உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

DRO begins probe into death of students

CUDDALORE: 

              District Revenue Officer S.Natarajan on Thursday began an inquiry into the circumstances/causes that led to the death of four engineering students of Annamalai University, Chidambaram, recently.

         In the inquiry session held at the office of the Revenue Divisional Officer at Chidambaram near here, about 50 persons, including security guards of the university, teaching and non-teaching staff, general public, representatives of a political party and autorickshaw drivers, deposed before the Enquiry Officer. Before starting the procedures, the DRO told The Hindu that after questioning those who had volunteered to share the information, he would subsequently get the versions from the police, doctors of Rajah Muthiah Medical College Hospital, Government Hospital doctors who conducted the post-mortem and the university authorities. He would then contact Superintendent of Police (Cuddalore) Ashwin Kotnis, Deputy Inspector General of Police (Villupuram Range) E.Ma.Masanamuthu and vice-chancellor M.Ramanathan to record their statements. Mr. Natarajan hoped to complete the probe and submit a report to the government by month-end. The inquiry got off with the quizzing of security guards posted at the vice-chancellor's residence on the university campus.

               The guards told the Enquiry Officer that after the death of Gautam Kumar, a second-year engineering student, in a road accident on February 28 on S.P.Koil Street in Chidambaram, agitating students gathered in strength in front of the vice-chancellor's resident around midnight and turned vociferous to meet him. They were asked to come in the morning and instead of going to their rooms (rented outside the campus) they trooped towards Rajah Muthiah Medical College Hospital and went on the rampage. When the police arrived, they scattered in various directions and scurried for cover. Of those who got into the Palaman canal to escape, Sumit Kumar, Ranjan Kumar and Mohammad Sarfraz Rab were said to have drowned. The bodies of the last two were fished out on March 2. All the deceased students were studying second year engineering courses; while two of them were from Bihar other two were from Jharkhand.

Read more »

Work on new office for EO at Thiruvahindrapuram temple begins



Work apace to construct the office of the Executive Officer, HR&CE at Thiruvahindrapuram near Cuddalore. 

CUDDALORE: 

          The work on construction of a new office for the Executive Officer of the Hindu Religious and Charitable Endowment at the Thiruvahindrapuram Sri Devanatha Swamy Temple has begun. At present, the office is situated on the Gedilam side of the temple, hidden from the public view.Opposite the main entrance

          The new structure, to be built at a cost of Rs. 25 lakh, will be opposite the main entrance to the temple.However, a lot of earth works have to be done for its construction, because at the foothills of the Aushada hillocks, on which the Hayagrivar Temple has been situated, a rocky portion is jutting out into the approach road. Since the road is too narrow at this point, there are traffic problems whenever temple functions and other rituals are held. Therefore, the HR & CE Department has decided to chip off the protruding section of the hillocks to widen the road and construct the office. A boclain has been deployed to remove boulders and soil before and after temple hours.

Read more »

பராமரிப்பில்லாத பழம்பெரும் கோயில்: பக்தர்கள் வேதனை



                 இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் சரியாக பராமரிக்கப்படாததால் பக்தர்களும், பொது மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் புகழ் பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் 7-ம் நூற்றாண்டில் பல்லவர் கால ஆட்சி காலத்தில் கோயிலின் விமானத்தின் நிழல் தரையில் விழாதபடி எண்கணித சாஸ்திரபடி கட்டியுள்ளனர்.இது ராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு முற்பட்டதும், முதல்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறும், அட்ட வீரட்டத்தில் சிறப்புடையதும், தேவாரம் முதல்முதலில் பாடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது.இத்தகைய சிறப்புகளை கொண்ட திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் இன்று நிர்வாக சீர்கேடுகளால் சீரழிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து விசாரித்ததில் பக்தர்களும், பொது மக்களும் கூறியது: இக்கோயிலில் விளக்கேற்றவும், அமுது படைக்கவும் பல தர்மசீலர்களால் வழங்கப்பட்ட சுமார் 150 ஏக்கர் நிலம் இருந்தும் பயனற்றதாய் உள்ளது. கட்டளைதாரர்கள் பூஜைக்காக வழங்கும் நிதியிலும் முறைகேடு நடப்பதாகவும், இதனால்  ஆலயத்தில் நடைபெற வேண்டிய 6 கால பூஜைகளில் தற்போது 3 கால பூஜைகள் மட்டுமே நடக்கிறது. ஆச்சாரத்துடன் கடவுளுக்கு அமுது படைக்க தயாரிக்கப்படும் உணவை தயாரிக்கக் கூட சுயம்பாகம் ஐயர் இல்லை.÷முதன்முதலில் தேவாரம் பாடப்பட்ட சிறப்புடைய இத்தலத்தில் ஓதுவார் இல்லாததால் கடந்த 16 வருடங்களுக்கு மேலாக தேவாரம் பாடப்படவில்லை. கோயில் சிப்பந்திப் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதால் கோயிலின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு உடைய இத்தலத்தில் உள்ள தேர் சிதலம் அடைந்து கிடக்கிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருப்பணி குழு அமைக்காததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திருப்பணிகள் இன்று வரை நிறைவு பெறவில்லை. இதனால் வேலை முடிவு பெற்ற ராஜ கோபுரத்தில் மீண்டும் ஆலம் மற்றும் அரச மரங்கள் தழைத்து வளர்ந்து கோபுரத்தை சேதப்படுத்தி வருகின்றன .எனவே திருப்பணிக் குழுவை அமைத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், கோயில் நிலங்களை ஆலய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முறைப்படி சிவனுக்கு 6 கால பூஜை நடத்த இந்து சமய அறநிலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.

Read more »

சூரியகாந்தி அறுவடை - செய்ய வேண்டியவை


சூரியகாந்தி அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில் நுட்பங்கள் 
 
               .கடலூர் மாவட்டத்தில் மங்களூர், தொழுதூர், ஆவட்டி, வேப்பூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தற்போது சூரியகாந்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.எண்ணெய் வித்துப் பயிரான சூரியகாந்தியில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல லாபமான விலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:சூரியகாந்தி பயிரின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறியும், பூக்கொண்டைகள் பழுப்பு நிறமாக மாறியும் இருந்தால் பயிரை அறுவடை செய்யலாம். விதைகளை சோதித்துப் பார்த்தால் மேல்புறம் கருமையானதாகவும், உட்புறம் வெள்ளை நிறமாகவும், கடினமானதாகவும் இருக்கும். சூரியகாந்தி பூத்தலையை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். பூத்தலையை ஒரே சீராகப் பரப்பி களத்தில் காயவைத்து 3 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பிவிட வேண்டும்.பூத்தலைகளை அறுவடை செய்தவுடன் வெய்யலில் பரப்பி காயவைக்க வேண்டும்.பூத்தலைகளை குவித்து சேமித்தால் விதைகளை பூஞ்சாணம் தாக்கி மணிகளின் தரம் பாதிக்கப்படும். காய்ந்த பூக்களிலிருந்து விதைகளைப் பிரித்து எடுக்க கதிர் அடிக்கும் இயந்திரம் அல்லது தடிகள் கொண்டு அடித்து பிரிக்க வேண்டும்.பிரித்து எடுத்த விதைகளை காற்றில் தூற்றிவிட்டு அயல் பொருள்களான கல், மண், தூசு, பூக்களின் சருகுகள் மற்றும் இலைகள் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். நல்ல விதையுடன் கலந்துள்ள சுருங்கிய முதிராத விதைகளையும், கெட்டுப் போன விதைகளையும், பூச்சி, நோய் தாக்கிய விதைகளையும் தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more »

மஞ்சள் அறுவடை - சில நுணுக்கங்கள்



மஞ்சள் 9-10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிராகும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழுவதன் மூலம் பயிரின் முதிர்ச்சியை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் பயிரின் தண்டை 10 நாள்களுக்கு முன்பாக தரையின் மேல் மட்டத்தில் 10 செ.மீ. விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில் முதிர்ச்சி அடையும். மஞ்சள் கொத்து என்ற கருவியை பயன்படுத்தி மஞ்சளை கொத்தி எடுக்க வேண்டும்.பதப்படுத்துதல்மஞ்சளை பதப்படுத்துதல் முக்கிய நேர்த்தியாகும். ஈர மஞ்சளிலிருந்து ஐந்தில் ஒரு பகுதி பதப்படுத்திய மஞ்சள் கிடைக்கும். பச்சையான மஞ்சளை சுத்தமான நீரில் வேக வைக்க வேண்டும். மஞ்சள் வெந்துவிட்டது என்பதை வேகும் வாசனை வருவதைக் கொண்டு அறியலாம். அப்போது வேக வைப்பதை நிறுத்துவிட்டு விரல் கொண்டு மஞ்சளை அழுத்தி வெந்து விட்டதா என்பதை கண்டறியலாம். அதிகமாகவும் மஞ்சளை வேக வைக்கக்கூடாது. நிறம் மங்கி விடும். மஞ்சளை சரியாக வேக வைக்காவிட்டால் காயவைக்கும்போது மஞ்சள் உடைந்து சிறு சிறு துண்டுகள் ஆகிவிடும்.வேக வைத்த மஞ்சளை வெய்யிலில் 7 செ.மீ. உயரத்துக்கு பரப்பி 15 நாள்கள் வரை காயவைக்க வேண்டும். காய வைக்கப்பட்ட மஞ்சளில் சிறு சிறு வேர்களும், செதில்களும் கலந்து இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டும். மஞ்சளுக்கு மெருகேற்றுவது மிகவும் அவசியம். மெருகேற்றும் கருவியைக் கொண்டோ, கூடைகளைக் கொண்டோ மஞ்சளை மெருகேற்ற வேண்டும். மஞ்சளுக்கு நிறமேற்றுவதும் மிகவும் அவசியம். 100 கிலோ மஞ்சளை மெருகேற்ற படிகாரம் 40 கிராம், மஞ்சள்தூள் 2 கிலோ, ஆமணுக்கு எண்ணெய் 140 கிராம், சோடியம்-பை-சல்பேட் 30 கிராம், ஹைட்ரோ குளோரிக் அமிலம் 30 மி.லி. சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலைக் கொண்டு நிறம் ஏற்றலாம். மஞ்சள் பொடியுடன் ஆல்கஹால் சேர்த்து கரைசல் தயாரித்து மஞ்சளுக்கு நிறம் ஏற்றலாம். மஞ்சளை தரம் பிரித்து விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Read more »

அண்ணா நூலகத்துக்கு 10 ஆயிரம் புத்தகங்கள்


நெய்வேலி:

               சென்னையில் அமையவுள்ள அறிஞர் அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு,​​ மாணவர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அமைய உள்ள அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ அதன்படி வள்ளலார் குருகுலப் பள்ளியில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களிடம் இருந்து புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.​ மேலும் ஓபிஆர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள்,​​ பள்ளி ஆசிரியர்கள்,​​ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.செல்வராஜ் ஈடுபட்டுள்ளார். அதன்படி திங்கள்கிழமை வள்ளலார் குருகுலப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார் ஆர்.செல்வராஜ்.​ நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.​ சிறந்த புத்தகங்களை வழங்க ஆர்முள்ளவர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி புத்தகங்களை வழங்கலாம் என செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1.95 லட்சம் குடிசைகள்

கடலூர்:
 
                கடலூர் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.95 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். முதல்வர் கலைஞரின் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி 23-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.​ இதன் முதல் கட்டப் பயிற்சி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.
 
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கூறியது:
 
               குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் 6 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.​ கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன.​ அவற்றில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.95 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன.​ 270 கிராமங்களில் தலா 200-க்கும் மேற்பட்ட குடிசைகளும்,​​ 334 கிராமங்களில் தலா 500 குடிசைகளும்,​​ 73 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளும்,​​ 4 கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடிசைகளும் உள்ளன. குடிசை வீடு​களைக் கணக்​கெ​டுக்க பதிவு பெற்ற அலு​வலர்​கள் மூவர் அடங்​கிய 27 குழுக்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளது.​ இவர்​கள் தவிர கிராமங்கள் தோறும் ஊராட்சி எழுத்தர்,​​ கிராம நிர்வாக அலுவலர்,​​ மக்கள் நலப் பணியாளர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் இக் குழுவில் இடம்பெறுவர்.​ இவர்களுக்கு முதல் கட்டப் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு 100 சதவீதம் வெளிப்படையானதாக இருக்கும்.​ அனைத்து குடிசைகளும் கணக்கெடுப்புக்கு உள்படுத்தப்படும்.​ கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்படும் என்றார் ஆட்சியர்

Read more »

காவலர் நல வாரியம் அமைக்க கோரிக்கை


கடலூர்:

           காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.​ 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​

                  காவல்துறையின் ஒட்டுமொத்த நலன்கருதி,​​ ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள காவலர் நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும்.​ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு ஈட்டுத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.​ ​ ​ காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் 80 வயதைத் தாண்டிய 5 பேர்,​​ கூட்டத்தில் கெüரவிக்கப்பட்டனர்.​ நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.​ செயலாளர் பி.வடிவேல்,​​ பொருளாளர் கே.மணி,​​ ​ லோகையன்,​​ ஆர்.காசிநாதன்,​​ பி.பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

முதல்வருக்கு மாநில ஆசிரியர் மன்றம் கோரிக்கை


சிதம்பரம்:

                  6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு அறிக்கையை பெற்று,​​ 19-ம் தேதி பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம்,​​ மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரம் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:​ 
                   
                       6-வது ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு 3 மாத கால அவகாசம் வருகிற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பட்ஜெட்டுக்கு முன்பே அந்த அறிக்கையை கேட்டு பெற்று முதல்வர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஆசிரியர் சமுதாயம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.​ 1988 முதல் 2006 வரை மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கி வந்தவர் தற்போதைய முதல்வர் கருணாநிதி. தற்போது முரண்பாடு காரணமாக அந்த நிலை தொடரமுடியாத நிலையில் உள்ளது.​ மத்திய அரசு ஆசிரியர்களுக்கான நிகரான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பாக வெளியிட வேண்டும். கல்வியை அடிப்படை வசதியாக கருதி 1-4-2010 முதல் இலவச கட்டாயக் கல்வியையும்,​​ 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உருவாக்கப்படுவர் என்ற அறிவிப்பை வெளியிட்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலுக்கும்,​​ மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

                   தமிழகத்தை பொருத்தவரையில் இலவச கல்வி ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.​ இதன் மூலம் 99 சதவீத மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடி அரசாக செயல்படுகிறது.​ தமிழக சட்டமன்ற திறப்பு விழாவில் கல்வித் துறையில் தமிழக அரசு ரோல்மாடலாக செயல்படுகிறது என பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் 72 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்.​ இலவச கட்டாயக் கல்வி தனியார் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும்.​  தற்போது தேசிய கல்வி ஆணையம் மூலம் மத்திய அரசு கல்வித் துறையை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதை கைவிட வேண்டும்.÷கல்வியை மாநில பட்டியலில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.​ அப்படி ஒப்படைத்தால்தான் தமிழக அரசின் தனி இடஒதுக்கீடு மூலம் கிராம மாணவர்கள் முன்னேற பல்வேறு வாய்ப்புகள் ஏற்படும். தமிழகஅரசு நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ளது.​ இந்நிலையில் மத்திய அரசு நுழைவுத் தேர்வு நடத்துவது ஏற்புடையது அல்ல.​ இதனால் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ள தமிழகத்தில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தம் பாதிக்கப்படும் என க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

Read more »

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்: அரசுக்கு ரூ.80 லட்சம் வருவாய் இழப்பு

கடலூர்: 

                 கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                   இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 டாஸ்மாக் கடைகளில் 130க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக தினசரி வசூலில் 80 லட்சம் ரூபாய் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடலூர் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டிருந்ததால், குடிபிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.

Read more »

பல்கலை., மாணவர்கள் இறந்தது குறித்து 48 பேரிடம் அதிகாரி விசாரணை


சிதம்பரம்: 

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்  இறந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., நடராஜன் 48 பேரிடம் விசாரணை செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் படித்து வந்த  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  கவுதம்குமார் பிப்ரவரி 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். இதனால் வெளிமாநில மாணவர்கள், பல்கலைகழகத்தில் ரகளையில் ஈடுபட்டனர். 

              போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விரட்டியடித்தபோது  தப்பியோடிய மாணவர்கள், சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன்குமார் மூவரும் பாலமான் வாய்க்காலில் குதித்து தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு விசாரணை அதிகாரியாக டி.ஆர்.ஓ., நடராஜனை நியமித்தது. இவர்  கடந்த 5ம் தேதி முதற்கட்ட விசாரணையை துவக்கினார்.  இரண்டாம் கட்ட விசாரணை 10ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                பின்னர்  இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் 18ம் தேதி நடக்கும் பொது விசாரணையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நேரில் ஆஜராகி  கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் பொது விசாரணையை மேற்கொண்டார். அதில் பல்கலைக்கழக ஊழியர்கள் 10 பேர், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 12 பேர், பேராசிரியர்கள் 13 பேர், மா.கம்யூ., பிரமுகர்கள் 3 பேர், இந்திய கம்யூ., பிரமுகர்கள் 5 பேர், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒருவர், எஸ்.சி.,-எஸ்.டி., ஆசிரியர் சங்கத்தினர் 4 பேர் உட்பட 48 பேரிடம் விசாரணை நடத்தினார். அடுத்த விசாரணை வரும் 24ம் தேதி நடக்கிறது.

Read more »

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

சிதம்பரம்: 

               அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட் டம் சேர்மன் கீதா  தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன்,  துணைத் தலைவர் முன் னிலை வகித்தனர்.

                 கூட்டத்தில், பேரூராட்சி பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு, பூங்கா, பொது கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடைகள், பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளக்குளத்தில் நவீன கழிப்பிடத்திற்கு புதிய மின்மோட்டார் மற்றும் கொத்தன்குடிதோப்பில் நவீன கழிப்பிடத்திற்கு புதிய  ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் வாங்க முடிவு செய்யப்பட்டது. 

Read more »

அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் துவக்கம்

கடலூர்: 

              கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆறு பிரிவு களாக நடக்கிறது. 15 நாள் கொண்ட முதல் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இரண்டாவது பயிற்சி முகாம் ஏப்ரல் 1ம் தேதியும், மூன்றாம் முகாம் 16ம் தேதியும், நான்காம் முகாம் மே மாதம் 1ம் தேதியும், ஐந்தாவது முகாம் மே மாதம் 16ம் தேதியும், 6 வது முகாம் ஜூன் 1ம் தேதியும் நடக்கிறது.

                     பயிற்சி கட்டணம் 250 ரூபாய். பயிற்சிகள் காலை 7 முதல் 8 மணி வரையும், 8 முதல் 9 மணி வரையும், 9 முதல் 10 மணி வரையும், மாலை 3 முதல் 4 மணி வரையும், 4 முதல் 5 மணி வரையும், 5 முதல் 6 மணி வரையும் நடக்கிறது. பயிற்சியாளர் அருணா நீச்சல் பயிற்சி அளிக்கிறார்.மேலும் காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரை பொது மக்கள் ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்தி குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Read more »

திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணி: டி.எஸ்.பி., இளங்கோ துவக்கி வைத்தார்

திட்டக்குடி: 

              திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணியினை டி.எஸ்.பி., இளங்கோ நேற்று துவக்கி வைத்தார். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேடு, திருக் குளத்திற்குள் கழிவுநீர் விடுவதால் சுகாதாரம் மற்றும் புனிதத்தன்மை சீர்கேட்டினை கண்டித்து கடந்த மாதம் 24ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனர்.

                    இது குறித்து அமைதிக்குழு கூட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்குள் வடிகால் அமைத்து தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான திருக்குளத்தினை தூர்வாரக் கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து கோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. இது குறித்து நேற்று முன் தினம் தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ, ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

                           இதில் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே திருக்குளத்தினை தூர்வாரிட முன் வந்தனர். இதனையேற்ற அதிகாரிகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திருக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது. குளக்கரையில் சிறப்பு பூஜை செய்து, டி.எஸ்.பி., இளங்கோ திருக் குளத்தில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்து, பணியினை விரைந்து முடிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Read more »

விருது பெற்ற சாரண மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா

ராமநத்தம்: 

                  சாரணர் விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தொழுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சரவணன், தென்னரசு, மணிவாசன் உள்ளிட்டோர்  சாரணர் இயக்கத் தில் உள்ளனர். இவர்கள் நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட அளவில் நடந்த ராஜ்ய புரஷ்கர் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கடந்த 23ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில்  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கி னார்.

                     விழாவில் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள் சாமி, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். சாரண விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. ரெட் ரிப்பன் கிளப் சிவராஜன், ஆசிரியர் மாயவன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தென்றல்குமாரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் இளங்கோவன், விருது பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

Read more »

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடலூர்: 

                கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து  முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

               இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் கடலூர் தாசில்தார் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஜெய் சங்கர், முருகன், நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டிலிருந்து கடலூர் முதுநகர் வரையுள்ள  நெடுஞ்சாலையின் இருபுறமும்  இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

Read more »

நிர்வாகிகள் தேர்வு

பண்ருட்டி: 

             பண்ருட்டி வட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பண்ருட்டி வட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் தேவநாதன், மாநில பொதுகுழு உறுப்பினர் அழகுசெல்வம் முன்னிலையில் தேர்தல் நடந்தது. கூட்டத்தில் வட்ட தலைவராக வடிவேலு, செயலாளராக பாண்டுரங்கன், பொருளாளராக திருப்பதி வெங்கடாஜலம், துணை தலைவராக பாலமுருகன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக சுப்ரமணியன், சந்திரபாபு, சுப்ரமணியன், நந்தகோபாலன், சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

ஆண்டு விழா

கடலூர்:

                 கடலூர் பாதிரிக்குப்பம் அருணா மழலையர் தொடக்கப் பள்ளியில்  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு  அரிசிபெரியாங்குப்பம்  ஊராட்சி மன்றத் தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். வில்வமணி முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக  கடலூர் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் தியாகராஜன், உலக தமிழ் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் சீத்தா பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளின்  கலை  நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தாளாளர் லட்சுமி, தொல் காப்பியன், பள்ளி முதல்வர் வசந்தி, ராஜகுமாரி  உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                    பி.எஸ்.என்.எல்.,  பாட்டாளி ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல்., பங்கு விற்பனை, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஊழியர்கள் வெளியேற்றும் பிட்ரோடாவின் அறிக்கையை எதிர்த்தும், மத்திய அரசின் தனியார் மய கொள்கை பற்றியும் விளக்க கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்  நடந்தது. மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், தாண்டவராயன் பங்கேற்றனர்.

Read more »

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி கடலூர் கல்லூரி மாணவர்கள் 'ஸ்டிரைக்'


கடலூர்: 

                    கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரியின் கவுர விரிவுரையாளர்கள் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

                        கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பல மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படாமல் இருந்து வருகிறது. இதனைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து வெளியே சென்றனர். 

உண்ணாவிரதம்:  

                  கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்  9 பேர் கடந்த 7 நாட்களாக பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் கலைக்கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று 8 வது நாளாக கடலூர் கிளைத் தலைவர் நடேசன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் 9 பேரும் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினர்.

Read more »

செருப்பு கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு

சிதம்பரம்:

                செருப்பு கடையில் 20 ஆயிரம் ரூபாய் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்தவர் அகமதுல்லா. மேலவீதியில் செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தபோது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே கார் மோதி சிறுவன் பலி

குறிஞ்சிப்பாடி:

              குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதி ஐந்து வயது சிறுவன் இறந்தான். குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் காலனியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் அகிலன் (5). இவர் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி பைபாஸ் சாலையில் சிங்கபூரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே சாலையில் நடந்து வந்த போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அம்பாசிடர் கார் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான். சிறுவனை மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை மோதிய காரை தேடி வருகின்றனர்.

Read more »

தொழில் போட்டி காரணமாக வக்கீல்கள் மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; 5 பேர் மீது வழக்குப் பதிவு

கடலூர்: 

             விபத்து வழக்கு தொடர்பாக கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் இரு வக்கீல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூரை சேர்ந்த வக்கீல்கள் ஜெய்சங்கர்(45), சந்திரசேகரன் ஆகிய இருவருக்கும் இடையே விபத்து வழக்குகளை நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் விபத்தில் இறந்த மதியழகன் வழக்கை நடத்துவதில் போட்டி ஏற்பட்டது. கடலூர் செஷன்ஸ் கோர்ட் நுழைவு வாயில் அருகே நேற்று காலை 11.30 மணியளவில் வக்கீல் கள் ஜெய்சங்கர், சந்திரசேகரனுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வக்கீல்கள் சந்திரசேகரன், கருணாகரன் ஆகியோர் ஜெய்சங்கரை தாக்கினர். ஜெய்சங்கர், சந்திரசேகரனை திருப்பி தாக்கினார்.

                       காயமடைந்த ஜெய் சங்கர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. கடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த வக்கீல் சந்திரசேகரின் காரை, வக்கீல்கள் முகுந்தன், சரவணன்,ஜெய்சங்கர் தாக்கியதில் 5,000 ரூபாய் மதிப்புள்ள  கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவங்கள் குறித்து வக்கீல்கள் ஜெய் சங்கர், சந்திரசேகரன் மற்றும் கார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, வக்கீல்கள் சந்திரசேகர், கருணாகரன் மற்றும் முகுந்தன், சரவணன், ஜெய்சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

பண்ருட்டி : 
 
         கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். பண்ருட்டி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்  வேல் விழியின் கணவர் சங்கர் தனது வார்டுகளில் எந்த பணியும் செய்யவில்லை என கூறி நேற்று முன்தினம் கமிஷனர் உமா மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத் தார்.  புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior