உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூரில் மழையில் ஒழுகிய அரசு பஸ் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு

கடலூர்:

                        மழையில் அரசு பஸ் ஒழுகியதால், அதில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலருக்கு, 2 ஆயிரம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30-11-2008 அன்று ராமமூர்த்தி, கடலூரில் இருந்து புதுவைக்கு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மழை பெய்தது.

                 பஸ்ஸின் ஷட்டர் மற்றும் கூரை சேதம் அடைந்து இருந்ததால், மழை நீரில் ராமமூர்த்தி நனைய நேரிட்டது. இதுபற்றி புகார் செய்தபோது நடத்துநர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ராமமூர்த்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், மனரீதியாகவும் பாதிக்கப் பட்டார்.÷எனவே இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக, நிர்வாக இயக்குநர் மற்றும் கடலூர் கிளை மேலாளருக்கு புகார் மனு அனுப்பியும், அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை. எனவே கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மூலமாக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமமூர்த்தி சார்பில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார். 

                 வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். அரசு போக்குவரத்துக் கழகமும், பஸ் நடத்துநரும் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளதால், அரசு பஸ்ஸில் சேவைக் குறைபாடு உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தின் பச 32 ச 2256 என்ற பதிவு எண் கொண்ட அந்த பஸ்சை , கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக அந்த பஸ்ûஸ சரிசெய்து, அனைத்து இருக்கைகளும் பயணம் செய்யத் தகுதியானவைகளாக மாற்ற வேண்டும். 

                        ராமமூர்த்திக்கு சேவைக் குறைபாட்டுக்காகவும் மன உளைச்சலுக்காகவும் நஷ்டஈடாக 1000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 1000, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Read more »

Spectroscopy has wide-ranging applications: experts


Vice-Chancellor of Annamalai University M.Ramanathan releasing the book on the proceedings of the international conference at Chidambaram on Wednesday. 
 
CUDDALORE: 

                Spectroscopy has wider applications in the spheres of medicine, industry, environment, agriculture, power and construction. This is further spurred by advances in instrumentation that has facilitated development of numerous infrared and Raman spectroscopic methods.
 
                These views were expressed by the experts, both foreign and domestic, who participated in the inauguration of the three-day international conference on “Recent frontiers in applied spectroscopy” organised by the Department of Physics, Annamalai University, at Chidambaram on Wednesday. In his keynote address James R.Durig of University of Missouri, US, said that the knowledge on spectroscopy dated back to early 18th Century. However, its scope was then much limited and did not extend beyond the regime of infrared radiation.

                Mr. Durig said that Sir C.V.Raman had made significant contributions to the field of spectroscopy. Though termed as “crude spectrometer” it was an impressive device that delineated the light scattering from sunlight and acted as a catalyst for further research. Hence, Mr. Durig said that the study of spectroscopy was “not a new field but only the name was new” as it had developed over a period of the past two centuries. Nowadays, spectroscopy had wide ranging applications, he added.

                    Vice-Chancellor of Annamalai University M.Ramanathan said that the university, established about eight decades ago, had been concentrating on research works and had won many national and international laurels. Dr. Ramanathan said that 40 per cent of Indian population was in the age group of 18 to 25 years but only 12 per cent of them were into higher education. Having realised this phenomenon the unitary university was encouraging research works in all its 50 departments.

                  Being a surgeon he knew fairly well the usefulness of spectroscopy in the field of medicine. The research in basic sciences would give an impetus to innovations in the methods of medical treatment. The Vice-Chancellor further said that the Department of Physics had an impressive record in research works to its credit. His focus was on interdisciplinary approach in deriving the maximum output to attain better results and to achieve the targets. A.N.Kannappan, Dean, Faculty of Science and chairman of the conference, and Pl.Rm.Palaniappan, Professor of Physics and convenor, spoke.

Read more »

கடலூரில் களை இழந்த பூங்காக்கள்


சிதைந்த செயற்கை நீருற்றுகள் - திருடுபோன வண்ண விளக்குகள் - காய்ந்த புல் தரைகள்.
 
கடலூர் :  

               கடலூரில் 5 ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், வண்ண விளக்குகள் ஆகியன பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன. ககன்தீப்சிங்பேடி,கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 2004, 2005-ம் ஆண்டுகளில், கடலூர் நகராட்சிப் பகுதியில் நகரை அழகுப்படுத்தும் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

                   பல்வேறு நிதிஉதவிகளைப் பெற்று, பிரதான சாலைகள் அனைத்திலும் சாலைப் பகுப்பான்கள் (டிவைடர்கள்) அமைக்கப்பட்டன. சாலை நடுவில் கம்பங்கள் நடப்பட்டு, மின் விளக்கு அமைக்கப் பட்டன.பிரதான சாலைகளின் ஓரங்களில் சிறிய பூங்காக்களும் அவற்றின் நடுவே, வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் உருவாக்கப்பட்டன. நமக்கு நாமே திட்டத்தில், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் அளித்த பல லட்சம் நிதி உதவிகளுடன், நகராட்சி நிதியையும் சேர்த்து, இந்த செயற்கை நீரூற்றுகள், நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.

               சாலைகளில் செல்வோர் பார்த்து மகிழும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுடன் கூடிய செயற்கை நீரூற்றுகளில், ஒன்றிரண்டைத் தவிர ஏனைய அனைத்தும், நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தன. மற்ற சில நகராட்சிகளைப் போல், கடலூரில், தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் வந்து விடவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக, இந்த சிறிய பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றாமலும், விளக்குகள், நீரூற்றுக்களைப் பராமரிக்காமலும், அவை பரிதாபமாகக் களையிழந்து காணப்படுகின்றன.

                 சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் சந்திக்கும் இடத்தில், வானவில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், கொத்தாகத் திருடு போய்விட்டன.இதேபோல் மற்ற பூங்காக்களிலும் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுகளுக்கான மோட்டார்கள் அனைத்தும், திருடு போய்விட்டன. குறைந்தபட்சம், இவை காணாமல் போய்விட்டன என்று, காவல் நிலையத்தில் புகார்கள் கூட, நகராட்சியால் அளிக்கப்படவில்லை என்பது, வேதனை தரும் விஷயம்.

             இதேபோல் சாலைகள் நடுவே அமைக்கப்பட்ட டிவைடர்களில், விலை உயர்ந்த பூஞ்செடிகள், கொரியன் புல் தளங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றுக்கு முறையாக தண்ணீர் ஊற்றாததாலும், மாடுகள் மேய்வதைக் கண்டும் காணாமல் விட்டதாலும், பட்டுப் போனதுடன், அவைகள் இப்போது காட்டுச் செடிகள் நிறைந்த புதர்களாய் காட்சி அளிக்கின்றன.அறிவிப்புப் பலகைகளும் சேதம் அடைந்து கிடக்கின்றன. ஒருமுறை இதுதொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நகராட்சி ஆணையரை மாவட்ட ஆட்சியர் கடுமையாகச் சாடினார்.

                 தொழிற்சாலைகளின் உதவியுடன், நகரை அழகுப்படுத்தும் திட்டத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.ஆனாலும் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஏற்கெனவே தொழிற்சாலைகள் வழங்கிய பல லட்சத்தால் உருவாக்கப்பட்ட பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி பாழாய்க் கிடக்கும் நிலையில், எந்த முகத்துடன் மீண்டும் தொழிற்சாலைகளை அணுகுவது என்ற நாணம், நகராட்சிக்கு ஏற்பட்டு இருக்கலாம்."எதற்கும் பணமில்லை என்று கைவிரிக்கும் நகராட்சி, புதிதாக எதையும் செய்து விட வேண்டாம். 

                         முந்தைய காலங்களில் உருவாக்கப்பட்டவைகளையாவது  பராமரித்துப் பாதுகாக்கும் எண்ணம் கூட, நகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இல்லாதது, எங்களின் துரதிருஷ்டமாகத்தான் இருக்கும்; என்று கடலூர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.இதற்கெல்லாம் நகராட்சியில் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. நகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றினாலே போதும். ஊதியம் பெற்று உழைப்போருக்கு, அந்தக் கடமை உணர்வுகூட இல்லாதபோது, ஆண்டுக்கு 5 கோடி வரி செலுத்துவதால் பயன் ஏதும் இல்லை என்கிறார்கள் கடலூர் பொதுமக்கள்.

Read more »

Two species of vegetations successfully restored at Silver Beach


CUDDALORE:

            The Centre for Advanced Study in Marine Biology of Annamalai University has successfully restored two species of vegetations on Silver Beach at Thevanampattinam here.

          Vice-Chancellor of Annamalai University M.Ramanathan has released handouts to create awareness among the coastal community about the importance of these vegetations. Director of the Centre T.Balasubramanian told The Hindu that the project, funded by the University Grants Commission and taken up in the post-tsunami period, had been successfully implemented on the beach.

               Earlier, the vegetations were found sparsely on sand dunes along the coast at Thevanampattinam. After the restoration efforts were undertaken, the area under the vegetation had increased and moreover there was a lush growth of these species. The species were named ipomea pescaprae (popularly known as “ adachan kodi” in Tamil) with leaves in the shape of horses' hoof and violet flowers, and spinifex littoreus (popularly known as Ravana's moustache) because of the spiny nature of its leaves.

Professor M.Srinivasan of the Faculty of Marine Sciences said that the coastal vegetation could be classified into three categories: 

                 those occurring close to the water front, those growing in the sandy places and the mangroves on the estuaries and backwaters. Mr. Srinivasan said that the propagation could be possible by plucking the portions of creepers and planting them in pits dug to the depth of half to one foot. The ideal season for the propagation was from October to December as rain water would nurture the vegetation. He further said that these vegetations served as binding agents to form sand dunes which in turn acted as shelter for the marine animals during breeding season. The sea turtles used to lay eggs in such sand dunes. Moreover, the sand dunes also acted a controlling factor for waves, or in other words they lessened the force of the oncoming waves.

             Mr. Srinivasan also said that these species had medicinal properties too: particularly the ipomea pescaprae could be used as a pain killer. The coastal community used to crush the leaves and apply the juice to relieve of body ache. The natural occurrence of these vegetations, however, had suffered a setback owing to the construction of roads, formation of groynes and converting the coast into a tourist destination.

Read more »

“Marine plants are rich sources for bio-fuel, pharmaceuticals”

CUDDALORE: 

              When the global warming is threatening the terrestrial eco-system, the marine plants are holding out the hope to humanity because these are the rich sources for pharmacology, food products and taxonomical studies.

            Above all, these plants also have the potential for bio-fuel production. Hence, the vision of the experts and the policy-makers is now directed towards the oceans to tap the potential of the marine and coastal plants. These are certain views expressed by the experts who participated in the national symposium on “Marine plants” jointly organised by the Centre of Advanced Study in Marine Biology of Annamalai University and the Seaweed Research and Utilization Association at Parangipettai near Chidambaram on Thursday.

                 Emeritus scientist M.Uma Maheswara Rao said that India had a 7,500-km long coastline with rich macro-algal diversity, numbering 936 species reported so far. Only about 9 per cent of this source was used and the remaining 91 per cent remained untapped.
Marine algae had been used as food and medicine for centuries. Chemical studies conducted on Indian species had shown that these algae were not only rich sources for minerals, trace elements and fibre but also produced a variety of unique substances such as sulphated polysaccharides, pigments, fats, proteins, amino acids, vitamins and antioxidants.
Mr. Rao said that many of these compounds had potential commercial applications and they could be utilised for the production of human food supplements or neutraceuticals, aquaculture feeds, cosmetics and food colourings.

                  According to R.Rengasamy, Director, Centre for Advanced Studies in Botany, University of Madras, seaweeds were the store house of fine chemicals which may have curative properties for tuberculosis, arthritis, colds and influenza, worm infection and even tumour. Seaweeds were known to concentrate several folds of nutrients in the ambient waters. Therefore, conversion of seaweeds into manure or liquid fertilizer for agricultural crops was an excellent means to get the nutrients back to the land, he said.

V.Krishnamurthy, Director of the Krishnamurthy Institute of Algology, Chennai, said that bio-fuel production from algae was possible by two means: 

                      methano-bacterium could be introduced into the seaweed slurry to obtain methane, and, lipid content of marine algae could be extracted to convert it into bio-diesel. Vice-Chancellor of Annamalai University M.Ramanathan said that the Centre of Advanced Study in Marine Biology had been made a full-fledged faculty because it was offering a comprehensive study on basic sciences such as botany, zoology, biology and pharmacology.

                      He said the centre was acting as a role model for other departments in the university in carrying out the research works. Director of the centre T.Balasubramanian said that the centre would soon set up a facility for commercial exploitation of phytoplankton.

Read more »

தேசிய அடையாள அட்டை தனி கணக்கெடுப்புக்கு தமிழகம் எதிர்ப்பு


 
                         தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தனி கணக்கெடுப்புக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்கலாம் என அது கூறியுள்ளது.  
 
                    மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய அடையாள அட்டைக்கு தனியாக கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது மக்களின் வரிப்பணம் மேலும் வீணாகும் என்ற கருத்தை தமிழக அரசு முன்வைத்துள்ளது.  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி மூலம் இந்தியாவில் மக்கள் தொகை எவ்வளவு என்கிற தகவல் தெரியவரும். 
 
                        இந்தக் கணக்கெடுப்பை மையமாக வைத்து தேசிய அடையாள அட்டை தயாரிக்கலாம் என்கிற யோசனையை அடையாள அட்டை ஆணையம் ஏற்கத் தயாராக இல்லை.  இதனிடையே, தேசிய அடையாள அட்டை பணி தொடர்பாக வருவாய், உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பெங்களூர் சென்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.   இந்தியாவில் குடியிருக்கும் மக்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கென, "இன்போசிஸ்' மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நந்தன் நிலகேணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
                  இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.   இந்த ஆண்டுக்குள் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்க ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கிகள் போன்ற சேவை அடிப்படையிலான துறைகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் விவரங்களை அந்தந்த துறைகள் மூலம் திரட்ட தேசிய அடையாள அட்டை ஆணையம் முடிவெடுத்துள்ளது.   வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், பலர் வருமான வரியை கட்டுபவர்களாக இருப்பார்கள். எனவே, வங்கி வாடிக்கையாளர் பற்றிய விவரத்தை, வங்கி மூலமாகவும், அந்த வாடிக்கையாளர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் வருமான வரித்துறை மூலமாகவும் பெற வாய்ப்பு உள்ளது. 
 
                                  தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் முடிவின்படி, ஒரு நபர் குறித்து இரு துறைகளும் தகவல்களைத் தெரிவிக்கும். அதில் ஏதேனும் ஒன்றை ஆணையம் எடுத்துக் கொள்ளும். மற்றொரு துறையின் தகவலையோ அல்லது தனக்குத் தேவையில்லாத விவரங்களையோ நிராகரிக்கும்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிதம்பரம்,:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி, வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆகியவை மூலம் செப்டம்பர் 23-ந் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் முகவரிகள்: 


வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 

                (சிதம்பரம் கோடு எண்: 04144)- 237356, 237357, 237358, 237359.மேலும் மொபைல் போனில்  டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: 

                    பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு, பி.லிட். 3-ம் ஆண்டு, எம்.ஏ.- லிங்கிஸ்டிக்ஸ், ரூரல் மேனேஜ்மெண்ட், எம்.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டூரிசம், யோகா, எம்.காம். டெலிகாம் மேனேஜ்மெண்ட், எம்.எல்.ஐ.எஸ்., எம்.ஃபில். கணிதம், புள்ளியியல், மரைன் பயாலஜி, பிஜி டிப்ளமா இன் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட், டிசைன்  கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆஃப் காங்கிரீட் ஸ்ட்ரெக்சர்ஸ், அப்ளைடு ஆபரேஷன்ஸ் ரிசர்ச், கிரவுண்ட் வாட்டர் எக்ஸபுளரேஷன் மேனேஜ்மெண்ட், மரைன் அக்குவாகல்சர் மேனேஜ்மெண்ட் மற்றும் டிப்ளமா வகுப்புகள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் பால் குளிரூட்டும் மையங்கள்

கடலூர் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் மூடிக்கிடக்கும் ஆவின் தொகுப்பு குளிரூட்டும் மையம்.


கடலூர்: 
                கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையங்கள் பல மாதங்களாக செயல்பாடின்றி மூடிக்கிடக்கின்றன. ஆவினன்குடி குளிரூட்டு மையம் மூடப்படும் நிலையில் உள்ளது.

                கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், சேமித்து வைப்பதற்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், ஆவின் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் 12, கடலூர் மாவட்டத்தில் 7 ஆவின் தொகுப்பு குளிரூட்டு மையங்களை உருவாக்கியது. கடலூர் மாவட்டத்தில் வடபாதி, மாளிகைமேடு, ஆவினன்குடி, மங்களூர், பெரியப்பட்டு, அம்மாபேட்டை, வேப்பூர் ஆகிய ஊர்களில் தொகுப்பு குளிரூட்டு மையங்கள் உருவாக்கப்பட்டன. 

                  இவற்றில் வேப்பூர் 2 ஆயிரம் லிட்டரும் மற்ற 6-ம் தலா 5 ஆயிரம் லிட்டரும் தினமும் சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. இவை அந்தந்த ஊரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் |10 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் டாங்க், குளிர்பதன இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட வசதி கொண்டவை.
                        அருகில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பாலை இவற்றில் சேமித்து வைத்து, ஆவின் நிறுவன டேங்கர் லாரிகள் வரும்போது வழங்கப்படும். பாலை, கூட்டுறவு சங்கங்கள் நீண்டதூரம் எடுத்துச் செல்ல வேண்டியது இருப்தால், பால் வீணாவதைத் தடுக்கவும், அந்தந்த பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு எளிதில் பால் சப்ளை செய்ய வசதியாகவும் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டன.
                 ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, அம்மாப்பேட்டை தொகுப்பு குளிரூட்டு மையங்கள் செயல்படாமல் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. ஆவினன்குடி குளிரூட்டு மையம் மூடப்படும் நிலையில் உள்ளது. இங்கு யாரும் பால் வழங்குவது இல்லையாம். இதனால் இந்த 3 மையங்களிலும் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம் அடையத் தொடங்கி இருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

துகுறித்து பால்உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

                  ""இந்த பால்குளிரூட்டும் மையங்களை நிர்வகித்த கூட்டுறவு சங்கங்கள், அவற்றை முறையாக நடத்தவில்லை. பால் தரநிர்ணயம் முறையாகச் செய்யவில்லை. பல நேரங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் லிட்டர் | 13  என கொள்முதல் செய்து அனுப்பிய பாலை, இந்த மையங்கள் தரம் குறைந்தது எனக் கணக்கிட்டு, லிட்டருக்கு வெறும் | 1-20 மட்டும் வழங்கி இருக்கின்றன.இதனால் வெறுப்படைந்த பால் கூட்டுறவு சங்கங்கள், மேற்கண்ட குளிரூட்டும் மையங்களுக்கு பால் அனுப்புவதை நிறுத்திவிட்டு, தனியாரிடம் விற்பனை செய்யத் தொடங்கி விட்டன. முறையாக நடத்துவோர் கையில் இந்த மையங்களை ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து ஆவின் நிறுவன பொதுமேலாளர் பொன்னம்பலம் கூறுகையில்,  

                        ""மேற்கண்ட பால்குளிரூட்டும் மையங்களை நடத்திய செயலாளர்கள் அவற்றை முறையாக நிர்வகிக்கவில்லை. மூடப்பட்ட தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களை ஆவின் நிறுவனமே ஏற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மூடப்பட்ட மையங்கள் விரைவில் திறக்கப்படும்'' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது.

                மழைக் காலங்களில் கால்நடைகளை பெரிதும், தாக்கும் தன்மை கொண்டது கோமாரி நோய். இந்நோயால் பசுக்கள் பாதிக்கப்பட்டால், கால்கள் மற்றும் வாயில் புண் காணப்படும். இதனால் பசுக்கள் உணவு உண்ணாது. பால் கறக்கும் அளவு குறைந்து விடும். சினை பிடிக்காது. சினை பிடித்தாலும் கன்றுகள் இறந்து பிறக்க நேரிடும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் பெருமளவுக்குக் காணப்பட்டது.÷அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குமுன், கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. 

                       இதனால் கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்து உள்ளது.÷கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன் மேற்பார்வையில் கடலூர் மாவட்டத்தில் 26-8-2010 முதல் கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15000 ஊதியம் வேண்டும்: சிஐடியு கோரிக்கை

நெய்வேலி:

                என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நெய்வேலி சிஐடியு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

                    என்எல்சி உற்பத்தியில் சரிபாதி உழைப்பை செலுத்திவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மிக குறைவானதே. இவர்களின் உழைப்பால் நிறுவனம் ஆண்டுக்காண்டு அதிக லாபங்களை ஈட்டிவருகிறது. நிறுவன வளர்ச்சிக்கு பங்காற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, நிரந்தரத் தொழிலாளர்களின் கடைநிலை ஊதியத்தையாவது அளிப்பதுதான் நியாயமானது. ஆனால் அவ்வாறு வழங்க என்எல்சி மறுக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தப் பணியாற்றிடும் இவர்களின் உழைப்பைப் பயன்படுத்தி நிர்வாகம் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகிறது.

                     எனவே ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யும் வரை, அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் வகையில் மாதம் (ரூ.9800 ஈஅ) ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அச்சங்கத்தின் நிர்வாகிகள் குப்புசாமி, வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior