உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்


                
                   தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.  
 
                  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 
 
                 இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.  இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது. 
 
அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:
 
 வி.பி. கலைராஜன் (அதிமுக): 
 
                  தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.
 
சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): 
                 
                 தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
 
                 மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
 
விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது: 
 
                       இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும்.  தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.

Read more »

அவல நிலையில் பண்ருட்டி காவல் நிலையம்

பண்ருட்டி:

                    ஒழுகும் கட்டடம், தொங்கும் மின்சார வயர்கள், செல்லும் வழியில் மழை நீர் குட்டை என பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பண்ருட்டி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

                     சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவதிகையில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டது. காவல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் பத்திர பதிவுத்துறை, பொதுப்பணித் துறை (நீர் வளம்) அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வியாபார நிலையமாக இருந்தாலும் ரௌடி களின் அட்டகாசமும், குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுவதாலும், தினந்தோறும் ஏராளமானோர் புகார் அளிக்கவும், விசாரணைக்காகவும் வந்து செல்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையம் பழுதடைந்து உள்ளதால் மழைக் காலத்தில் ஒழுகுகிறது. 

                    இதனால் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், காவலர்கள் அமர்ந்து பணியாற்றவும் முடியாது. மேலும் இக்கட்டடத்தில் உள்ள மின்சார ஒயர்கள் கழன்று தொக்கிக்கொண்டு உள்ளன.காவல் நிலையம் முன் மழை நீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல் நிலையத்துக்கு வரும் காவலர்கள், புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள் துள்ளி குதித்தும், நீரில் இறங்கியும் செல்கின்றனர். தேங்கிய நீரால் பாதிப்பு உள்ளதையும், காவல் நிலையத்திற்கு வருபவர்கள் சிரமப்படுவதை அறிந்திருந்தும் ஒரு வண்டி மண் கூட அடிக்க யாரும் முன் வரவில்லை.

                  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல் புயல் காரணமாக வழியில் விழுந்த மரம் நான்கு நாட்கள் ஆகியும் இன்னமும் அகற்றப்படவில்லை. விழுந்த மரத்தின் சில பகுதிகள் வழக்கு  சொத்தின் (பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதால் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்) மீது போடப்பட்டுள்ளன. இதனால் காவலர்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த இடமில்லை .பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அமைக்கப்பட்ட பண்ருட்டி காவல் நிலையமும், அதன் சுற்றுபுறமும் பாதுகாப்பின்றி அவல நிலையில் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Read more »

கைத்தறி கண்காட்சி கடலூரில் தொடக்கம்

கடலூர்:

                     கைத்தறி அபிவிருத்தி ஆணையம், மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து கோ-ஆப்டெக்ஸ் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கைத்தறிக் கண்காட்சி கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

               கடலூர் டவுன்ஹாலில் தொடங்கப்பட்டு உள்ள இக்காண்காட்சி 15 நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள பட்டு, பருத்தி புடவை ரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், கைலிகள், கொசு வலைகள், ஆண்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

                 அனைத்து ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும். இக்கண்காட்சி மூலம் |10 லட்சம் மதிப்பிலான கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். தொடக்க விழாவுக்கு கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி தலைமை தாங்கி, கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி தொடங்கி வைத்தார். கைத்தறி மற்றும் துணிநூல் விற்பனை துறை உதவி இயக்குநர் மனோகர் முன்னிலை வகித்தார்.

Read more »

பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

பண்ருட்டி:

                 பண்ருட்டி அருகே பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளிச் சிறுவர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி பலியாயினர். பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலத்தில் தென்பெண்ணையாற்றில் இன்று காலை ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இருவர் குளிக்கச் சென்றனர். மழை பெய்து தண்ணீர் வரத்து இருப்பதால், அந்த 2 சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப் பட்டது.

Read more »

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வழிந்தோடும் அவலம்

சிதம்பரம் : 

                 சிதம்பரம் நகருக்கு தண்ணீர் வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

                  சிதம்பரம் நகரின் கீழ் பகுதி மற்றும் அண்ணாமலை நகருக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வருகிறது. கொள்ளிடத்தில் இருந்து குழாய்கள் மூலம் சிதம்பரம் மானாசந்து, கனகசபை நகர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு நகருக்கு வினியோகம் செய் யப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து ஒரு பகுதி பிரிந்து அண்ணாமலை நகருக்கு செல்கிறது. 

                   சிதம்பரம் வரும் வழியில் இருந்த குழாயில் தொடர்ந்து பல இடங்களில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. முறையாக பராமரிப்பில்லாததால் இந்த நிலை பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. நேற்று சீர்காழி சாலையில்  உசுப்பூர் என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குபு, குபுவென சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து தண்ணீர் வீணாகியும் கூட நடவடிக்கை இல்லை. சிதம்பரம் நகரில் மழைக்காலமாக இருந் தும்கூட மக்களுக்கு போதுமான அளவு தண் ணீர் வழங்க முடியாத நிலையில் வருகின்ற தண் ணீரும் இதுபோன்று வீணாவதால் மேலும் பற் றாக்குறைதான் ஏற்படும்.

Read more »

கடலூர் மாவட்ட ஏரிகளில் வனக் கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்ட கருவேல மரங்கள்


கடலூர் : 

                 கடலூர் மாவட்ட ஏரிகளில் வனக் கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்ட கருவேல மரங்கள் 2 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரத்து 825 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 197 ஏரிகள் உள்ளன. இவற் றில் 38 ஏரிகளில் வனக் கோட்டம் சார்பில் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

                      இந்த கருவேல மரங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி கடலூர் செம்மண்டலம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. சென்னை தலைமை வன பாதுகாவலர் அசோக் சிங் சர்க்கார் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் துரைசாமி முன்னிலை வகித்தார். வனக்கோட்டத்தினர் பராமரித்து வரும் 38 ஏரிகளில், 36 ஏரியில் உள்ள கருவேல மரங்களை வன குத்தகைதாரர்கள் ஏலம் எடுத்துச் சென்றனர். மீதமுள்ள இரண்டு ஏரிகள் பஞ்சாயத்திற்கு ஏலம் விடப்பட்டது.

                 கருவேல மரங்கள் 2 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரத்து 825 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடலூர், விழுப்புரம், சேலம், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100க்கும் மேற்பட்ட வன குத்தகைதாரர்கள் கருவேல மரங்களை ஏலம் எடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுநகர் போலீசார் குவிக் கப்பட்டிருந்தனர்.

Read more »

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் துவரைசாகுபடி குறித்து வயல்தின விழா

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் துவரை சாகுபடி விழிப்புணர்வு குறித்த வயல் தின விழா நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவரையில் நேரடி விதைப்பிற் கும் நடவு செய்யப்பட்ட முறைக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கிப் பேசினார்.
                   பின்னர் குப்பநத்தம் கிராமத்தில் விவசாயி கோபாலகிருஷ்ணன் நிலத்தில் நடவு செய்யப்பட்ட துவரை செடிகளை ஆய்வு செய்து சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜூ, அருட்செந்தில், விஜயகீதா, தனுஷ்கோடி, கண் ணன், ரவிச்சந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் துணிகரம்: டாஸ்மாக் கடையில் கொள்ளை

கடலூர்:
 
                 கடலூர் முதுநகர் அன்னவள்ளி மெயின்ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் அந்த கடையில் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு திடுக்கிட்ட அதே பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மோகன் சந்தேகமடைந்து அபாய குரல் எழுப்பியுள்ளார். உடனே 2 மர்ம மனிதர்கள் மோகனை நோக்கி கற்களை வீசிவிட்டு இருளில் மறைந்து தப்பியோடி விட்டனர்.

                   மோகனின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்த போது, அந்த கடையில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

                      டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 45 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 6 பீர்பாட்டில்களை கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு சென்றிருப்பது புலனாகியது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Read more »

Job fair to be held at Cuddalore college tomorrow

CUDDALORE:

              A job fair will be organised by St Joseph's Arts and Science College, Cuddalore, and the Lions Club of Cuddalore Golden City on the college premises here on Sunday. Cuddalore constituency MLA G. Aiyappan is coordinating with them in the fair arrangements.

                Addressing a press conference here, Mr. Aiyappan and M. Arumai Selvam, Head, Computer Science Department, St.Joeph's College, said that at least 11 leading companies in the automotive, mobile phone, computing and manufacturing sector would recruit candidates.

           Mr. Arumai Selvam said that the companies were looking for candidates with educational qualifications starting from SSLC to postgraduate level. It was expected that as many as 1,000 appointment orders would be issued by Mr. Aiyappan on behalf of the companies.

                 Companies that would offer placements are as follows: Hyundai India Motors Ltd., Nokia India Pvt. Ltd., Updater Services Ltd., JKM Auto, Avalon Technologies, TVS Logistics Services Ltd., AE & E Chennai Works Ltd., TMI Networks, Larsen and Toubro, Sodexo and the Serene Groups.

                The recruitment drive, meant for men and women, would go on from 9 a.m. to 5 p.m. at the indoor auditorium of the college. Those having ITI certificates, diplomas and degrees such as B.A., B.B.A., B.C.A., B.Sc., B.Com, M.Com, and B.E, could attend the fair.
The aspiring candidates should bring their original certificates, along with two sets of photocopies, four passport size photographs and driving licence (for those opting for driver posts).

Read more »

Man drowns near Panruti

CUDDALORE: 

                  Elumalai (60) drowned in a pond at Varakkalpattu near Panruti on Friday. Police sources said that he drowned while plucking lotus from the pond. Water level and slush had risen following the recent rain , sources said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior