உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 29, 2011

தானே புயல்: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:
 
         தானே புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.
 
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கூறியது: 
 
          கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரைகளில் வசிக்கும் மக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தங்களது குடிசைகளுக்குள் தங்காமல், பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். 
 
 புயல் பாதுகாப்பு மையங்கள்:
 
                  20 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம்: உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் உயர்வு


கடல் சீற்றம் காரணமாக அலைகளால் தாழங்குடாவில் சேதமடைந்தத் தென்னந்தோப்பு. (உள்படம்) கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரம்.
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3-வது நாளாக, கடல் சீற்றம் நீடித்தது. கடலில் அலைகள்  அதிக உயரத்தில் எழுந்து ஆர்ப்பரித்ததால் கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் புதன்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

              படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். கடலூர் சில்வர் பீச் தொடர்ந்து கடல் நீரில் மூழ்கிக் கிடந்தது. கடற்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸார் தடுத்து நிறுத்தினர். கடற்கரையில் இருந்த மீனவர்களின் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து இருந்தது. 

                கடலோரப் பகுதிகளான தாழங்குடா, அக்கரைகோரி உள்ளிட்டக் கிராமங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் சவுக்குத் தோப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக் கணக்கானத் தென்னை மற்றும் சவுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கடல் இரைச்சல் அதிகமாக இருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் மாவட்ட மீன் அங்காடிகளில் மீன் வரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.


















Read more »

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
 
           முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
 
                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுக்கும் கேரள அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், நெய்வேலி மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை மீட்க வேண்டும் என கோஷமிட்டனர். கலை, அறிவியல், பொறியியல், இசைத்துறை மாணவ, மாணவிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 
 
            இதேபோல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: 
 
                 கேரள அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தாலுக்கா ஆட்டோ ஒட்டுநர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு சங்கத்தினர், கார் ஓட்டுநர் சங்கத்தினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகரில் ஆட்டோ மற்றும் வாடகைக் கார்கள் இயங்காததால் நகரில் போக்குவரத்து குறைவாகக் காணப்பட்டது.

Read more »

“தானே” புயல் சின்னம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/4950e2eb-1651-4962-abb9-0a738a60a0e2_S_secvpf.gif
 கடலூர்:

                  கடலூரில் 2-வது நாளாக நேற்று  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.   சுனாமி நினைவு நாளான திங்கட்கிழமை  கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதியில் தஞ்சம்புகுந்தனர்.

               துறைமுகத்தில் நேற்று முன்தினம்  2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் “தானே” புயல் உருவாகியுள்ளதால் கடலூர் கடல் பகுதியில் இன்று ராட்சத அலைகள் எழும்பின.  தாழங்குடா பகுதியில் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.   அதையடுத்து 2-வது நாளாக நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

            துறை முகத்தின் கரையோரத்தில் படகுகள் தொடர்ந்து ஓய்வெடுப்பதை காண முடிந்தது. சுனாமிதினம் உள்பட 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைந்தது. இதனால் மீன்விலை அதிகரித்தது. 

Read more »

வெளிநாட்டு வேலை: சவூதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை

           எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.


           அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில் இருதய சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற 3 ஆண்டு பணியனுபவம் பெற்ற 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள், கன்சல்ட்டுகள், பி.எஸ்.சி நர்சிங் படித்த 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.


            விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, மும்பை, காஷ்மீர், ஐதராபாத் போன்ற மாநகரங்களில் நேர்காணல் நடத்தப்படும். அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இப்பணியை வழங்கவுள்ளதால் அதிகப்படியான சம்பளம், சலுகைகள் கிடைக்கும், வெளிநாட்டு வாழ்பவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கும் என குறிப்பிட்ட அரசு குறிப்பு. 

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் 

 அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கம்
48, முத்துலட்சுமி சாலை, 
அடையார், 
சென்னை - 600020 


என்ற முகவரியில் இயங்கிவரும், அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கத்திற்கு வரும் 4ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.


அல்லது, 


http://www.omcmanpower.com/vacancies.htm

www.omcmanpower.com 



http://www.omcmanpower.com/vacancies.htm



என்ற இணையத்தளத்தில் பதிவும் செய்யலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது. 

















Read more »

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்




தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


           தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்,  ஓராண்டிற்கு  நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின்  மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

              குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை  குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.  எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து  இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி சனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

             எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.   அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

            குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

30 coconut trees uprooted in the coastal area of Thazanguda in Cuddalore

CUDDALORE:

      Thirty coconut trees were uprooted due to soil erosion in the coastal area of Thazanguda in Cuddalore on Wednesday. Due to the imminent cyclone, continuous strong waves had been eroding the soil. As a result, the trees fell. Rough sea and heavy waves were also caused havoc in the coastal hamlets and many fishermen said during high tide, water entered their villages.

       The eighth level cyclone warning was issued at Cuddalore port late on Wednesday. Boats had been docked at the fishing port for the fourth consecutive day.Port office source said heavy rains were expected from Thursday and the cyclone would cross Cuddalore and Nellore on Friday morning. Fisheries department had issued warning to fishing hamlets asking them to be on alert. Meanwhile, the coastline near Puducherry also experienced heavy wind and strong waves that lashed the shores.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior