உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

வெளிநாடு செல்வோருக்கு விசா கிளியரன்ஸ் தேவையில்லை


             வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துவிட்டு செல்லும் வகையில் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. 
 
                 இதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் போலி முகவர்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருவதாகத் தெரிகிறது. மேற்படி ஆணையத்தை அமைப்பதற்காக குடிபெயர்வோர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, தில்லி உள்பட 8 இடங்களில் குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
 
             வேலைக்காக வெளிநாடு செல்லும் தனி நபர்களும், வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் செல்பவர்களும் இந்த அலுவகத்தில்தான் விசா கிளியரன்ஸ் பெற வேண்டும். இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய குடியுரிமை பாதுகாவலர் உள்பட 6 அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலி முகவர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை நம்பி அப்பாவி இளைஞர்கள் பல லட்சங்களை ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தைப் போல் தனி அதிகாரத்துடன் இது செயல்படும். 
 
இந்த ஆணையம் குறித்து குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது:
 
                   குடிபெயர்வோர் நிர்வாக ஆணையம் அமைக்கப்படுவதன் மூலம், குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர், விசா கிளியரன்ஸ் பெற வேண்டிய அவசியமே இருக்காது. விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு விடும்.வெளிநாடு செல்வோர் அமைச்சக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, வெளிநாடு சென்று விடலாம். ஆனால், இந்த இணைய தள பதிவை, உரிமம் பெற்ற ஆள் தேர்வு முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும். உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே இணைய தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். முகவர்களை மட்டும் கண்காணித்தால் போதும் என்ற நிலையை உருவாக்குவதற்காக, இதுபோன்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இதனால் ஊழல் தடுக்கப்படுவதோடு, போலி முகவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்வோரையும் கண்காணிக்கவும், அதுதொடர்பான முகவர்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Read more »

கோவை வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் விவசாயிகளுக்கான இளங்கலைப் படிப்பு இந்தாண்டு முதல் அறிமுகம்: துணைவேந்தர்

           கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில், விவசாயிகளுக்கான பண்ணைத் தொழில் நுட்பங்கள் குறித்து இளங்கலை பட்டப்படிப்பு (பி.எப்.டெக்) இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேச பூபதி தெரிவித்தார். 

                  மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொலைநோக்குப் பார்வையில் வேளாண் தொலைதூரக் கல்வி... என்ற தலைப்பில் கலைந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ், கோவை வேளாண் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககப் பதிவாளர் வி. வள்ளுவபாரிதாசன், மதுரை வேளாண் பல்கலை. டீன் கே. வைரவன், மனையியல் பிரிவு டீன் பானுமதி, வேளாண் இணை இயக்குநர்கள் சங்கரலிங்கம், முத்துதுரை (தோட்டக்கலைத் துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில், துணைவேந்தர் பி.முருகேச பூபதி பேசியதாவது: 

                கோவை வேளாண் பல்கலைக்கழகம் 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள், 5 பயிர்ப் பாதுகாப்பு மையங்கள், 14 வேளாண் அறிவியல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 2005-ம் ஆண்டு முதல், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழியாக முதுகலை, இளங்கலை, சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்படிப்புகள் மூலம் சுயதொழில் முனைவோர், குறு விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், கிராம மற்றும் நகர்ப்புற மகளிர், பள்ளிப் படிப்பை தொடர இயலாதவர்கள் உள்ளிட்டோர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக முதுகலைப் பிரிவில் எம்.பி.ஏ. (வணிக மேலாண்மை), எம்.எஸ்.சி. (சுற்றுச்சூழல் மேலாண்மை), எம்.எஸ்.சி. (கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள்) போன்ற படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

                 மேலும்,பருத்தி மற்றும் மக்காச்சோள வீரிய ஒட்டுவிதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தென்னை சாகுபடி காளான் வளர்ப்பு போன்ற தமிழ்வழிச் சான்றிதழ் பாடங்களும் நடத்தப்படுகின்றன.விவசாயிகளுக்கான பட்டப்படிப்பு அறிமுகம்: மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில், இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பம் என்ற பாடப் பிரிவு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு படித்த 30 வயது பூர்த்தியான அனைவரும் இப்படிப்பில் சேரலாம். தமிழில் கற்பிக்கப்படும். 3 ஆண்டுகளில் 6 பருவங்களில் பாடங்கள் நடத்தப்படும். விவசாயிகள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பெருக்கிக் கொள்வதோடு, பயிர் சாகுபடி முதல் அறுவடை வரையும், அறுவடை பின்சார்ந்த அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அறியும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். 

                    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் பேசுகையில், இப்பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் படிப்புகளால், கிராம மற்றும் நகர்ப்புற சுய உதவிக் குழு மகளிர் அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக காளான் வளர்ப்பு பயிற்சியில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பினால் பயிற்சி முடித்த பின்னர் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், அவர்களுக்கு மார்க்கெட்டிங் குறித்த தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் மூலம், மதுரை மாவட்டம் கரும்பு விளைச்சலில் சாதனை படைத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சாத்தியம் இல்லை


கடலூர்:
 
             மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சாத்தியம் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று  விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
 
                  தமிழ்நாட்டில் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் (கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர்) நெல்சாகுபடி நிலங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. 1974க்கு முன் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் (கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்) குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 1974க்குப் பிறகு கர்நாடகத்துடன் ஏற்பட்ட காவிரிநீர் தாவா காரணமாக, தமிழகத்தில் குறுவை சாகுபடி முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. குறுவை சாகுபடி நடைபெற்ற காலங்களில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பது வழக்கம். ஆனால் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி இருந்தால்தான், சம்பா சாகுபடிக்கே தண்ணீர் திறக்கப்படுகிறது. 
 
                  ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் நீர்மட்டம் 77.25 அடியாக இருந்தது. கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரி நீர்மட்டம் 45.6 அடியாகவும் (மொத்த உயரம் 47.5 அடி), கீழணை நீர்மட்டம் 8 அடியாகவும் (மொத்த உயரம் 9 அடி) இருந்தது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்தாலே கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய முடியும். எனினும் குறுவை சாகுபடி சாத்தியம் இல்லை என்றே கடலூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 11,500 ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி தொடங்கி இருக்கிறார்கள். 
 
             ஆழ்குழாய்க் கிணறுகள் உவர்நீராக மாறியிருப்பது, கடுமையான மின்வெட்டு, ஆள்பற்றாக்குறை, உரங்களின் விலையேற்றம் ஆகியவையே  இதற்குக் காரணம் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.ஆள் பற்றாக்குறை, விதை நெல் பற்றாக்குறை இருப்பதாலும், வடகிழக்குப் பருவ மழையில் பயிர்கள் சேதத்தைத் தடுக்கவும், சம்பா பயிருக்கு ஜூலை 15-ம் தேதி வாக்கில் மேட்டூர் அணை திறப்பது சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
இதுகுறித்து பாஜக விவசாய அணித் தலைவர் காட்டுமன்னார்கோயில் கண்ணன் கூறுகையில், 
 
                 நாகை, தஞ்சை மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி பெருமளவில் தொடங்கப்பட்டும், மின்வெட்டு, ஆள் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே கடலூர் மாவட்டத்திலும் டெல்டா பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும், காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இல்லை. எனவே 1.5 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடிக்கு ஏற்றவகையில் முன்கூட்டியே மேட்டூர் அணையை திறப்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்றார்.
 
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
            ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லாததால், கடலூர் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடிக்குத் தேவையான ஏ.டி.டி. 43 ரகம் நெல் விதை மட்டுமே, வேளாண் வரிவாக்க மையங்களில் உள்ளன. அதிகம் தேவைப்படும் பி.பி.டி. உள்ளிட்ட பல ரகங்கள் இருப்பு இல்லை. போதுமான சம்பா ரக விதை நெல்களை வேளாண் துறை  தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து நிலங்களிலும் முறையான மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

Read more »

NLC sets up first power plant outside Neyveli

CUDDALORE: 

             For the first time in the annals of the Neyveli Lignite Corporation, it has set up a lignite-powered thermal power plant with 250 MW-capacity (125 MW x 2) outside Neyveli at a cost of Rs. 1,626 crore.

             A statement released from the NLC said that the unit-I of the plant was inaugurated on Saturday at Barsingsar in Rajasthan by Union Minister of State for Coal Sriprakash Jaiswal in the presence of Rajasthan Chief Minister Ashok Gehlot and NLC Chairman-cum-Managing Director A.R. Ansari. The statement said that while the unit-I was dedicated to the nation, synchronisation of the unit-II was done on the occasion.

               Chairperson of the United Progressive Alliance Sonia Gandhi inaugurated the lignite mine in September 2008 and the synchronisation of the unit-I was done on October 27, 2009. On completion of the project, about 2,190 million units of power would be generated a year and supplied to Rajasthan. The salient feature of the plant was installation of the eco-friendly ‘circulating fluidized bed combustion (CFBC) boilers' that would cut the emission level of sulphur dioxide. The NLC had also planted one lakh saplings on the project site to improve greenery and spent Rs 5.5 crore on construction of new roads in the area, the statement added.

Read more »

CPI voices concern over acquisition of coastal lands

CUDDALORE:

             The district committee of the Communist Party of India has urged the State government to stop the indiscriminate land acquisition going on in the coastal villages of Cuddalore district for the sake of the private companies.

             A resolution to this effect was passed at a meeting held at Panruti recently. It alleged that seven companies, including the Tamil Nadu Power Corporation, had initiated the process of acquiring thousands of acres through private agents who were adopting devious means, such as coercion and enticement, to force the owners to part with their property. The CPI voiced concern that if such a trend was not reversed the farming and fishing communities would be displaced and their livelihood would be in question. It called upon the State government to impose a ban on setting up of any more private units in the coastal areas.

NLC labour issue

             In another resolution, the CPI called for the intervention of the Centre and the State government in resolving the labour issue in the Neyveli Lignite Corporation. It noted that 18,000 regular employees of the NLC had been seeking wage revision from 2007 and 13,000 contract workmen had been urging the NLC management to honour the tripartite agreement signed Delhi two years ago for regularising their services. The CPI noted that the NLC management which boast of having netted a profit of Rs 1,247 crore last fiscal was reluctant to concede the rightful demands of the workforce who were behind its impressive performance. In yet another resolution, the CPI stated that the State government should own up responsibility for the erratic power supply and unannounced power cuts, and, could not gloss over its lapses by blaming the political parties and the previous government for the present state of affairs.

              The continued power cut had severely affected the small industries, farmers and commercial establishments and curtailed productivity, to the extent of affecting the State's economy. The CPI called upon the State government to take appropriate steps for getting its due share from the central power grid to meet its requirements. Those who participated included State committee member A.P.Nagarajan, district secretary T.Manivasagam, deputy secretary M.Sekar, treasurer S.P.Govindasamy and others.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத மனைகளை வாங்காதீர்நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நெல்லிக்குப்பம்: 

              நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என கமிஷனர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                  நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் விற்பனை செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்க வேண்டாம். இம்மனை பிரிவுகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப் படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர முடியாது. அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட மாட்டாது. மீறி வீடு கட்டினால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். பொதுமக்கள் மனைகள் வாங்கும்போது அவை அனுமதி பெற்றவையா என உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கமிஷனர் கூறியுள்ளார்.

Read more »

8 ஆண்டுகளாக ஒரே வண்டியுடன் வசதிகளின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம்

சேத்தியாத்தோப்பு: 

                     அடிப்படை வசதியின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் கடந்த 92ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக அலுவலக கட்டடம், ஒயர்லஸ் கட்டடம், ஓய்வு அறை, எழுத்தர் அறை என்று நான்கு தடுப்பு சுவர் கொண்ட கட்டடத்தில் பெயரளவுக்கு ஆஷ் பெஸ்டாஸ் ஷீட்போடப்பட்டுள்ளது.

                      ஓட்டை உள்ள இடங்களின் சம்மந்தட்டிகளைக் கொண்டு மறைத்துள்ளனர். வெயிலின் கொடுமைக்கும் மழையின் தூறலுக்கும் பயந்து தீயணைப்பு வண்டிக்கு அடியில் அமர்ந்து தனது எழுத் துப்பணிகளை கவனித்து வருகின்றனர். 17 பேர் பணிபுரியும் தீயணைப்பு துறையினரின் ஓய்வு அறையும் மோசமான நிலையில் உள்ளது. 

                       இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் 18 ஆண்டுகளாக ஒரே ஒரு தீயணைப்பு வண்டி தான் உள்ளது. அதுவும் அடிக்கடி மக்கர் செய்து விடுவதால் அதை சீரமைக்கவே தீயணைப்பு படையினர் படாத பாடுபடுகின்றனர். ஆயிரம் காலன் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு வண்டிக்கு தண்ணீர் பிடிக்க படாதபாடுபடுகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கக் கூடிய வகையில் நீர் வெளியேற்று குழாய் அமைக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் பலமுறை முறையிட்டும் பலனில்லாமல் தற்போது சர்க்கரை ஆலையில் உள்ள தரை கிணற்றுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் தேவையான வசதிகளை தற்போது இருக்கும் இடத்திலேயே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

பண்ருட்டி: 

               கடலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
 
                   தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தாக்கம் குறையாமல் அதிகமாக உள்ளது. கடலூர் மாவட்டத்திலும் அதிகபட்சமாக 108 டிகிரி அளவில் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் சிமென்ட் ஓடுகள் நிறைந்த வகுப்பறைகள் தான் அதிகமாக உள்ளது. இந்த பள்ளிகளில் அமர்ந்து படிப்பதால் மாணவர்ளின் உடல் நிலை பாதித்து வருகிறது. மாவட்டத்தையொட்டியுள்ள புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிக்கு கூடுதலாக 15 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் வெயில் தாக்கம் அதிகம் உள்ள கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு வரும் 20ம் தேதிவரை விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

ஆடி பட்டத்திற்கு விதைகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம்: 

                மங்களூர் ஒன்றிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வீரசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் டென்சிங் வரவேற்றார். கூட்டத்தில் மங்களூர் ஒன்றிய கரும்பு விவசாயிகளுக்கு இறையூர் அம்பிகா மற்றும் சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளிலிருந்து நேரடியாக உரங்கள் வழங்குவதை மாற்றி, சிறுபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். ரசாயன உரங்களை போதிய அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் பி.வி.சி., பைப்புகள், வேளாண் கருவிகள் வழங்க வேண்டும். ஆடிப்பட்டத்திற்கு தேவையான 20:20:0 தேவையான விதைகள் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் பேசினர்.கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், வேளாண்மை விற்பனைக்குழு சிவக்குமார், விவசாயிகள் மணிகண்டன், இளங்கோவன், தங்கராசு, ராமு, பாலசுப்பிரமணியன், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டம்ஆவணங்கள் அளிக்க தேதி நீட்டிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்ட "கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிக்கு ஆவணங்கள் அளிக்க வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                கடலூர் மாவட்டத்தில் "கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத் தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 914 கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 668 கிராம ஊராட் சிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 263 கூரை வீடுகள் மேல் ஆய்வு செய் யப்பட்டுள்ளது. இப்பணிகள் சரி பார்க்கப்பட்டு, இணைய தளத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.கணக்கெடுப்பின் போது தற்காலிகமாக வெளியூர் சென்றிருத்தல், அல்லது கால நிலைகளுக்கு ஏற்ப வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் கணக்கெடுப்பு படிவத்தில் இடம் பெற செய்வதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும் 30ம் தேதி வரை நேரிடையாக சந்தித்து விண்ணப்பிக்கலாம். எனவே கணக்கெடுப்பின் போது ஆவணங்கள் அளிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத் திறனாளிகள் பயிற்சி

கடலூர்: 

                சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத்திறனாளிகளை கையாள்வது குறித்து பயிற்சி கடலூர் ஹெலன் கெல்லர் மையத்தில் நடந்தது.  ஒருமாத காலம் நடந்த இந்த பயிற்சி முகாமில் 27 பணியாளர்கள் பயிற்சி பெற்றனர். பல்வேறு வகையான மாற்று திறனாளிகளுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது, அவர்களுக்கு எந்தந்த வகையில் உதவ முடியும், மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் மாவட்ட திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். வாழ்ந்து காட்டுவோம் உதவி திட்ட மேலாளர் குமாரசாமி பயிற்சி பற்றிய கையேடுகளை பணியாளர்களுக்கு வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி மேற்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

Read more »

சிதம்பரத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் மூன்று மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம்: 

               கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட் டங்களை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் துவங்கியது.
 
                  அண்ணாமலை பல்கலையில் துவங்கிய பயிற்சி முகாமில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 800 பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் முகாமில் ஆறு கல்லூரிகள், 30 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் 6வது என்.சி.சி., பெட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினல் கர்னல் அய்யப்பசாமி தலைமையில் 12 தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் 19 ராணுவ வீர்கள் முகாமில் பயிற்சி அளிக்கின்றனர். முகமில் யோகா, துப் பாக்கி சுடும் பயிற்சி, தீ தடுப்பு மற்றும் மீட்பு, கண் பரிசோதனை, சாலை விதிகள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Read more »

வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்பண்ருட்டியில் விவசாயிகள் கடும் பாதிப்பு

பண்ருட்டி: 

                       பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டையை இறக்குவதற்கு மூட்டை ஒன்றுக்கு 3 ரூபாயும், எடைபோட 3ம், எடை மேஸ்திரிக்கு 3ம், பதிவு செய்பவருக்கு ஒரு ரூபாய் என ஒரு மூட்டைக்கு கமிட்டியில் மட்டும் 10 ரூபாய் செலவாகிறது.கமிட்டியில் குறைந்த விலையாக ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு நிர்ணயம் செய்தனர்.

                ஏற்கனவே விவசாயம் செய்வதற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ததால் நெல் மூட்டைகளை விற்கவில்லை.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "

                  கமிட்டியில் வேர்க்கடலை விலை நிர்ணயம் செய்தவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கமிட்டிக்கு விவசாயிகள் வேர்க்கடலை கொண்டு வருவதில்லை. தற்போது நெல்லுக்கும் வியாபாரிகளுக்கு ஆதரவாக விலை நிர்ணயம் செய்யாததால் கமிட்டிக்கு நெல் வரத்தும் குறையும்.மேலும், கமிட்டியில் விவசாயிகளுக்கு சாக்கு வழங்குவதில்லை, மூட்டைகள் இறக்கி, ஏற்றும் கூலிகளில் முறைகேடு நடக்கிறது. நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அன்றே விற்பனைக்கு எடுப்பது இல்லை. இதற்கு மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் உரிய பதில்அளிப்பதில்லை. வியாபாரிகளுக்கு ஆதரவாக விலை நிர்ணயம் செய்வதை தடுக்க வேளாண் விற்பனைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Read more »

மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் மங்களூர் சேர்மன் கோரிக்கை

சிறுபாக்கம்: 

             மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

                 மங்களூர் ஒன்றியம் 66 ஊராட்சிகள் 30 துணை கிராமங்களை கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இப் பகுதி மக்கள் பெரும்பாலா னோர் குடிசையிலேயே வசித்து வருகின்றனர். அவ்வப்போது அரசு ஒதுக்கீடு செய்யும் தொகுப்பு வீடுகள் மக்களுக்கு போதியதாக இல்லை. எனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சேர்த்து அதிகளவு தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

Read more »

பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் கட்டி முடித்து ஆறு ஆண்டாகியும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

பண்ருட்டி:

            பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் சுகாதார வளாகம் கட்டி ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கிறது.

          பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனி பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் 2003-04ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. காலனி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி வீடுகளில் தனிநபர் கழிப்பறை வசதிகள் ஏதும் கிடையாது. இதனால் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதிமக்கள் பலமுறை சுகாதார வளாகம் திறக்க கோரிக்கை வைத்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நான்கு லட்சம் அரசு நிதியில் செலவு செய்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் சுகாதார வளாகம் வீணாகி வருகிறது. மக்களின் தேவை அறிந்து கட்டாமல் கமிஷனுக்காக மட்டுமே சுகாதார வளாகங்கள் கட்டுவதால் அரசு நிதி தான் வீணாகி வருகிறது.

Read more »

சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு! சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: 

                    விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்தை அறிய நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் தீர்வு ஏற்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.

                   விருத்தாசலம் அடுத்து உள்ளது இருப்பு ஊராட்சி. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த இந்த ஊராட்சிக்கு உட்பட்டு வடக்கிருப்பு, தெற்கிருப்பு, கிழக்கிருப்பு, அதியமான்குப்பம், கோவிலாங்குப்பம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி சுமார் 2,500 குடும்பங்களையும், சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட பெரிய ஊராட்சியாகும்.
 
                    இருப்பு ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் தரிசு நிலம்(சர்வே எண் 157/1,2,3) உள்ளது. அதில் 40 ஏக்கர் முந்திரி தோப்பும், மீதமுள்ள இடத்தின் ஒரு பகுதியில் பள்ளி, கோவில் உள்ளது. இதில் கோவிலின் எதிரே உள்ள 25 ஏக்கர் ( சர்வே எண் 157/1) காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் சமத்துவபுரம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு ஊராட்சி தலைவர் மற்றும் உள் ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினர்.
 
                    அதனையேற்று வருவாய் துறை அதிகாரிகள் 12 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தை கலெக்டர் மற்றும் திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சமத்துவபுரம் கட்டுவதற்கான பூர் வாங்க பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருப்பு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் இங்கு சமத்துவபுரம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி மக்களின் கருத்தை அறியுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இருப்பு ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பத்மா, கவுன்சிலர் முருகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் மணி, ஒன்றிய சேர்மன் செல்வராசு, மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ்மேரி, பி.டி.ஓ., தமிழரசி, வி.ஏ.ஓ., ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊராட்சியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் மக்களிடம் கருத்துகளை கேட்டு வாக்கெடுப்பு நடத்தினர்.

இதுகுறித்து கம்மாபுரம் பி.டி.ஓ., தமிழரசி கூறுகையில், 

                      கூட்டத்தில் கலந்து கொண்ட 500 நபர்களில் சமத்துவபுரம் வேண்டாம் என 137 நபர்களும், வேண் டும் என 58 நபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நடுநிலை வகித்துள்ளனர். மக்களின் கருத்து குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். அதன் பிறகு இங்கு சமத்துவபுரம் அமைப்பதா? இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றார்.

ஊராட்சி தலைவர் பத்மா கூறுகையில், 

                       அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சமத்துவபுரம் அமைந்தால் நாம் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்பதால் சிலர் மக்களை தூண்டிவிட்டு இப்படி செய்கின்றனர். 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட் சியில் 100 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதல் தெரிகிறது என்றார்.
 
இருப்பு கிராமத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகவேல் கூறுகையில், 

                             இங்கு சமத்துவபுரம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. பொது இடத்தை ஆக்கிரமித்து வரும் சிலர் மக்களை தூண்டி விட்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எதிர்ப்பு தெரிவித்த சக்திவேல் கூறுகையில்:

                        பொது இடத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவான இந்த இடத்தில் மருத்துவமனை, பள்ளி, மாணவர் விடுதி உள்ளிட்ட ஊருக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காகதான் தடுக்கிறோம். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு பொது இடம் கிடையாது. மேலும் இங்கு நடைபெறும் அரசியம்மன் கோவில் திருவிழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது வாகனங்களை நிறுத்தவும், வேறு சில பயன்பாட்டிற்காக இந்த இடத்தை பயன்படுத்துவோம். பொதுமக்கள் நலன் கருதியே எதிர்ப்பதாக கூறினார். அரசின் திட்டமான சமத்துவபுரம் அமைக்க கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இருப்பு கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Read more »

மின்தடையை கண்டித்து போராட்டம் சிறுபாக்கம் கிராம மக்கள் முடிவு

சிறுபாக்கம்: 

                  சிறுபாக்கத்தில் தொடர் மின்தடையை கண்டித்து பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபாக்கம் மற்றும் அதன் இணைப்பு கிராமங்களில் 15 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இரவில் பெரும்பாலும் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் விவசாய பணிகள், மாணவர்களின் கல்வி, வியாபாரம் பாதிக்கிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட் டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (7ம் தேதி) காலை 10 மணிக்கு சிறுபாக்கம் இளமின் பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர், மின்வாரிய மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Read more »

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

கடலூர்: 

                    தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
                   தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய் வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ்மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர். இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Read more »

மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் தாக்குதல்கடலூரில் பரபரப்பு: கும்பலுக்கு வலை

கடலூர்: 

                      பணம் கேட்டு மிரட்டி முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய கும் பலை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் செல்லங்குப்பம் மின் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் உறவினரான இவர் நேற்று மாலை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்டரில் பணம் எடுத்தார். அப்போது அங்கு வந்த செல்லங்குப்பம் காலனியைச் சேர்ந்த சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்டோர் வேலாயுதபாண்டியனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். கும்பல் கூடியதால் சேதுராமன் உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.இந்நிலையில் சேதுராமன், சுமன், ராஜா உள்ளிட்ட கும்பல் இரவு 8 மணி அளவில் செல்லங்குப்பத்தில் உள்ள வேலாயுத பாண் டியன் வீட்டிற்கு சென்று அங்கு நின்றிருந்த "இநோவா' காரை அடித்து நொறுக்கினர். டயரை வெட்டி சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்தை பார் வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior