உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளுக்காரன் குட்டை துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை

பண்ருட்டி:
 
           பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.55 ஆயிரம், ஞாயிற்றுக்கிழமை கொள்ளை அடிக்கப்பட்டது.
 
          கொள்ளையனைப் பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் குண்டு காயம் அடைந்தார். தப்பியோடிய இரு கொள்ளையர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை சேர்ந்த லதாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ளது. சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (45) ஆகியோர் சனிக்கிழமை இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
 
           ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மூன்று கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் தரையில் சுட்டும், கத்தியைக் காட்டி மிரட்டி, ஊழியர்களைக் கட்டிப் போட்டு விட்டு ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற சற்று நேரத்தில் பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன், டீசல் போட வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் இல்லாத நிலையில், பங்க்கின் உள்ளே சென்று பார்த்தபோது, ஊழியர்கள் கார்த்திகேயன், சண்முகம் இருவரும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையும், ரூ.55 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.உடனே லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான மருங்கூரைச் சேர்ந்த அருளுக்கு போன் செய்து கார் எடுத்து வரச் சொல்லி கொள்ளையர்களை பின் தொடர்ந்துள்ளனர். காடாம்புலியூர் காந்தி நகர் அருகே நடந்துச் சென்ற கொள்ளையர்களை கோபாலகிருஷ்ணன் பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் சுட்டதில் குண்டு பாய்ந்து கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்தனர்.
 
           சம்பவ இடத்துக்கு காடாம்புலியூர் போலீஸôர் விரைந்து வந்தனர். இதில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீஸôர் துணிச்சலுடன் சென்று ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்துள்ளது. ஏனைய இருவர் தப்பி ஓடி முந்திரிக் காட்டில் மறைந்துவிட்டனர். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 
ஐ.ஜி., ஆய்வு: 
 
        தகவல் அறிந்த வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு, காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு விரைந்தார்.
 
பின்னர் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு அளித்த பேட்டி
 
         முந்திரிக் காட்டில் மறைந்த இரு கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் .கொள்ளையனைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டினார். பின்னர் கொள்ளை நடந்த பெட்ரோல் பங்க்கையும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற முந்திரிக் காட்டையும் பார்வையிட்டார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.பகலவன், பண்ருட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

அழகப்பா பல்கலைகழக 2011 டிசம்பர் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

    அழகப்பா பல்கலைகழக  தொலை முறைக்கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    2011 டிசம்பரில் நடந்த எம்.பி.ஏ., (ஐந்து வருடம்), எம்.ஏ., (மக்கள் தொடர்பு மற்றும் இதழியல்), பி.காம்., மற்றும் பி.காம்., (நேரடி இரண்டாமாண்டு), பி.காம்.,(சி.ஏ-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.ஏ., மற்றும் பி.பி.ஏ.,(நேரடி இரண்டாமாண்டு, வங்கியியல், வங்கியியல்-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.எம்., தொழில் மேலாண்மையியலில் பி.ஜி., டிப்ளமோ, மனிதவள மேம்பாட்டியலில் பி.ஜி., டிப்ளமோ மற்றும் மனித வளமேலாண்மை மற்றும் தொழில் உறவு முறையில் பி.ஜி.டிப்ளமோ பாடப் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


        தேர்வு முடிவுகளை, மாணவர்கள்,  இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பெறலாம். மறுமதிப்பீட்டு கட்டணம் ரூ.400 டி.டி., எடுத்து தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார். 

 இணையதள முகவரி 









Read more »

புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியின்றி மாணவிகள் அவதி

புவனகிரி :
     
        புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
      புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 700 மாணவிகள் படித்து வருகின்றனர். 35க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

        இவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இருந்தும் அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால் மதிய வேளையில் மாணவிகள் கழிப்பிடம் வேண்டி அருகிலுள்ள வெள்ளாற்றிற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பள்ளிக்கு வரும் மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அர” பள்ளி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior