கள் குறைகேட்பு என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அப்பகுதிகளில் உள்ள பள்ளியிலேயே அதுவும் வேலை நாட்களில் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே மைக் செட்கட்டப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படுவதுடன் அன்று முழுவதும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

Read more »

அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர் தாக்கு: 5 பேர் மீது வழக்கு

கடலூர்: 

                 ஊராட்சி தலைவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரங்கி. இவர் ஊராட்சி தேர்தலில் அருள்நாதனை எதிர்த்து நின்று தோற்றவர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரங் கிக்கு சொந்தமான டிப்பர் லாரி (டி.என் 31 1976) கன்னிமாநகர் செம்மண் குவாரி அருகே நடந்து சென்ற அருள்நாதன் மீது மோதுவது போல் வந்தது. இதனையடுத்து அருள்நாதன் லாரி நிறுத்தி டிரைவரை திட்டினார்.

                    இதில் ஆத்திரமடைந்த அருகில் இருந்த ஆரங்கி, பழனிவேல் மற்றும் சிலர் அருள்நாதனை, திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஆரங்கி, பழனிவேல் மற்றும் அருள்நாதன், கிளார்க் சக்கிவேல், தட்சணா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் வக்கீல் அருள்நாதனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கடலூரில் வக்கீல்கள் நேற்று (29ம் தேதி) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Read more »

உண்டு உறைவிடப் பள்ளி முறைகேடு புகார் எதிரொலி சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

பண்ருட்டி: 
 
                    காடாம்புலியூர் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் கலெக்டரின் உத்தரவின் பேரில் வடலூர் சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. கடலூரைச் சேர்ந்த சன் பிளவர் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வந்த இந்த பள்ளியில் 50 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 10 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியை நிர்வகித்து வந்த ஒருங்கிணைப் பாளர் தனசு பல்வேறு முறைகேடு செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தை வடலூர் சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்கத் தின் தலைவரான கலெக் டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.

               அதன்பேரில் கடந்த 25ம் தேதி அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட அலுவலர் மணவாளராமானுஜம் பள்ளிக்குச் சென்ற போது எவ்வித அனுமதியின்றி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் காடாம்புலியூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளி நிர்வாகத்தை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கசாமி பொறுப் பேற்றார். 

                    பின்னர் அந்தப் பள்ளி நேற்று வடலூர் சுத்த சன் மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், சந்திரசேகரன், நாராயணசாமி ஆகியோர் அலுவலகத்தில் பொருட்களை கணக்கெடுத்தனர். பள்ளி நிர்வாகத்தில் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவாரத்தில் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதம்

கிள்ளை: 
    
                  சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவார அடைப்பால் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதமானது. சிதம்பரம் அருகே முடசல்ஓடை பகுதி முகத்துவாரம் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கக் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

                 இந்நிலையில் நேற்று கடலில் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு கடலுக்கும் ஆற்றுக்கும் உள்ள முகத்துவாரத்தில் கரை தட்டி நின்றது. இதனால் மற்ற படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றது. பின்னர் அனைவரும் கடலுக்குள் செல்ல முடியாமல் தங்கள் பகுதிக்கு திரும்பி வந்தனர். இதில் முதலில் சென்று கரை தட்டிய முடசல் ஓடையைச் சேர்ந்த ராஜசேகர் (55) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உடைந்து சேதமடைந்தது. இப்பகுதியில் மீனவர்கள் பாதிக்காமல் இருக்க விரைவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விருத்தாசலம் அருகேதிடீர் சாலை மறியல்

விருத்தாசலம்: 

              விருத்தாசலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைக்கு மண் அணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒருசிலரின் வீடுகளுக்கு முன் இருந்த மண்ணை வெட்டும் போது, எங்கள் வீட்டு மண்ணை வெட்டக்கூடாது என வீட்டின் உரிமையாளர்கள் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விருத்தாசலம் - கம்மாபுரம் சாலையில் நேற்று காலை 10.40 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் பிரமுகர்கள் சமாதானம் செய்ததை அடுத்து ஐந்து நிமிடத்தில் மறியலை கைவிட்டு கலைந்து சென்று  பணியை தொடர்ந்தனர்.

Read more »

சுற்றுலா வந்தவரிடம் நகை அபேஸ்

சிதம்பரம்: 

                    சிதம்பரம் சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்தவரிடம் நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுருதி மற்றும் குழந்தைகளுடன் சிதம்பரம் சுற்றுலா வந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று காரை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்தனர். திரும்பி வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த மூன்று சவரன் செயின், 10 ஆயிரம் ரூபாய் பணம், வாட்ச் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பண்ருட்டி: 

                  பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பண்ருட்டி அடுத்த நத்தத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் மகேஸ்வரி (22). இவர் ஒறையூரைச் சேர்ந்த கிருஷ்ணனுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் மகேஸ்வரியிடம் கிருஷ்ணன் வரதட்சணை கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மகேஸ்வரி விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து கண்ணன் புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் இறப்பிற்கு  கிருஷ்ணன், சரவணன், மகாராணி ஆகியோர் காரணம் என தெரிவித்தார். அதன் பேரில் புதுப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.எஸ்.பி., பிரசன்னகுமாரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

முதியவரின் கவனத்தை சிதறடித்துரூ.2 லட்சம் திருட்டு: மூவருக்கு வலை

கடலூர்: 

                 முதியவரின் கவனத்தை சிதறடித்து 2 லட் சம் ரூபாயை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவர் நேற்று முன்தினம் மதியம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள இந்தியன் பாங்கிற்கு சென்று தனது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் எடுத்தார். அதனை பையில் போட்டு தனது மொபட் டில் மாட்டிவிட்டு புறப்பட தயாரானார். அப்போது அங்கு நின்றிருந்த மூன்று பேர், பணம் கீழே கிடப்பதாக கூறினர். உடன் முத்துக்கருப்பன் கீழே கிடந்த பணத்தை எடுக்க முயன்றார்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 3 பேரும் முத்துக்கருப்பன் மொபட்டில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior